Posts

Showing posts from March, 2005

Chennai Tamil Bloggers Meet - 2005

சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பு - 2005 வருகிற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி, மாலை ஐந்து மணியளவில், கடற்கரையில், காந்தி சிலை அடிவாரத்தில், வலைப்பதிவாளர்கள் அனைவரும் சந்தித்து ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். இது கூட்டமோ மாநாடோ அல்ல. வெறும் சந்திப்பு மட்டுமே. இதற்கென்று நிகழ்ச்சி நிரல் ஏதும் இல்லை. இந்தக் கூட்டத்தை நெறிப்படுத்தி நடத்துபவர் என்று யாரும் கிடையாது. வரவேற்புரை, தலைமை உரை, நன்றி நவிலல் என்ற சம்பிரதாயங்கள் கிடையாது இந்தச் சந்திப்பிற்கு, சென்னை, மற்றும் சுற்றி இருக்கும் நகரங்களில் இருப்பவர்கள், தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். யார் யார் எல்லாம் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்? 1. சென்னையில் இருக்கும் வலைப்பதிவாளர்கள் 2. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கும் வலைப்பதிவாளர்களும், அண்டை மாநில வலைப்பதிவாளர்களும் 3. அயல்நாட்டில் இருந்து சென்னைக்கு விடுப்பில் வந்திருப்பவர்களும், வர இருப்பவர்களும் 4. வெளிநாட்டில் இருப்பவர்கள், தத்தம் முதலாளிகளுக்கு, " as i am suffering from fever... " என்று தொடங்கும் விடுப்புக் கட

ஜெயகாந்தன்

தங்கமணி மற்றும் அருள் பதிவுகளின் தொடர்வினையாக அல்ல, கிளைச் சிந்தனையாக. நான் படிக்கத் துவங்கிய காலத்தில், ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தினார். ஜெயகாந்தன் பற்றி பின்னால் தெரிந்து கொண்டு, அவரது கதைகளை வாசித்தாலும், நான் வாசித்த அவரது மூன்று படைப்புக்கள் ( சினிமாவுக்குப் போன சித்தாளு, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் & சில நேரங்களில் சில மனிதர்கள்) , அவரைப் பற்றிய அபிப்ப்ராயத்தை எனக்குள் உருவாக்கியதா என்று தெரியவில்லை. தொடர்ச்சியாக வாசிக்கும் பழக்கம் ஏற்பட்ட பின்னர், ஜெயகாந்தனின் படைப்புக்களை முழுமையாக வாசிக்க இயலாவண்ணம், அவரைப் பற்றிய பல்வேறு அதிஉயர்வான மதிப்பீடுகள் வந்து குறுக்கிட்டன. ஒரு திறந்த மனதுடன், ஒரு படைப்பை அணுக முடியாமல் போக்குவதில், பல நேர்மறை / எதிர்மறை விமர்சகர்கள் ஓவர் டைம் செய்கிறார்கள் என்ற என் கருத்து வலுவானது. நானும் இந்த ஓவர் டைம் வேலையை, ( நான் அதீதமாகத் தொழும் சில எழுத்தாளர்களுக்காகச் ) சில சமயம் செய்திருக்கிறேன் என்ற காரணத்தால், அவர்களையும் குற்றம் சொல்ல முடியாமல் போனது. ஜெயகாந்தன் பற்றி, என்னிடம் வந்து சேர்ந்த அபிப்ராயங்கள் பல்வேறு விதமாக இருந்தன. ஒரு எழுத்தாளர், அ

Ending from Scratch

Courtesy : Sunday Times, 13th March 2005 Let's say you get a terrific idea one day - one which sends your head reeling into trans-Uranian orbit immediately. Assume you've discovered how to encode the entire Encyclopaedia Britannica onto a tiny scratch on a six-inch bar of metal. And as if that wasn't enough to rock Neptune around the Sun, that scratch of yours wouldn't even contain any information on it like those old vinyl short, medium and long-playing records used to. While the whole world falls at your feet in delirious astonishment, you produce your starburst. There are, you explain to them gently like one talking to a bunch of silent lambs, fewer than 100 different letters and symbols in the print encyclopaedia. What you plan to do is assign a two-digit number to each of these symbols. For instance the letter A might be 01, the letter B something like 02, a semicolon could be 34, a space between words, 99, and so on till you have them all covered. Now, just like w

