Posts

Showing posts from May, 2005

கன்னட ராஜா பராக் பராக்...

தமிழிலே சில நல்ல படங்களைக் கொடுத்த வீனஸ் ஸ்டுடியோ ரத்தினம் அய்யருக்கு மகனாகப் பிறந்த ஜி.சுப்பிரமணியம் என்கிற மணிரத்னம், முதன் முதலாக எடுத்தது ஒரு கன்னடத் திரைப்படம். பாலுமகேந்திரா தான் ஒளிப்பதிவு. அந்தத் திரைப்படம் எடுத்த போது நேர்ந்த விஷயங்கள் ( " flow chart , cashflow statement எல்லாம் பக்காவா தயாரித்துத்தான் அந்த பிராஜக்ட்டிலே இறங்கினேன். ஆனால் அடுத்த வாரமே அதை கிழித்துப் போட்டு விட்டேன்" என்று சமீபத்தில், லாண்ட் மார்க்கில் நடந்த விழாவில் பேசிய போது வாக்குமூலம் கொடுத்தார்) தனிக் கட்டுரைக்கான விஷயம். இளையராஜாவின் இசையில் வந்த இந்தப் படம், ஒரு சிக்கலான கதை அமைப்பைக் கொண்டது. எஸ்டேட் மேலாளரான கணவனை வேறொரு பெண்ணுடன் 'பார்க்கும்' லக்ஷ்மி கோபம் கொண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டு மகனுடன் தனியாக வசிக்கிறாள். காதலியுடன் கொஞ்சலும் ஊடலுமாகப் பொழுதைக் கழிக்கும் இளைஞன் ( அனில்கபூர் ) லக்ஷ்மியின் வீட்டுக்குப் பக்கத்தில் குடிவருகிறான். அவனுக்கு, லக்ஷ்மி மீது ஒரு விதமான ஈர்ப்பு. இதை தவறாகப் புரிந்துகொள்கிறாள் அவனது காதலி ( கிரண்). இறுதியில், லக்ஷ்மி அவர்கள் வாழ்க்கையில் இருந்து வில

ஆண்கள் பெண்கள்

இந்த வாரம் குமுதத்தில் ஜெயமோகனின் பத்தி வாசிக்கச் சுவையாக இருந்தது. சில சிந்தனைகளைக் கிளப்பி விட்டது. வாசக நண்பர் ஒருவர், தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட திரைக்கதை ஒன்றைப் பற்றி எழுதியிருந்தார். அயல்நாட்ட்டில் வசிக்கும் இளம் தம்பதியருக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு முற்றுகிறது. விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்கின்றனர். அப்போது, நீதிமன்றம், விவாகரத்து கிடைக்கும் வரை, அதாவது மூன்று மாதங்கள் வரை அவர்கள் சேர்ந்து வாழவேண்டும் என்று உத்தரவிடுகின்றது. கணவனுக்கு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. புதுமையாக எதையாவது செய்யலாம் என்று நினைத்து , ஒரு பெண்ணின் புனைப்பெயரைக் கொண்டு, இணைய அரட்டை செய்கிறான். அங்கே ஆண் அடையாளத்தில் இருக்கும் ஒருத்தருடன், பெண் என்ற பாவனையில், சகஜமாக உரையாடுகின்றான். அவன் ஒரு கணிப்பொறி வல்லுனன். அந்தப் பொய்ப் பெயரில் வருவது அவன் மனைவிதான் என்று தெரிந்து விடுகிறது. இருந்தாலும், அந்த கண்ணாமூச்சி விளையாட்டை தொடர்ந்து ஆடுகின்றான். தன்னை ஒரு பெண்ணாக பாவிக்கும் போது, மனைவியைப் பற்றியும், அவளுக்கு ஏற்படும் சிக்கல்கள் பற்றியும், அதை தான் கண்டு கொள்ளாமல், தன்னைப் பற்றிய

யாராச்சும் கொஞ்சம்....

