Posts

Showing posts from 2006

வரைவின் மகளிர் from பாண்டவபுரம்

முன் ஜாமீன் : சுஜாதா மன்னிக்க முன்குறிப்பு : ***** ***** எழுதிய ****** ** ***** என்கிற ஆங்கிலச் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு செய்த புனைவு. இது ஒரு தொடர். முடிவிலே என்ன கதை என்று சொல்கிறேன். முன்னாலேயே சொன்னால், ஒரிஜினலைப் படித்து விட்டு என் சரக்கை டீலிலே விட்டு விடும் அபாயம் இருக்கிறது. முன் எச்சரிக்கை : எங்கேயிருந்தாவது 'பிரஷர்' வந்தால், தொடர் பாதியில் நிறுத்தப்படும். ********************* ஸ்ரீவத்சன் அறிமுகமாகும் படலம் ஒரு டிசம்பர் மாத மழை நாள். கணவன்மார்களை அலுவலகத்துக்கும், பிள்ளைகளைப் பள்ளிக்கும் துரத்திவிட்டு, குடும்பஸ்த்ரீகள், சற்று நேரம் மூக்கைச் சிந்தலாம் என்று தொலைக்காட்சிக்கு முன் அமரும் அசந்தர்ப்பமான முற்பகல் பொழுது. கோடை விடுமுறைக்காலம் என்பதால், ஹைகோர்ட் வளாகம் ஈயடித்துக் கொண்டிருந்தது. தம்புச் செட்டித் தெரு அலுவலகம். கணேஷ் வார் அண்ட் பீஸ் நாவலை, எட்டாவது தரமாக, முதல் பக்கத்தில் இருந்து வாசிக்கத் துவங்கி இருந்தான். உள்ளறையில், அப்போதுதான் உறை பிரிக்கப்பட்டது போல இருந்த லாப்டாப்பை, வசந்த் நோண்டிக் கொண்டிருந்தான். " ஏமாத்திட்டான் பாஸ்.. எலிக்குட்டியே தர

Happy Birthday தலைவரே

Image
என் வயசிலே இருக்கிற அனேகம் பேருக்கு இந்தச் சிக்கல் வந்திருக்கும்னு நினைக்கிறேன். அதாவது படிக்கற வயசிலே, ' நீ யார் ஆளு? கமல்-ஆ? ரஜினி யா?' ங்கற கேள்விக்கு வர குழப்பம் தான் அது. ஒழுக்கமாப் படிச்சு, 98 சதவீதம் மார்க் எடுத்து, ரஷ்யன் சர்க்கஸ் இல்லாட்டி காந்தி படம் மட்டுமே பார்த்து, காலையிலே வயலின் க்ளாஸுக்கும், சாயங்கால மத்யமா வகுப்புக்கும் போய்ட்டு வந்து, அது மட்டுமே வாழ்க்கைன்னு நினைக்கிற அந்த ஒரு சதவீத 'பழத்தை' விட்றுங்க, மீதம் இருக்கிற ஆவரேஜ் பசங்க நெறையப் பேர் வாழ்க்கையிலே இந்தக் கேள்வி விளையாடி இருக்கு..என் வாழ்க்கையிலும் தான். அது ஆச்சு கனகாலம். எங்க எங்கயோ சுத்தினாலும் கடேசியிலே, ஒரு வலைப்பதிவு துவங்கி, கரக்டா திசம்பர் 12 ஆம் தேதி தலைவருக்கு வாழ்த்துச் சொல்றதுலே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு... என்னோட தலையெழுத்து என்னன்னா, நான், ரஜினிகாந்த் ஒரு சாதாரண நடிகர்தான்னும், அவருக்கு இருக்கிற பேருக்கும் புகழுக்கும் அவர் தகுதியானவர் இல்லேன்னும், நம்பும்படியா எழுத/சொல்லக்கூடிய ஆட்களுக்கு மத்தியிலே இருக்கற மாதிரி ஆயிடுச்சு. ரஜினிகாந்த் ஒரு அசாதாரணமான பர்சனாலிட்டிங்கறதை அழுத்த

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

தாடியும் மீசையும் கிளம்பும்போது ஒரு பெங்காலி கடையில் திருட்டு ரெயில் படுக்க உதவும் என்று திருடிக் கொண்டு வந்த தடிமனான ஆங்கில புத்தகங்களையும் பார்த்த சக திருட்டு பயணிகள் கோவாலுவினை ஏதோ அறிவுஜீவியாக நினைத்தார்கள். அதற்கும் வந்தது ஆப்பு. சென்ட்ரலில் இறங்கி டிக்கெட் இல்லாமல் மாட்டியதால், எதிரே இருக்கின்ற ஜெயிலில் கொண்டு போய் காவலில் வைத்து விட்டார்கள். ஏதோ பேரணி, ஊர்வலம் நடத்தி வெள்ளிக்கிழமை உள்ளே தள்ளி திங்கள் கிழமை ஜாமீனில் வெளிவரக் கூடிய ஒரு அரசியல் தலைவர் கோவாலு இருந்த அதே செல்லில் இருந்தார். பெரியார் பற்றியும், சமஸ்கிருதம் பற்றியும், எம்.ஜி.ஆர் பற்றியும் பேசியதை பார்த்த அவர் கோவாலுவிற்கு மூலதனம் நூலை கொடுக்க, பொழுது போகாமல் அப்படியே படித்து முடித்த கோவாலு, கொஞ்ச நாள் கழித்து துரத்தியடிக்கப்படும் போது, புதிதாக வகுப்பு வாத பிரதிநிதித்துவ நிர்மூலம், இனப்பண்பாட்டு முடக்கு இயல் வாதம் என ஜல்லியடிக்க ஆரம்பித்திருந்தான். வெளியே வந்தவுடன் இதை போல உளறியதை பார்த்த் தகரம் கண்டுபிடித்த கம்யுனிஸ்டுகள், கோவாலுவினை அறிவுஜீவியாக கண்டறிந்தார்கள். ஏற்கனவே வாயில் நுழையாத மந்திரங்களை உளறும் கோவாலு, கம்யுன

