Posts

Showing posts from 2003

Monday Magic - விருந்தினர் பக்கம்.

ஒரு கேள்வி - ஒரு பதில் கேள்வி : நடந்து முடிந்த அடிலேய்ட் டெஸ்ட் போட்டியில், திராவிட் மைதானத்தில் கடவுள் போல தோற்றமளித்தார் என்று கங்குலி சொன்னதில் இருந்து என்பது துவங்கி, பலரும்,இந்திய அணி பெற்ற வெற்றியை தலையில் தூக்கி வைத்து ஆடினர். சுனில் கவாஸ்கர் மட்டும்தான், " வெற்றி பெற்றது சந்தோஷம் தான், ஆனால், தொடரை கைப்பற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்று சொன்னதாக மீடியாவில் செய்தி வந்தது. இரண்டாவது டெஸ்ட் நடந்து கொண்டிருக்கும் போக்கையும், கவாஸ்கர் சொன்னதையும் வைத்துப் பார்க்கும் போது உங்களுக்கு இப்போது என்ன தோன்றுகிறது? பத்ரி சேஷாத்ரி: ஆஸ்திரேலியா உலகிலேயே நம்பர்-1 அணி. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்தத் தொடரின்போது அவர்களது முன்னணிப் பந்து வீச்சாளர்கள் இருவர் அணியில் இடம் பெற முடியவில்லை. ஒருவர் தடைசெய்யப்பட்ட ஒரு மருந்துப் பொருளைப் பயன்படுத்தியதற்காக என்று அணியிலிருந்து நீக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். மற்றொருவர், காயம் பட்ட வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ரா. மழையால் பாதிக்கப்பட்ட முதல் டெஸ்டிலேயே இந்திய அணி எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு மானத்த

இணையத்தில் ரசித்தது.

இந்த வாரத் திண்ணையில் ரோசா வசந்த் என்கிற ஒரு அன்பர் எழுதிய , சுத்தமாக ஒரு மண்ணும் புரியாத ஒரு நீண்ண்ண்....ட கட்டுரையில் ( மடல்) எனக்கு பிடித்த ஒரு பகுதி. நன்றி: திண்ணை .........." இந்த அசட்டு நகைச்சுவை என்பதை பார்போம். அதற்கு ஒரு சரியான உதாரணமாய் நம்ம நடிகர் Y. G. மகேந்திரனை சொல்லலாம். சோ கூட பெரும்பாலும் அசட்டு நகைச்சுவைதான் செய்வார் என்றாலும், 'தேன்மழை', 'கலாட்டா கல்யாணம்' என்று அவ்யப்போது அதிலிருந்து சற்று மீறியும் இருப்பார். ஆனால் பொதுவாக சோவின் நகைச்சுவையை (அவரின் அரசியல் நையாண்டிகளையும் சேர்த்து) இந்த அசட்டு நகைச்சுவைக்கு உதாரணமாய் சொல்லலாம். கிரேஸி மோகனின் நாடகங்களை பார்த்தால் அது ஏதோ மாம்பலம், மைலாப்பூரில் வாழ்பவர்களுக்காகவே எழுதபட்டது போல் தோன்றும். (சொன்னது நானில்லை, எனக்கு பிடிக்காத VHPயில் இருந்தாலும் நான் சில நேரம் ரசிக்கும், அசட்டு நகைச்சுவையிலிருந்து மீறீ இருக்கும் S. V. ஷேகர் சொன்னது). கிரேஸி மோகனின் நாடகங்கள் அசட்டு நகைச்சுவையையே கொண்டிருந்தாலும் அவரும் 'மைக்கேல் மதன காமராஜன்', 'தெனாலி' வசனங்களில் குத்தல் நக்கல் வசனங்கள