நான் என் சொந்த உபயோகத்துக்கு என்று, wordpress அடிப்படையிலான ஆங்கில வலைப்பதிவு ஒன்றை, weblogs.us என்ற தளத்திலே நடத்தி வருகின்றேன். இந்த வலைப்பதிவு, என்னுடைய தமிழ்மணம் profile க்கு தொடர்பில்லாதது. weblogs.us தளத்தில் வலைப்பதிவு எழுதுவது வசதியாக இருக்கின்றது. ஆனால், சில காரணங்களுக்காக, இந்த வலைப்பதிவை, என்னுடைய இணையத்தளத்துக்கு நகர்த்தி விட எண்ணினேன். php என்ற நுட்பத்தை படித்து அறிந்து கொள்ளுவது அத்தனை எளிதாக இல்லை. எதைச் செய்தாலும், கடைசியில் ஏதோ வருகின்றது. கூகுள் தேடுபொறியில் கிடைக்கும் தகவல்கள் ஜெயமோகன் நாவல் போல, படிக்க படிக்க, சுரந்து கொண்டே இருக்கிறதே அன்றி, இறுதியில் எதுவும் விளங்கவில்லை. சொந்த இணையத்தளத்தில், wordpress ஐ நிறுவுவது எப்படி என்பதற்கான அடிப்படை வழிமுறைகளை யாராவது எனக்கு அனுப்பித் தர இயலுமா? அல்லது இணையத்தில் எங்காவது ஏற்கனவே இருந்தால், அதன் சுட்டியைத் தர இயலுமா. பொதுவாக வலைப்பதிவு குறித்து உதவி என்றால், மதியிடம் செல்வேன். ஏதோ, தமிழ்ச்சேவை செய்கிறார் போலிருக்கு என்று நினைத்து அவரும், உதவி செய்வார். ஆனால், சொந்த உபயோகத்துக்கு என்பதால், கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதனால

I want my money back....

"மிஸ்டர் டைரக்டர், தொடர்ந்து, கத்தி அருவா பிச்சுவா படமா வந்துகிட்டிருக்கு.. ·பேன்ஸ் ரொம்ப ·பீல் பண்றாங்க... குஷி மாதிரி கதை இருந்தா சொல்லுங்க. " என்று விஜய் சொல்லி இருக்க வேண்டும். " அதுக்கென்ன விஜய் சார்? குஷி படம் மாதிரி எதுக்கு? குஷி படத்தையே திரும்ப எடுத்துடுவோம். ரசிகனுங்களுக்குப் கண்டுபிடிக்கத் தெரியாது...என்ன தாணு சார், நீங்க என்ன சொல்றீங்க..? என்று டைரக்டர் ஜான் ஒத்து ஊதி இருக்க வேண்டும் " என்னமோ எடுங்கப்பா.... பூஜை போடற அன்னிக்கே மொத்த ஏரியாவும் வித்துப் போயிடும். எல்லாம் திருப்பாச்சி பண்ற வேலை...படத்தை சீக்கிரமா எடுத்து சுருட்டிக் குடுங்க...அடுத்த படத்துக்கு பூஜை போடணும் " என்று தயாரிப்பாளர் தாணு கரன்சிக் கனவுகளில் மிதந்திருக்க வேண்டும். விளைவு... வடபழனி கமலாவிலே மூணு மணிநேரத்துக்கு தொடர் தலைவலி... இந்தப் கழுத்தறுப்புக்குப் பேர் சச்சின். கதை? என்னாத்த பெரிசா கதை? இவர் அவரை லவ் பண்றார். அவரும் பதிலுக்கு லவ் பண்றார். ஆனால், அதை ஒத்துக்க மாட்டேங்கறார். காரணம். ஈகோ. அவர், உன்னை லவ் பண்ண வைக்கிறேன் என்று சபதம் போடுகிறார். இறுதியில், இவர் தனக்கு நிசமாவே லவ

கடந்த முப்பது நாட்களில்.....

