Posts

Showing posts from April, 2005

குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை

தயாநிதி மாறனின் இலவச அல்வா - இலவச சிடி குளறுபடிகள் - ஓர் ரிப்போர்ட் - யுவான் சுவாங் கம்ப்யூட்டர் மயமாகி வரும் இந்தக் காலத்தில் ஆங்கிலம் தெரிந்தால்தான் கம்ப்யூட்டரை இயக்க முடியும் என்று பலரும் நினைத்து வருகின்றார்கள். இந்த நிலைமையை மாற்றி தமிழ் மட்டுமே தெரிந்தவர்களும் கம்ப்யூட்டரை முழுமையாகப் பயன்படுத்த வகைசெய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் என்றவுடனே எதிலும் கலக்கும் அரசியல் இதிலும் கலந்துவிட்டிருக்கிறது.தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தயாநிதி மாறன் சென்னையில் நடைபெற்ற கோலாகலமான விழா ஒன்றில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்கள் அடங்கிய சிடி (CD) ஒன்றை வெளியிட்டார். வழக்கம்போல இந்த விழாவிலும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், மந்திரிகள், நிறுவனங்கள் என்று யாரும் அழைக்கப்படவில்லை. கலைஞர் கருணாநிதி, அமைச்சர் தயாநிதி மாறன், காங்கிரஸ்காரர்கள் மட்டும்தான் இருந்தனர். சிடியை வெளியிட்டுப் பேசிய அமைச்சர் தயாநிதி மாறன், இந்த சிடியின் மூலம் ஆங்கிலமல்லாத பிறமொழிகளில் கம்ப்யூட்டரை இயக்கக் கூடிய புரட்சி ஒன்று வந்துவிட்டது என்று பேசினார்.

Just turn the table around...

சபாபதி ( டி.ஆர்.ராமச்சந்திரன்) , பொங்கல் பண்டிகைக்காக, தன்னுடைய வேலைக்காரன் சபாபதியுடன் ( காளி.என்.ரத்தினம்) தன் மாமியார் வீட்டுக்கு வருகிறான். மைத்துனன், அவர்களைக் கலாட்டா செய்வதற்காக, தங்கைக்காக ( சபாபதியின் புது மனைவி) வாங்கி வந்திருக்கும் புடவை, நகைகளை, கவர்ந்து , அதற்கு பதிலாக துடப்பத்தையும், கிழிந்த செருப்பையும், வைத்து விட்டு, " உன் புருஷனிடம் சொல்லாதே" என்று தங்கையையும் எச்சரிக்கை செய்து விடுகிறான். புதுப் புருஷன் அவமானப்படக் கூடாது என்பதற்காக, நகை புடவைகள் ஒளித்து வைத்திருக்கும் இடத்தை, ஒரு துண்டுச் சீட்டில் ஆங்கிலத்தில் எழுதி , வேலைக்காரனிடம் கொடுத்து அனுப்புகிறாள். ஆனால் நம்ம ஹீரோ சபாபதி, பியுசியில் கோட் அடித்து விட்டு, படிப்பு வரலை என்ற காரணத்தால். கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகவேண்டும் என்று நினைப்பவர். மை டியர் ஹஸ்பெண்ட் என்று துவங்கும் கடிதத்தை, அவர் படிக்கும் அழகும், அவற்றை வேலைக்காரனிடம், அனர்த்தமாக மொழிபெயர்த்துச் சொல்வதும், இறுதியில் புரிந்து கொண்டு நகை புடவையை மீட்கின்ற காட்சியும், கிச்சு கிச்சு மூட்டும் இரகம் என்றால், கடிதத்தின் இறுதியிலே, " ju

பெரியோர்களே தாய்மார்களே......

ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லேன்னு பிரபுதேவா பாடினது எத்தனை தூரம் உண்மைன்னு, இன்னிக்குத்தான் புரிஞ்சது. தாய்க்குலங்கள் எல்லாம் கட்டையைத் தூக்கிக் கொண்டு வருவதற்கு முன்னால், கையைத் உயர்த்தி விடுகிறேன். பசுமை என்று சொன்னது, நிஜமான பசுமையைத்தான். ஸ்பரைட்டுகளுக்கும், கோக் - க்கும் அடங்காத வெயில், நயன்தாரா அட்டைப் படம் போட்ட சினிமா பத்திரிக்கையை வாங்கி, வைத்துக் கொண்ட பின்புதான் அடங்கியது என்றால் பாருங்கள். இந்த ஏப்ரல் வெயிலிலே ஊர் சுற்ற வேண்டி வந்ததற்கான சொந்தக் காரண காரியங்களில் அத்தனை சுவாரசியம் கிடையாது. கானாக்கவிஞர்களால் புகழ் பெற்ற தலமான, ராயபுரம் ஏரியாவிலே, மோட்டுவளையை பார்த்த வண்ணம், 3 ரோசஸ் தேனீரைப் பருகிக் கொண்டிருந்த போதுதான், ரசினிகாந்து பற்றி நேற்று ராத்திரி போட்ட சண்டையை, பாதியிலேயே விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்து, கன்னித்தீவை, நாலாவது முறையாக ரசித்துப் படித்துக் கொண்டிருந்தவனை, உலுக்கினேன். " அடேய்.... இன்னும் எத்தனை பேரைப் பாக்கணும்? எப்ப வேலை முடியும்? எனக்கு அர்ஜண்டா வீட்டுக்குப் போகணும், இப்பவே..." " ரொம்ப அர்ஜெண்டா? த