casting couch & yellow journalism

படத்தயாரிப்பாளர் ஒருவர், சான்ஸ் கேட்டு வரும் நடிகையை கொஞ்சம் " அட்ஜஸ்ட்" செய்தால் , வாய்ப்புத் தருகிறேன் என்று சொன்னால் அது casting couch. திரையுலகில் இது ஒரு ஓப்பன் ஸீக்ரட் என்று பொதுவாகச் சொல்லுவார்கள். இதை இந்தியா டீவி வெட்ட வெளிச்சமாக ஆக்கியிருக்கின்றது தெஹல்கா போட்டு வைத்த பாதையில், புதிதாகத் துவக்கப்பட்ட ரஜத் ஷர்மாவின் இந்தியா டிவியும் வெற்றி நடை போடுகிறது. இந்தியா டிவியில், "Most Wanted" என்ற நிகழ்ச்சி ரொம்பப் பிரபலம். சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் முகத்திரையைக் கிழிப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். அதற்காக குற்றம் நிகழ்கிற வரைக்கும் காத்துக் கொண்டிருக்காமல், அத்தொலைக்காட்சியின் நிருபர்கள், குற்றம் நிகழ்வதற்கு தோதுவான களம் அமைத்துக் கொடுத்து, ஆசாமி வலையில் மாட்டுகின்ற நேரத்தில், கையும் களவுமாகப் பிடிப்பார்கள். அது ஒளிப்படமாகவும் எடுக்கப்பட்டு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். இது போலவே ஆயுத பேரம் செய்கிறவர் பாவனையில் தெஹல்கா, அம்பலப்படுத்திய ஊழல் நினைவில் இருக்கலாம். சமீபத்தில் இந்த வலையில் மாட்டியவர், இந்தி நடிகர், ஷக்தி கபூர். ஒரு பெண் நிர

மகளிர் தின ஸ்பெஷல்

Image
எனக்குப் பிடித்த பெண்கள் நடிகை ஜெயலலிதா சுதா மூர்த்தி அனு அகா சோனியா காந்தி ஜெயபாதுரி - பச்சன் ஜஸ்வந்திபாய்பென் பொப்பட் பர்க்கா தத் கிரண் மஜூம்தார் ஷா சுஜாதா கேசவன் குஹா ரஞ்சனா குமார் லக்ஷ்மி வெங்கடேசன் மல்லிகா ஸ்ரீனிவாசன் சாவித்ரி வந்தனா ஷிவா விஜயலட்சுமி சுப்பராமன்

கேட்டது, படித்தது, எழுதியது

கேட்டது : சப்தஸ்வரங்கள். ஏவி.ரமணன் நடத்தின வரைக்கும் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அவர் கழண்டு கொண்ட பிறகு பார்க்காமல் இருந்த நிகழ்ச்சி. எந்த விதமான மாற்றமும் இல்லாமல், ஒரு விருந்தினர், மூன்று பங்கேற்பாளர்கள், மூன்று சுற்றுக்கள் என்று அந்தகாலத்து சென்னைத் தொலைகாட்சியின் உலாவரும் ஒளிக்கதிர் போல ஒரே பேட்டர்னில் வந்து கொண்டிருந்தாலும், விடாமல் பார்ப்பதற்கு ஒரு காரணம், சில பங்கேற்பாளர்களின் அபூர்வமான குரலினிமையும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் சில அபூர்வமான பாடல்களும். இடப்பக்க ஜிமிக்கி வலப்பக்கம் வரும் படி தலையை ஆட்டி ஆட்டி, குட்டி ·ப்ராக்கில் வந்து பாடிக் கொண்டிருந்த அதே சின்னப் பெண் மதுமிதா தான், ' கனாக்காணும் காலங்கள்' பாடினார் என்று கேள்விப்பட்ட போது வியப்பாகத்தான் இருக்கிறது. ரமணன் விலகிய பிறகு சற்று சுரத்து குறைந்திருந்த அந்நிகழ்ச்சி, இரு வாரங்களுக்கு முன்பு சூடு பிடித்தது. கல்லூரியில் இருந்து வந்த இரு குழுக்களுக்கு இடையே போட்டி. ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர்களும் குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவர்களும் (இந்தக் கல்லூரி எங்கே இருக்கிறது? கோவை? பொள்ளாச்சி? ) ஒரு முழுமையான