Posts

Reunion

30 வருடங்கள் கழித்து எழுதப் போகும் சுயசரிதையில் இருந்து முன்னதாகவே ஒரு சில பக்கங்கள். ஒரு சில மாதங்களுக்கு முன்பு, மணிகண்டன் என்ற நண்பன் ஒருவனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆனால் மணிகண்டன் என்ற பெயரிலே எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. " எக்ஸ்க்யூஸ் மீ.... உங்களுக்கு எந்த நம்பர் வேணும்...? " " அடப்பாவி ஜேபி, ஞாபகம் இல்லியா? நாந்தாண்டா மணி. டாம்கேட். ஞாபகம் வரலே? " டாம்கேட் என்றதும் சட்டென்று நினைவுக்கு வந்துவிட்டது. கல்லூரியில் கூட படித்தவன். பூனைக்கண்ணன். நெய்வேலிக்காரன். இவன் எப்படி இங்கே? என் நம்பர் எப்படிக் கிடைத்தது? என்ன செய்து கொண்டிருக்கிறான்? எங்கெங்கோ அலைந்து திரிந்து நம்பரைப் ப்டித்திருக்கிறான். பிறகு நீடித்த அந்த முக்கால் மணிநேர தொலைபேசி உரையாடலிலே, என் கூடப் படித்த நண்பர்கள், நண்பர்கள் அல்லாதவர்கள், நண்பர்களாக இருந்து முறைத்துக் கொண்டு போனவர்கள், லட்டர், வாலன்டைன் கார்டு வாங்க மறுத்தவர்கள் , வாங்கி விட்டு பிரின்ஸியிடம் போட்டுக் கொடுத்தவர்கள் என்று அத்தனை பேரும் இப்போது எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற விவரங்களைப்...

aayitha ezuththu - much ado about nothing

படத்தைப் பற்றி மணிரத்னம், வழக்கத்துக்கு மாறாக, டிவி, ரேடியோ பேட்டி, வலைத்தளம், பத்திரிக்கை நேர்காணல் என்று ஏகப்பட்டது சொன்னார். ஆனால், அலைபாயுதே படத்தில் லேசாக தொட்ட அந்த திரைக்கதை உத்தியைத்தான், ஆயுத எழுத்து திரைப்படத்திலே விரிவாகச் செய்திருக்கிறார் என்று எங்கும் சொல்லவில்லை. அலைபாயுதே படத்தின் ஆரம்பக் காட்சி, இரு வேறு கோணங்களில் இரண்டு முறை வரும் . ஆய்த எழுத்திலே மூன்று முறை. ஆனால் கதைதான் ரொம்ப இடிக்கிறது. அயோக்கிய அரசியல் வாதிகளுக்கு எதிராக கொடி பிடிக்கும் மாணவர் பட்டாளத்தைப் பற்றிய கதை. இன்பசேகர்( மாதவன்) பாத்திரம் highly unrealistic. நடிப்பும் எதிர்பார்த்த மாதிரியேதான் இருக்கிறது. இன்னொரு பிரகாஷ்ராஜ் உருவாகிக் கொண்டிருக்கிறார்? மைக்கேல் வசந்த் ( சூர்யா ) பாத்திரமும் ரொம்ப மிகை. அழகாக இருப்பார். ரௌடிகளை துவம்சம் செய்வார். ·ப்ரெஞ்ச் மொழி பேசுவார். ஜீனியஸ். லாக்கப் சுவற்றில் பூச்சி பூச்சியாய் தியரம் போட்டு நண்பர்களுக்கு பாடம் எடுப்பார். பொதுப்பணித்துறை அமைச்சரிடம் சவால் விடுவார். அமெரிக்காவில் பிஎச்டி படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தாலும் போகாமல் தமிழ்நாட்டிலேயே இருப்பேன் என...

