THANGLISH blogs..
கில்லி க்காக, பல தமிழ் ஆங்கில வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது, சில விஷயங்கள் புலப்பட்டன. அதாவது தமிழ் பேசத் தெரிந்த ( அனேகமாக எழுதவும் தெரிந்த ) பலர், தமிழை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்ற வினோதமான விஷயம் அதில் ஒன்று. அது. கட் பண்ணி, ஓப்பன் பண்ணி, ஆன் பண்ணி, ஆ·ப் பண்ணி என்கிற பண்ணித் தமிழ் ஒரு கொடுமை என்றால், 'ennoda poonaikutti seththu pOchu' என்கிற தங்க்லீஷ் மற்றொரு கொடுமை. ஒரு ஆத்திர அவசரத்துக்கு, முரசு அஞ்சலை எடுத்து எழுத சோம்பல் பட்டு, ஓரிரு வரிகள் தங்கிலீஷில் எழுதுகிறவன் தான் நான் என்றாலும், சில சமயம் பக்கம் , பக்கமாக தமிழை ஆங்கிலத்தில் படிக்கக் கிடைக்கும் போது, பேசாமல், விஜயகாந்த் கட்சியில் சேர்ந்து தேச சேவை செய்தால் என்ன என்கிற அளவுக்கு வெறுப்பாக ஆகிவிடுகிறது... முறையான தமிழ் தட்டச்சுப் பயிற்சி இருந்தால் தான், கணிணியில் தமிழ் தட்டச்சு செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ? முரசு அஞ்சல் அல்லது ஈ-கலப்பை நிரலியை கணிணியில் நிறுவிய பின், notepad ஐ திறந்து, தமிழை தேர்வு செய்து, 'kamal' என்று ஆங்கிலத்தில் அடித்தால் 'கமல்' என