ஆண்டு விழா கொண்டாடும் நவனுக்கு வாழ்த்துக்கள். இன்றைக்கு எழுதியிருந்த தன் பதிவிலே அவர் , "......இந்த வார நட்சத்திரம் செயல்படும் விதம் பற்றி - நட்சத்திரங்களின் மீது ஏற்கெனவே ஒளி வட்டம் விழுந்திருப்பதால் அவர்கள் அந்த வட்டத்திற்குள் இருக்கும் நாட்களில் நாளுக்கு ஒரு வலைப்பதிவினையாவது பற்றி எழுதுதல் நலம். உதாரணமாக ‘மூக்கு’ சுந்தர் செய்தது போல் தங்கள் மீது விழுந்திருக்கும் ஒளியினை கொஞ்சம் அன்றைய தினம்/வாரம் தாங்கள் வாசித்த சுவாரசியமான/நல்ல வலைப்பதிவுகளின் பக்கமும் திருப்பி விட்டார்களானால் புதிய வலைப்பதிவர்களுக்கு தேவையான உத்வேகம் கிடைக்கும்......" என்று எழுதியிருந்தார். உண்மைதான். வலைப்பூ சஞ்சிகை இருந்த போது, வலைப்பூ ஆசிரியர்கள், மற்றவர்களுடைய புதிய வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வார்கள். நட்சத்திரம் நடைமுறைக்கு வந்ததும், அந்தப் பழக்கம் கைவிட்டுப் போய்விட்டது. எது பிடிக்கின்றதோ, அதனை வெளிப்படையாகச் சொல்லுவதிலே எனக்குச் சிக்கல் இருந்ததில்லை. கடந்த முப்பது நாட்களில் எனக்குப் பிடித்த பதிவுகளின் பட்டியல் கீழே. பதிவுகளைத் தேதிவாரியாக அடுக்கி வைத்திருக்கும் தமிழ்மணம் திரட்டிக்கு நன்றி. இந்தப

உதிரிப்பூக்கள்

Image
மீண்டும் மீண்டும் பார்க்க சலிக்காத படங்களின் பட்டியலில் உதிரிப்பூக்களுக்கு இடம் உண்டு. சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், போன்ற நடிகர்கள் ஒளிவட்டத்தில் இருந்து விலகத் துவங்கிய எழுபதுகளின் இறுதியிலிருந்து, எண்பதுகளின் துவக்கம் வரையிலான காலகட்டத்தை, தமிழ்ச் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லலாம். கதாநாயகனை மையப்படுத்தி, அதீதமான உணர்ச்சிக் குவியலாக இருந்த திரைப்படங்களை, மீட்டுக் கொண்டு வந்த படைப்பாளிகள் அனைவரும், அந்த காலகட்டத்தில் அறிமுகமானவர்கள் தான். பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், மகேந்திரனின் உதிரிப்பூக்கள், பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே ஆகிய மூன்று முக்கியமான படைப்புக்கள் அப்போதுதான் வெளிவந்து, தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றி அமைக்க முற்பட்டன. ஆனால், அந்த முயற்சி முழுதாக வெற்றி பெறவில்லை. இயல்பான கிராமம் அது. ஊர்ப் பெரிய மனிதர் சுந்தரவடிவேலு ( விஜயன் ) அத்தனை நல்லவரில்லை. அவரது தம்பியே ( பூபதி ) அண்ணனுக்கு எதிரானவன். சுந்தரவடிவேலுவின் மனைவி, அஸ்வினி, அமைதியே உருவானவர், கணவன் செய்யும் அக்கிரமங்களை எதிர்க்கத் திராணியில்லாதவர். அவருடைய உலகம், தன் குழந்தைகள் ( அஞ்சு, ஹாஜா ஷெரீ·ப் ) தங்கை செம்

சு.ரா உரை பாகம் II

ஒரு அமெரிக்க - விமர்சகர் என்று கூடச் சொல்ல முடியாது - ஒரு பத்தி எழுத்தாளர். வாராவாரம், பத்திரிக்கைகளுக்குப் புதிய புத்தகங்களைச் சிபாரிசு செய்யக் கூடியவர். ************** என்று பெயர். அவருடைய வாக்கியம் ஒன்று நினைவுக்கு வருகிறது. " literature brings into your conciousness, what you don't know, u knew". இந்த வாக்கியத்தை, அனேகமாக அவருடைய ( அசோகமித்திரன் ) கதைகள் ஒவ்வொன்றையும் படிக்கும் போதும், எனக்கு நினைவுக்கு வருகின்றன. அதில் மிகப் பெரிய ஒரு சந்தோஷத்தை நான் அடைகிறேன். அந்த சந்தோஷத்தை வாசகர்கள் அடையவேண்டிய அவசியம் இருக்கிறது என்று நான் மனப்பூர்வமாக, அவரைப் போலவோ, அவருடைய காலத்திலோ, அல்லது அதற்கு முன்னாலோ, எழுத ஆரம்பித்த எழுத்தாளன் நான் - அவரை உங்களுக்கு மனப்பூர்வமாக நான் சிபாரிசு செய்கிறேன். அவரைப் படிக்கவில்லை என்றால் பெரிய நஷ்டம் என்று கூட நான் சொல்லுவேன். கட்டாயமில்லை என்று சொன்னேன். ஆனால் மிகப் பெரிய இழப்பு என்று நான் சொல்லுவேன். அவசியம் அவரைப் படித்துப் பார்க்க வேண்டும். அதற்கான எந்த விதமான முன்தயாரிப்புகளும் அவருக்குத் தேவையே இல்லை. அவ்வளவு எளிமையில் - அதாவது அவரது எ