இந்த வாரம் படித்து ரசித்த ஐந்து விஷயங்கள்

1. Moving to Madras 85 Migration following 83 - குமாரபாரதி வலைப்பதிவாளர்கள் பட்டியலுக்குச் சென்று, நான் இது வரை பார்க்காத வலைப்பதிவுகளுக்கு ஒரு முறை சென்று பார்க்கலாம் என்று நினைத்து மேய்ந்த போது, வாசன் (அய்யா என்றால் அடிப்பார் :-) அவர்களின் கொள்ளிடக்கரையில் தடுக்கி விழுந்தேன். அங்கே, குமாரபாரதி என்பவரின் படைப்புகள் இருக்கும் வலைப்பக்கத்துக்கு ஒரு இணைப்புக் கொடுத்திருந்தார். இலங்கையின் இனப்பிரச்சினையில் , சென்னைக்கு குடிபெயர்ந்த போது, அவருடைய பார்வையில் படும் நகர் காட்சிகளின் அழகான பதிவு தான் இந்த கட்டுரை . வாசன், குமாரபாரதி பற்றி கொடுத்திருந்த குறிப்புகள் அனைத்திற்குமான விளக்கமும், நான் படித்த அந்த முதல் கட்டுரையிலேயே கிடைத்தது. இனிமையான இலங்கைத் தமிழும், மெலிதான நகைச்சுவையும் கட்டுரைக்கு கூடுதல் சுவை. இந்த குமாரபாரதி இப்போது இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறாரா? 2. மரத்தடி மாத்ருபூதம் - எல்லே சுவாமிநாதன் வயிறு வலிக்க சிரிக்க வைத்த கட்டுரை. இதைப் பற்றி ஒன்றுமே சொல்வதற்கில்லை. படித்து பார்த்து விட்டு சிரிக்கலாம். வயிறு வலித்தால் பரால்கான் போட்டுக் கொண்டு படுத்துக்...

பிரபலங்கள் சந்திப்பு - my version

மூக்கரின் கட்டுரையை ஒட்டி பிரபலங்கள் சந்திப்பு எல்லாம் பின்னால் தான் நடந்தது. முதலில் பிரபலங்களைப் பார்த்தது. 1981. அந்த ஆண்டில் தான் முதலில் சென்னையில் காலடி எடுத்து வைத்தது. ஜாகை மந்தைவெளி, சடையப்ப முதலி தெரு. எங்கள் வீடு அந்தத் தெருவின் முதல் வீடு. அதனால், சைடில் இருக்கும் பலகணி, பிரபலமான ராமகிருஷ்ணா மடம் சாலையைப் பார்த்த வண்ணம் இருக்கும். நாலு கட்டிடம் தாண்டினால் கபாலி டால்க்கீஸ் ( முதலில் அதை அப்படித்தான் உச்சரித்தேன்). அந்த வீட்டுக்கு வந்து குடியேறிய சில தினங்களிலேயே நடிகர் சுருளிராஜனைப் பலகணி வழியாக பார்த்தேன். படுத்துக் கொண்டிருந்தார். அவரை தூக்கிக் கொண்டு இடுகாட்டுக்குப் போய்க் கொண்ட்டிருந்தார்கள். ( பல வருடங்கள் கழித்து அவருடைய மகன் சண்முகவேல், என்னுடன் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தார்). அவர்தான், மன்னிக்கவும் அதுதான் நான் பார்த்த முதல் பிரபலம். பள்ளிக்குச் சேர்ந்த கொஞ்ச நாளில், வேறொரு ஊரில் இருந்து வந்த நான், எதிலும் ஒட்டாமல் ஒரு பயங்கலந்த பார்வையுடனே இருப்பேன். ஆங்கிலம் வேறு புரியாது. (மூன்றாவது வகுப்பில் என்னத்தை புரியும்.) ஒரு நாள் வகுப்பில் திடீர் என்று...

அம்மா உந்தன் கைவளையாய்......

