படித்ததில் பிடித்தவை
கொஞ்ச நாளாகவே நான், எழுதுவதை நிறுத்தி விட்டு படித்துக் கொண்டிருக்கிறேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், வலைப்பதிவுகள் ரொம்பவே போரடிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், இரண்டு வருடங்களாக தொடர்ந்து வாசித்து வந்ததில் இருந்து, எந்தப் பிரச்சனையில் யார் என்ன எழுதுவார்கள் என்பதை முன்கூட்டியே ஊகித்து விட முடிவதுதான். நாளை, ரஜினிகாந்துக்கு சந்திரமுகி படத்துக்காக தேசிய விருது கிடைத்து விட்டது என்று அறிவிப்பு வந்தால், அடுத்த சில நாட்களுக்கு, வலைப்பதிவுகளில் யார் யார் என்ன எழுதுவார்கள் என்று ஊகிப்பது வெகு சுலபம். அடிப்படையில் வாசகனாகவும், எதேச்சையாக எழுத வந்தவனுமாக இருக்கிற எனக்கு, இந்த டெம்ப்ளேட் தன்மை மிகுந்த சலிப்பை உண்டு செய்கிறது. அதையும் மீறி தொடர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ......இஷ்ட்டாப்ப்ப்ப்.. ரொம்ப ஓவரா சீன் போடறேன் போலிருக்கு... ஆரம்பம் இங்க மேட்டர் என்னன்னா, கொஞ்ச நாள் முன்னாடி வரை, பத்மப்ரியான்னு ஒரு அம்மிணி வலைப்பதிவுல, கதை எழுதிட்டு இருந்தாங்க.. தொடர்கதை எல்லாம் படிச்சு ரொம்ப நாளாச்சு.. இருந்தாலும், நினைவுப்பெட்டகம் னு ஒரு தொடர்கதையை விடாமப் படிச்சு வந்தேன். இப்ப தி