Posts

Showing posts from 2005

டூரிங் டாக்கீஸ்

[ [ இந்த வார நட்சத்திரத்தின் சமீபத்திய பதிவின் பாதிப்பில்] ] சென்னைக்குக் குடிபெயர்ந்த நாட்களில், பாட்டியுடன் தான் வாசம் என்பதால், சினிமா பார்க்கிற வாய்ப்புகள் ரொம்ப அபூர்வமாகவே கிடைக்கும். இத்தனைக்கும் நாலு கட்டிடம் தள்ளி கபாலி டால்கீஸ் ( அது டாக்கீஸ் என்று பின்னாளில் தான் தெரிய வந்தது ). காலைக் காட்சியில் வடிவுக்கு வளைகாப்பு, காத்தவராயன், டவுன்பஸ் போன்ற படங்களும், ரெகுலர் காட்சிகளில், செகண்ட் ரீலிஸ் புதுப்படங்களும் வரும். கூட்டிப் போவதற்கு யாரும் கிடையாது. பள்ளிக்கூடம் போகும் போது நைசாக தியேட்டருக்குள் போய், வெல்வெட்டு போர்டில் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படங்களை எல்லாம் வாயில் ஈ புகாமல் பராக்கு பார்த்துக் கொண்டிருந்த போது, அந்த வழியாக போய்க்கொண்டிருந்த விசாலம் மாமி ( எங்க ஒண்டுக் குடித்தன வீட்டின் நெய்பர்), பாட்டியிடம் போட்டுக் கொடுக்க, " வரட்டும் ஙொப்பன் கிட்ட சொல்றேன்.. என்று மிரட்டிக் கெ¡ண்டே இருந்தாள். 92 ஆம் வருஷத்தில் அவள் செத்துப் போகிற வரையிலும் சொல்லவே இல்லை. அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் எல்லாம் 'ரெக்கமெண்டு' செய்தார்கள் என்ற காரணத்துக்காக, முதல் முறையாக எனக்க

அப்துல் ஜப்பார்

இந்த மாதிரி niche வலைப்பதிவுகளில் இருக்கிற ஒரு பெரிய சிக்கலே, அது ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே எழுதப்பட்டு, சின்ன வட்டத்துக்குள்ளேயே படிக்கப்பட்டு, பின்னர் மறந்து விடும் என்பதுதான். கிரிக்கெட் கூட்டுவலைப்பதிவு , பெரும்பாலும் நடந்த ஆட்டத்தைப் பற்றிய வர்ணனையாகத்தான் இருக்கும் என்பதாலும், தன்னை மறந்து பார்த்து ரசிக்கிற ஆட்டத்தின் finer aspect கள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றில் அத்தனை ஈடுபாடு இல்லை என்பதாலும் கவனமாகப் படிப்பதில்லை. அப்படி தள்ளிவிட்டு போக இருந்த நேரத்திலே, பா.விஜயின் 'உடைந்த நிலாக்கள்' என்று ஒரு பதிவு துவங்க, என்னடா இது புதுசா என்று உள்ளே போய் பார்த்தால், கிரிக்கெட் பற்றிய 'அப்துல் ஜப்பார்' எழுதிய ஒரு நல்ல கட்டுரையை, ஆசீப் மீரான் வலைப்பதிவில் போட்டிருக்கிறார் . சென்னையில் நடந்த கிரிக்கெட் ஆட்டங்களின் போது, பள்ளிக்கு கண்டிப்பாக லீவு போடக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவுக்கு பயந்து, சிங்கப்பூரில் இருந்து ரேடியோவும், இயர் ·போனும் இருக்கிற வாட்சை வைத்திருந்த நண்பனுடன் ஒட்டிக் கொண்டு கேட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன. 89 ரிலையன்ஸ் கப்பின் போது வீட்டுக்கு டீவி வந்து

கர்நாடக காவல்துறையின் வலைப்பதிவு

எதையோ நோண்டிக்கொண்டிருந்த பொழுது, ஹிந்து நாளிதழ் வழியாக இந்தச் செய்தி கிடைத்தது. தென் கர்நாடக காவல்துறை கண்காணிப்பாளர் பி.தயானந்தா, IPS, இந்த வலைப்பதிவை துவக்கி எழுதி வருகிறார். அவருடைய சரகத்துக்குள் நடைபெறுகிற சட்டம் ஒழுங்கு தொடர்பான விஷயங்களைத் மக்களுக்கு, இந்த வலைப்பதிவில் அளித்து வருகிறார். இந்த வலைப்பதிவில், அவர் அவர் சொல்வதாவது... This weblog has been created by the Dakshina Kannada Police with the purpose of disseminating police news of the district to those interested. Authentic and official information of DK Police will be posted here regularly. This is just an attempt to create an interface with the press and the public at large. Your views and suggestions are welcome. B.Dayananda IPS Superintendent of Police Dakshina Kannada District MANGALORE Karnataka.. காவல்துறை, இப்படி ஒரு வலைப்பதிவை துவங்குவது இது தான் முதன் முறை என்று நினைக்கிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவரே!

Image
சேமித்து வைத்திருக்கும் பழைய குப்பையில் இருந்து ஒரு பகுதி. எழுதியவர் இளவஞ்சி .....அப்போது முரளி என்ற என் நண்பன் ரஜினி பைத்தியமாகவே இருந்தான். ஒரு படத்தையும் விடமாட்டான். டிவியில் ரஜினி படமென்றால் அப்படியே கேமல் கம்மை தரையில் ஊற்றி அதில் ஒட்டியதுபோல எங்கயும் நகராமல் ஒன்றிவிடுவான். நாங்கள் அடிக்கும் இத்தனை கிண்டல்களுக்கும் சிரித்துகொண்டே போய்விடுவான். ஒருநாள் இந்த ரவுசு ஓவராகப்போக அவன் சொன்னது எனக்கு மிகவும் பிடித்துப்போனது. "நம்ப வீட்டு குழந்தை தத்தக்கா பித்தக்கானு நடந்தாலும், தப்பு தப்பா பேசினாலும் அதை பார்த்து ரசிக்கத்தான் தோணுமே தவிர அதுக்கு நடக்க தெரியலை பேச தெரியலைன்னு கிண்டல் பண்ணத்தோணாது. அது மாதிரிதான் ரஜினி எனக்கு!" இதன்பிறகுதான் ரஜினியை ஒரு இமேஜ் வட்டத்துக்குள் இருக்கும் நடிகராக அல்லாமல் ஒரு சக கூட்டாளியைப்போல நினைக்கத்தோன்றியது. இந்த நினைப்பே என்னை அதன் பிறகு மறுபடியும் பார்த்த பழைய ரஜினி படங்களை ரசிக்கவைத்தது. ஜானி, முள்ளும் மலரும், தில்லு முல்லு, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களை மறுபடியும் பார்த்த பொழுது அதில் அவரது ஆளுமை புலப்பட்டது. அந்த சின்னக்கண்களையும், தவறா