Old melodies

நாளை, சென்னை மயிலாப்பூரில், பி.எஸ். மேல் நிலைப்பள்ளியில் ஒரு விழா நடக்க இருக்கிறது. 1945 இல் இருந்து 1975 வரையிலான திரை இசைப்பாடல்கள் பற்றிய ஒரு சிறப்பு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை நடத்துவது, " தமிழ் நுண்கலை மையம் " என்கிற அமைப்பு. சென்ற வாரம் ஹிந்துவில் வந்த செய்தியின் படி, " Thamizh Fine Arts Centre is presenting `Pazhasu Pazhasudan' tomorrow, 6.30 p.m., at Dakshinamurthy Auditorium, P.S. High School, Mylapore. It is a talk-and-music show covering Tamil film music between1940 and 1975. The chief guest on the occasion is well known chronicler Film News Anandan. The organisation's venture, `Marakka Mudiyuma' presented January 2004, was well received. The focus this time will be on unsung composers such as S. V. Venkatraman, R. Parthasarathy, T. R. Paapa, C. N. Pandurangan, G. K. Venkatesh and so on. Some of their compositions will be presented by Raghapravaham music troupe. " நான் போகப் போகிறேன். சென்னை மக்கள் யாருக்காவது கலந்து கொள்கிற ஆர்வம் இருக்க

சந்திரமுகி பாத்தாச்சு....

சந்திரமுகி தலைவர் படமல்ல. நல்ல படம். தலைவரின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம், பட்டாசு, தலைவர் திரையில் தோன்றுகிற நிமிடத்தில், திரைக்கு முன்னால் சூடம் காட்டி, தேங்காய் உடைத்தல், ஒன்ஸ் மோர் கேட்பது, மேடையிலே ரசிகர் கூட்டத்தின் நடனம், என்ற வழக்கமான கலாட்டாக்களின் இடையே படத்தைப் பார்த்தேன். ரசிகர்களைத் திருப்தி படுத்துவதற்காக, பஞ்ச் வசனங்கள், தேவையில்லாத அரசியல் குறியீடுகள்., தத்துவ வசனங்கள், துதிபாடல்கள் எதுவும் இல்லாமல், அனைவரும் ரசிக்கும் படியான ஒரு நல்ல திரைப்படத்தைக் கொடுத்ததற்கு பி.வாசுவுக்கு ஒரு பெரிய 'ஓ' தலைவர் திரைப்படத்தை, அங்கீகாரம் பெற்ற ரசிகர்கள், முதல் ஏழு நாட்களுக்குள் பார்த்து முடித்து விடுவார்கள். மீதம் தொண்ணுற்று மூன்று நாட்களும், படத்தை ஓடவைத்து நூறு நாள் வெற்றிப் படமாக ஆக்குபவர்கள், பொது மக்கள், அவர்களை ஏமாற்றாமல் நல்ல படம் கொடுத்திருக்கிறார் தலைவர். என்னதான் மணிசித்திரதாழை சுட்டிருந்தாலும், இத்தனை திறமையாக காப்பியடிக்கவும், நம் ஊருக்கும், ரஜினிகாந்த்தின் ஆளுமைக்கும் ஏற்ற மாதிரி, மாற்றங்கள் செய்யவும் ஒரு தனித்திறமை வேண்டும். கத்திமேலே நடக்கிற மாதிரியான திரைக்கதை. க