கல்வி பற்றி பத்ரி

கல்வி பற்றி பத்ரியின் வலைப்பதிவு உண்மை நிலையை எடுத்து வைப்பதாக இருப்பினும் அதிலே ஒரு 'உடோபியத்தனம்' தெரிகிறது என்பதை மறுக்க முடியவில்லை. let us be little more pragmatic. ஆரம்பக் கல்வி உயர்நிலைக் கல்வி, கல்லூரிப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, வேலை வாய்ப்பு என்பவை அனைத்தும் வெவ்வெறு தளங்களில் இயங்குபவை. ஒன்றை முடித்தவுடன் தான் மற்றொன்றிற்கு, வரிசைக்கிரமமாக மாணவர்கள் வருகிறார்கள் என்றாலும், அவை சந்திக்கும் பிரச்சனைகள் வெவ்வேறானவை. இவை அனைத்திற்கும் ஒட்டுமொத்தமான ஒரு தீர்வை சொல்ல முடியாது. 1. ஆரம்பக் கல்வி : இது அரசாங்கத்தின் பாலிசி சம்மந்தப்பட்டது. புள்ளிராஜாவுக்கு செலவு செய்த விளம்பரப்பணத்தில் பாதி அளவை, எல்லோருக்கும் கல்வி என்ற நோக்கத்துக்காக விளம்பரம் செய்வதற்குக் கூட ஒருத்தருக்கும் தோன்றாது. கட்டாய, இலவசக் கல்வி என்ற ஒரு சட்டத்தை கொண்டுவந்தால், கொஞ்சமாவது உருப்படும் . தற்போது எட்டாம் வகுப்பு வரை, பரீட்சை இல்லை என்று பேசுகிறார்கள். மைய அரசு அப்படி சொல்வதால், மத்திய அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளிகளில் மட்டுமா, அல்லது இந்தியா முழுக்க உள்ள பள்ளிகளிலுமா என்று தெர

Sunday Cartoon

Image
"How come you have given me only a name but no password?" Courtesy:The Hindu Businessline , 4th Dec 2002

அசோகமித்திரனின் இசை அனுபவங்கள்.

Image
அசோகமித்திரனின் இந்தக் கட்டுரை, அசோகமித்திரன் கட்டுரை மாதிரியே இல்லையே என்று யாருக்கும் தோன்றலாம். இருக்காதுதான். அசோகமித்திரன் ஆங்கிலத்தில் எழுதிய இக்கட்டுரையை, நானாகப்படவன் as it is தமிழ்ப்'படுத்தினால்' அப்படி இருக்காதுதான். பொறுத்தருள்க.:-) *********** அசோகமித்திரனின் இசை அனுபவங்கள். இசையுடனான என் முதல் பரிச்சயமே ஆழ்வார் என்பவரோடுதான். செகந்திரபாத்தில் இருந்த போது என் சகோதரிகளுக்கு இசைப் பயிற்சி அளித்தவர் ஆழ்வார். ஆனால் அவருக்கு காது கேட்காது. எனக்கு அப்போது ஆறுவயது இருக்கும். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம். பஞ்சகச்சம் , உச்சிக் குடுமி சகிதம், ஒரு பையுடன் சர்வஜாக்கிரதையாக ரோட்டில் நடந்து வருவார். ஹார்மோனியத்தை கையில் எடுத்ததுமே, அவர் வேறு ஆள் மாதிரி மாறிவிடுவார். எப்படி, காது கேட்காத போதும் , இது போல சுருதி பிசகாமல் பாடி, சொல்லிக் கொடுக்க முடிகிறது என்று எனக்கு வியப்பாக இருக்கும். பின்னாளில், பீதோவன் என்கிற மகா இசைக்கலைஞரும், காது கேளாதவர் என்று அறிந்த போது, என்னால் ஆழ்வாரைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. பாடம் படிக்கும் போது, யாராவது