more updates

சில வலைப்பதிவு நண்பர்களுடன் இன்று நடப்பதாக இருந்த சந்திப்பு , மழை வெள்ளம் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மதுரவாயல் ஏரியில் வந்த உபரிநீரை, கூவம் ஆற்றுக்குள் திருப்பிவிடாமல், விருகம்பாக்கம் கால்வாய்க்குத் திருப்பி விட்டதால் தான் எங்கள் பகுதி இத்தனை மோசம் என்று அக்கம் பக்கம் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், அந்த நேரத்தில், அதைச் செய்ததுதான் சரி.. என்று தோன்றுகிறது. கூவம் ஆற்றை ஒட்டிய குப்பங்கள் சென்னையில் ஏராளம். அவர்கள் மொத்தமாக wash out ஆகியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். சின்மையாநகர், சாய்நகர், அய்யப்பா நகர் போன்ற பகுதிகள் தற்போது தீவு போல காட்சி அளிக்கிறது. தீவுக்குள்ளே கடைகள் இருப்பதால், பால் போன்ற அத்தியாவசிய விஷயங்கள் தடைபடவில்லை. ஆனால் வெளியே போக வழியில்லை. மொத்த நீரும் வடிய இரண்டு நாட்களாவது ஆகும் என்று சொல்கிறார்கள். நேற்றும் இன்றும் தி ஹிந்து கிடைக்கவில்லை. எங்கள் ஏரியா பக்கத்தில் ( சக்தி நகர்) ஒரு மூன்று வயது குழந்தை நீரில் மூழ்கி இறந்து விட்டது. வடபழநி நூறடி சாலையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது என்று பார்த்துவிட்டு வந்த சிலர் சொன்னார்கள். அதிர்ஷ்டவசமாக நேற்று இரவு மழை இல்லை. ஆனால

சென்னையில் வெள்ளம் - updates

1. சென்னையில் உள்ள சில ஏரிகள் உடைத்துக் கொண்டு விட்டன. சில ஏரிகள் நீர் வரத்து அதிகமானதால் திறந்து விடப்பட்டன.நகரில் பல பகுதிகளில் நீர் புகுந்து கொண்டிருக்கிறது 2. புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளும் திறந்து விடப்பட்டுள்ளன. 3. அடையாறு, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, சின்மயாநகர், கே.கே.நகர், விருகம்பாக்கம், அமைந்தகரை, எம்.எம்.டி.ஏ உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில், தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள், மேடான பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. 4. இன்று முழுதும் மழை இல்லை. இப்போது லேசாக தூறல் அடிக்கிறது. சென்னையின் முக்கிய பகுதிகள் பல இடங்களில் மார்பளவுக்கும், இடுப்பளவுக்கும் நீர் இருக்கிறது. 5. வானிலை அறிக்கையின் படி இன்னும் இருபத்து நான்கு மணிநேரத்துக்கு மழை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 6. நாங்கள் இருக்கும் பகுதி மேடான பகுதி என்பதால், நீர் இங்கே வராது என்று பேசிக் கொள்கிறார்கள். வந்தாலும், அக்கம் பக்கத்தில் இருக்கும் மேல் மாடி குடியிருப்புகளுக்குச் தஞ்சம் அடைய முடிவு செய்திருக்கிறோம். 7. போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விட்டது. 8. புறநகரில

டியர் மிஸ்டர் வருண பகவான்.....

இது நியாயமா , நீங்களே சொல்லுங்க இது நியாயமா? மெட்ராஸ்ங்கறதை, சென்னைன்னு பெயர் மாற்றின மாதிரி, சென்னைங்கறத மறுபடியும் சிரபுஞ்சின்னு பேர் மாற்றிட்டாங்கன்னு யாராச்சும் உங்களுக்குத் தப்பா தகவல் சொல்லிட்டாங்களா? அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க சார். இது எழுதிக்கிட்டு இந்த நேரத்துல, தெருமுக்கு வரையிலும் தண்ணி நிக்கிது. சும்மா கடை கண்ணிக்கு போகலாம்னா கூட, வீட்டை விட்டு கிளம்ப முடியலை. ஒரு தரம் அடிச்சு விட்டுதுன்னா, தண்ணியை பம்ப் அவுட் பண்ணிட்டு, அடுத்த வேலையைப் பாக்கலாம். நீங்கதான் எப்ப வருவீங்கன்னே தெரியலையே? அப்பறம் என்னத்தை நிவாரணம் பண்ணி என்னத்தைப் பாழாப் போறது? மானம் பார்த்த பூமியா, காஞ்சு போன சமயங்களிலேலே உங்களை திட்டினது உண்டுதான்...சில சமயம் கெட்ட வார்த்தையால கூட... ஆனா, அதை எல்லாம் உங்ககிட்ட யாராச்சும் போட்டுக் குடுத்துடுவாங்கன்னு ங்கொப்பராணையா நினைக்கலை. அப்படியே யாராச்சும் கோள்மூட்டி இருந்தாலும் இப்படி பழிவாங்கலாமா? நீங்க எவ்வளோ பெரியவர்? ஏபிநாகராஜன், அவர் எடுத்த படங்களிலேயெல்லாம் உங்களுக்குச் சான்ஸ் குடுத்து சந்தோஷப்படுத்தினாரே, அதை மறந்துட்டீங்களா? இல்லை, சாதாரண அறிவியல் விஷயமான