லக்கலக்கலக்கலக்கலக்க......

அசோகமித்திரன்-50 நிகழ்ச்சியில், சுந்தர.ராமசாமி ஆற்றிய உரையின், எழுத்து வடிவம் - பாகம் I [ கிழக்குப் பதிப்பகம் விநியோகித்தளித்த விசிடியில் இருந்து சுட்டு எழுதியது. ஆகவே,வேறு வழியில்லாமல், அவர்களுக்கு நன்றி ] சுந்தர.ராமசாமியின் உரை --------------------------------- எழுத்தாள நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், என் சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கூட்டத்தை உருவாக்கித் தந்திருக்கும் கடவு-கிழக்கு ஆகிய நிறுவனங்கள், மிகப் பெரிய ஒரு காரியத்தைச் செய்ய முன்வந்திருக்கிறார்கள். உங்கள் சார்பில், அவர்களுக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கூட்டம் நடைபெற வேண்டும் என்று சென்னையில் சில நண்பர்கள் முடிவு செய்ததும், நண்பர் பிரபஞ்சன் அவர்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதி, இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவருடைய அன்பான அழைப்புக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ,அற்றும் என் நண்பர்கள் பலரும் நான் வரவேண்டும் என்று விரும்பினார்கள். அவர்களுக்கும் என் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இப்போது, அசோகமித்திரன் பட

அந்த நாள் - எஸ்.பாலசந்தர்

தமிழ்த் திரைப்பட உலகில் வலம் வந்த அறிவுஜீவிகளைக் கணக்கெடுத்தால், அதிலே எஸ்.பாலசந்தரும் அடங்குவார். பின்னாட்களில், எஸ்.பாலசந்தர் ஒரு வீணை வித்துவானாகப் புகழ் அடைந்திருந்தாலும், அவ்ர் தன்னுடைய கலைப் பயணத்தைத் துவக்கியது திரைப்பட நடிகராகவும், இயக்குனராகவும் தான். சீதா கல்யாணம் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி, அதற்குப் பின் சில திரைப்படங்களில், துணைப்பாத்திரங்களில் நடித்தார். " பெண்' என்ற திரைப்படத்தில், நாயகன் ஜெமினிகணேசனுக்கு தோழனாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடித்திருந்தார். "என் கணவர், இது நிஜமா?. அவனா இவன், அவன் அமரன், நடு இரவில், கைதி போன்ற திரைப்படங்கள் இயக்கினார். இது நிஜமா என்ற திரைப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், இரட்டை வேடங்களில் நடிக்கவும் செய்து, படத்திற்கு இசையும் அமைத்தார். [ கமலஹாசன் நடித்த கல்யாணராமன், இது நிஜமா வின் லேசான தழுவல்] ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பது/ அறுபதுகளில் , வெளியான படங்கள் பெரும்பாலும், குடும்பக் கதைகளாகவும், புராணக் கதைகளையும் ஒட்டித்தான் இருந்தன. அதிலும் குறிப்பாக, எம்.ஜி.ராமச்சந்திரனின் வரலாற்றுக் கதைகளும், ஜெமினிகணேசனின் கா

இது எப்டி இருக்கு...