வாணிஜெயராம் தான் எனக்கு ரொம்ப பிடித்த பாடகி என்று ஒருமுறை நண்பர் ஒருவரிடம் சொன்ன போது அவர் முறைத்தார். இருக்காதா பின்னே? சாதனா சர்கம், சித்ரா, சுஜாதா வில் இருந்து சமீபத்திய ஸ்ரீலேகா பார்த்தசாரதி, மதுமிதா. சுசித்ரா என்று கலக்கிக் கொண்டிருக்க, இப்பப் போய் வாணிஜெயராம் என்கிறீரா என்பதாகத்தான் இருந்தது அந்த முறைப்பு. அதுக்கு என்ன செய்ய முடியும். நானே நானா யாரோதானா வில் இருந்து, மன்னன் மயங்கும் மல்லிகை வரை, அபூர்வராகங்களில் இருந்து சங்கராபரணம் வரை கட்டிப் போட்ட குரலாயிற்றே? இந்தப் பாட்டை யாராவது கேட்டிருக்கிறீர்களோ? அன்பு மேகமே .. கொஞ்சம் ஓடிவா! அப்புறம் இந்தப் பாட்டு... மல்லிகை முல்லை பூப்பந்தல்... சரி அதெல்லாம் விடுங்க.. அதல்லாம் உடுங்க... அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா பாட்டு? சின்னபிள்ளையாக இருந்த போது, சென்னைத் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு படத்தில் வந்த அந்தப் பாட்டு அப்போதே மனதில் நின்று போனது. தேசிய விருது பெற்ற இயக்குனர் கே.எஸ். சேதுமாதவனின் படம் அது என்றோ, அந்தப் பாட்டை எழுதியவர் பாரதிதாசன் என்றோ அப்போது தெரியாது. பின்னால்தான் தெரிந்து கொண்டேன். நேற்றோ அல்லது அ...

வெயிலோ வெயில்

Image
( புகைப்படத்துக்கும் கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ) நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது சூரியன் எ····ப்ப்ப்ப்ப் எம்ம்ம்ம்ம்ம் என்று ஒரு அம்மணி என் ரேடியோ பொட்டியில் குந்திக் கொண்டு , அரைமணிக்கொருதரம் விடாமல் அலறிக் கொண்டிருக்க, படையப்பா ரஜினிகாந்த் போல சொக்காயை கழட்டிப் போட்டு விட்டு உட்கார்ந்திருந்தேன். இதற்காக போலீஸ்காரர்கள் நியூசென்ஸ் கேசில் எல்லாம் பிடிக்க முடியாது. நான் உட்காந்திருந்தது நாலுசக்கர சீருந்துக்குள். ஸ்பென்சர் வளாகத்தில் இருந்து மௌண்ட் ரோடு தர்கா இஞ்சு இஞ்சாக நகர்ந்து வர கிட்டதட்ட அரை மணிநேரம். நடுவில் ஒரு வெள்ளை யானை, i mean, ஒயிட் அம்பாசடர், நகரமாட்டேன் என்று சண்டி செய்ய, டிரா·பிக் போலீஸ்கார் கூட நாலு ஆளைக் கூட்டிக் கொண்டு, வந்து தள்ள, அதற்குள் எதிர்பக்கத்தில் இருந்து நாலைந்து வண்டிகள் குறுக்கே புகுந்து விட, க்ஷண நேரத்தில் பர்·பக்ட் டிரா·பிக் ஜாம். வெள்ளிக்கிழமையாக இருந்தால், இடப்பக்கம் இருக்கும் தர்காவுக்கு நாசர் வருவார். வேடிக்கை பார்க்கலாம். சனி ஞாயிறாக இருந்தால் வண்டியை ஓரங்கட்டிவிட்டு, எதுத்த பக்கம் இருக்கும் புகாரியில் வான்கோழி பிரியாணி சாப்ப...