அறிவிப்பு

இணையத்தில் தமிழ் குறித்து, ஒரு informal கலந்துரையாடலுக்கு ஏற்பாடு நடக்கிறது. தமிழ் இணையத்தில் இருக்கிற தொழில்நுட்பச் சிக்கல்கள், தமிழ் இணையத்தில் புதிய நிரலிகளுக்கான ஆலோசனைகள், புதிய பொருட்களுக்கான வடிவமைப்பதற்கான ஆலோசனைகள் ஆகியவை பற்றியும் பேச, சில வலைப்பதிவு நண்பர்கள், வார இறுதியில் சந்திக்க உள்ளோம். வலைப்பதிவுகளில் ஈடுபடாத சில தொழில்நுட்பர்களும் இதிலே கலந்து கொள்ளுகிறார்கள். இது கலந்து கொண்டு ஆக்கபூர்வமாக விஷயங்களை பரிமாறிக் கொள்ளவும், தங்கள் கருத்துக்களைச் சொல்லவும் விரும்புபவர்கள் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்குத் (icarusprakashATgmailDOTcom) தொடர்பு கொள்ளவும். சந்திப்பு முடிந்ததும், உருப்படியாகப் பேசிய விஷயங்களை இங்கே பதிவு செய்கிறேன். நன்றி

படித்ததில் பிடித்தவை

கொஞ்ச நாளாகவே நான், எழுதுவதை நிறுத்தி விட்டு படித்துக் கொண்டிருக்கிறேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், வலைப்பதிவுகள் ரொம்பவே போரடிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், இரண்டு வருடங்களாக தொடர்ந்து வாசித்து வந்ததில் இருந்து, எந்தப் பிரச்சனையில் யார் என்ன எழுதுவார்கள் என்பதை முன்கூட்டியே ஊகித்து விட முடிவதுதான். நாளை, ரஜினிகாந்துக்கு சந்திரமுகி படத்துக்காக தேசிய விருது கிடைத்து விட்டது என்று அறிவிப்பு வந்தால், அடுத்த சில நாட்களுக்கு, வலைப்பதிவுகளில் யார் யார் என்ன எழுதுவார்கள் என்று ஊகிப்பது வெகு சுலபம். அடிப்படையில் வாசகனாகவும், எதேச்சையாக எழுத வந்தவனுமாக இருக்கிற எனக்கு, இந்த டெம்ப்ளேட் தன்மை மிகுந்த சலிப்பை உண்டு செய்கிறது. அதையும் மீறி தொடர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ......இஷ்ட்டாப்ப்ப்ப்.. ரொம்ப ஓவரா சீன் போடறேன் போலிருக்கு... ஆரம்பம் இங்க மேட்டர் என்னன்னா, கொஞ்ச நாள் முன்னாடி வரை, பத்மப்ரியான்னு ஒரு அம்மிணி வலைப்பதிவுல, கதை எழுதிட்டு இருந்தாங்க.. தொடர்கதை எல்லாம் படிச்சு ரொம்ப நாளாச்சு.. இருந்தாலும், நினைவுப்பெட்டகம் னு ஒரு தொடர்கதையை விடாமப் படிச்சு வந்தேன். இப்ப தி

மறந்தே போச்சு..... ரொம்ப நாள் ஆச்சு

Image
தமிழ் தட்டச்சு டச் விட்டுப் போகக்கூடாதுங்கறதுக்காக அவசரமா அவசியமா இந்தப் பதிவு. எழுதணும்னு நினைச்சு, மனசின் ஓரத்திலே போட்டு வெச்ச விஷயங்களின் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது.. எழுதியிருக்க வேண்டிய பதிவுகள் அனைத்தையும் , சுருக்கமா ஒரே பதிவிலே இங்கே எழுதறேன். .... 1. மரவண்டு கணேஷ் நடத்தின போட்டியிலே புத்தகப் பரிசு பெற்ற கார்த்திக் ராமாஸ், தன்னுடைய சார்பா, என்னை அந்தப் புத்தகம் வாங்கிக்கச் சொன்னார் . நானும் ரொம்ப பிகு செய்யாம வாங்கிகிட்டேன். காரணம், அது பிரமிள் எழுதின கட்டுரைத் தொகுதி. இதுக்கு முன்னாடி பிரமிள் எழுதின புத்தகம் ஏதும் படிச்சதில்லை. இதை படிச்சு முடிச்சதும், சும்மா அப்படியே உருவி விட்ட மாதிரி ஆயிடுச்சு. புதிய சொல்லாடல்களால், மொழி நடையால் என்னை அதிகம் ஈர்த்தவர் காலம் சென்ற சு.ரா. பிரமிளும் அதே வரிசையில் , குறைந்த பட்சம் என்னளவில், வருகிறார். வெகுசன ஊடகங்ககளில் பிடியில் இன்னும் சிக்காமல் மிக நவீனமாக அதே சமயம் உயிர்ப்புடன் எழுதி வலையில், மேற்படி இடங்களிலும் உலாவரும் சில 'strictly-for-private-circulation' எழுத்தாளர்கள் எங்கிருந்து புறப்பட்டு அல்லது எந்த வழியாக பயணப்பட்டு

காற்றில் கலந்தே விட்ட பேரோசை...

எனக்கும் புரிகிற மாதிரி எழுதுகிற நவீன இலக்கியவாதிகள் பட்டியலில் முதலாவதாக இடம் பெற்றிருந்தவர் சு.ரா. Pulmonary fibrosis நோயின் காரணமாக அவர் இல்லாமலே போய்விட்டாலும் கூட குறிப்பிட்ட அந்த முதலிடம் என்றுமே வெற்றிடமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. இணையத்துக்குள் நுழைந்த புதிதில், ( ஆகஸ்ட்/செப்டம்பர் 2002) நண்பர்களுடன் சந்திப்பு என்கிற சாக்கில் முதன் முதலாக இலக்கியச் சந்திப்பு ஒன்றில், சு.ராவைப் பார்த்ததும், கேள்வி நேரத்திலே, துண்டுக்காகிதத்திலே எழுதி வைத்து அபத்தமாகச் சில கேள்வி கேட்டு, அதற்கு அவர் பொறுமையாக பதில் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. இன்றைக்கும் கூட, நவீன இலக்கியத்தின் முகவரியாக இருக்கும் " ஜே.ஜே.சில குறிப்புக்கள்" நாவலைப் பற்றி நண்பர்களுடன் பேசிப் பேசி, எழுதி எழுதி மாய்ந்தது நினைவுக்கு வருகிறது. சு.ராவின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். சு.ரா குறித்து சென்ற வருடம் ஒரு இணைய இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி .. சுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள் முன்னுரை சுந்தர.ராமசாமி அவர்களின் எழுத்துக்களை, அதன் கருத்து மதிப்பை விட, அதில் இழையோடும் நகைச்சுவைக்காகவு