Sivappathigaram - Review

உஷார்! கதை தெரிந்து விடும். படம் பார்க்க நினைக்கிறவர்கள் படிக்க வேண்டாம். ரமணா, அன்னியன் வரிசையில் வன்முறை மூலமாக நாட்டைத் திருத்த முயலும் மற்றொரு திரைப்படம். ஒரு கல்லூரி நடத்தும் கருத்துக்கணிப்பில் பாதிக்கப்பட்ட இடைத் தேர்தல் வேட்பாளர் சண்முகராஜன், மாணவர்கள் மீது அவிழ்த்து விடும் வன்முறையில், பலர் இறந்து விடுகிறார்கள். பழிவாங்குவதற்காகவும், தேர்தல் என்கிற அமைப்பை சரி செய்வதற்காகவும், நாயகன் விஷால், தன் ஆசிரியர் ரகுவரனின் துணையுடன் , அடுத்து வரும் பொதுத்தேர்தல் வேட்பாளர்கள், அனைவரையும் போட்டுத் தள்ளுகிறார். அதனால், தேர்தலில் யாரும் நிற்க முன்வராமல், ஒரு குழப்ப நிலை நீடிக்கிறது. தேர்தலும் தள்ளிவைக்கப் பட, ஒரு சிபிஐ ஆப்பீசர் ( உபேந்திர லிமாயே ), வந்து, சினிமா வழக்கப்படி, மூன்று காட்சிகளுக்குள் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விடுகிறார். மதுரை அழகர் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் உள்துறை அமைச்சர் ராஜன் பி தேவை போட்டுத் தள்ளும் உச்சகட்ட காட்சியில், ஹீரோ, கேமராவுக்கு முன் விஜயகாந்த் ஸ்டைலில் நீளமாக தேர்தல் பற்றிய கருத்துக்களை பேசுவதோடு படம் முடிகிறது. நடுவிலே ரகுவரனின் மகள் மம்தா மோகன்தாஸுடன

9 weird things about prakash

பிரேமலதாவுக்காக ...., பாலாஜியைத் தொடர்ந்து.... இந்தப் பதிவை எழுதுவது, பிரகாஷின் மனசாட்சி உணவு : தமிழர்களின் பாரம்பரிய உணவு இட்லி . இவன் வீட்டிலும் அப்படித்தான். ' தினமும் இட்லிதானா? " என்று சலித்துக் கொண்டே சாப்பிடுவான். இரண்டு நாள் தொடர்ந்து இட்லி இல்லை என்றால், " ஏன் இட்லி செய்யறதுக்கு என்ன? " என்று கோபித்துக் கொண்டு, ஓட்டலுக்குப் போய் இட்லி சாப்பிட்டு விட்டு, 'ச்சே.. வீட்ல செய்யற மாதிரியே இல்லை" என்று மீண்டும் சலித்துக் கொள்வான். முருகன் இட்லி கடைக்குப் போய், தோசை சாப்பிடுவதையும், அண்ணா நகர் 'சுக்சாகருக்கு' ( அக்மார்க் வட இந்திய உணவகம்) போய் அடை அவியல் ஆர்டர் கொடுப்பதையும், சரவண பவனில், மெனு கார்டில் எங்கேயோ தேடிப் பிடித்து ஸ்வீட் கார்ன் ஸூப் வித் அவுட் க்ரீம் ஆர்டர் செய்து விட்டு, டேபிளில் தாளம் போடுவதைப் பார்த்து விட்டு, நண்பர்கள், அவனை, ருத்ரனிடமோ அல்லது பீட்டர் ஃபெர்ணாண்டஸிடமோ( நகரத்தின் பிரபல மனநல மருத்துவர்கள் ) நைசாகத் தள்ளிக் கொண்டு போக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பிடி கொடுக்க மாட்டேன் என்கிறான். இசை : திரை இசை பிடிக்கும். ஆனால் க

Su.Ra, Vittal Rao, Vintage Film Club & KolangaL

சுந்தர.ராமசாமி சென்ற ஆண்டு அக்தோபரில் மறைந்தார். கைக்குக் கிடைத்ததை படித்துக் கொண்டு, படிக்கக் கிடைத்ததையே உன்னதமான இலக்கியம் என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடைய எழுத்துக்கள் தான் நவீன இலக்கியத்துக்கு ஒரு வாசலாக இருந்தது. கார்ட்டலுக்கு வெளியே இருந்தவர்களை கொஞ்சம் பரிவுடன் பார்த்தவர் என்ற வகையில், அவரைக் கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும். சில வருடங்களுக்கு முன்பு, பேச்சினிடையே, ஒரு முறை ஜே.ஜேவை சிலாகித்த போது ( கொஞ்சம் ஓவராக) , நண்பர் ஒருவர், " grow up man " என்று சிரித்துக் கொண்டே சொன்னார். வளர்ச்சி என்றால் என்ன என்று தெரியாததால், அவர் சொன்னதைக் கண்டு கொள்ளவில்லை. அவர் மறைந்து ஓர் ஆண்டு ஆனதை ஒட்டி, தமிழ்ப்பதிவுகளில் யாராவது ஏதாவது எழுதியிருக்கிறார்களா என்று கூகிள் வழியாகத் தேடிய பொழுது, வெறுமைதான் பதிலாகக் கிடைத்தது. ஆங்கில, வலைப்பதிவு நண்பர், நந்து சுந்தரம், சு.ரா. நினைவாக, இம்மாதம் முழுதும், சு.ரா பற்றிய வலைப்பதிவுகளைத் தொகுக்கப் போவதாகத் தன் இடுகை ஒன்றில் சொல்லியிருந்தார் . எத்தனை தேறும் என்ன்று தெரியவில்லை. உபரித் தகவல் : நந்து சுந்தரம், சு.ராவின் பேரன் . *******

சமீபத்தில்......