E-zine & Databases

மடல் இதழ்களும் தரவு தளங்களும் ஈ-சைன் ( Ezine ) என்று சொல்லப்படும் பல இதழ்களை நான் இணையத்தில் பார்க்கிறேன். அவை உண்மையில் இணையத்தளங்கள் மட்டும்தான். ஈசைன்கள் அல்ல. ஒரு இதழை வடிவமைத்து, பொருத்தமான இணைப்புகள் கொடுத்து அவற்றை வாசகர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பதுதான் மடல் இதழ். இதனை சரியாகப் புரிந்து கொண்டு இருக்கிறார் என்ற மகிழ்ச்சிதான், வெங்கடேஷ் உருவாக்க முயன்று இருக்கும் மடல் இதழைப் பார்த்த உடனே வந்தது. இந்த மடல் இதழுக்கான வரவேற்பு, அந்த இதழின் உள்ளடக்கத்தைப் பொறுத்த விஷயம். தொடர்ந்து நடத்தும் ஆர்வமும், இதழின் வடிவமைப்பும், மற்ற இதழ்களைப் போலவே பல பகுதிகளையும் உள்ளடக்கி இருப்பதும், வெகுஜனப்பத்திரிகைகளில் சோதனை செய்து பார்க்க அனுமதி கிடைக்காத சில விஷயங்களை, சோதித்துப் பார்ப்பதும், வாசகர்களுடனான ஊடாட்டமும், இந்த முயற்சி வெற்றி பெறுவதை உறுதி செய்யும். வெங்கடேஷ் பத்திரிக்கை உலகுடன் பரிச்சயம் உள்ளவரென்பதாலும், நல்ல எழுத்தாளர் என்பதாலும், இந்த மடல் இதழை நடத்துவதில் அவருக்கு சிரமம் ஒன்றும் இருக்காது. அவருக்கு என் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் சொன்ன கையோடு, அவர் த...

எழுத்தும் இலக்கியமும்

பிரபு தன் வலைப்பதிவில் போகிற போக்கில் சொன்ன ஒரு விஷயம் என் சிந்தனையைத் தூண்டிவிட்டது. வர்த்தகம் பற்றி எழுதும் ஆட்கள் மிகக் குறைவு என்று அவர் சொன்னது, எனக்குள் மிக நீண்ட காலமாக இருக்கும் ஒரு எண்ணத்தை அசை போட வைத்துவிட்டது. ஆங்கிலத்தில் கட்டுரை இலக்கியம் என்று என்று எடுத்துக் கொண்டால், யார் யார் எந்த எந்த துறைகளில் இருக்கிறார்களோ அவர்கள் அந்த அந்த துறைகள் பற்றி கட்டுரைகள் எழுதுகிறார்கள். நிபுணர்களும் வல்லுனர்களும் எழுதும் ஏதாவது ஒரு இயல் சார்ந்த கட்டுரைகளை நாம் நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், இணையத்திலும் வாசித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், இங்கே பார்த்தால் , பொறியாளர்களும், வங்கி அலுவலர்களும், ஆசிரியர்களும், பத்திரிக்கைத் துறையாளர்களும், விஞ்ஞானிகளும், ஆடிட்டர்களும் கவிதைகளும் கதைகளும் நாவல்கள் மட்டும் தான் எழுதுகிறார்கள். கொஞ்சம் விலகி எழுதினால் கூட அது அரசியலாவோ ( கருணாநிதியா சோனியாவா?) சினிமாவாகவோதான் ( அகிரா குரோசோவா, வைரமுத்து, பாய்ஸ் இன்ன பிற) இருக்கிறது. வார இதழ்களில் வரும் கட்டுரைகளை ( அவை என்ன மேட்டராக இருந்தாலும் ) எழுதுவது பத்திரிக்கையாளர்கள் தான்.எல்லாவற்றி...

புதிய தலைமுறை.....

