Posts

Showing posts from May, 2004

மூன்று விஷயங்கள்

1. இந்த வாரம் திண்ணையில் எனது புதிய கட்டுரை ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்துத் தேவதைகளும் இந்த சிக்கல் எனக்குப் பல முறை நேர்ந்திருக்கிறது. ஒரு ஆக்கத்தைப் படிக்கிறேன். அந்த ஆக்கம் என்னை என்ன செய்கிறது என்பது என் மனதுக்குப் புரிகிறது. ஆனால், அவற்றை விசைப்பலைகை வழியாக உள்ளிடும் பொழுது, அந்த உணர்ச்சி, என்னை அறியாமலேயே சட்டென்று நீர்த்து அல்லது மறைந்து போய்விடுகின்றது. நினைக்கிற வேகத்துக்கும் எழுதுகிற வேகத்துக்கும் இருக்கும் இடைவெளிதான் காரணம் என்று நண்பர் ஒரு முறை சொன்னார். அந்த சமயங்களில், அந்த உணர்வுகளை எழுதுவதைக் காட்டிலும், வாசித்ததை மனதுக்குள்ளாகவே அசை போட்டு, அந்தரங்கமாக இன்பம் அடைவது மேலானதாக அல்லது என்னால் இயலக்கூடிய காரியமாகப் படும். சில சமயம் காத்திருப்பேன். யாராவது ஏதாவது சொல்கிறார்களா என்று. சொன்னால் அவர்களைப் பின் தொடர்ந்து செல்வது. ஸ்ரீரங்கத்து தேவதைகளைப் பொறுத்த மட்டில், சென்ற வாரம் திண்ணையில் எழுதிய திரு. ஜெயமோகன் அவர்களின்....... மேலே படிக்க 2. சும்மா பொழுது போகாமல் வலையில் மேய்ந்து கொண்டிருக்கும் போது கண்டதும் மாட்டும். சில வெறுப்பேற்றும். சில கிச்சு கிச்சு மூட்டும், அ

ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே.....

இந்த வார 'நேசமுடன்' இதழிலே, செல்லம்மா பாரதி எழுதிய நூல் பற்றி ஆர்.வெங்கடேஷ் எழுதியிருந்ததைப் படித்ததும், ரா.காகியில் நடந்த பழைய கருத்துப் பரிமாற்றம் நினைவுக்கு வந்து விட்டது. நடந்தது, 2003 மார்ச்சில். கேள்வி: அது சரிங்க ஹரி சார், பாரதி , செல்லம்மா மீது மாறாக் காதல் கொண்டிருந்தான் என்பது சரி? இதிலே செல்லமாவோட பார்வை என்ன? படிச்சதிலேயும் , கேள்விப்பட்டதிலேயும் , பாரதி வாழ்ந்த கால கட்டத்துலே, எல்லாரும் அவரை, 'என்ன ஓய் ன்னு எகத்தாளமா கூப்பிட்டவங்கதான் அதிகம்ன்னு தெரிய வரது . அப்படிப்பட்ட சூழ்நிலையிலே, செல்லம்மா என்ன நெனைச்சாங்க? என் புருஷன் ஒரு மகாகவிங்கறஒரு பெருமிதம்? இன்னா ஒரு எக்செண்ட்ரிக் மாதிரி இருக்கானேங்கற ஒரு மிரட்சி? கட்டிக்கிட்டோம், இனி இவன் தான் எனக்கு எல்லாம் என்கிற ஒரு மரபு வழிவந்த ஒரு கட்டுப்பாடு? என் மேல இவ்ளோ அன்பான்னு ஒரு வியப்பு ? அப்படியே அவங்களுக்கும் இது மாதிரியே அன்பு காதல் இருந்ததுன்னா அதை அவங்க reciprocate செஞ்சாங்களா? what is chellamma's perspective? ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறுகளின் துவக்கத்தில் இரு

Reunion

30 வருடங்கள் கழித்து எழுதப் போகும் சுயசரிதையில் இருந்து முன்னதாகவே ஒரு சில பக்கங்கள். ஒரு சில மாதங்களுக்கு முன்பு, மணிகண்டன் என்ற நண்பன் ஒருவனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆனால் மணிகண்டன் என்ற பெயரிலே எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. " எக்ஸ்க்யூஸ் மீ.... உங்களுக்கு எந்த நம்பர் வேணும்...? " " அடப்பாவி ஜேபி, ஞாபகம் இல்லியா? நாந்தாண்டா மணி. டாம்கேட். ஞாபகம் வரலே? " டாம்கேட் என்றதும் சட்டென்று நினைவுக்கு வந்துவிட்டது. கல்லூரியில் கூட படித்தவன். பூனைக்கண்ணன். நெய்வேலிக்காரன். இவன் எப்படி இங்கே? என் நம்பர் எப்படிக் கிடைத்தது? என்ன செய்து கொண்டிருக்கிறான்? எங்கெங்கோ அலைந்து திரிந்து நம்பரைப் ப்டித்திருக்கிறான். பிறகு நீடித்த அந்த முக்கால் மணிநேர தொலைபேசி உரையாடலிலே, என் கூடப் படித்த நண்பர்கள், நண்பர்கள் அல்லாதவர்கள், நண்பர்களாக இருந்து முறைத்துக் கொண்டு போனவர்கள், லட்டர், வாலன்டைன் கார்டு வாங்க மறுத்தவர்கள் , வாங்கி விட்டு பிரின்ஸியிடம் போட்டுக் கொடுத்தவர்கள் என்று அத்தனை பேரும் இப்போது எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற விவரங்களைப்

