ஒரு கேள்வி - ஒரு பதில்
கேள்வி : பத்து வருடங்களுக்கு முன்பு, ஒரு நேர்-காணலின் போது,
இயக்குனர் பாலுமகேந்திரா, தமிழ் பத்திரிக்கைகளைப் பற்றி
பின்வரும் அபிப்ராயயத்தை வெளியிட்டார். " பெரும் பத்திரிக்கைகளான
ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் ஆகிய பத்திரிக்கைளின் அட்டைப்
படத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால், ஒன்றுக்கொன்று எந்த வித்தியாசமும்
இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. அட்டைப் படத்தை நீக்கி
விட்டால் எல்லா பத்திரிக்கையும் ஒன்றுதான் ".
இது ஒரு மேம்போக்கானகுற்றச்சாட்டா அல்லது ஏதேனும் உள்ளார்ந்த அர்த்தம்
இருக்கிறதா? உங்கள் கருத்து என்ன? ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில்,
பத்திரிக்கைகளின் தற்போதைய நிலைமை என்ன?
பதில் :
பா.ராகவன்
அட்டைப்படத்தை நீக்கினால் எல்லா பத்திரிகைகளும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன என்றொரு கருத்து இருப்பதை அறிவேன். அதைச் சொன்னது பாலுமகேந்திராவா, பத்து வருஷங்களுக்கு முன்னரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.
என்னளவில் இந்தக் கருத்து மிகவும் தவறானது. எதற்காக அட்டைப்படத்தை நீக்கவேண்டும்? லோகோவை மட்டும் நீக்கினால் போதும். எல்லாம் ஒன்றேதான். அதாவது இடம்பெறும் விஷயங்கள். ப