1996 இல் வந்த கல்கியின் வந்த சிறுகதைகளின் unofficial பதிப்பு [ அதாவது, கல்கி பக்கங்களை கிழித்து, தைத்து, உருவாக்கப் பட்ட நூல்வடிவம்). தமயந்தி, பெ.நாயகி, ஜி.சுரேந்திரநாத், பா.ராகவன், வெங்கடேஷ், ரிஷபன், கிருஷ்ணா, பத்மா ரவிசங்கர், யோகி, ஆகியோர் எழுதின கதைகள்.[ இதைப் பற்றி தனியாக பதிவு செய்ய வேண்டும் ] இப்போது வருகின்ற கதைகளுக்கு கிட்டேயே வரமுடியாது என்பதைப் போன்ற நல்ல கதைகள்.
திடுமென்று கலைஞரின் பேட்டி குறுக்கே வந்தது.
கலைஞரின் எழுபத்துஐந்தாவது பிறந்த நாளின் போது எடுத்த பேட்டி அது. இதிலே ஒரு விசேஷம் என்ன என்றால், அரசியல் தொடர்பான கேள்விகள் கிடையாது. பொதுவான விஷயங்கள், சினிமா அனுபவங்கள், நட்பு வட்டம் , குடும்பம் ஆகியவற்றைப் பற்றிய கேள்விகள். கேள்விகளை எழுதி, அனுப்பி வைத்து, பதிலையும் எழுதி வாங்கிக் கொள்கிற வழக்கமான பாணி அல்ல கலைஞருடையது என்று பத்திரிக்கை நண்பர்களிடம் இருந்து கேள்விப் பட்டிருக்கிறேன். அதனாலேயே, சில சமயம் வெகு சுவாரசியமாக இருக்கும். அரசியல் தொடர்பான விஷயங்களில், கலைஞர் மீது பெரிதாக ஈடுபாடு ஏதும் இல்லை என்றாலும், சில சமயம் புத்திசாலித்தனமான நகைச்சுவையுடன், பளிச் என்று