பிரபலங்கள் சந்திப்பு - my version
மூக்கரின் கட்டுரையை ஒட்டி
பிரபலங்கள் சந்திப்பு எல்லாம் பின்னால் தான் நடந்தது. முதலில் பிரபலங்களைப் பார்த்தது.
1981. அந்த ஆண்டில் தான் முதலில் சென்னையில் காலடி எடுத்து வைத்தது. ஜாகை மந்தைவெளி, சடையப்ப முதலி தெரு. எங்கள் வீடு அந்தத் தெருவின் முதல் வீடு. அதனால், சைடில் இருக்கும் பலகணி, பிரபலமான ராமகிருஷ்ணா மடம் சாலையைப் பார்த்த வண்ணம் இருக்கும். நாலு கட்டிடம் தாண்டினால் கபாலி டால்க்கீஸ் ( முதலில் அதை அப்படித்தான் உச்சரித்தேன்). அந்த வீட்டுக்கு வந்து குடியேறிய சில தினங்களிலேயே நடிகர் சுருளிராஜனைப் பலகணி வழியாக பார்த்தேன். படுத்துக் கொண்டிருந்தார். அவரை தூக்கிக் கொண்டு இடுகாட்டுக்குப் போய்க் கொண்ட்டிருந்தார்கள். ( பல வருடங்கள் கழித்து அவருடைய மகன் சண்முகவேல், என்னுடன் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தார்). அவர்தான், மன்னிக்கவும் அதுதான் நான் பார்த்த முதல் பிரபலம்.
பள்ளிக்குச் சேர்ந்த கொஞ்ச நாளில், வேறொரு ஊரில் இருந்து வந்த நான், எதிலும் ஒட்டாமல் ஒரு பயங்கலந்த பார்வையுடனே இருப்பேன். ஆங்கிலம் வேறு புரியாது. (மூன்றாவது வகுப்பில் என்னத்தை புரியும்.) ஒரு நாள் வகுப்பில் திடீர் என்று