சிந்தனைகள், எண்ணங்கள்

வலைப்பதிவுகளைப் பற்றி மாலன் அவர்கள் எழுதிய அஞ்சல் ஒன்றை வலைப்பூவில் படிக்க நேர்ந்தது. வலைப்பதிவு எழுதுபவர்கள் எல்லாரையும் ஒரு வாங்கு வாங்கு இருக்கிறார். என்றாலும் சுவாரஸ்யமாய்த்தான் இருக்கிறது.

அவருக்கு அப்படிச் சொல்ல உரிமை இருக்கிறது என்று தான் நினைக்கிறேன். இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிற பெரியவர்கள் எவருமே கண்டு கொள்ள மறுக்கும், இந்த வலைப்பதிவுகள், அது சாதித்திருக்கிற தொழில் நுட்ப உச்சங்களை, மாலனாவது, கொஞ்சம் அக்கறை எடுத்து , அபிப்ராயம் சொல்ல முன்வந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. அவருடைய கவலை, வலைப்பதிவுகளின் உள்ளடக்கம் பற்றியது.

வலைப்பதிவுகள் அதன் பர்சனல் டச்சை இழந்து, கிட்டதட்ட வலை இதழ்களாக, மாறிவருகிறது என்பதுதான் மாலன் அவர்களின் அஞ்சலின் சாராமசம். பூ, படம், கதை , தன் படைப்பு, மற்றவர் படைப்பு என்று வலைப்பதிவுகள் இருப்பதாக அவர் சொல்வது, என்னுடையதையும் சேர்த்துத்தான் என்று நினைத்துக் கொள்கிறேன்.

எல்லாவற்றையும் ஒரே இடத்தில் போட்டுக் குழப்பிக் கொள்வது என்பது நம்மவர்களின் சைகாலஜி. சண்டைப் படத்திலும், தாலி சென்டிமெண்ட் இருக்கும். செட்டிநாடு ஓட்டலிலும், நூடுல்ஸ் கிடைக்கும். நக்கீரன் பத்திரிக்கையிலும் இலக்கிய சர்ச்சை செய்தி வரும்.

ஏன் வலைப்பதிவுகள் வலை இதழ் மாதிரி இருக்கிறதுங்கறதுக்கு என்கிட்ட ஒரு லாஜிக் இருக்கு இன்னிக்கு வலைப்பூவை எழுதறவங்க எல்லாரும் புச்சா எழுத வந்தவங்க, - barring a few, - அதாவது தமிழ் செயலிகள் புழக்கத்துக்கு வந்த பின்னால எழுதத் துவங்கினவங்க. அவங்களுக்கு, அதாவது எங்களுக்கு ஏதாவது எழுதணும். என்ன எழுதலாம்? சுயசரிதை எழுத நான் செலிபிரிட்டி இல்லை. இல்லை. அபிப்ராயம் சொல்ல நான் விமர்சகன் இல்லை. சும்மா அங்க போனேன் , இங்க வந்தேன்னு எழுதினா யாரும் படிக்கப் போறதில்லை.

1. அப்படின்னா, மத்தவங்களுக்காகத்தான் எழுதறனா?

நிச்சயமாய், இல்லாட்டி என் வலைப்பதிவை ரிஜிஸ்டர் செய்யும் போதே, not for public
என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து இருப்பேனே.

2. வலைப்பூ அதுக்கான சமாசாரம் இல்லை. கதை கவிதை எழுதணுமின்னா,
பத்திரிக்கைலே எழுது.

எங்க சார், இது வரைக்கும், சுமாரா, ஆறு சிறுகதைகள் எழுதி சில பிரபலப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பியிருக்கிறேன். மாசம் ஒன்பதாச்சு. அது திரும்பி வர வரைக்கும் வேற எங்கியும் போடக்கூடாதாமே. நெட்டுலே கூட பிரசுரிக்கக்கூடாதாம். என்னா மொறைமையோ , என்னா வழக்கமோ.

3. ஏன் பர்சனல் டச்சை இழந்து விட்டது?

என்ன சார் சும்மா பர்சனல் டச்சுன்னு... ..... இப்ப, பர்சனல் டச்சுன்னு எதைச் சொல்றீங்க. ஒரு கதையைப் படிக்கிறேன். அந்தக் கதை எப்படி இருந்துச்சுங்கறதைப் பத்தின என் அபிப்ராயமா? ஒரு வலைப்பதிவுக்கு, போறேன், அதைப் பத்தின என் கருத்துக்களா? இது எப்படி என் வலைப்பூவை நோக்கி இன்னொருத்தனை வரவைக்கும்? how do i sustain my reader's interest?

4. ஒவ்வொரு நாளும் ஒரு வலைப்பூக்களுக்கு உலா வந்து, இன்னின்ன விஷயங்கள் கண்ணில் பட்டன, இது பேத்தல், இதைப் படித்துச் சிரித்தேன் என்று எல்லாவற்றையும் கொட்டலாமே?

