Posts

Showing posts from June, 2005

காணாமல் போன பதிவும், அதன் பின்னூட்டங்களும்

சென்றவாரம் என் வலைக்குறிப்பில் எழுதிய " என் முதல் ஹைக்கூ கவிதை" என்ற பதிவும், அதன் பின்னூட்டங்களும் திடீரென்று மாயமாய் மறைந்து விட்டது. ஆகையால் கணிணியில் சேமித்து வைத்திருந்த அந்தப் பதிவையும், அதன் பின்னூட்டங்களையும் ஒரே பதிவாக இங்கே இடுகிறேன். அசௌகர்யத்துக்கு நண்பர்கள் மன்னிக்கவும். அன்புடன் பிரகாஷ் Wednesday, June 22, 2005 என் முதல் ஹைக்கூ கவிதை... கசட தபற யரல வழள ஞஙண நமன இது எப்படி இருக்கு? posted by icarus @ 6/22/2005 03:40:00 PM 41 Comments: At 4:45 PM, Thangamani said... நல்ல பதிவு பிரகாஷ் :-) .நன்றி At 4:47 PM, ?????????(Mathy) said... Hi, prakash, could you please drop me a line at mathygrps@yahoo.com? urgent.... At 4:50 PM, -/???????. said... நல்ல பகிடி:-). தலைப்பும் நன்று. At 5:17 PM ??? (Pari) said... :-) :-) :-) At 6:07 PM, Mookku Sundar said... பிரகாசரே, நாயமா இது? இதையெல்லாம் ஒரு பதிவுன்னு போட்டு டென்ஷன் படுத்தற உம்மை என்ன செஞ்சால் தகும்? At 6.18 PM, Arun Vaidyanathan said... excellent post. Kudos prakash At 7:45 PM, அல்வாசிட்டி சம்மி said... பிரகாஷ், கலக்கல் பத

Reliance - உடைந்த சாம்ராஜ்ஜியம்

அம்பானி பற்றி ஒரே வலைப்பதிவில் சொல்லி விட முடியாது. ( சொக்கன் எழுதிய ) புதிதாக, திருத்தப் பட்ட , இரண்டாம் பதிப்பும் வந்து விட்டதாம். வாங்கிப் படித்துக் கொள்ளலாம். அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், இந்திய வர்த்தக உலகின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாளம். அவர்கள் செயல்முறைகளில், அணுகுமுறைகளில், கொள்கைகளில், பலவிதமான கருத்துக்கள் இருந்தாலும், துணிச்சலும், தைரியமும், விடாமுயற்சியும், கடும் உழைப்பும் கொண்டவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ரிஸ்க் எடுப்பதிலும், புதுப்புது திட்டங்களை அமுல்படுத்துவதிலும், அவர்கள் பலருக்கு முன்னோடி. அப்படிப்பட்ட பல பில்லியன் ரூபாய்கள் மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில், சில மாதங்களாக நடந்து வந்த குழப்பம், பிரசித்தமானது. கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருந்த இந்த பங்காளி சண்டை, நேற்று ஓரளவுக்குச் சுபமாக முடிந்தது. இரு வருடங்களுக்கு முன்பு, ரிலையன்ஸ் அதிபர் அம்பானி நோய்வாய்ப்பட்டு இறந்த சில மாதங்களுக்கு உள்ளாகவே, அம்பானியின் மகன்கள் இருவருக்குள்ளும் வேறுபாடு எழுந்தது. நாளாவட்டத்தில் விரிசல் பெரிதாகி, சில மாதங்களுக்கு முன்பு, பொது ஊடகங்களில் வெடித்