வாசித்த புத்தகங்கள் நேற்றைய வானின் நட்சத்திரங்கள் - அறந்தை நாராயணன் எண்பதுகளின் இறுதியில், தினமணி கதிரில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு. அறந்தை நாராயணன், அகடமிக்காக எழுதும் தியோடர் பாஸ்கரனுக்கும், வெறும் தகவல்களாக உதிர்க்கும் ஃபில்ம் ந்யூஸ் ஆனந்தனுக்கும் இடைப்பட்டவர், அறந்தை. 1930-50 வரை வந்த திரைப்படங்களின் நடிகர்/நடிகையர் பற்றிய குறிப்புகள். பழைய திரைப்படத் தகவல்களில் ஆர்வம் கொண்டவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். என் பெயர் ராமசேஷன் - ஆதவன் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும், ஒரு புதிய அர்த்தத்தைத் தரும் நாவல். ஒரு படம், அல்லது ஓவியம், அல்லது நாவல் அளவுக்கதிகமாகப் பிடித்திருந்தால், அதை வெளிப்படுத்த சில சமயம் சரியான வார்த்தைகள் கிடைக்காமல் போகும். இம்முறையாவது, கிடைக்கிறதா என்று பார்க்கத்தான் ராமசேஷனைத் துரத்தினேன். அதிருஷ்டம் இல்லை. India unbound - Gurcharan Das இந்தியப் பொருளாதாரம் குறித்து எனக்கு இருந்த பல மாயைகளை உடைத்த நூல். ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில், ஆரம்ப நிலையில் நுழைந்து அதன் தலைவராக ஓய்வு பெற்ற, தாஸ், தன் அனுபவங்களை, அந்த அந்த சமூக/அரசியல்/பொருளாதாரச் சூழ்நிலைகளின் பின்

பட்டிக்காட்டான் பார்த்த மிட்டாய்க்கடை - BlogCamp

conference என்றால் என்ன என்பது ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், இந்த unconference என்பது கொஞ்சம் குன்ஸாகத்தான் இருந்தது. என்னதான் நடக்கும் போய்ப் பார்க்கலாமே என்றும், பிராந்திய மொழி வலைப்பதிவுகள் பற்றி ஏதாவது பேச்சு நடந்தால், உள்ளே புகுந்து குட்டையைக் குழப்பலாம் என்று நினைத்து இரண்டு நாள் நடந்த இந்த அ-கருத்தரங்கத்தில், இரண்டாம் நாள் கலந்து கொண்டேன். * Blogcamp.in என்றால் என்ன ? * யார் இதை நடத்தினார்கள்? * யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் ? * என்ன என்ன பேசினார்கள் ? * யார் யார் இதற்கு வர்த்தக ரீதியில் ஆதரவு தந்தார்கள் ? * நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியைப் பற்றி வலைப்பதிவாளர்களின் கருத்து என்ன? * கலந்து கொண்டவர்கள் எடுத்த புகைப்படங்கள் ? இந்தச் சுட்டிகளைச் சொடுக்கி, படித்து விட்டு கீழ்க்கண்ட பதிவைப் படிப்பது நலம். இல்லாவிட்டால், மணிரத்னம் படத்தை ரிவர்ஸில் பார்ப்பது போல ஒரே 'கேராக' இருக்கும். சிரமமாக இருக்கும் என்று தோன்றினால், பவித்ரா தாக்கல் செய்திருக்கும் அறிக்கையையாவது படித்து விடுவது உசிதம். கலந்துகொண்டதில் முதலில் ஒரு விஷயம் தெளிவானது. கோட், சூட், டை க்கு பதிலாக, ஜீன்ஸ் ட

writ petition against Tata Indicom Broadband

கடந்த மூன்றுவாரங்களுக்கு முன்பு, அரசாங்கம் சில இணையத்தளங்களுக்குத் தடை விதிக்கச் சொல்ல, இணையச் சேவை வழங்கிகள், அப்படிச் செய்யத் 'தெரவுசு' பற்றாமல், மொத்த வலைப்பதிவுகளையும் போட்டுத்தள்ளியது. ( இந்தப் பதிவின் கடந்த மூன்று இடுகைகளைப் படித்தால் விளங்கும்) பிரச்சனை பெரிதானதும், அரசே, " சில இணையத்தளங்களை மட்டும் தான் நாங்கள் தடை செய்யச் சொன்னோம், மொத்தமாக அல்ல" என்று சொல்லி, தடையை நீக்கவேண்டும் என்று இணையச் சேவை வழங்கிகளுக்குச் சொன்னாலும், அவர்கள் இன்னமும் தடையை நீக்கவில்லை. தற்போது, சில நகரங்களில், சில இணைய வழங்கிச் சேவைகள் தடையை நீக்கி இருக்கிறார்கள். எந்த எந்தச் சேவைகள், எந்த எந்த நகரங்களில், தடையை நீக்கியிருக்கிறார்கள் என்பது பற்றி குழப்பமான நிலைமை நீடிக்கிறது. சென்னையிலும் கூட, ஏர்டெல் அகலப்பாட்டை, தடையை நீக்கியிருப்பதாகத் தெரிகிறது. நான் உபயோகிக்கும், டாடா இண்டிகாம் இணையச் சேவை, இன்னும் ப்லாக்ஸ்பாட் மீதான தடையை நீக்கவில்லை. எப்போது நீக்கும் என்ப்று தெரியவில்லை. கேட்டாலும் முறையாக பதில் கிடைப்பதில்லை. ஆகவே, தடையை நீக்கக் கோரி, ரிட் மனு ஒன்றை, வழக்கறிஞர் மூலமாக தாக்கல்

