" கட்சி மாறிட்டேனா ( அல்லது ) நடிகையர் திலகம்."

மூலைக்கு மூலை திறந்திருக்கும் ஜாய்ண்ட்டுகளில் , சீஸ் ஒழுகும் பர்கர் தின்றாலும், அது கொத்து மல்லி சட்னியுடன் அம்மா தரும் இட்டிலிக்கு ஈடாகுமா? ஆகாது. கட்சி மாறிட்டேனா என்று சுரதாவுக்கு ஒரு டவுட்டு. நானா, கட்சியா, மாறுவதா, நெவர்...!

டவுட்டே வாணாம். நான் எப்போதுமே பாசமலர் கட்சிதான். மாமிகள் வரும் போகும். அதல்லாம் எங்களூர் தேர்தலுக்கு முன்பு உதித்து, தேர்தல் முடிந்ததும் உதிர்கிற சாதிக் கட்சிகள் மாதிரி.

ராத்திரி பதினோரு மணிக்கு, காதுலே வாக்மேனோட, மொட்டை மாடியிலே, ரெக்லைனர்லே சாஞ்சிகிட்டு, கேசட்டை போட்டா,

" சிறகில் எனை மூடி
அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா

கனவின் நினையாத
காலம் எமை வந்து பிரித்த
கதை சொல்லவா.... "


ன்னு வந்து விழுகும். சொகமா, சோகமான்னு தெரியாம ஒரு குன்ஸா இருக்கும்.

என்ன மாஜிக் அது? யாரு பண்ணது? கண்ணதாசனா? விஸ்வநாதனா? சுசீலாவா?
கையிலே குழந்தையோடு வாயசக்கிற சாவித்திரி அம்மணியோட காட்சிதான்
மனசுல விரியும்.. யாரும் கிட்டக்கயே வர முடியாது.

நானா, கட்சியா, மாறுவதா, நெவர்...!

அன்புடன்
பிரகாஷ்

Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I