ஒரு கதை, ஒரு நாடகம், ஒரு பாட்டு

அம்மணியின் குட்டிக் கதைகள் படிக்கிற வழக்கம் உண்டோ? நாளொன்றுக்கு, நல்ல ஆங்கிலத்தில், நச்சென்று நாலுவரியில் அவர் போடுகிற quick tales என்ற குட்டிக் கதை வரிசைக்கு, நிறைய ரசிகர்கள் உண்டு. ( சில வாரங்களுக்கு முன்னால், இந்தக் குட்டிக் கதை தமிழில் பெயர்க்கப்பட்டு, சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பத்தியில் இடம் பெற்றது). அவருடைய முக்கால் வாசிக் கதைகள், பெண்களிள் உலகத்துக்குள் எட்டிப் பார்க்கிறவர்களைக் கேள்வி கேட்பதாகவும், கேலி செய்வதாகவும், சில சமயம் பச்சாதாபம் தொனிக்கிறதாகவும் இருந்தாலும், கடைசி வரிப் பஞ்ச்-கள் சட்டென்று மனசுக்குள் ஒட்டிக் கொள்கின்றன. ஓரிரு வார்த்தைகளில் வெளிப்படும் நகைச்சுவையும், குறிப்பாக கதைகள் முழுக்க அடிக்கும் மெட்ராஸ் வாடையும்... ம்ம்ம்ம்ம். புஸ்தகமா வந்தால் நன்றாக இருக்கும். அந்த தொடரில் எனக்கு ரொம்ப பிடிச்ச கதை இதுதான் திடுதிப்பென்று ஆனந்த் ராகவ் கிட்டேயிருந்து ஒரு மெயில் வந்தது. இசை குடும்பம் ஒன்றைப் பின்புலமாக வைத்து ஆனந்த் ராகவ் எழுதிய நாடகத்தை தீபா ராமானுஜம் வெளிநாடுகளில் அரங்கேற்றி, இப்போது சென்னையிலும் அரங்கேற்ற இருக்கிறார். இந்த நாடகம், வருகிற ஜூலை மாசம் முதல் வ

Book Meme

இணையத்தில் ஒரு ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. செந்தில் என்னையும் இதிலே இழுத்து விட்டுட்டார். ஆகவே என்னோட லிஸ்ட் என்னிடம் இருக்கும் புத்ககங்களின் எண்ணிக்கை சுமார் 150-200 கடைசியாக வாங்கிய புத்தகம் அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுதி ( இரண்டு பாகங்கள் ) கடைசியாக வாசித்த புத்தகம் . Red Tape Guerilla by N.Vittal எனக்கு மிகவும் பிடித்த ஐந்து புத்தகங்கள் ஆங்கிலம் Pappilon - Henri Charriere Fourth Protocol - Frederick Forsyth Kane & Abel - Jeffry Archer Mr.Sampath - R.K.Narayan Indira Gandhi, An Intimate Biography- Pupul Jayakar தமிழ் காகித மலர்கள் - ஆதவன் வாஷிங்டனில் திருமணம் - சாவி நைலான் கயிறு - சுஜாதா ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தர.ராமசாமி தேர் - இரா.முருகன் இந்த ஆட்டத்தை இவர்களும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் ஐந்து பேர் மதி ராஜ்குமார் நிர்மலா கே.வி.ராஜா மூக்கு சுந்தர்

புகை பிடித்தல் - சில குறிப்புக்கள்

" to quit smoking all you need is a cigarette and a few wet matches " என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் முன்மொழிந்திருப்பது, பல் வேறு மட்டங்களில், விதம் விதமான விமர்சனங்களைக் கிளப்பி இருக்கிறது. புகைபிடிக்கிற பழக்கம், சமூகத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என்பதில் நிச்சயமாக ஐயமில்லை. புகை பிடிக்கிற பழக்கம் இருக்கிறவர்களில், பெரும்பான்மையானோர், அப்பழக்கத்தை விட்டு ஒழித்து விடவேண்டும் என்று நினைத்து, முடியாமல் சிரமப்படுகிறவ்ர்கள் தான் என்பது என் கணிப்பு. இந்தப் புகைபிடிக்கிற பழக்கத்தை ஒட்டு மொத்தமாக சமூகத்தில் இருந்து களைந்து விட, இருக்கிற எளிமையான ஒரே வழி, ஒட்டுமொத்தமாக சிகரட்டு உற்பத்தி, விநியோகத்தைத் தடை செய்வது என்று நினைக்கலாம். ஆனால், அது அத்தனை எளிய காரியமில்லை. புகையிலை விவசாயிகள், புகையிலை வர்த்தகர்கள், சிகரட்டு ஆலையில் வேலை செய்பவர்கள், அந்தத் தொழிலில் புழங்கும் பணம், நம் உள்நாட்டு உற்பத்தியில் சிகரட்டுத் தொழிலின் பங்களிப்பு, அந்தத் தொழிலில் முதலீடு செய்திருக்கும் உள்நா