சிம்ரனின் 'இடை' நவீனத்துவமும், சில கவிதைகளும்

முந்தைய பதிவுகளின் ( ஒன்று , இரண்டு & மூன்று ) தொடர்ச்சியாக.... இது வரை நடந்த சம்பவங்களின் தொகுப்பின் சுருக்கம் கீழே.... 1. கடந்த சனிக்கிழமை அன்று, இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் இருந்து, தற்போது இயங்கிவரும் நூற்று ஐம்பது இணையச் சேவை வழங்கிகளுக்கு ஒரு உத்தரவு பறந்தது. மும்பை குண்டு வெடிப்பு தொடர்பின் விளைவாக, இந்திய அரசு, 18 இணையத்தளங்களை தடை செய்யக் சொல்வதுதான் அந்த உத்தரவின் சாராம்சம். அந்த பட்டியலில், ப்லொக்ஸ்பாட்டில் இயங்கும் சில தளங்களும் இருந்தன. சில குறிப்பிட்ட வலைப்பதிவுகளை மட்டும் தடை செய்ய வழி இல்லை என்பதால் ( அல்லது அவர்களுக்குத் தெரியாது என்பதால்) ஒட்டு மொத்தமாக ப்ளாக்ஸ்பாட்டில் இயங்கும் அனைத்து வலைப்பதிவுகளையும் பார்க்க தடை விதித்து விட்டார்கள். 2. இந்த உத்தரவைப் பிறப்பிக்கக் காரணமாக இருந்த Computer Emergency Response Team - India ( CERT-IN),இன் உயரதிகாரி, இது தொடர்பாக எந்த விளக்கமும் தர மறுத்து விட்டதோடல்லாமல், " நீ யாரு இதை எல்லாம் கேட்க? " என்கிற ரீதியில் பதிலளித்தார்கள். 3. முதலில், சில இணையச் சேவை வழங்கிகள் மட்டும், வட இந்தியாவில் முதலில் இந்தத்

சென்னையிலும் கோயிந்தா...

இதோ, இதோ என்று பி.எஸ்.என்.எல் ல்லும் ஒட்டுமொத்தமாக, ப்ளாக்ஸ்பாட்டில் இருக்கும் வலைப்பதிவுகளைத் தடை செய்து விட்டது.. இந்தச் சிக்கல் தீரும் வரை, என்னுடைய வலைப்பதிவு, புதிய இடத்தில் தொடரும். http://icarus1972us.wordpress.com/

Blogspot.com ban, Next in Chennai?

முந்தைய பதிவு மும்பை, தில்லியைத் தொடர்ந்து, ஏர்டெல் இணையச் சேவை, பெங்களூரிலும், ஹைதராபாத்திலும், வலைப்பதிவுகளைத் தடை செய்திருக்கிறது. geocities.com தளமும் தடை செய்யப்பட்டிருக்கிறது. சுட்டி 1 , சுட்டி 2 அடுத்தது அனேகமாகச் சென்னை? இன்னமும், அமைச்சகத்திலிருந்தோ, தொலைத் தொடர்புத் துறையிலிருந்தோ, எந்த அறிவிப்பும் வரவில்லை. தொடர்பு கொண்டு பேசுகிறவர்களுக்கும் சரியாக பதில் தர மறுக்கிறார்கள். தில்லியில் இருந்து ஷிவம்விஜ் , விடாப்பிடியாகத் தொடர்ந்து சென்று கேட்டிருக்கிறார். அரசுத்துறைக்கே உரித்தான, "எனக்குத் தெரியாது, அவரைக் கேளுங்க" என்ற ஸ்டீரியோடைப் பதில்களை எல்லாம் கடந்து, இந்தப் விஷயத்தில் பதில் சொல்ல வேண்டியவரான உயர் அதிகாரி, டாக்டர்.குல்ஷன் ராய் ( CERT-IN இயக்குனர்) அவர்களிடம் கேட்ட போது கிடைத்த பதில், "Somebody must have blocked some sites. What is your problem?" சென்னையிலும் போட்டுத் தள்ளினால், எல்லாரும் முழித்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். 1. Right to Information Act மூலமாக, எப்படி இந்த விஷயத்தில், தகவலைப் பெறுவது என்பதற்கு ஒரு உருப்படியான வழியைச் சொல்கிறார்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

கடந்த இரண்டு நாட்களாக, இந்தியாவில், சில இணையச் சேவை நிறுவனங்கள், blogger.com, blogspot.com போன்ற வலைப்பதிவுச் சேவைகளைத் தடை செய்திருக்கின்றன . வலைப்பதிவுகளை பார்க்க முடியாமல், தன்னுடைய இணையச் சேவை வழங்கியை, தில்லியில் இருந்து வலைப்பதியும் மிருதுளா விசாரித்த போது , அரசு உத்தரவு என்று பதில் கிடைத்திருக்கிறது. இந்தத் தடையினால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் இது குறித்து விரிவாக வலைப்பதிந்திருக்கிறார்கள். தற்போது கிடைத்திருக்கும் நிலவரப்படி, இணையச் சேவையை வழங்கும் தனியார் நிறுவனங்களான Reliance Infocom, Star Hathway, Tata Internet Services ,Exatt, Spectranet போன்றவையும், பொதுத்துறை நிறுவனமான MTNL உம் தடையை அமுல் செய்திருக்கின்றன. பெங்களூரில் இருந்து அபிநந்தன், spectranet என்கிற் ISP ஐ, தொலைபேசியில் அழைத்து விசாரித்த போது, அரசிடம் இருந்து தடை செய்யக் கோரி அறிக்கை வந்தது என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். எதற்காக இந்தத் தடை என்று சற்றும் விளங்கவில்லை. அரசு, வலைப்பதிவுகளைத், இணையச் சேவை வழங்கிகள் மூலமாகத் தடை செய்ய வேண்டும் என்று நினைத்தால், அது முதலில் ஆர்டர் போடுவது, BSNL க்காகத்தான் இர

