மேய்ச்சல் தொடர்கிறது
16. மெய்யப்பன் : மெய்யப்பனின் பார்வையை சமீபகாலமாத்தான் படித்து வருகிறேன். இவருடைய பதிவுகளைத் தொடர்ந்து படித்து வந்தால், இவரது சார்புநிலைகளை எளிதில் கண்டுகொள்ளலாம். என் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அடிக்கடி எழுதுவார். என்றைக்காவது உபயோகப்படும் என்று வாசித்து வைத்துக் கொள்வேன். சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பத்தியை விமர்சித்து ஆரம்பத்தில் வந்த பதிவு மிகவும் பிடித்தது. " i provide an easy target" என்பார் சுஜாதா அடிக்கடி. அது மெய்யப்பனின் வலைப்பதிவு வரையிலும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. கோவர்த்தனன் , ரமணீதரனுக்குப் பிறகு, நான் படித்த, சுஜாதா மீதான பொட்டில் அடித்தமாதிரியான விமர்சனக்குறிப்பு அது. ஆவணத்தில் தேடி எடுத்துப் போட பொறுமை இல்லை. அடிக்கடி எழுதினால் தேவலாம் என்று தோன்றும். புதிதாகப் பிறந்த குழந்தை அவரது மொத்த கவனத்தையும் இன்னேரம் ஈர்த்துக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். வருவார். பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.
17. முத்துராமன் : இவரை நான் முன்னமேயே அறிவேன், உளவியல் மாணவர். கல்லூரி பாடப்புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறாரோ என்று அடிக்கடி