IIPM vs Gaurav Chabnis & fellow bloggers

1. Arindam Chaudary என்கிற ஒரு டுபாகூர் ஆசாமி, ஒரு எம்பிஏ பட்டங்கள் விற்கும் கடை ( Indian Institute of Planning Management ) ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கல்வி நிறுவனம், பலரது விமர்சனங்களுக்கும் ஆளாகி இருக்கிறது. சமீபத்திலே, economic times ஆங்கில நாளிதழில் வந்த செய்தியின் படி, இவர் விளம்பரங்களுக்காக செலவு செய்தது 5.1 கோடி ரூபாய்கள். இத்தனைக்கும், இவரது கல்வி நிறுவனம் வழங்கும் பட்டங்கள் இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றவை அல்ல. 2.பொதுவாக, தேசிய நாளிதழ்களில் முழுப்பக்கத்திலே விளம்பரங்கள் வரும். அவருடைய claims நம்பமுடியாதவையாக இருக்கும். பட்டங்களில் விலை சில லட்சங்கள். அதை வைத்து நாக்கு வழிக்கக் கூட முடியாது என்று படித்து முடித்த பின்புதான் தெரியும். இதிலே சம்பாதித்த பணத்தை வைத்து, அரிந்தாம், சன்னிதியோல் நடித்த படம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டார். பல கோடி ரூபாய்கள் நஷ்டம் ஆனது 3. மும்பையில் இருந்து வெளிவரும் JAM என்கிற ஆங்கிலப் பத்திரிக்கையை நடத்துபவரும், business world ஆங்கிலப் பத்திரிக்கையில், பத்தியாளருமான ( columnist) ரஷ்மி பன்சால், தன்னுடைய பத்திரிக்கையிலே, IIPM பற்றிய தில்லு

கோ.கு.ப.பட்டறை - இறுதிப்பகுதி

Image
இரண்டாம் நாள், இயக்குனர் அருண்மொழி அவர்கள் காமிரா குறித்த அடிப்படை விஷயங்கள் பற்றி பாடம் நடத்தினார்.அருண்மொழி சென்னைத் திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவாளராக பயிற்சி பெற்றவர். காணிநிலம், ஏர்முனை என்று இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அருண்மொழியின் விளக்கங்கள் மிகத் தெளிவாக இருந்தது. திரையிலே சில காட்சிகளை காண்பித்து நேரடியாக விளக்கம் அளித்தார். புரிந்து கொள்ளச் சிரமமாக இருந்த விஷயங்களை, அவரே படம் பிடித்து அப்போதே திரையில் போட்டுக் காட்டி விளக்கினார். மேடையிலே நின்று கொண்டு மட்டுமே உரை நிகழ்த்தாமல், அங்கங்கே மாணவர்களிடம் வந்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக விளக்கம் அளித்தார். காமிரா கோணங்கள் பற்றி நன்றாகப் புரிந்த மாதிரி இருந்தது. பிறகு கேள்வி நேரம். மதிய உணவுக்குப் பின், குழுவுக்கு ஒரு காமிராவைக் கொடுத்து அனுப்பி வைக்க, நாங்கள் எங்கள் குழுவினர் என்ன எடுக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் இறங்கினோம். முதலிலே குறும்படம் எடுக்கலாமா அல்லது ஏதாவது ஒரு ஆவணப்படம் எடுக்கலாமா என்று சிந்தித்து, குறும்படம் எடுப்பதுதான் எளிது என்று முடிவு செய்தோம். சிவகங்கையில் இருந்து வந்திருந்த பா

வாழ்க பாரதம்.!!!!

நேற்று விட்டதைத் தொடருவதற்கு முன்னால், சும்மா வலையில் மேய்ந்து கொண்டிருந்த போது இந்தச் செய்தி ( செந்தில் வழியாக ) படிக்கக் கிடைத்தது. சும்மா சொல்லக் கூடாது பெங்களூர் நன்றாகவே 'முன்னேறிக்' கொண்டிருக்கிறது.. வாழ்க பாரதம்...

கோவை குறும்படப் பயிற்சிப் பட்டறை - முதல் நாள்

Image
சேரன் எக்ஸ்பிரஸில் அடுத்த இருக்கையில் இருந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு, குறும்படம் என்றால் என்ன என்று விளக்க முயற்சித்து தோற்றமையும், கோவையில் இறங்கியதுமே, எதிர்ப்படுகிறவர்களின் முகத்திலேயே தெரியும் hospitality உம், பட்டறை நடக்கும் கணுவாய் என்கிற கிராமத்துக்குச் சரியாக வழியைக் காட்டி, பேருந்தில் ஏற்றிவிட்டு, சிக்கல் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்று செல்பேசி எண்ணைக் கொடுத்த Gangotri Textiles என்ற நிறுவனத்திலே பணிபுரியும் அன்பர் ஒருவரின் இன்ஸ்டண்ட் நட்பும், இன்னபிற விஷயங்களும் இந்தக் வியாசத்துக்கு அநாவசியம். ஆகவே நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். தமிழ்நாடு குறும்பட மற்றும் ஆவணப்பட படைப்பாளிகள் சங்கமும், குறும்பட ஆர்வலரும் இயக்குனருமான திருநாவுக்கரசு அவர்களின் நிழல் பத்திரிக்கையும் இணைந்து, ஒரு குறும்படப் பயிற்சிப் பட்டறையை, செப்டம்பர் 30, அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில், கோவைக்கு அருகே கணுவாய் என்கிற இடத்திலே நடத்தியது. குறும்படங்களில், ஆர்வமிருந்து, ஆனால், அனுபவமில்லாதவர்களை மையமாக வைத்து இந்த நிகழ்ச்சியை, குறைந்த கட்டணத்திலே ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம், குறும்படம்

மூன்று நாட்கள்.