மிக்ஸர் - I

* பாரிஜாதம் படம் பார்த்தேன். பாக்யராஜ் பழைய ஃபார்முக்கு வந்துட்டார். தொடர்ந்து, ரவுடியிசம், தாதாக்கள், அரிவாள் வெட்டு குத்து என்று படங்களாகப் பார்த்து பார்த்து, உடம்பெல்லாம் ஒரே ரத்த வாடை. பாரிஜாதம் பார்த்ததும் வாடை போயே போச்சு. பாக்யராஜின் பழைய, 'விடியும் வரை காத்திரு', 'தூறல் நின்னு போச்சு', இன்று போய் நாளை வா' போன்ற படங்களின் திரைக்கதை அமைப்புக்கு கிட்டக்க கூட வரமுடியாது என்றாலும், இந்த காலகட்டத்திலே ஒரு மாறுதலான படம். கிளிஞ்சல்கள் படத்தில் வந்த பூர்ணிமா ஜெயராமுக்கு கொஞ்சம் காத்தடித்து, முகத்திலே கருப்பாக மேக்கப் போட்டால், அவர் தான், சரண்யா பாக்யராஜ். ஒருதரம் பார்க்கலாம். அதாவது, படத்தைச் சொன்னேன். * என்.எஸ்.கிருஷ்ணன் பற்றிய புத்தகம் ஒன்றை வாசித்தேன். கிழக்குப் பதிப்பகத்தின் முத்துராமன் எழுதியது. ( இந்த மாதிரி வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களுக்கு என்றே, ஒரு டெம்ப்ளேட் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது). நல்ல சுவாரசியமான புத்தகம். குழப்பாமல் கோர்வையாக,ஒரே வாசிப்பில் முடித்துவிடுகிற மாதிரி எழுதியிருக்கிறார் முத்துராமன். அதிலே இருந்த தகவல்கள் நான் முன்னர் அறியாதவை.

bye bye adolesence - for thenkoodu contest

ஒரு மொட்டு எப்போது மலராகிறது என்று யாராவது சொல்லமுடியுமோ? ஒரு பையன் எந்தக் கணத்தில் வயசுக்கு வருகிறான் என்றாவது சொல்லமுடியுமோ? அறிவியல் பூர்வமான விடைகள் இருக்கிறதா இல்லையா என்று தெரியாமலேயே, இது போல கோக்கு மாக்காகக் கேள்விகள் கேட்க, கவிஞர்களுக்கு உரிமை உண்டு. அதற்கு poetic license என்று பெயர். இதை இன்னமும் விரிவாகச் சொன்னால், கவிப்பேரரசரை வம்புக்கு இழுக்கிறாற் போல ஆகிவிடும். ஆக, அதைத் தவிர்த்து விட்டு, தற்சமயத்துக்கு, அந்த உரிமத்தை மட்டும், கவிதை வாசனையே தெரியாத நான் எடுத்துக் கொள்கிறேன். எதுக்கா? தேவைப்படுதுங்க.. சுஜாதா எழுதின புதினங்களிலேயே அதிகம் பிடிச்சதுன்னு தலை பத்து பட்டியல் ஒண்ணு போட்டால், நிலாநிழல்ங்கற கதை என்னுடைய பட்டியலிலே நிச்சயம் இருக்கும். கல்லூரி முதலாண்டு படிக்கிற மாணவன் ஒருவன், கிரிக்கெட்டே பிடிக்காத கண்டிப்பான அப்பாவின் விருப்பத்துக்கு மாறாக, (சித்தரஞ்சன் போவதாகப் பொய் சொல்லி விட்டு), மும்பைக்குச் சென்று கிரிக்கெட் ஆடி வெற்றி பெற்று, பின்னர், தன் கல்லூரி வாழ்க்கைக்கு திரும்புகிற அந்தக் கதையை சிலர் வாசிச்சிருக்கலாம். ஒரு முறை ( பல மாதங்களுக்கு முன்னால் ) கிரிக்கெட்

பழைய சரக்கு - part II

முதல் பகுதியை வாசித்து விட்டு, இந்தப் பகுதியை வாசிக்கவும். Pen-ultimate part கண்ணாடியை ஒருதரம் எடுத்து, அதன் 'ஹா' பண்ணிவிட்டு, துடைத்துப் போட்டுக் கொண்டு, கல்கியில் இருந்து வந்த அந்தக் கடிதத்தை படித்தார். அவரும் அது போல பல கடிதங்களை எழுதியிருக்கிறார் (அவர் கல்கியில் இருந்த போது) என்று தெரியும். நான் லேசாக முன்கதை சுருக்கத்தைச் சொன்னேன். ஊருக்கு போயிருந்தது, சுமதி ஒரு கல்யாணத்துக்காக சென்னை வந்தது, நான் இந்த மாதிரி பத்திரிகைகளுக்கு எல்லாம் கதை எழுதி அனுப்பி, கஜினி முகம்மது வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்ற ரகசியம் என் வீட்டினர் தவிர யாருக்கும் தெரியாத வண்ணம் கட்டிக் காப்பத்துவது, இத்தனை நாளாக, கட்டிக் காப்பாத்தி வந்ததை ஒரே நாளில் கல்கி போட்டு உடைத்தது, அதன் பின் எழுந்த கிண்டல்கள் (ஹெஹ்ஹே... ஒனக்கு ஏண்டா இந்த ஆசையெல்லாம்?), நக்கல்கள் (ஒரு சூப்பர் லவ் ஸ்டோரி சொல்றேன் அதை எழுதறியா.. இது அவள் வீட்டுகாரன்), இம்சைகளில் இருந்து தப்பித்து வந்ததை லேசாகச் சொன்னேன். அந்தக் கதையையும் படிக்கச் சொல்லி வற்புறுத்தினேன். அவர் சற்றே மிரண்டு போய், (எட்டு பக்கக் கதை), "டிரெயின்லே போகும் போது

