Posts

Showing posts from March, 2004

புதிய தலைமுறை.....

Image
பத்ரி தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருக்கும் சமாசாரம் பற்றி எனக்கு சில அபிப்ராயங்கள் உண்டு. தொழில் தொடங்குதல், திட்டம் அறிக்கை தயாரிப்பு, முதலீடு ஏற்பாடு , கடன் வசதிகளைப் பெறுதல் போன்றவற்றில் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது என்பதால், அதனை இங்கே வலைப்பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன், ஐஐடி மும்பை செய்திருக்கும் சேவை அளப்பரியது. ஆர்வமும், திறமையும் கொண்டவர்களை ஊக்குவிப்பதற்காக, அந்த கல்வி நிறுவனம் காட்டியிருக்கும் முனைப்பு பாராட்டத் தக்கது. இந்தியாவில், குறிப்பாக சென்னையில் தொழில் தொடங்குவதென்பது அத்தனை சுலபமானது இல்லை. அதில் ஏற்படும் சிக்கல்களின் அளவு, குறிப்பிட்ட தொழில்கள், அவற்றின் இயல்பு ஆகியவற்றைச் சார்ந்ததாக இருக்கும். Oxford History of Indian Business என்ற ஒரு நூலின் சில பகுதிகளை, ஒரு வணிக நாளிதழிலே வாசிக்க நேர்ந்தது. இந்திய வர்த்தக நிறுவனங்கள் தோன்றி வளர்ந்த கதையினை விவரிக்கும் அந்த நூல், சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப் பட்டு தற்போதுதான் வெளியாகி இருக்கின்றது. ( விலை, இந்திய ரூபாய் 1,350/-). 1800 களின் மத்தியில் துவங்கி, டாடா, பிர்லா போன்ற தொழிலதிபர்கள், தங்

latest

சமீபத்திய மகிழ்ச்சி : பா.ராகவனுக்கு விருது கிடைத்தது. சமீபத்திய திருப்தி : ரொம்ப நாளாக இழுத்துக் கொண்டிருந்த ஆப்பீஸ் வேலை நல்ல படியாக முடிந்தது. சமீபத்திய பெருமூச்சு : ஹ¥ம்ம்ம்ம்்்்..... சமீபத்திய எதிர்பார்ப்பு : ராவல்பிண்டி பாசஞ்சர் vs தாதர் எக்ஸ்பிரஸ் சமீபத்திய ஏமாற்றம் : ரஜினிக்கும் பாமவுக்கும் சமரசம் ( ரஜினி ராம்கியை கேட்டா மேல் விவரம் கிடைக்குமோ? ) சமீபத்திய வருத்தம் : சொல்லவும் வேண்டுமோ? சமீபத்திய கோபம் : டிட்டோ சமீபத்தில் வாசித்த புத்தகம் : எக்ஸ்போர்ட்டர்ஸ் யெல்லோ பேஜஸ் சமீபத்தில் பார்த்த திரைப்படம் : பிதாமகன் ( ஒரு அஞ்சு வருசம் இருக்குமா?) சமீபத்தில் படித்த சிறந்த சிறுகதை : டோரா போரா சமையல்காரன் by அ.முத்துலிங்கம் in தீராநதி ( மன்சன் என்னமா எழ்தறார்.. ஆராச்சும் சொல்ல மாட்டீங்களாபா... ) சமீபத்தில் கிடைத்த பரிசு : பக்கத்து வீட்டு மீனாச்சியின் எச்சில் முத்தம் ( மூணரை வயசு இருக்குன்னு நினைக்கிறேன் ). சமீபத்தின் வாசித்த சிறந்த column : சென்ற வாரம் டைம்ஸ் ஆ·ப் இந்தியாவின் ஆயாஸ் மேனனின் கிரிக்கெட் காலம். சமீபத்திய பார்த்த சிறந்த கிரிக்கெட் ஆர்

Bulls & Bears....