Image
பத்ரி தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருக்கும் சமாசாரம் பற்றி எனக்கு சில அபிப்ராயங்கள் உண்டு. தொழில் தொடங்குதல், திட்டம் அறிக்கை தயாரிப்பு, முதலீடு ஏற்பாடு , கடன் வசதிகளைப் பெறுதல் போன்றவற்றில் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது என்பதால், அதனை இங்கே வலைப்பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன், ஐஐடி மும்பை செய்திருக்கும் சேவை அளப்பரியது. ஆர்வமும், திறமையும் கொண்டவர்களை ஊக்குவிப்பதற்காக, அந்த கல்வி நிறுவனம் காட்டியிருக்கும் முனைப்பு பாராட்டத் தக்கது. இந்தியாவில், குறிப்பாக சென்னையில் தொழில் தொடங்குவதென்பது அத்தனை சுலபமானது இல்லை. அதில் ஏற்படும் சிக்கல்களின் அளவு, குறிப்பிட்ட தொழில்கள், அவற்றின் இயல்பு ஆகியவற்றைச் சார்ந்ததாக இருக்கும். Oxford History of Indian Business என்ற ஒரு நூலின் சில பகுதிகளை, ஒரு வணிக நாளிதழிலே வாசிக்க நேர்ந்தது. இந்திய வர்த்தக நிறுவனங்கள் தோன்றி வளர்ந்த கதையினை விவரிக்கும் அந்த நூல், சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப் பட்டு தற்போதுதான் வெளியாகி இருக்கின்றது. ( விலை, இந்திய ரூபாய் 1,350/-). 1800 களின் மத்தியில் துவங்கி, டாடா, பிர்லா போன்ற தொழிலதிபர்கள், தங்...

latest

சமீபத்திய மகிழ்ச்சி : பா.ராகவனுக்கு விருது கிடைத்தது. சமீபத்திய திருப்தி : ரொம்ப நாளாக இழுத்துக் கொண்டிருந்த ஆப்பீஸ் வேலை நல்ல படியாக முடிந்தது. சமீபத்திய பெருமூச்சு : ஹ¥ம்ம்ம்ம்்்்..... சமீபத்திய எதிர்பார்ப்பு : ராவல்பிண்டி பாசஞ்சர் vs தாதர் எக்ஸ்பிரஸ் சமீபத்திய ஏமாற்றம் : ரஜினிக்கும் பாமவுக்கும் சமரசம் ( ரஜினி ராம்கியை கேட்டா மேல் விவரம் கிடைக்குமோ? ) சமீபத்திய வருத்தம் : சொல்லவும் வேண்டுமோ? சமீபத்திய கோபம் : டிட்டோ சமீபத்தில் வாசித்த புத்தகம் : எக்ஸ்போர்ட்டர்ஸ் யெல்லோ பேஜஸ் சமீபத்தில் பார்த்த திரைப்படம் : பிதாமகன் ( ஒரு அஞ்சு வருசம் இருக்குமா?) சமீபத்தில் படித்த சிறந்த சிறுகதை : டோரா போரா சமையல்காரன் by அ.முத்துலிங்கம் in தீராநதி ( மன்சன் என்னமா எழ்தறார்.. ஆராச்சும் சொல்ல மாட்டீங்களாபா... ) சமீபத்தில் கிடைத்த பரிசு : பக்கத்து வீட்டு மீனாச்சியின் எச்சில் முத்தம் ( மூணரை வயசு இருக்குன்னு நினைக்கிறேன் ). சமீபத்தின் வாசித்த சிறந்த column : சென்ற வாரம் டைம்ஸ் ஆ·ப் இந்தியாவின் ஆயாஸ் மேனனின் கிரிக்கெட் காலம். சமீபத்திய பார்த்த சிறந்த கிரிக்கெட் ஆர்...

Bulls & Bears....