Image
மூன்று நாட்களாக பயிற்சிக்குப் போயிருந்த கதை WLL இல் இருந்த பயணச்சீட்டு, RAC க்காவது நகரும் என்று நம்பிக்கையில் செய்த முன்பதிவு ஏமாற்றி விட, 'எப்படியாவது' நீலகிரி எக்ஸ்பிரஸின் TTE இடம், berth வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையும் பொய்த்துவிட, ஞாயிறு இரவு முழுதும், கோவையில் இருந்து சென்னை வரை கழிவறைக்குப் பக்கத்தில் , suitcase மீது அமர்ந்து செய்த பிரயாணத்தின் களைப்பு இன்னும் தீரவில்லை. ஆகவேண்டிய வேலைகளும் இருக்கின்றன. எழுத இன்னும் ஒன்றிரண்டு நாட்களாகலாம். முதலில் படங்கள். விவரங்கள் பிறகு.

கோவை

மன்னிக்கணும்...கிட்டதட்ட எங்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாக்குறுதி போல என்னுடைய வாக்குறுதியும் ஆயிப்போச்சு.. அதான், வாரம் முழுக்க தமிழ்ப்பதிவாப் போடுறேன்னு சொல்லிட்டு, கண்டுக்காம விட்டதைத் தான் சொல்றேன். அதுக்கு வழக்கம் போலவே ஒரு காரணம் வெச்சுருக்கேன்... நீங்க நம்ப மாட்டீங்கன்னாலும் சொல்றது என்னோட கடமை... அதாவதுங்க , இந்த வார இறுதியிலே நான் கோவைக்குக் பயணமாகிறேன். சென்னையை கெடுத்தது பத்தாதுன்னு இப்ப கோயமுத்தூரா ந்னு யாரோ ஒர்த்தர் கொரல் விடுறார் பாருங்க... பேசும் போது இப்படி ஊடால ஊடால குரல் கொடுத்தா என்னால கோர்வையாச் சொல்ல முடியாது.. கொஞ்சம் சத்தம் போடாம அமைதியாக் கேக்கணும் இல்லாட்டி எந்திரிச்சுப் போயிருவேன்... ஆச்சா.. இப்ப கேளுங்க.. எதுல உட்டேன்?.... ஆங்... கோவைக்குப் போறேன்...மூணு நாள் பயணம். தமிழ் குறும்பட அமைப்புன்னு ஒரு அமைப்பு தமிழ்நாட்டிலே இருக்குங்க.. அவங்களும், நிழல் னு ஒரு பத்திரிக்கையும் சேர்ந்து, கோவைலே, ஒரு மூணு நாள், பயிற்சிப் பட்டறை ஒண்ணு ஏற்பாடு செய்யறாங்க.. நிறைய பிரபல குறும்பட இயக்குனர்கள், திரைக்கதை ஆசிரியருங்க. எல்லாம் வந்து பாடம் எடுக்கிறாங்க.. அங்கியே தங்கி, பிற ம

இனி - பாரதிராஜா - I

பாரதிராஜாவின் திரைப்படங்கள் குறித்த ஒரு அலசல் கட்டுரை, சொ.சங்கரபாண்டி அவர்களால் எனக்குக் கிடைக்கப் பெற்றது. 1991-92 வாக்கில் வெளியான இக்கட்டுரையை எழுதியவர் சக்கரவர்த்தி. தற்போது சிற்றிதழ்களில் திரைப்படக் கட்டுரைகளை எழுதி வரும் வெங்கடேஷ் சக்கரவர்த்தியும் இவரும் ஒருவரே என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இக்கட்டுரை, இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமாக இருக்கின்றதா என்று ஆராய்ந்து பார்க்கும் போது புலப்படும் சங்கதிகள் சுவாரசியமானவை. பாரதிராஜா ஒரு முக்கிய திரைக்கலைஞராக அடையாளம் காட்டப்படுவதற்கு என இருக்கும் பல காரணங்களில், அவரது யதார்த்தமான கிராமத்துச் சித்திரிப்பும் ஒரு முக்கியமான காரணம். சக்கரவர்த்தியின் கட்டுரையும் இதைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளின் பிற்பகுதியிலே திரையுலகுக்குள் நுழைந்த பாரதிராஜா, அச்சு அசலான கிராமத்தை என்று இல்லாவிட்டாலும், நிஜத்துக்கு சற்றேனும் நெருக்கமாக இருக்கிற கிராமத்தை படம் பிடித்துக் காட்டி, ரசிகர்களை , விமர்சகர்களை ஆச்சர்யப்படுத்தினார். அவருடைய திரைப்படங்கள் வருவதற்கு முன்பு

ரோஜாப்பூ

Image
ரோஜாவின் பெயர் ஷிவானி புகைப்படம் பிடித்தவர், வண்டலூர் அருள்செல்வன் நரேந்திரன்

தமிழ் வாழ்க...

இந்த குற்ற உணர்ச்சியாகப்பட்டது பல ரகம். பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டுவிட்டு, மோட்சம், பரங்கிமலை ஜோதி இன்ன பிற திரையரங்குகளில், படம் பார்த்து விட்டு வீட்டுக்கு தாமதமாகச் சென்று , ஏதாவது ஒரு சாக்கு சொல்லி ஏமாற்றும் போது ஏற்பட்ட குற்ற உணர்ச்சியில் இருந்து தொடங்கி, வேலை அதிகம் என்று வரும் மடல்களுக்கு பதில் போடாமல் விட்டுவிட்டு பின் வருத்தப்படும் சமீபகால குற்ற உணர்ச்சி வரை, ரகம் ரகமாக இருக்கும் இவை, ஏற்படுத்தும் தாக்கமும் வகை வகையானவை. என்னுடைய சமீபத்திய குற்ற உணர்ச்சி, தமிழில் ஆங்கில வார்த்தைகளைக் கலந்து எழுதுதல் தொடர்பானது. இது திடீரென்று அதிகரித்ததற்கு மரத்தடி இணையக்குழுவில் நடந்த சில மடல் பரிமாற்றங்களும் காரணம். 2003 ஆண்டு மத்தியிலே இணையத்தில் முதன் முதலாக எழுத வந்த போது, சிந்தனை ஓட்டத்துக்கும், எழுதுகிற வேகத்துக்கும் இடைவெளி அதிகமாக இருந்த நேரத்திலே, பொருத்தமான தமிழ் வார்த்தைகள் கிடைக்காமல் போகும் போது, சட்டென்று வந்து விழும் ஆங்கில வார்த்தையை அப்படியே எழுதி வலையில் ஏற்றும் பழக்கம் வந்தது. இன்றைக்கும் இந்தப் பழக்கம் இருக்கிறது. நம் சிந்தனையை, ஒப்பனையில்லாமல், அது முகிழ்த்த நேரத்தில