பழைய சரக்கு - part I

எழுதறதுக்கு விஷயம் இல்லேன்னா,இப்படி, பழைய சரக்கை போட்டு ஒப்பேத்துவது என் வழக்கம். ஏற்கனவே படிச்சவங்க விட்டுத்தள்ளுங்க. மரத்தடியில் இருந்து இதை உருவியிருக்கிறேன். அவங்களுக்கு என் நன்றி. நானும் சுமதியும், ஒரு குட்டிச் சாத்தானும் 'It all started when i saw sumathi again..' என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்து எழுதலாம்தான். ஆனால் வேண்டாம். சுமதி என் அத்தை பெண். அத்தை பெண் என்ற உடனே, கனவுகளைப் பறக்க விடாமல், சற்று பொறுமையாக வாசித்தால், அவளுக்குத் திருமணமாகி, ஐந்து வயதிலே வைஜெயந்தி என்ற பெயரில் ஒரு குட்டிச்சாத்தானையும் பெற்றெடுத்து இருக்கிறாள் என்பதை அடுத்த வரியில் சொல்லி இருப்பேன். பாதகமில்லை. கவனிக்கவும். இந்த சுமதியாகப் பட்டவள், ஒருவிதத்திலே எனக்கு குரு போன்றவள். அவளிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் இரண்டு. முதலாவது, புத்தகம் வாசிக்கும் பழக்கம். இரண்டாவது, அந்த பழக்கத்தைக் கொண்டு, என்ன மாதிரியான புத்தகங்கள் வாசிக்கக் கூடாது என்பது. நிறைய படிப்பாள். ஆனால், அவை சொல்லிக் கொள்கிற மாதிரியாக இருக்காது.. அதுவும், நவீன இலக்கியம் பயில்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில

புதுப்பேட்டை - Disappointing

Image
ஒரு வழியாக வந்தே விட்ட புதுப்பேட்டையை, பார்த்தே விட்டேன். மகாநதிக்கு, கல்கி இதழில் விமர்சனம் வந்த போது, கமல்ஹாசன், கல்கிக்கு விமர்சனத்துக்கு நன்றி சொல்லி ஒரு கடிதம் எழுதினார். " I normally donot show emotional reactions towards film reviews, but i take an exception in this case. Mahanathi was made by honest intentions and not by clever thoughts" என்று துவங்கும் அந்தக் கடிதத்தை, கல்கி பிரசுரித்திருந்தது. நல்ல படங்களை எல்லாம், மேலே சொன்ன விதமாகப் பிரிக்கலாம் என்றால், சொல்வராகவனின் காதல் கொண்டேன் , புத்திசாலித்தனமாகவும், 7 G ரெயின்போ காலனி , நேர்மையாகவும் எடுக்கப்பட்ட படங்கள். அப்ப, புதுப்பேட்டை? ஒரு ரெண்டும் கெட்டான். கதை? சந்தர்ப்ப சூழ்நிலைகளால், வட சென்னை இளைஞன் ஒருவன், தாதாவாக ஆகும் கதை. ·ப்ளாஷ்பாக் உத்தியிலே துவங்கும் இக்கதை, சென்னையின் சேரிப்பகுதியில் வசிக்கும் இளைஞன் கொக்கி குமாரின் ( தனுஷ்) பள்ளி வாழ்க்கை, சொந்த அப்பாவிடம் இருந்து உயிருக்குப் பயந்து ஓடி, பிச்சை எடுத்து, கஞ்சா கடத்தும் அரசியல் ரௌடியிடம் எதேச்சையாக சிக்கி, படிப்படியாகத் தொழிலைக் கற்றுக் கொண்டு, கொலை செய்

THANGLISH blogs..

கில்லி க்காக, பல தமிழ் ஆங்கில வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது, சில விஷயங்கள் புலப்பட்டன. அதாவது தமிழ் பேசத் தெரிந்த ( அனேகமாக எழுதவும் தெரிந்த ) பலர், தமிழை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்ற வினோதமான விஷயம் அதில் ஒன்று. அது. கட் பண்ணி, ஓப்பன் பண்ணி, ஆன் பண்ணி, ஆ·ப் பண்ணி என்கிற பண்ணித் தமிழ் ஒரு கொடுமை என்றால், 'ennoda poonaikutti seththu pOchu' என்கிற தங்க்லீஷ் மற்றொரு கொடுமை. ஒரு ஆத்திர அவசரத்துக்கு, முரசு அஞ்சலை எடுத்து எழுத சோம்பல் பட்டு, ஓரிரு வரிகள் தங்கிலீஷில் எழுதுகிறவன் தான் நான் என்றாலும், சில சமயம் பக்கம் , பக்கமாக தமிழை ஆங்கிலத்தில் படிக்கக் கிடைக்கும் போது, பேசாமல், விஜயகாந்த் கட்சியில் சேர்ந்து தேச சேவை செய்தால் என்ன என்கிற அளவுக்கு வெறுப்பாக ஆகிவிடுகிறது... முறையான தமிழ் தட்டச்சுப் பயிற்சி இருந்தால் தான், கணிணியில் தமிழ் தட்டச்சு செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ? முரசு அஞ்சல் அல்லது ஈ-கலப்பை நிரலியை கணிணியில் நிறுவிய பின், notepad ஐ திறந்து, தமிழை தேர்வு செய்து, 'kamal' என்று ஆங்கிலத்தில் அடித்தால் 'கமல்' என