வாஸ்தவம்தான். ஆனால் இதை யார் செய்யணும்? நாங்களே எழுதி நாங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் அதைப் பத்தி பேசிக்கணுமா?. அதைச் செய்யவேண்டியவர்கள், மாலனைப் போன்றவர்கள் இல்லையா.

5. வலைப்பதிவுகள் பற்றி திசைகளில் எழுதியதை நினைத்தால் குற்ற உணர்ச்சி வருகிறது.

மாலன் சார், அந்த குற்ற உணர்ச்சி உங்களுக்கு வேண்டவே வேண்டாம். இன்னிக்கு வலைப்பதிவுகளில் எழுதிக்கிட்டு இருக்கிற, அருண் வைத்தியநாதன், பத்ரி, பாலாஜி, பாஸ்டன் பாலாஜி, பிரகாஷ், மதி கந்தசாமி, பரிமேலழகர், காசி, செல்வராஜ், ஷங்கர், ரவியா, முத்து. மீனாக்ஷிசங்கர், வெங்கட்ரமணன், பா.ராகவன், வே.சபாநாயகம், அருணா ஸ்ரீனிவாசன், சுந்தரராஜன் பசுபதி, ஹரன்பிரசன்னா, எம்.கே குமார், சுரதா இவங்கள்ளே, 98 விழுக்காட்டினர், புதுசா எழுத வந்தவங்க.இந்த லிஸ்ட்டுலே இருக்கிற சீனியர்கள் தவிர, வேறு யார், மற்றவர்பாராட்டத்தக்க வகையில் ஒரு எழுத்தாளராக பரிமளித்தாலும், அதற்கு, நீங்கள் திசைகளில் வலைப்பூக்கள் பற்றி எழுதியதும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கும். குற்ற உணர்ச்சி எல்லாம் தேவையே இல்லை.

நீங்கள் ஆரம்பத்தில் திசைகளில் எழுதினதைத் தவிர, வேறு யார் இந்த வலைப்பதிவுகளைக் கண்டு கொண்டிருக்கிறார்கள்? வலைப் பதிவு தொழில்நுட்பத்தில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களை உடனுக்குடன் தமிழ் compatible ஆக செய்யும் நண்பர்களுக்கு என்ன விதமான ரெகக்னிஷன் இது வரை கிடைத்தது? வலைப்பூ என்கிற bloggers journal ஐ நடத்திக் கொண்டு வரும், மதி & கோஷ்டியினரை, இது வரை பப்ளிக்காக பாராட்டியவர் உண்டா ? இன்றைக்கு இருக்கும் எல்லாத் தொழில்நுட்பங்களையும் அடாப்ட் செய்து கொண்டு, வலைக்குறிப்புகளுக்கு எல்லாம் முன்மாதிரியாக இருக்கும் வலைப்பதிவு அல்லவா அது? a pat on the shoulder? ஹ¥ஹ¥ம்ம்ம்...

ஆனந்த விகடன் என்கிற தமிழ் இதழில் , கடந்த ஐந்து ஆறு வருடங்களாக, இணையத்தைப் பற்றிய ஒரு தொடர் வந்து கொண்டிருக்கிறது. ஒரு தொடரில், குறைந்தது நாலு அல்லது ஐந்து இணையத்தளங்களை அறிமுகப்படுத்துவார்கள். இது வரை வந்ததில், தமிழ் தொடர்பான இணையத்தளங்கள் பற்றிய குறிப்புகள், இருபதுக்கும் கீழாகத்தான் இருக்கும். ஆ·ப் லைன் பத்திரிக்கைக்காரர்களைப் பார்க்கிற போது, படு கூலாக, " சைன்ஸ் எழுத ஆளே கிடைக்கிறதில்லங்க' என்கிறார்கள். தொழில்நுட்பம் பற்றி வலைப்பதிவுகளில் மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கும் வெங்கட், காசி பற்றி இவர்கள் அறிவார்களா? சட்டம் பற்றி மிக எளிமையாக எழுதும் பிரபு ராஜதுரை பற்றி அறிவார்களா?

வலைப்பதிவுகள் வலையில் இருக்கும் டயரிக்குறிப்புகள் என்று நினைப்பவர்களுக்கு நீங்கள் சொல்வது சரி. ஆனால் வேறு சில காரணங்களுக்காக, வலைப்பதிவு செய்பவர்களுடைய, நோக்கத்தை நாம் கேலி செய்ய முடியாது. tamil blogging is still in the evolution stage. இன்னும் நிறையப் பேர் வருவார்கள். எண்ணிக்கையில் அவை அதிகமாகும் போது, நல்ல வலைப்பதிவுகள் கிடைக்கும் பிராபபிலிட்டியும் அதிகமாகிறது. அது வரை பொறுத்திருக்க வேண்டும்.

அன்புடன்
பிரகாஷ்


Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

9 weird things about prakash

மிக்ஸர் - I