aayitha ezuththu - much ado about nothing

படத்தைப் பற்றி மணிரத்னம், வழக்கத்துக்கு மாறாக, டிவி, ரேடியோ பேட்டி, வலைத்தளம், பத்திரிக்கை நேர்காணல் என்று ஏகப்பட்டது சொன்னார். ஆனால், அலைபாயுதே படத்தில் லேசாக தொட்ட அந்த திரைக்கதை உத்தியைத்தான், ஆயுத எழுத்து திரைப்படத்திலே விரிவாகச் செய்திருக்கிறார் என்று எங்கும் சொல்லவில்லை. அலைபாயுதே படத்தின் ஆரம்பக் காட்சி, இரு வேறு கோணங்களில் இரண்டு முறை வரும் . ஆய்த எழுத்திலே மூன்று முறை. ஆனால் கதைதான் ரொம்ப இடிக்கிறது. அயோக்கிய அரசியல் வாதிகளுக்கு எதிராக கொடி பிடிக்கும் மாணவர் பட்டாளத்தைப் பற்றிய கதை. இன்பசேகர்( மாதவன்) பாத்திரம் highly unrealistic. நடிப்பும் எதிர்பார்த்த மாதிரியேதான் இருக்கிறது. இன்னொரு பிரகாஷ்ராஜ் உருவாகிக் கொண்டிருக்கிறார்? மைக்கேல் வசந்த் ( சூர்யா ) பாத்திரமும் ரொம்ப மிகை. அழகாக இருப்பார். ரௌடிகளை துவம்சம் செய்வார். ·ப்ரெஞ்ச் மொழி பேசுவார். ஜீனியஸ். லாக்கப் சுவற்றில் பூச்சி பூச்சியாய் தியரம் போட்டு நண்பர்களுக்கு பாடம் எடுப்பார். பொதுப்பணித்துறை அமைச்சரிடம் சவால் விடுவார். அமெரிக்காவில் பிஎச்டி படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தாலும் போகாமல் தமிழ்நாட்டிலேயே இருப்பேன் என

இந்த வாரம் படித்து ரசித்த ஐந்து விஷயங்கள்

1. Moving to Madras 85 Migration following 83 - குமாரபாரதி வலைப்பதிவாளர்கள் பட்டியலுக்குச் சென்று, நான் இது வரை பார்க்காத வலைப்பதிவுகளுக்கு ஒரு முறை சென்று பார்க்கலாம் என்று நினைத்து மேய்ந்த போது, வாசன் (அய்யா என்றால் அடிப்பார் :-) அவர்களின் கொள்ளிடக்கரையில் தடுக்கி விழுந்தேன். அங்கே, குமாரபாரதி என்பவரின் படைப்புகள் இருக்கும் வலைப்பக்கத்துக்கு ஒரு இணைப்புக் கொடுத்திருந்தார். இலங்கையின் இனப்பிரச்சினையில் , சென்னைக்கு குடிபெயர்ந்த போது, அவருடைய பார்வையில் படும் நகர் காட்சிகளின் அழகான பதிவு தான் இந்த கட்டுரை . வாசன், குமாரபாரதி பற்றி கொடுத்திருந்த குறிப்புகள் அனைத்திற்குமான விளக்கமும், நான் படித்த அந்த முதல் கட்டுரையிலேயே கிடைத்தது. இனிமையான இலங்கைத் தமிழும், மெலிதான நகைச்சுவையும் கட்டுரைக்கு கூடுதல் சுவை. இந்த குமாரபாரதி இப்போது இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறாரா? 2. மரத்தடி மாத்ருபூதம் - எல்லே சுவாமிநாதன் வயிறு வலிக்க சிரிக்க வைத்த கட்டுரை. இதைப் பற்றி ஒன்றுமே சொல்வதற்கில்லை. படித்து பார்த்து விட்டு சிரிக்கலாம். வயிறு வலித்தால் பரால்கான் போட்டுக் கொண்டு படுத்துக்