தகவல் vs தொழில்நுட்பம் - I என் மறுமொழி

காசி, >>> 1. ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும் என்று கோவையில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறீர்கள். அவருடைய அலுவலகப் பெயர் தெரியும். தொலைபேசி எண் , முகவரியைத் தொலைந்துவிட்டது. அவருடைய அலுவலக எண் டெலிபோன் டைரக்டரியில் இல்லை. ஒரு பிரவுசிங் மையத்துக்கு சென்று, அவருடைய நிறுவனத்தின் பெயரை கூகிளில் தேடினால் ச்சீப்போ என்று துப்புகிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவரை அவருடைய அலுவலகத்தில் பார்த்தே ஆகவேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் ? >>> நிறுவனம் என்கிற entity நிச்சயமாய் ஏதாவது ஒரு முறையில், ஏதாவது ஒரு அரசுத்துறையுடன் தொடர்பு கொண்டிருக்கும். பதிவு செய்தல், விற்பனை வரி, சுற்றுச்சூழல் விஷயம், வருமானவரி, சட்டத்துறை, அந்த நிறுவனம் செய்யும் வியாபாரத்துடன் சம்மந்தப்பட்ட அசோசியேஷன்கள், என்று ஏதாவது ஒரு துறையுடன் நிச்சயம் தொடர்பு இருக்கும். இந்தியாவில் இருக்கும் ஒரு கணிப்பொறி நிறுவனத்தைப் பற்றி, MAIT ( Manufaturers of Information Techonlogy) NASSCOM இலோ, அல்லது வேறு எந்த அசோசியேஷனிலோ தகவல் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. இந்த மாதிரி தகவல்கள், இறைந்து கிடக்கின்றன. அத

தகவல் vs தொழில்நுட்பம் - I நண்பர் காசியின் மறுமொழி

அன்புள்ள நண்பர் பிரகாஷ், உங்கள் வலைப்பதிவு சுவாரசியமாக இருக்கிறது. பாராட்டுகள். நீங்கள் கேட்டிருந்த சில கேள்விகளுக்கு எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன். >>> 1. ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும் என்று கோவையில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறீர்கள். அவருடைய அலுவலகப் பெயர் தெரியும். தொலைபேசி எண் , முகவரியைத் தொலைந்துவிட்டது. அவருடைய அலுவலக எண் டெலிபோன் டைரக்டரியில் இல்லை. ஒரு பிரவுசிங் மையத்துக்கு சென்று, அவருடைய நிறுவனத்தின் பெயரை கூகிளில் தேடினால் ச்சீப்போ என்று துப்புகிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவரை அவருடைய அலுவலகத்தில் பார்த்தே ஆகவேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் ? >>> ஒரு வேளை அவரின் அலுவலகப்பெயர் முழுதாய் தெரியாத்தால் அல்லது பிழையின்றி சரியான பெயர் தெரியாததால் டெலிபோன் டைரக்டரியில் கண்டுபிடிக்கமுடியாது போயிருந்தால், அச்சடிக்கப்பட்ட டைரக்டரியில் இல்லாத தேடும் வசதிகள் இணையம் வழியாகக் கிடைக்கும் மின்வடிவத்தில் உள்ளன, அதை வைத்து கொஞ்சம் முயற்சி செய்தால் கண்டுபிடிக்கலாம். ஒரு பெயரின்/முகவரியின் தெரிந்த பகுதியை மட்டும் இட்டுத் தேட

Eelakanthan

ஈழகாந்தன் நான் பள்ளியில் படித்த காலத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சனை உச்ச கட்டத்தில் இருந்தது. இலங்கைத் தமிழர் மீதும், விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதும், தமிழக மக்கள் இயல்பான, ஒரு அனுதாபம் கொண்டிருந்த காலகட்டம் அது. புலிகளைப் பற்றிய செய்திக் குறிப்பு அடிக்கடி தேவி வார இதழில் அடிக்கடி செய்தி வரும். பிரபாகரன் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் கூட அதிலே படித்ததாக நினைவு. ஆனாலுm, என் வயது காரணமாகவும் அனுபவமின்மை காரணமாகவும், இலங்கைப் பிரச்சினை என்றால் என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் என்னை பெருமளவில் ஈர்த்தது, அந்த சமயத்தில், எங்கள் பள்ளியில் சாரி சாரியாக வந்து சேர்ந்த இலங்கைத் தமிழ் மாணவர்கள்தாம். ஈழகாந்தன், அவனுடைய அண்ணன் வேழவேந்தன், சதானந்தம், அவன் தம்பி முருகானந்தம், லதாங்கினி, நித்யா வாமதேவன், தனுஜா, ரஜனி ( பெண்) , humpty கிருஷ்ணகுமார், எனக்கு சீனியராக சேர்ந்த கிறிஸ்ரி தம்பிராஜா புவனேந்திரன், என்று பலர் எனக்கு அறிமுகமானார்கள். அவர்கள் மிகுந்த வசதி படைத்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால், அவர்களுடைய சகோதர சகோதரிகள் , பெற்றோர் கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்