ஆதவன் - காகிதமலர்கள் - சந்தோஷ்

ஆதவனின் காகிதமலர்கள் குறித்து 'ஐவேஜு' அதிகம் இருக்கிற எழுத்தாள/ விமர்சகர்களில் இருந்து ஜூனியர் மோஸ்ட் எழுத்தாள/விமர்சகர்கள் வரை என்ன எழுதியிருக்கிறார்கள் என்று வாசித்திருக்கிறேன். ஆனால், காகிதமலர்கள் குறித்து ஆதவனுக்கு ஏதேனும் சொல்ல இருந்திருக்க வேண்டுமே என்று நீண்ட நாளாக நினைத்திருந்தேன். காகிதமலர்கள் எழுத நேர்ந்ததன் பின்னணி குறித்தும், ஆதவன் சொன்னதை இப்போதுதான் படிக்க நேர்ந்தது, சந்தோஷ் வலைப்பதிவின் மூலம்... ஆதவன் சொல்கிறார்.. ".....என் படைப்புப் பற்றிக் கூறப்படும் ஒவ்வொரு அபிப்பிராயமும் என்னைப் பதட்டம் கொள்ளச் செய்கிறது, அவசரமாகக் 'கோடிட்ட இடங்களைப்' பூர்த்தி செய்யத் தூண்டுகிறது - எல்லாருமே எல்லாவற்றையும் கண்டு சொல்லியே ஆகவேண்டும் என்பதுபோல. ஆனால் இது அவசியமில்லாதது மட்டுமல்ல, 'காகித மலர்கள்' போன்ற ஒரு நாவலின் விஷயத்தில் இது சாத்தியமுமல்ல என்பதை நிதானமாக யோசித்துப் பார்க்கும்போது நான் உணருகிறேன். பல இழைகளைக் கொண்டு வேயப்பட்ட - கொஞ்சம் சிக்கலான அமைப்புக் கொண்ட - ஒரு நாவல் இது. எல்லா இழைகளுமே எல்லாருக்கும் பிடிபடுவதில்லை; பிடிபட்டாலும் இவை எல்லாமே ஒவ்வொர

படங்காட்டுவது எப்படி - 2

Image
காட்டுப்பன்றியை பின்தொடர்ந்து படம் பிடித்தவர் V.A.Narendran கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து தானும் அதன் பொல்லாச் சிறகை விரித் தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி தொடரும்

படங்காட்டுவது எப்படி?

Image
ஒதகமந்துவின் ஆளரவமற்ற சாலை...நிழல்படம் எடுத்தவர். V.A.Narendran இதோ இப்படித்தான் படங்காட்டுபவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. எதிர்த்துக் குரல் தருவது ஒரு வகை. கூட சேந்து கொம்மாளம் அடிப்பது மற்றொரு வகை. நான் இரண்டாவது வகை,

என் நைனாவும், சாருநிவேதிதாவும்

நாலைந்து நாட்களாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன். வீட்டிலே விநோதமாக ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. கோணல் பக்கங்கள் மூன்றாம் பாகம், என் அப்பாவின் புத்தகங்களூடாக இறைந்து கிடக்கிறது . நடைமுறை என்ன என்றால் என்றால், நான் வாங்கி வரும் அல்லது திருடிக் கொண்டு வரும் அல்லது இரவல் வாங்கி வரும் புத்தகங்கள்/சஞ்சிகைகளை, செத்துப் போன எலி, நிஜமாகவே செத்துப் போய்விட்டதா அல்லது கடுக்காய் கொடுக்கிறதா என்று சோதித்துப் பார்க்கிறார் போல, ஒரு முறை பார்த்து, தூக்கி எறிந்துவிட்டு , சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் அம்மாத 'ஞானசம்பந்தம்' இதழிலோ அல்லது ஜூனியர் விகடனின் ரத்தந்தோய்ந்த முகப்புப்படக்கதையிலோ மூழ்குவதுதான் வழக்கம். ஆனால், இப்போது நடப்பது என்னமோ வழக்கத்துக்கு மாறாக இருக்கிறது. என் வீட்டிலே அனைவருமே தமிழ்ப்புத்தகங்கள் வாசிக்கின்ற பழக்கம் இருந்தாலும், ஓவ்வொருவரும் தனியான ரசனையைக் கொண்டவர்கள். யாரும் யாரையும், குறிப்பிட்ட புஸ்தகத்தை ஏன் வாசிக்கிறாய் என்றொ ஏன் வாசிக்கவில்லை என்றோ கேட்டுக் கொள்வது கிடையாது. சற்றேறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு, ஒருமுறை , இரவுச்சாப்பாட்டுக்கடையின் போது, பிடித்

இரா.முருகன் + சுஜாதா + அரசூர் வம்சம்

இந்த வாரக்குமுதத்தில் இருந்து... [சுஜாதா எழுதியது] "... அண்மையில் என்னை இழுத்து வைத்துப் படிக்க வைத்த நாவல், இரா.முருகனின் 'அரசூர் வம்சம்'. தமிழ் நடையில் என்னுடைய பாதிப்பு பலரிடம் இருப்பதைக் கவனிக்கிறேன். முருகனின் தமிழ்நடையில் எல்லாத் தமிழ் எழுத்தாளர்களின் - ஜானகிராமன், புதுமைப்பித்தன், லா.ச.ரா. என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் எல்லோரையும் தன் கம்ப்யூட்டர் திறமை, ஆங்கில உத்திகள் சேர்த்து ஒரு புதிய தமிழ் நடையை உருவாக்கியுள்ளார். அவரது 'அரசூர் வம்சம்' நாவலின் 24-ம் அத்தியாயத்தின் சில பக்கங்கள் இங்கே. இதில் இருக்கும் seduction ஒவ்வொருவரும் வாழ்வில் எப்போதாவது சந்தித்திருக்கிறோம். *************** சாமிநாதன் நிறுத்தி நிதானமாக வீட்டுக்குள் ஒவ்வொரு இடமாகச் சுற்றி வந்தான். வேதபாடசாலை வித்தியார்த்திகளுக்கு ஆக்கும் போது, இரண்டு அகப்பை அதிகமாகப் போட்டுச் சமைத்து எடுத்து வந்து வைத்துப் போய்விட்டாள் ராமலச்சுமிப் பாட்டி. புளிப்பும் இல்லாமல், காரமும் இல்லாமல் சின்னக் குழந்தைக்கு நிலாக்காட்டி ஊட்டுவது போல் சாதுவான ரசமும், நெய்யுமாக அன்னம். புடலங்காய் பருப்பு உசிலி. அதில் இழை

102 ஆவது பதிவு (&*!#$%^&#@!!!!)