பட்டியல் - Review

Image
ராம்கோபால் வர்மா ஸ்டைலில் வந்திருக்கும் ஒரு தமிழ்த் திரைப்படம். ( ராம்கோபால் வர்மாவின் எந்தப் பட ஸ்டைலில் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.) சித்திரம் பேசுதடி படத்துக்கும் பிறகு, சென்னையின் நிழலாளிகள் பற்றிய படம். களமும், மாந்தர்களும் எத்தனை தூரம் அசலுக்கு அருகிலே இருக்கிறதா என்பதை நாராயண் போன்றவர்கள் சொல்லலாம். கதை? < spoilers ahead > சின்ன வயசில் இருந்தே, சென்னைக் குப்பத்தில் பிறந்து வளர்ந்து, 'போட்டுத் தள்ளுவதையே' தொழிலாகக் கொண்ட இரு நண்பர்கள் கோசி ( ஆர்யா) செல்வா ( பரத் ). அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் நம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாக பட்டியல் இட்டு காட்டுவதுதான் பட்டியல். கோசி யை இதற்கு முன்பே, அறிந்தும் அறியாமலும் படத்தில் பார்த்திருக்கிறோம். அதே வசன உச்சரிப்பு, அதே குணச்சித்திரம். தண்ணி அடித்து விட்டு புலம்பும் போதும், போட்டுத் தள்ளியவன் சவ ஊர்வலத்திலேயே குத்தாட்டம் போடும் போது, மேலே வந்து விழும் நாயகி ( பத்மபிரியா) மீது எரிந்து விழும்போதும், பின்னர் அவளையே காதலிக்கும் போதும் நன்றாகவே செய்திருக்கிறார். செல்வா(பரத்) பாத்திரம் புதுசு. வாய் பேசாத, காது கேளாதவர்.

Jaane Bhi Do Yaroo

Image
மூட் அவுட் ஆகியிருக்கிற சமயங்களில், மனசை லேசாக்கிக் கொள்ள, அவரவர்க்கு தெரிந்த வழிகள் பலதும் இருக்கும். சிலர் 'புண் பட்ட நெஞ்சத்தை புகை விட்டு ஆற்றுவார்கள். ஒரு சேஞ்சுக்கு மனைவியை சமைக்கச் சொல்லி அதிகாரம் செய்வார்கள். . சிலர் குட்டிகளுடன் (அதாவது குழந்தைகள் கூட ) விளையாடுவார்கள். இப்படி ஏதாச்சும் உபத்திரவம் இல்லாத வேலையைச் செய்தால், மனம் திசை திரும்பும். இன்றைக்கு நான் ஒரு கிந்தி படம் பார்த்தேன். 'ஜானே பி தோ யாரோ ' ( 1983) என்கிற படத்தை ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருந்தேன். ராஜ் வீடியோ விஷனில் 'சேல்' போட்டிருந்த போது ( எல்லா ஊரிலும் சேல் என்றால் விற்பனை, சென்னையில் மட்டும் சேல் என்றால் தள்ளுபடி விற்பனை) , கண்ணில் விளக்கெண்ணய் விட்டுத் தேடியும் கிடைக்காத படம் ebay இல் கிடைத்து. இந்தித் திரைப்படங்களில், 'ஜானே பி தோ யாரோ (JDBY) ' ஒரு முக்கியமான திரைப்படம். வினோத் குப்தா ( நசிருத்தீன் ஷா) & சுதீர் மிஸ்ரா ( ரவி பாஸ்வானி) இருவரும் புதிதாக புகைப்பட ஸ்டுடீயோவை துவக்கி, வாடிக்கையாளர்கள் இல்லாமல் ஈ ஓட்டுபவர்கள். 'கபர்தார்' என்ற ஒரு சென்சேஷனல் ( குட்டி) நாள

No Subject

காலையில் எழுந்து கணிணி முன் அமர்ந்த பொழுது, பார்வையில் பட்ட முதல் இடுகை இது... பல வருடங்களுக்கு முன்னால், கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்த போது, ஒரு விபத்திலே நண்பன் ஒருவனை நாங்கள் பறி கொடுத்தோம். ( சரியாக பத்து வருடங்கள் கழிந்து, அதே தினத்தில், மற்றொரு துயரச் சம்பவம் நடந்தது ஒரு tragical coincidence) அவனுக்கு பிடித்த பாடல் இது. பறி கொடுத்த சில மாதங்களில், கல்லூரி culturals நிகழ்ச்சியின் போது, அவனுடைய நினைவாக, இசைக்குழு, இந்தப் பாடலை பாடிய போது, ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தையில் வடிக்க முடியாது. இப்போதாவது, கொஞ்சம் வயசு ஏறிப் போய், பக்குவம் வந்து விட்டது. ஆனால், இருபதுகளின் துவக்கத்தில், உணர்ச்சிகளை சரியாக கையாளத் தெரியவில்லை. இந்தப் பாட்டை கேட்கிற போதெல்லாம், ஒரு பியர் சாப்பிட்டால் தான் ஆச்சு என்கிற மாதிரி ஆகிவிடும். கடந்த ரெண்டு நாளாக ஒரு ( பர்சனல்) crisis. யாரைப் பார்த்தாலும் எரிஞ்சு விழுந்துகிட்டு, சத்தமா தொலைபேசியிலே பேசிக்கிட்டு, வெள்ளமாக 'ஊதி' தள்ளிக்கிட்டு இருந்து, இன்னிக்கு காலையிலே ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பாட்டை கேட்ட போது, அலம்பித் துடைத்து விட்டது மாதிரி பளிச்சென்ற