Image
  பங்கு சந்தை பற்றி பத்ரி எழுதி இருந்தார். சிறுமுதலீட்டாளர்கள் கணிப்பொறி மற்றும் இணையத்தின் மூலம் விரைவாகவும் புத்திசாலித்தனமாகவும், பங்குகள் விற்கலாம் வாங்கலாம், மேலதிக விவரங்களைப் பெறலாம் என்று கூறியிருந்தார். சென்னையில் இருக்கும் இளவயதினரிடம், பங்கு சந்தை பற்றிய விஷயஞானம் குறைச்சலாகத்தான் இருக்கிறது. இந்த விஷயத்தை எழுத உட்கார்ந்ததுமே, என் நண்பர்கள் , மற்றும் வயதை ஒத்தவர்கள் சுமார் இருபத்து ஐந்து பேருடன் பேசினேன். அவர்களில் ஒரே ஒருத்தர் தவிர வேறு யாரும் பங்குசந்தையில் முதலீடு செய்பவர்களில்லை. அதில் ஒருத்தர், " சேச்சே... அது காம்ப்ளிங்க்னா... " என்று எனக்கு பதிலடி கொடுத்தது வேடிக்கை. ஓரிரு வருடங்களுக்கு முன்பு, என் நண்பன் ஒருவன், கையில் தன் வருடாந்திர ஊக்கத் தொகையை வைத்துக் கொண்டு எங்கே முதலீடு செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, அப்போது பொதுப் பங்குகள் வெளியிட்ட ஒரு தேசிய வங்கி பங்குகளை வாங்கச் சொன்னேன். நானே சென்று விண்ணப்பத்தையும், குறிப்பிட்ட தொகைக்கான, கேட்பு ஓலையை வாங்கி, அவன் சார்பில் விண்ணப்பித்தேன். அந்த பங்குகள் விலை ஏறும் இறங்கும். அதை வி

Hip Hip Hurray....

டிடியில் மேட்ச் வரவேண்டும் என்று ஆர்டர் போட்ட சுப்ரீம் கோர்ட் வாழ்க. முதல்லியே டெம்போவை செட் செய்த சேவாக் வாழ்க நின்னு விளையாடின ராஹ¤ல் திராவிட் வாழ்க இன்சாமாமின் விக்கெட் எடுத்த நம்ம புள்ளாண்டான் முர்லீ வாழ்க கடைசி ஓவர் போட்ட ஆசிஷ் நெஹ்ரா வாழ்க வின்னிங் காட்ச் பிடிச்ச சஹீர் கான் வாழ்க மற்றும் ·போன் செய்யாத நண்பர்கள், சதி பண்ணாத ஈபிக்காரன், கையெழுத்து கேட்காத கொரியர் காரன், எல்லாரும் ஒட்டுமொத்தமா வாழ்க வாழ்க... -பிரகாஷ்

சிந்தனைகள், எண்ணங்கள்

வலைப்பதிவுகளைப் பற்றி மாலன் அவர்கள் எழுதிய அஞ்சல் ஒன்றை வலைப்பூவில் படிக்க நேர்ந்தது. வலைப்பதிவு எழுதுபவர்கள் எல்லாரையும் ஒரு வாங்கு வாங்கு இருக்கிறார். என்றாலும் சுவாரஸ்யமாய்த்தான் இருக்கிறது. அவருக்கு அப்படிச் சொல்ல உரிமை இருக்கிறது என்று தான் நினைக்கிறேன். இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிற பெரியவர்கள் எவருமே கண்டு கொள்ள மறுக்கும், இந்த வலைப்பதிவுகள், அது சாதித்திருக்கிற தொழில் நுட்ப உச்சங்களை, மாலனாவது, கொஞ்சம் அக்கறை எடுத்து , அபிப்ராயம் சொல்ல முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. அவருடைய கவலை, வலைப்பதிவுகளின் உள்ளடக்கம் பற்றியது. வலைப்பதிவுகள் அதன் பர்சனல் டச்சை இழந்து, கிட்டதட்ட வலை இதழ்களாக, மாறிவருகிறது என்பதுதான் மாலன் அவர்களின் அஞ்சலின் சாராமசம். பூ, படம், கதை , தன் படைப்பு, மற்றவர் படைப்பு என்று வலைப்பதிவுகள் இருப்பதாக அவர் சொல்வது, என்னுடையதையும் சேர்த்துத்தான் என்று நினைத்துக் கொள்கிறேன். எல்லாவற்றையும் ஒரே இடத்தில் போட்டுக் குழப்பிக் கொள்வது என்பது நம்மவர்களின் சைகாலஜி. சண்டைப் படத்திலும், தாலி சென்டிமெண்ட் இருக்கும். செட்டிநாடு ஓட்டலிலும், நூடுல்ஸ் கிடைக்