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கு அமைதி இருக்கும். ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் காவியம் பாடி நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா [ கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஜெமினிகணேசன், பி.பி.ஸ்ரீனிவாஸ், ஸ்ரீதர், ரா.கி.ரங்கராஜன் ]

மாயாபஜார்

Image
சமீபத்திலே, ராஜ் வீடீயோ விஷனில், ஒரு பத்து நாட்களுக்கு தள்ளுபடி விற்பனை வைபவம் நடைபெற்றது. நான் தேடிச் சென்ற திரைப்படங்கள் கிடைக்காவிட்டாலும், அங்கே இருந்ததில், சில முத்துக்களும், ரத்தினங்களும் மாட்டின. இவரைத் தாண்டி ஒரு நடிகை இல்லை என்று நான் நினைக்கும் ஒரே ஒருவர் நடிகையர் திலகம் சாவித்திரி . அவர் நடித்த பல படங்களைப் பொறுக்கி வந்தேன். அதில் ஒன்று, மாயா பஜார். மகாபாரதத்தின் ஒரு கற்பனைக் கிளைக்கதையான மாயாபஜார் ( 1957 ), ஒரு wholesome entertainer. பாண்டவர்களுடைய உற்ற துணையான கிருஷ்ணனின் ( என்.டி.ராமாராவ்) மூத்த சகோதரன், பலராமனின் ( டி.பாலசுப்ரமணியன்) செல்ல மகள் வத்சலா ( சாவித்திரி) . அர்ஜுனன் சுபத்திரை தம்பதியரின் மகன் அபிமன்யு ( ஜெமினி கணேசன்). பலராமன், கிருஷ்ணன் ஆகியோரின் சகோதரி சுபத்திரை. அபிமன்யுவுக்கு வத்சலா மீது இளம்பிராயத்தில் இருந்தே காதல். பெரியவர்களும் அப்படியே முடிவு செய்துவிடுகின்றர். ஆண்டுகள் கழிந்த பின்னர், ஒரு காலகட்டத்தில், பாண்டவர்கள், சகுனியின் ( நம்பியார்) சூழ்ச்சியால் சூதாட்டத்தில் தோற்று வீடு நாடு ஆகியவற்றை இழந்து விடுகின்றனர். இதைக் கேள்விப்பட்டதும்,. பலராமன், தன் ச

ராஜா யார்?

Mathematics is the Queen of Sciences என்று ராமசுப்பு ( கணித வாத்தியார்) , ஒரு மத்தியான வேளை வகுப்பில் திட்டவட்டமாக அறிவித்த போது, அந்த வயசுக்கே உரிய குறும்புத்தனத்தால், " அப்ப ராஜா யாருங்க சார்" என்று பின்பெஞ்சில் இருந்து குரல் கொடுத்து, ஸ்கேலால் பிட்டத்தில் அடிபட்டது நினைவுக்கு வருகிறது. " ராஜா யார் ? " என்ற கேள்விக்கு இன்றைக்கும் எனக்கு பதில் தெரியாது. "என்னுது தான் ராஜா உன்னுது கூஜா" என்று துறை வல்லுனர்கள் அடித்துக் கொள்கிறார்களோ என்னமோ... அதுவும் எனக்குத் தெரியாது... ஆராய்ச்சிகள், பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு என்ற அளவிலேயே அறிவியலை பல துறைகளாகப் பிரித்துப் போட்டிருக்கிறார்கள் என்று இன்றைக்குத் தெரிந்தாலும், சீருடை அணிந்து பள்ளிக்குச் சென்ற காலங்களில், அது வேதியியல், இயற்பியல், உயிரியல் என்று மூன்றாக மட்டுமே பிரிக்கப்பட்டிருந்தது. அதிலே, வேதியியலையும் உயிரியலையும் விட்டுவிடலாம். ஏனெனில், அவை டப்பா அடித்து மதிப்பெண் பெற ஏதுவானவை. கொஞ்சம் வரைகலை வித்தை தெரிந்தால், உயிரியலில் நல்ல மதிப்பெண் பெற்றுவிடலாம். இவை எல்லாம் நான் படித்த காலத்தின் சூக்குமங்கள்.

வெங்கட் சாமிநாதனின் வலைப்பதிவு

வெங்கட் சாமிநாதன் வலைப்பதிவு ஒன்றைத் துவங்கியுள்ளார் அவருக்கு என் நல்வரவு. வலைப்பதிவு தொடங்க, அவருக்கு உதவியவர் டோண்டு ராகவன் வெ.சா கொஞ்சம் touchy என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆக, அவருக்கு டோண்டு செய்தது உதவியா அல்லது தொந்தரவா என்பது, வலைப்பதிவில், வெ.சா. தொடர்ச்சியாக எழுதவும், அன்பர்கள் மறுமொழியளிக்கவும் தொடங்கிய பின்னர் தெரியவரும்.

