வரைவின் மகளிர் from பாண்டவபுரம்
முன் ஜாமீன் : சுஜாதா மன்னிக்க முன்குறிப்பு : ***** ***** எழுதிய ****** ** ***** என்கிற ஆங்கிலச் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு செய்த புனைவு. இது ஒரு தொடர். முடிவிலே என்ன கதை என்று சொல்கிறேன். முன்னாலேயே சொன்னால், ஒரிஜினலைப் படித்து விட்டு என் சரக்கை டீலிலே விட்டு விடும் அபாயம் இருக்கிறது. முன் எச்சரிக்கை : எங்கேயிருந்தாவது 'பிரஷர்' வந்தால், தொடர் பாதியில் நிறுத்தப்படும். ********************* ஸ்ரீவத்சன் அறிமுகமாகும் படலம் ஒரு டிசம்பர் மாத மழை நாள். கணவன்மார்களை அலுவலகத்துக்கும், பிள்ளைகளைப் பள்ளிக்கும் துரத்திவிட்டு, குடும்பஸ்த்ரீகள், சற்று நேரம் மூக்கைச் சிந்தலாம் என்று தொலைக்காட்சிக்கு முன் அமரும் அசந்தர்ப்பமான முற்பகல் பொழுது. கோடை விடுமுறைக்காலம் என்பதால், ஹைகோர்ட் வளாகம் ஈயடித்துக் கொண்டிருந்தது. தம்புச் செட்டித் தெரு அலுவலகம். கணேஷ் வார் அண்ட் பீஸ் நாவலை, எட்டாவது தரமாக, முதல் பக்கத்தில் இருந்து வாசிக்கத் துவங்கி இருந்தான். உள்ளறையில், அப்போதுதான் உறை பிரிக்கப்பட்டது போல இருந்த லாப்டாப்பை, வசந்த் நோண்டிக் கொண்டிருந்தான். " ஏமாத்திட்டான் பாஸ்.. எலிக்குட்டியே தர