புதுப்பேட்டை - Disappointing
ஒரு வழியாக வந்தே விட்ட புதுப்பேட்டையை, பார்த்தே விட்டேன். மகாநதிக்கு, கல்கி இதழில் விமர்சனம் வந்த போது, கமல்ஹாசன், கல்கிக்கு விமர்சனத்துக்கு நன்றி சொல்லி ஒரு கடிதம் எழுதினார். " I normally donot show emotional reactions towards film reviews, but i take an exception in this case. Mahanathi was made by honest intentions and not by clever thoughts" என்று துவங்கும் அந்தக் கடிதத்தை, கல்கி பிரசுரித்திருந்தது. நல்ல படங்களை எல்லாம், மேலே சொன்ன விதமாகப் பிரிக்கலாம் என்றால், சொல்வராகவனின் காதல் கொண்டேன் , புத்திசாலித்தனமாகவும், 7 G ரெயின்போ காலனி , நேர்மையாகவும் எடுக்கப்பட்ட படங்கள். அப்ப, புதுப்பேட்டை? ஒரு ரெண்டும் கெட்டான். கதை? சந்தர்ப்ப சூழ்நிலைகளால், வட சென்னை இளைஞன் ஒருவன், தாதாவாக ஆகும் கதை. ·ப்ளாஷ்பாக் உத்தியிலே துவங்கும் இக்கதை, சென்னையின் சேரிப்பகுதியில் வசிக்கும் இளைஞன் கொக்கி குமாரின் ( தனுஷ்) பள்ளி வாழ்க்கை, சொந்த அப்பாவிடம் இருந்து உயிருக்குப் பயந்து ஓடி, பிச்சை எடுத்து, கஞ்சா கடத்தும் அரசியல் ரௌடியிடம் எதேச்சையாக சிக்கி, படிப்படியாகத் தொழிலைக் கற்றுக் கொண்டு, கொலை செய்