ஹ¤க்கா, ப.சிதம்பரம் & வாஸந்தி

Image
ஹ¥க்கா பற்றி மரத்தடியிலே பேச்சு கிளம்பியதுமே, ஒருத்தரை ஆவலுடன் எதிர்பார்த்தேன். ஆசாத் பாய்தான். மாலன் வந்தார். பாயைக் காணவில்லை. இன்னும் யாராரோ வந்தார்கள், பாயைக் காணவில்லை. திடுமென வந்தார். சூப்பரான ஒரு மடலை உள்ளிட்டிருந்தார். அட்டகாசமான மடல் அது. கல்கத்தாவில், அப்படிப்பட்ட ஹ¥க்கா பார் ஒன்று திறந்த போது, இந்த ஹ¤க்கா பார்கள்கள் பற்றி, சென்னைக்கு வந்திருந்த ஆசாத் பாய் நிறைய சொன்னார். அல்ப சொல்பம் என்று நினைத்திருந்த ஹ¤க்காவுக்குள் இத்தனை விஷயங்களா? டேங்கப்பா. மாதாமாதம்,. சிகரட்டுக்கு ஆகும் செலவை கணக்கு பார்த்தாலே, மயக்கம் வரும். ஒரு இழுப்புக்கு 3000 ரூபாய் செலவு ஆகும் ஹ¤க்கா பழக்கம் இருக்கிறவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. costly pursuit. no? 0 கல்கியில் சிதம்பரம் கொஞ்சம் போரடிக்கிறார் என்று நினைக்கிறேன். கல்கியில் வரும் கட்டுரைகள் எல்லாம், கொஞ்சம் கலகலப்பாக, - சீரியஸ்ஸான விஷயமாக இருந்தாலும் - இருக்கும். ரொம்ப வறட்சியாக இருக்கிறது. என்றாலும், அந்த சிந்தனைகள் எண்ணங்களுக்காகப் படிக்க வேண்டியிருக்கிறது. சட்டத்தின் நோக்கங்களும் காரணங்களும் பற்றிய இந்த வாரக் கட்டுரைக்கு, அ

" கட்சி மாறிட்டேனா ( அல்லது ) நடிகையர் திலகம்."

மூலைக்கு மூலை திறந்திருக்கும் ஜாய்ண்ட்டுகளில் , சீஸ் ஒழுகும் பர்கர் தின்றாலும், அது கொத்து மல்லி சட்னியுடன் அம்மா தரும் இட்டிலிக்கு ஈடாகுமா? ஆகாது. கட்சி மாறிட்டேனா என்று சுரதாவுக்கு ஒரு டவுட்டு. நானா, கட்சியா, மாறுவதா, நெவர்...! டவுட்டே வாணாம். நான் எப்போதுமே பாசமலர் கட்சிதான். மாமிகள் வரும் போகும். அதல்லாம் எங்களூர் தேர்தலுக்கு முன்பு உதித்து, தேர்தல் முடிந்ததும் உதிர்கிற சாதிக் கட்சிகள் மாதிரி. ராத்திரி பதினோரு மணிக்கு, காதுலே வாக்மேனோட, மொட்டை மாடியிலே, ரெக்லைனர்லே சாஞ்சிகிட்டு, கேசட்டை போட்டா, " சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கனவின் நினையாத காலம் எமை வந்து பிரித்த கதை சொல்லவா.... " ன்னு வந்து விழுகும். சொகமா, சோகமான்னு தெரியாம ஒரு குன்ஸா இருக்கும். என்ன மாஜிக் அது? யாரு பண்ணது? கண்ணதாசனா? விஸ்வநாதனா? சுசீலாவா? கையிலே குழந்தையோடு வாயசக்கிற சாவித்திரி அம்மணியோட காட்சிதான் மனசுல விரியும்.. யாரும் கிட்டக்கயே வர முடியாது. நானா, கட்சியா, மாறுவதா, நெவர்...! அன்புடன் பிரகாஷ்