தகவல் vs தொழில்நுட்பம் - 1

தகவல் தொழில்நுட்பம் என்கிற, கொஞ்ச காலமாக, மவுசைப் பெற்று பின் இழந்து, பின் மீண்டும் மவுசு பெற்று விளங்கும் துறையில், தகவலை பின்னுக்குத் தள்ளிவிட்டு, தொழில்நுட்பத்தை மட்டும் முதன்மையானதாக முன் நிறுத்துபவர்களை கிண்டலடிக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. ஒரு விளையாட்டுக்கு இப்படிச் சொன்னாலும், கணிணி தொழில்நுட்பவியலாளர்களை குறைத்து சொல்வதற்காக அல்ல, தகவல் என்பது எத்தனை தூரம் இன்றியமையாதது என்பதற்கான கட்டுரைதான் இது. கல்லடிக்கவும், தர்ம அடி போடவும் விருப்பம் கொண்டவர்களுக்காக என் மின்னஞ்சல் முகவரி கட்டுரையின் அடியில் தரப்பட்டிருக்கிறது. கட்டுரை இலக்கணப்படி, இது போன்ற தலைப்பு வைத்தால்., முதலிலே தகவல் என்றால் என்ன? தொழில் நுட்பம் என்றால் என்ன என்பதை வரையறை செய்யவேண்டும். அதுதான் முறை. ஆனால் நான் தொழில்நுட்பம் பற்றி அதிகம் ஏதும் சொல்லப் போவதில்லை. காரணம், இதைப் படிக்கும் நீங்கள், ஒரு கணிணி வழியாகப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு அடிப்படை தெரிந்திருக்கிறது . முழுச்சமையல் தெரியாவிட்டாலும் கூட, ஒரு ஆத்திர அவசரத்துக்கு காபி போடவோ அல்லது, ·ப்ரிட்ஜில் இருந்து மாவை எடுத்து

Flash news : Icarus Prakash opens a new blog

செய்தி : இகாரஸ் பிரகாஷ் தன் வலைப்பூவைத் துவக்கினார். சென்னை நிருபர், 23-12-2003 இகாரஸ் பிரகாஷ் தன் வலைப்பூவை துவங்கினார். ரிப்பன் வெட்ட ஆள் கிடைக்காத காரணத்தால், அவரே அந்தக் காரியத்தை செய்ததாகச் சொன்னார். எதற்காக இந்த திடீர் முடிவு என எமது சென்னை நிருபர் கேட்ட போது, நெடுநாட்களாகவே தனக்கு இந்த வலைப்பூவை துவக்க வேண்டும் என ஆவல் கொண்டிருந்ததாகவும், நேரம் கிடைக்காமையால், அதை தற்போது செய்வதாகவும் கூறினார். இங்கேயாவது ஏதேனும் உருப்படியாக எழுதுவீர்களா என கேட்ட போது, அதற்கு அவர், அது போல கெட்ட காரியம் ஏதும் செய்ய உத்தேசமில்லை என தெரிவித்தார். எழுத வேண்டும் என்றிருந்தால், ஏற்கனவே எழுதிக் கொண்டிருக்கும் ராகாகி , மரத்தடி போன்றவற்றில் எழுதலாமே என்று எம் நிருபர் விடாமல் துளைத்தெடுக்க, அவர் அதற்கு பதில் தரும் விதமாக ஹிஹி ஹிஹி என்றார்.