அன்பே சிவம்

Image
விமர்சனங்கள் படித்திருக்கிறேன், துண்டு துண்டாக சில காட்சிகளைப் பார்த்திருக்கிறேன் என்றாலும், இந்தப் படத்தை முழுசாக, இதுக்கு முன்னாலே பார்த்ததில்லை. நேற்றைக்கு சூரிய தொலைக்காட்சி உபயத்திலே பார்த்தேன். அருமையான திரைப்படம். வாழ்க்கையிலே, தினப்படி அவசரங்களிலே, நான் தொலைத்த அழகான தருணங்கள் பல உண்டு. அதிலே, அன்பே சிவம் பார்க்க விட்ட சந்தர்ப்பத்தையும் அவசியம் சேர்த்துக்கலாம்னு தோணுது. மிக நுட்பமான காட்சிகள், மாதவனுக்கான tailor made role, வீதி நாடகக் காட்சிகள் ( நிஜத்திலேர்ந்து ரொம்ப விலகியிருந்தாலும் ), கூர்மையான வசனங்கள், உறுத்தாத இசை என்று எல்லாம் சேர்ந்து ஒரு அற்புதமான அனுபவத்தை தந்தது. வேறுபட்ட சித்தாந்தங்கள் கொண்ட இருவரை, முக்கால் வாசிப் படம் முழுக்க, ஒன்றாக உலவவிட்டு, வசனங்களாலேயே படத்தை நகர்த்தி, இடையில், ப்ளாஷ் பாக் மூலம் கமல்ஹாசனின் பழைய வாழ்க்கையை சொல்லி, அவருடைய வாழ்க்கையில் வரும் பாலாவை ( கிரண்) மாதவனுக்கு முடிச்சுப் போட்டு அருமையாக திரைக்கதை எழுதியிருக்கிறார். இறுதிக் காட்சியில், மாதவனுக்கு எழுதுகிற கடிதத்தில், நாயகியை பாலசரஸ்வதி என்று குறிப்பிடுவதும், ந.சிவம் என்று கையெழுத்திடுவ

மவனே... ஒனக்கு இதெல்லாம் தேவையா?

கோவை குறும்பட பயிற்சிப் பட்டறையில் எடுத்த பயிற்சிப் படம் இங்கே.. ( டைட்டில் கார்டை நல்லா உத்து பாருங்க ) யூ ட்யூபிலே நூறு மெகா பைட்டுக்கு மேலே ஏத்த முடியாது. அதனாலே, ஏதோ ஜிகிடி வேலை செஞ்சு, கோப்பு அளவை குறைச்சு ஏத்தியிருக்கிறேன். ஒளி/ஒலிபரப்பு கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்.. படம் கையிலே கிடைச்சு மூணு நாலு மாசத்துக்கு மேலே இருந்தாலும், யார் கிட்டவும் போட்டுக் காட்ட தெகிரியம் வரலை... யாராச்சும் பார்த்திருந்தா என்ன சொல்லியிருப்பாங்கன்னு தெரியலை.. ஆனால், என் மனசாட்சி என்ன சொல்லுச்சு தெரியுமா? இந்த இடுகையின் தலைப்பை இன்னுமொரு முறை படிங்க...

விளம்பரம் - cocomment

நீங்க வலைப்பதிபவரா? வலைப்பதிந்து விட்டு நொடிக்கொருதரம் தமிழ்மணம் முகப்புப் பக்கத்தை f5 செய்பவரா? எல்லா இடங்களுக்கும் சென்று பின்னூட்டங்கள் அளிப்பவரா? நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு மறுமொழி வந்திருக்கிறதா என்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவரா? நீங்கள் எங்கே பின்னூட்டம் அளிக்கிறீர்கள் என்று மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவரா? இதிலே ஏதாச்சும் ஒரு கேள்விக்கு ஆம் என்றாலும், நீங்கள் இந்தச் சேவையை உபயோகித்துப் பார்க்கலாம். கில்லி - க்காக வலையை மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் பட்டது. உபயோகித்துப் பார்த்தேன். அழகாக வேலை செய்கிறது. மிக எளிதான வழிமுறைகள். Disclaimer : சேவையிலே ஏதாவது குற்றங்குறை இருந்தால், நான் பொறுப்பில்லை. என் வரையில் ஒழுங்காக வேலை செய்கிறது

pazhaiya sarakku - nalabhagam

எழுத்தாளருக்கு அவ்வப்போது வருவது writer's block என்றால் வலைப்பதிவாளருக்கு வருவது bloggers block. வார இறுதி. சாவகாசமாக உட்கார்ந்து இணையத்தை மேய்ந்து கொண்டிருந்தாலும், என்ன எழுத என்று தெரியவில்லை. அதுக்காக கையையும், விசைப்பலகையையும் வெச்சிகிட்டு சும்மா இருக்க முடியாதில்லையா? அதனால், பழைய சரக்கு ஒண்ணு... நளபாகம் . மங்களா கபே ஓனரின் அம்மா செத்துபோனதுக்கும் , என் மனைவி என் முதுகிலும், என் மச்சினன் முதுகிலும் டின்கட்டினதுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கக்கூடுமா என்றால், இருக்கும். சர்வ நிச்சயமாய் இருக்கும். ரம்யாவின், சித்தி பெண்ணுக்கு வளைகாப்பு என்று அவள் திருவாரூருக்கு புறப்பட்டபோது, அவள் சொன்னதில், முக்கியமானது, சமையல் அறைக்குள் நான் நுழையவே கூடாது என்பதுதான். எனக்கு தெரிந்த சமையல் வென்னீர் வைப்பதும் தயிர் தோய்ப்பதும் தான் என்று நண்பர்களிடம் பீற்றிக்கொள்ளும் போது ரகசியமாக தலையில் அடித்துக்கொள்வாள். காபி வைக்க கொஞ்ச நேரம் சமையல் அறைக்குள் புகுந்தால், அதை சரி செய்ய அவளுக்கு அரை நாள் ஆகும். என் கைவண்ணத்தில் அவ்வளவு களேபரம் உறுதி . " ஒழுங்கு மரியாதையா, ஆபீஸ் விட்டவுடன், வீட்டுக்கு வந்த