Testing weBLOGIMAGES - Skip it

Image

Public Menace & Voyeur's delight

இரண்டு நாட்களுக்கு முன்பு ஹிந்துவில் ஒரு செய்தியைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு கல்லூரி மாணவி, தன்னுடைய வருங்காலக் கணவனுடன் சற்று நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்த அந்தரங்கமான தருணத்தை, அவரது தோழியர் சிலர், செல்பேசி காமிரா வழியாக, ரகசியமாக படம் பிடித்து, அந்தப் பெண்ணுக்கே அதை அனுப்பி வைத்தார்களாம். இது சும்மா வேடிக்கைக்காக நடந்த நிகழ்ச்சியாம். இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, மொபைல் காமிரா எப்படியெல்லாம், தகாத முறையில், மற்றவர் சுதந்திரத்தை பாதிக்கும் வண்ணம் உபயோகப் படுத்தப் படுகிறது என்று ஹிந்துவில் கட்டுரை வெளியாகியிருக்கிறது. சமீபத்திய தொழில்நுட்ப சாத்தியங்களின் படி, கண்ணுக்கே தெரியாத அளவுக்கு, ஒரு சின்ன செல்பேசி காமிரா மூலம், பேசுகிறாரா அல்லது புகைப்படம் எடுக்கிறாரா என்பது தெரியாத வண்ணம் ரகசியமாக புகைப்படம் எடுக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. சென்னை காவல்துறை ஆணையர் இரா.நடராஜன் , இது போல சம்பவங்கள் நடந்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு போதிய சட்டங்களும், அமுலாக்க முறைகள

போடுங்கம்மா ஓட்டு...

தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. என்ன ஆகும்? சுவர் எங்கும் போஸ்டர் தென்படும் . தொலைக்காட்சியிலும் பத்திரிக்கைகளிலும் மட்டும் இந்தியா ஒளிரும். psephologists என்று சொல்லப் படும் தேர்தல் நிபுணர்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்கும். மணிப்பிரவாள ஆங்கிலத்தில் பிரணாய் ராயும் குழுவினரும், அரசியல் வாதிகளைக் ஸ்டுடியோவில் கூட்டிக் கொண்டுவந்து கலாய்ப்பார்கள். தமிழ்நாட்டுக்கு ஒரு பக்கம் மாலன், ஏ.எஸ்.பன்னீர் செல்வமும், மற்றொரு பக்கம் சுதாங்கன், ரபி பெர்ணாடும். கபில்சிபலும், அருண் ஜேட்லியும் எதிரும் புதிருமாக உட்கார்ந்து காச்மூச்சென்று கத்தி விவாதம் செய்வார்கள். நிகழ்ச்சி முடிந்ததும், ஒன்றாக உட்கார்ந்து டீ சாப்பிடுவார்களாயிருக்கும். சீட்டு கிடைக்காதவர்கள் கட்சி மாறுவார்கள். ஒலிப்பெருக்கியில் பிரச்சாரக்குரல் வந்து உங்களைத் துயிலெழுப்பும்., அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி யாராவது பிரச்சாரம் செய்கிறார்களா என்று லிங்டோ கையில் பிரம்புடன் சுற்றி வருவார். ' படவா தொலைச்சுபுடுவேன்' என்று மிரட்டுவார். விக்டிம் பிஜேபி ஆளாக இருக்கும் பட்சத்தில், அடுத்த நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் குருமூர்த்தி