Image
  பங்கு சந்தை பற்றி பத்ரி எழுதி இருந்தார். சிறுமுதலீட்டாளர்கள் கணிப்பொறி மற்றும் இணையத்தின் மூலம் விரைவாகவும் புத்திசாலித்தனமாகவும், பங்குகள் விற்கலாம் வாங்கலாம், மேலதிக விவரங்களைப் பெறலாம் என்று கூறியிருந்தார். சென்னையில் இருக்கும் இளவயதினரிடம், பங்கு சந்தை பற்றிய விஷயஞானம் குறைச்சலாகத்தான் இருக்கிறது. இந்த விஷயத்தை எழுத உட்கார்ந்ததுமே, என் நண்பர்கள் , மற்றும் வயதை ஒத்தவர்கள் சுமார் இருபத்து ஐந்து பேருடன் பேசினேன். அவர்களில் ஒரே ஒருத்தர் தவிர வேறு யாரும் பங்குசந்தையில் முதலீடு செய்பவர்களில்லை. அதில் ஒருத்தர், " சேச்சே... அது காம்ப்ளிங்க்னா... " என்று எனக்கு பதிலடி கொடுத்தது வேடிக்கை. ஓரிரு வருடங்களுக்கு முன்பு, என் நண்பன் ஒருவன், கையில் தன் வருடாந்திர ஊக்கத் தொகையை வைத்துக் கொண்டு எங்கே முதலீடு செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, அப்போது பொதுப் பங்குகள் வெளியிட்ட ஒரு தேசிய வங்கி பங்குகளை வாங்கச் சொன்னேன். நானே சென்று விண்ணப்பத்தையும், குறிப்பிட்ட தொகைக்கான, கேட்பு ஓலையை வாங்கி, அவன் சார்பில் விண்ணப்பித்தேன். அந்த பங்குகள் விலை ஏறும் இறங்கும். அதை வி...

Hip Hip Hurray....

டிடியில் மேட்ச் வரவேண்டும் என்று ஆர்டர் போட்ட சுப்ரீம் கோர்ட் வாழ்க. முதல்லியே டெம்போவை செட் செய்த சேவாக் வாழ்க நின்னு விளையாடின ராஹ¤ல் திராவிட் வாழ்க இன்சாமாமின் விக்கெட் எடுத்த நம்ம புள்ளாண்டான் முர்லீ வாழ்க கடைசி ஓவர் போட்ட ஆசிஷ் நெஹ்ரா வாழ்க வின்னிங் காட்ச் பிடிச்ச சஹீர் கான் வாழ்க மற்றும் ·போன் செய்யாத நண்பர்கள், சதி பண்ணாத ஈபிக்காரன், கையெழுத்து கேட்காத கொரியர் காரன், எல்லாரும் ஒட்டுமொத்தமா வாழ்க வாழ்க... -பிரகாஷ்

சிந்தனைகள், எண்ணங்கள்

வலைப்பதிவுகளைப் பற்றி மாலன் அவர்கள் எழுதிய அஞ்சல் ஒன்றை வலைப்பூவில் படிக்க நேர்ந்தது. வலைப்பதிவு எழுதுபவர்கள் எல்லாரையும் ஒரு வாங்கு வாங்கு இருக்கிறார். என்றாலும் சுவாரஸ்யமாய்த்தான் இருக்கிறது. அவருக்கு அப்படிச் சொல்ல உரிமை இருக்கிறது என்று தான் நினைக்கிறேன். இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிற பெரியவர்கள் எவருமே கண்டு கொள்ள மறுக்கும், இந்த வலைப்பதிவுகள், அது சாதித்திருக்கிற தொழில் நுட்ப உச்சங்களை, மாலனாவது, கொஞ்சம் அக்கறை எடுத்து , அபிப்ராயம் சொல்ல முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. அவருடைய கவலை, வலைப்பதிவுகளின் உள்ளடக்கம் பற்றியது. வலைப்பதிவுகள் அதன் பர்சனல் டச்சை இழந்து, கிட்டதட்ட வலை இதழ்களாக, மாறிவருகிறது என்பதுதான் மாலன் அவர்களின் அஞ்சலின் சாராமசம். பூ, படம், கதை , தன் படைப்பு, மற்றவர் படைப்பு என்று வலைப்பதிவுகள் இருப்பதாக அவர் சொல்வது, என்னுடையதையும் சேர்த்துத்தான் என்று நினைத்துக் கொள்கிறேன். எல்லாவற்றையும் ஒரே இடத்தில் போட்டுக் குழப்பிக் கொள்வது என்பது நம்மவர்களின் சைகாலஜி. சண்டைப் படத்திலும், தாலி சென்டிமெண்ட் இருக்கும். செட்டிநாடு ஓட்டலிலும், நூடுல்ஸ் கிடைக்...