Happy Independence Day

மத்தியப் பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரமான போபாலில் ஒரு கல்வி நிலையம் இருக்கிறது. Manju Sanskar Kendra என்ற அந்தக் கல்விநிலையத்தின் நோக்கம், 'உருப்படியான' மனைவிகளை உருவாக்குவது. கடந்த இருபத்து இரண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் இக்கல்வி நிலையத்தில், கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு , திருமணத்துக்கு 'ரெடியாக' இருக்கும் பெண்களுக்கு என்று மூன்று மாதப் course நடத்தப் படுகிறது. இதற்குக் கல்விக் கட்டணம் என்று எதுவும் இல்லை. வகுப்புகள், பொதுவாக காலை ஏழுமணியில் இருந்து பத்து மணி வரை நடக்கும். இந்த பாடதிட்டத்தில் சொல்லித் தரப்படும் சிறப்பான விஷயங்கள்.. 1. திருமணமாகி, புகுந்த வீட்டில் எப்படி பல் துலக்குவது எப்படி, சமைப்பது எப்படி, மற்றும் உண்பது எப்படி என்று சொல்லித் தருதல். 2. கணவனுடன் உறவு வைத்துக் கொள்ளச் சரியான நேரம், நடு நிசியில் இருந்து அதிகாலை மூன்று மணி வரை மட்டுமே. மூன்றில் இருந்து காலை ஆறுமணி வரை, பூசை புனஸ்காரங்கள் செய்தல். 3. புகுந்த வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருக்கும் பட்சத்தில், நினைத்த நேரத்தில் கணவனுடன் 'சந்தோஷமாக' இருக்க முடியாது என்பதால், உணர்வுகளை அடக்கி

எக்ஸிஸ்டென்ஷியலிஸம் - சுஜாதா- சண்முகம் சிவலிங்கம்

சுஜாதா விகடனில் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் பற்றி எழுதி, அதன் தொடர்பாக வந்த ரவிஸ்ரீனிவாஸ் வலைப்பதிவில் எழுந்த விவாதம் வந்த நாள் முதலாக, "இருப்பியல் அல்லது இருத்தலியல் என்று அழைக்கப்படும் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்றால் என்ன ?" என்ற கேள்விக்கான பதிலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். அது நேற்றைக்குத் தான் கிடைத்தது . தத்துவங்களில் ஊறித் திளைத்தவர்கள், அந்தத் தத்துவங்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி விளங்க வைக்க முயலும் போது, சில அபாயங்கள் நிகழும். அவற்றில் ஒன்று, பெரும்பான்மையானோரைச் சென்றடையும் வண்ணம் சொல்ல வேண்டும் என்பதற்காக, எளிமையான, பொருத்தமற்ற உதாரணங்கள் மூலம் விளக்கி, தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்வது. இரண்டு, தத்துவங்களைச் சுற்றி இருக்கும் ஆழமான அகழிகளில், இன்னும் அதிகம் கூரிய பற்கள் கொண்ட முதலைகளை விட்டு, அருகே அண்டவிடாமல் செய்வது, முடிந்தால் கடிக்கவும் விடுவது. இவ்விரு அணுகுமுறைகளையும் தவிர்த்து, ஒரு புதிய நடையில், விளங்கும் வண்ணம் எழுதிய சண்முகம் சிவலிங்கம் அவர்களுக்கு நன்றி. எடுத்து இட்ட மதிக்கும் நன்றி.

உசிலி உப்புமா

தேவையான பொருட்கள் பச்சரிசி நொய் - ஒரு ஆழாக்கு பயற்றம் பருப்பு - அரை ஆழாக்கு தண்ணீர் - மூன்று ஆழாக்கு காய்ந்த மிளகாய் - ஆறு பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு உப்பு - தேவையான அளவு கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி உடைத்த உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி கடுகு - அரை தேக்கரண்டி கடலை எண்ணெய் - நூறு கிராம் செய்முறை * அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மிளகாய், கடலை எண்ணை ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைக்கவும். * கடுகு வெடித்து வந்த உடன், குக்கரில், தண்ணீரை ஊற்றி, பச்சரிசி நொய், பயற்றம் பருப்பு, தாளிதம் ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைக்கவும். மிதமான தீயில் வைக்கவும். * நான்கு விசில் வரும் வரை பொறுத்திருக்கவும். நான்காவது விசில் வந்த உடன் அடுப்பில் இறந்து குக்கர் பாத்திரத்தை இறக்கி, ஆவி வெளியேறும் வரை பொறுத்திருந்து குக்கரின் மூடியைத் திறக்கவும் ( இல்லை என்றால், உசிலி உப்புமா உத்திரத்தில் தான் இருக்கும் ). நன்றாகக் கிளறி, ஒரு பாத்திரத்தில் வைத்து சூடாகப் பறிமாறவும் அல்லது நீங்களே சாப்பிடவும். * இதற்கு என்று சைட்-டிஷ் என்று எதுவும் தேவையில்லை. ஆர்லிக்ஸ் பையன் ப

ஷங்கர் என்கிற சமூக விஞ்ஞானி.

that that man, that that work என்று சொல்லுவார்கள். அவரவர்களும் அவரவர் வேலையை ஒழுங்காகச் செய்தாலே, பெரும்பான்மையான சிக்கல்கள் தீரும். திரைப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஒருத்தர், சமூக விஞ்ஞானி வேஷத்தை போட்டுக் கொண்டால் என்ன ஆகும்? அன்னியன் மாதிரியான ஒரு திரைப்படம் தான் நமக்குக் கிடைக்கும். ஷங்கர் , அடிப்படையில், எஸ்.ஏ.சந்திரசேகர் என்கிற, சட்டத்தைக் கரைத்துக் குடித்த மாதிரி பாவ்லா காட்டுகிற ஒரு mediocre இயக்குனரின் சிஷ்யபுள்ளை. அந்த காலத்தில் எஸ்.ஏ.சி , 'நான் சிகப்பு மனிதன்', 'சட்டம் ஒரு இருட்டறை', 'சாட்சி' என்று வரீசையாக, சட்டத்தை கொத்துக் கறி புரோட்டா போட்ட படங்களைத்தான், அவருடைய சீடர் கொஞ்சம் sophisticated ஆக எடுக்கிறார் என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் சிரமமான காரியமில்லை. ஒரு படைப்பாளி தன்னுடைய கதைக் கருவாக இன்னதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்ல நமக்கு உரிமையில்லை. ஆனால், படம் பார்க்கிற சமூகத்தை ஒரு நோயாளிக் கூட்டமாக உருவகம் செய்து கொண்டு, அதற்கான மருந்தைத் வலுக்கட்டாயமாகப் புகட்டினால், அதைக் கேள்வி கேட்க நமக்கு உரிமை இருக்கிறது, அதிலும் diagnosis