Exclusive - an interview with Asokamithran.
கிழக்குப் பதிப்பகமும் கடவு இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய ' அசோகமித்திரன் 50 ' விழா முடிவடைந்ததும், விழாவில் சிறப்புரை ஆற்றிய பால் சக்கரியாவையும், விழா நாயகர் அசோகமித்திரனையும் அவரவர்கள் இடத்திற்கு பத்திரமாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தி.நகரில் பால் சக்கரியா இறங்கிக் கொள்ளும் வரையிலும், அவரும் அசோகமித்திரனும் , இதமான ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். இலக்கியக்கூட்டங்கள், இரவு ஒன்பது மணிக்கு மேல் நீடிப்பதில் இருக்கும் சங்கடங்கள் பற்றி, நகைச்சுவையாக , அசோகமித்திரன் ஏதோ சொல்ல, சக்கரியா, விழாவுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை பற்றி வியந்தார். " the gathering was amazing. I think lot of people in chennai read you" என்று சக்கரியா புகழ்ச்சியாகச் சொல்ல, அதற்கு அ.மி, " it is not like that. todays crowd was not for me but for sundara.ramasamy. such a writer...commands a huge following in here... like your MT in kerala ( சிரித்தார்). விழாப் பேச்சில், சுந்தர.ராமசாமியின் ஜனரஞ்சகமான மிமிக்ரி நாடகம் பற்றி என் அதிருப்தியைத் தெரிவிக்கலாம் என