ரா.கி.ரங்கராஜன் - நாலு மூலை

கி ழக்குப் பதிப்பகம் வயசுக்கு வந்து விட்டது என்பதற்கான நிரூபணம் தான், அவர்கள் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் நாலு மூலை என்ற ராகி.ரங்கராஜனின் கட்டுரைத் தொகுதி. வழக்கமான வாழ்க்கை வரலாற்று நூல்கள், சஞ்சிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுதி, வி.ஐ.பி எழுத்தாளர்களின் முழுமையான படைப்புத் தொகுப்புகள், சென்சேஷனல் விவகாரங்கள் போன்ற வழக்கமான நூல்களினூடே , அனேகமான, மக்கள் மறக்கத் துவங்கி இருக்கும், ரா.கி ரங்கராஜன் அவர்களின் நூலை முதல் பதிப்பாகக் கொண்டு வந்ததைத்தான், வயசுக்கு வருவது என்ற பிரயோகத்துடன் ஒப்புமைப் படுத்தினேன் என்பதை நண்பர்கள் புரிந்து கொண்டாலும் சரி, இல்லை என்றாலும் சரி. எனக்கு ஏகப்பட்ட ரங்கராஜன்கள் மீது ப்ரீதி உண்டு. அந்த ரங்கராஜப் பட்டியலில் இரண்டாவதாக இடம் பெற்றிருப்பவர் ரா.கி.ரங்கராஜன். ரா.கி.ரங்கராஜன், ஒரு பத்திரிக்கையாளராக இல்லாமல், மற்றவர்களைப் போல, உத்தியோகஸ்தராகவும் பகுதி நேர எழுத்தாளராகவும் இருந்திருந்தால், அவருடைய எழுத்தின் வீச்சு, பரவலாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்ற எண்ணம் அவ்வப்போது எனக்குத் தோன்றும், பதினைந்து வயது முதலே, பத்திரிக்கையில் பணியாற்றவேண்டும் என்று எண்ணம்

23 பேர்...

கடற்கரை மணலில் வட்டமாக உட்கார்ந்திருப்பது, சட்டசபையை நினைவு படுத்துகிறது என்று நக்கலடித்த நாராயண் , முக்கியமான வேலைகளையெல்லாம் தள்ளிப் போட்டு விட்டு, உற்சாகமாகக் கலந்து கொண்ட மாலன் , தமிழர் பாரம்பரிய உடையாம் எட்டுமுழ வேட்டியிலே வந்து, கூட்டத்தின் இறுதி வரை இருந்து, ஒருங்குறி, ஆடியோ ப்ளாகிங், விக்கிபீடியாவின் அவசியங்கள் பற்றி சுவாரசியமாக லெக்சர் கொடுத்த பத்ரி , காந்தி சிலை என்று நினைத்து உழைப்பாளர் சிலை அருகில் காத்திருந்து விட்டு, பின் லேட்டாக வந்து கலந்து கொண்ட தமிழ்மார்கெட்டிங் வஸ்தாது-கம்-ரஜினிரசிகர் மீனாக்ஸ் , குறித்த நேரத்த்தில் வந்து, சைக்கிள் கேப்பில் கமண்ட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருந்த நாலாவது கண் சந்திரன் , தமிழ்க் கவிதை உலகுக்கு லேட்டஸ்ட் வரவான, இன்னும் ப்ளஸ்டூ படிக்கிற பையன் தோற்றத்தில் இருக்கும் வா.மணிகண்டன் , வலைப்பதிவு, பின்னூட்டம் போன்ற ஆத்மசுத்தி தரும் காரியங்களைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு, விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தில், கண்டெண்ட் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சந்தோஷ் , வந்ததில் இருந்து சரியாக பதினாலு வார்த்தைகள் மட்டுமே பேசிய தமிழ் சசி , வலைப்பதிவு இல்லா

வலைப்பதிவாளர் சந்திப்பு - நினைவூட்டல்

நாள் : ஏப்ரல் 9, 2005 இடம் : காந்திசிலை , மெரீனா கடற்கரை நேரம் : மாலை ஐந்து மணி வலைப்பதிவாளர் சந்திப்புக்கு இத்தனை உற்சாகமான வரவேற்பு இருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால், இன்னும் முன்னதாகவே ஏற்பாடு செய்திருக்கலாம் என்று தான் முதலில் தோன்றியது. வர இயலாது ஆனால் வாழ்த்துக்கள் உண்டு என்று வாழ்த்திய நண்பர்களுக்கு முதற்கண் நன்றி. எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டிருந்த நண்பர்கள் தவிர்த்து " அதெப்படி என் பெயரை விடலாம்? , நானும் அவசியம் வருவேன்" தனிமடலில் உரிமையுடன் கோபித்துக் கொண்ட நண்பர்களுக்கும் நன்றி. இந்தச் சந்திப்புக்காகவே, வெளியூரில் இருந்து வருவதாக வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றி. தொலைபேசியிலும், தனிமடலிலும், பொதுவிலும், இந்தச் சந்திப்புக்கு வருவதாக் வாக்குக் கொடுத்த நண்பர்களுக்கு கொஞ்சூண்டு நன்றியும், எக்கச்சக்கமான எச்சரிக்கையும் மட்டுமே... "அச்சச்சோ மறந்தே போச்சு, மாமா பொண்ணுக்கு காது குத்தல், ஆபீசில் லீவ் கிடைக்கலை, சுண்டு விரலில் சுளுக்கு, இந்தியா பாகிஸ்தான் மேட்ச், ஆட்டோ கிடைக்கலை," என்று சில்லறைக் காரணங்களுக்காக டகால்ட்டி கொடுக்க நினைத்தால்... நினைத்தால்? என