டூரிங் டாக்கீஸ்
[ [ இந்த வார நட்சத்திரத்தின் சமீபத்திய பதிவின் பாதிப்பில்] ] சென்னைக்குக் குடிபெயர்ந்த நாட்களில், பாட்டியுடன் தான் வாசம் என்பதால், சினிமா பார்க்கிற வாய்ப்புகள் ரொம்ப அபூர்வமாகவே கிடைக்கும். இத்தனைக்கும் நாலு கட்டிடம் தள்ளி கபாலி டால்கீஸ் ( அது டாக்கீஸ் என்று பின்னாளில் தான் தெரிய வந்தது ). காலைக் காட்சியில் வடிவுக்கு வளைகாப்பு, காத்தவராயன், டவுன்பஸ் போன்ற படங்களும், ரெகுலர் காட்சிகளில், செகண்ட் ரீலிஸ் புதுப்படங்களும் வரும். கூட்டிப் போவதற்கு யாரும் கிடையாது. பள்ளிக்கூடம் போகும் போது நைசாக தியேட்டருக்குள் போய், வெல்வெட்டு போர்டில் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படங்களை எல்லாம் வாயில் ஈ புகாமல் பராக்கு பார்த்துக் கொண்டிருந்த போது, அந்த வழியாக போய்க்கொண்டிருந்த விசாலம் மாமி ( எங்க ஒண்டுக் குடித்தன வீட்டின் நெய்பர்), பாட்டியிடம் போட்டுக் கொடுக்க, " வரட்டும் ஙொப்பன் கிட்ட சொல்றேன்.. என்று மிரட்டிக் கெ¡ண்டே இருந்தாள். 92 ஆம் வருஷத்தில் அவள் செத்துப் போகிற வரையிலும் சொல்லவே இல்லை. அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் எல்லாம் 'ரெக்கமெண்டு' செய்தார்கள் என்ற காரணத்துக்காக, முதல் முறையாக எனக்க