காற்றில் கலந்தே விட்ட பேரோசை...
எனக்கும் புரிகிற மாதிரி எழுதுகிற நவீன இலக்கியவாதிகள் பட்டியலில் முதலாவதாக இடம் பெற்றிருந்தவர் சு.ரா. Pulmonary fibrosis நோயின் காரணமாக அவர் இல்லாமலே போய்விட்டாலும் கூட குறிப்பிட்ட அந்த முதலிடம் என்றுமே வெற்றிடமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. இணையத்துக்குள் நுழைந்த புதிதில், ( ஆகஸ்ட்/செப்டம்பர் 2002) நண்பர்களுடன் சந்திப்பு என்கிற சாக்கில் முதன் முதலாக இலக்கியச் சந்திப்பு ஒன்றில், சு.ராவைப் பார்த்ததும், கேள்வி நேரத்திலே, துண்டுக்காகிதத்திலே எழுதி வைத்து அபத்தமாகச் சில கேள்வி கேட்டு, அதற்கு அவர் பொறுமையாக பதில் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. இன்றைக்கும் கூட, நவீன இலக்கியத்தின் முகவரியாக இருக்கும் " ஜே.ஜே.சில குறிப்புக்கள்" நாவலைப் பற்றி நண்பர்களுடன் பேசிப் பேசி, எழுதி எழுதி மாய்ந்தது நினைவுக்கு வருகிறது. சு.ராவின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். சு.ரா குறித்து சென்ற வருடம் ஒரு இணைய இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி .. சுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள் முன்னுரை சுந்தர.ராமசாமி அவர்களின் எழுத்துக்களை, அதன் கருத்து மதிப்பை விட, அதில் இழையோடும் நகைச்சுவைக்காகவு