ஹ¤க்கா, ப.சிதம்பரம் & வாஸந்தி

Image
ஹ¥க்கா பற்றி மரத்தடியிலே பேச்சு கிளம்பியதுமே, ஒருத்தரை ஆவலுடன் எதிர்பார்த்தேன். ஆசாத் பாய்தான். மாலன் வந்தார். பாயைக் காணவில்லை. இன்னும் யாராரோ வந்தார்கள், பாயைக் காணவில்லை. திடுமென வந்தார். சூப்பரான ஒரு மடலை உள்ளிட்டிருந்தார். அட்டகாசமான மடல் அது. கல்கத்தாவில், அப்படிப்பட்ட ஹ¥க்கா பார் ஒன்று திறந்த போது, இந்த ஹ¤க்கா பார்கள்கள் பற்றி, சென்னைக்கு வந்திருந்த ஆசாத் பாய் நிறைய சொன்னார். அல்ப சொல்பம் என்று நினைத்திருந்த ஹ¤க்காவுக்குள் இத்தனை விஷயங்களா? டேங்கப்பா. மாதாமாதம்,. சிகரட்டுக்கு ஆகும் செலவை கணக்கு பார்த்தாலே, மயக்கம் வரும். ஒரு இழுப்புக்கு 3000 ரூபாய் செலவு ஆகும் ஹ¤க்கா பழக்கம் இருக்கிறவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. costly pursuit. no? 0 கல்கியில் சிதம்பரம் கொஞ்சம் போரடிக்கிறார் என்று நினைக்கிறேன். கல்கியில் வரும் கட்டுரைகள் எல்லாம், கொஞ்சம் கலகலப்பாக, - சீரியஸ்ஸான விஷயமாக இருந்தாலும் - இருக்கும். ரொம்ப வறட்சியாக இருக்கிறது. என்றாலும், அந்த சிந்தனைகள் எண்ணங்களுக்காகப் படிக்க வேண்டியிருக்கிறது. சட்டத்தின் நோக்கங்களும் காரணங்களும் பற்றிய இந்த வாரக் கட்டுரைக்கு, அ...

" கட்சி மாறிட்டேனா ( அல்லது ) நடிகையர் திலகம்."

மூலைக்கு மூலை திறந்திருக்கும் ஜாய்ண்ட்டுகளில் , சீஸ் ஒழுகும் பர்கர் தின்றாலும், அது கொத்து மல்லி சட்னியுடன் அம்மா தரும் இட்டிலிக்கு ஈடாகுமா? ஆகாது. கட்சி மாறிட்டேனா என்று சுரதாவுக்கு ஒரு டவுட்டு. நானா, கட்சியா, மாறுவதா, நெவர்...! டவுட்டே வாணாம். நான் எப்போதுமே பாசமலர் கட்சிதான். மாமிகள் வரும் போகும். அதல்லாம் எங்களூர் தேர்தலுக்கு முன்பு உதித்து, தேர்தல் முடிந்ததும் உதிர்கிற சாதிக் கட்சிகள் மாதிரி. ராத்திரி பதினோரு மணிக்கு, காதுலே வாக்மேனோட, மொட்டை மாடியிலே, ரெக்லைனர்லே சாஞ்சிகிட்டு, கேசட்டை போட்டா, " சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கனவின் நினையாத காலம் எமை வந்து பிரித்த கதை சொல்லவா.... " ன்னு வந்து விழுகும். சொகமா, சோகமான்னு தெரியாம ஒரு குன்ஸா இருக்கும். என்ன மாஜிக் அது? யாரு பண்ணது? கண்ணதாசனா? விஸ்வநாதனா? சுசீலாவா? கையிலே குழந்தையோடு வாயசக்கிற சாவித்திரி அம்மணியோட காட்சிதான் மனசுல விரியும்.. யாரும் கிட்டக்கயே வர முடியாது. நானா, கட்சியா, மாறுவதா, நெவர்...! அன்புடன் பிரகாஷ்