கடிதங்கள்.
முதலிலே டீசே தமிழன் எழுத, பிறகு செல்வராஜும் தொடர்ந்து எழுத, எனக்கும் கை சும்மாயிருக்கவில்லை. பிறரிடம் பகிர்ந்து கொள்ளுகிற மாதிரியான கடிதங்கள் எனக்கு வந்திருக்கிறதா அல்லது நான் யாருக்காவது எழுதியிருக்கிறேனா என்று எத்தனை யோசித்துப் பார்த்தாலும் எனக்கு நினைவுக்கு வரவில்லை. ஆனால், பதிவு போட்டு சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில், யாருடைய தொந்தரவும் இன்னும் கொஞ்ச நேரத்துக்கு இருக்காது என்ற உத்தரவாதமான சூழ்நிலையில், இந்த மாதிரி ஒரு 'bloggable idea' வை தூக்கி தூரப் போடவும் மனசில்லை. பேனா பிடித்து தமிழில் எழுதியது கல்லூரி நாட்களோடு போயிற்று. பரீட்சைக்குக் பணம் கட்ட, மெஸ் பில்லுக்கு, புத்தகங்கள் வாங்க என்று பணம் கேட்டு எழுதிய நாட்களில் சங்கப் பாடல்களில் இருந்தோ, ஆத்மாநாமின் கவிதைகளில் இருந்தோ மேற்கோள்கள் தேவைப்படவில்லை. பணத்துக்கும், கவித்துவத்துக்கும் தூரம் அதிகம். கவரிலே வரைவோலையை வைத்து, கூடவே, ' ஒழுங்காப் படி' என்று அப்பா எழுதியதிலும் கவலையுடன் கூடிய மிரட்டல் தான் இருக்கும். விடுமுறயின் போது சந்திக்கும் நண்பர்களும் கடிதம் எழுதுகிற ஜாதி இல்லை. ஆக, என் கடிதங்கள், உலகாயத நோக்கம் கெ¡