Image
நட்சத்திரமாக நாமினேட் செய்த உடனே, யாரையாவது பேட்டி கண்டு போடவேண்டும் என்று மற்ற நட்சத்திரங்கள் எண்ணியது போலவே எனக்கும் ஒரு 'இது'. அப்துல்கலாம், கமலஹாசன், மணிரத்னம், ஜெயமோகன், இளையராஜா என்று விஐபிகள் எல்லாம், " நான் பேட்டி கொடுக்கிறேன், நான் பேட்டி கொடுக்கிறேன்... " என்று முட்டி மோதிய போதும், அவர்களை எல்லாம், ஒதுக்கொ ஒதுக்கோ என்று ஒதுக்கி விட்டு, வலைப்பதிவு உலகின் வஸ்தாது ஒருவரை, தேர்வு செய்ததற்கு என்ன காரணம்? அவர் மட்டும் தான் நான் கேட்ட ஏடாகூடமான கேள்விகளுக்கு , கோபப்படாமல் பதில் அளிக்கிறேன், என்று உறுதி தந்தார். சொன்ன படியே பதில்களையும் தந்தார். பீடிங் பாட்டில், டயாப்பர் காலத்தில் இருந்து துவங்கி, மூணாங்கிளாஸ் படிக்கும் போது மஞ்சக்காமாலை வந்தது, எட்டாம் வகுப்பில் புது சைக்கிள் வாங்கி பக்கத்து வீட்டு அலமேலுவுடன் டபுள்ஸ் போனது, பத்தாம் வகுப்பில் முதல் க்ளாசில் வந்தது, அம்மாவுடன் போட்ட சண்டைகள், அப்பாவிடம் வாங்கிய உதைகள், கல்லூரி, கட் அடிப்புகள், வேலை, பணம், மேலும் பணம், என்று அனைத்தையும் கவர் செய்கிற மாதிரி ஒரு பர்சனல் நேர்காணலுக்கு என்று சுமார் ஒரு நூற்றைம்பது கேள்வி

Happy Birthday Sir...

Image
இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு இணையத்தளத்துக்காக எழுதிய கட்டுரையை ( எந்தவிதத் திருத்தமும் இல்லாமல் அப்படியே) இங்கே மீள் பிரசுரம் செய்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் , சுஜாதா சார்... அன்புடன் பிரகாஷ் **************************** சிகரம் தொட்ட.... ஒரு எழுத்தாளன் பற்றிய ஒரு வாழ்க்கை சித்திரம் என்றால், அவர் இன்னாருக்கும் இன்னாருக்கும் மகனாக பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார், எழுதினார் என்ற ஒரு சம்பிரதாயத்தை ஒட்டித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? அவர் பிறந்த வருஷம், எழுதிய வருஷம், விருது பெற்ற தேதி என்ற மொண்ணை எண்களை முன்னிலைப்படுத்துவது, ஒரு தேவையற்ற செயல். மேலும், அவர் முதல் முதலாக பார்த்த ஏர்போர்ட் கிரவுண்ட் இஞ்சினியர் வேலை, பின்னர் யுபிஎஸ்சி பாஸ் பண்ணி பாரத் எலக்ட்ரானிக்ஸில் விஞ்ஞானியாக சேர்ந்து பெரிய பதவியில் ரிடையர் ஆனது, பல முக்கியமான மின்னணு சாதனங்களில் அவரது பங்கு, போன்ற தகவல்கள் அவரது படைப்புலகம் பற்றிய கட்டுரைக்கு எவ்வளவு தூரம் வலு சேர்க்கும் என்று தெரியவில்லை. ஒன்று வேணுமானால் சொல்லலாம். சம்பாதனைக்கு பங்கம் ஏதும் இல்லாத கவர்மெண்ட் வேலையால், அவருக்கு எழுதி

இரு கவிதைகள்.

முகுந்த நாகராஜனின் இன்னும் இரு கவிதைகள். நன்றி : முகுந்த் நாகராஜன் ரயிலின் காதில் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் நிற்கும் முன் அதன் காதில் ரகசியமாக 'ஸ்டாப்' என்று சொல்லி விட்டு ரயில் நின்றதும் 'நான் ஸ்டாப் சொல்லி நிறுத்தினேன்' என்று ரகளை செய்து கொண்டு வந்தாள் சிறுமி அவள் 'பை' சொல்லி இறங்கிப் போனதும் நிற்காமல் போனது ரயில் வண்டி. அவளிடம் சொன்னேன். 'கண்டித்து வைக்கிறேன்' என்றாள். தூங்குகிறாள் சிரித்து விளையாடிக் களைத்துப் போய் தூங்குகிறாள் குழந்தை கனவில் ஆடும் ஆட்டம் மெல்ல எட்டிப் பார்க்கிறது ஈரமான சின்ன உதடுகளின் வழியாக