புதிய தலைமுறை.....
பத்ரி தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருக்கும் சமாசாரம் பற்றி எனக்கு சில அபிப்ராயங்கள் உண்டு. தொழில் தொடங்குதல், திட்டம் அறிக்கை தயாரிப்பு, முதலீடு ஏற்பாடு , கடன் வசதிகளைப் பெறுதல் போன்றவற்றில் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது என்பதால், அதனை இங்கே வலைப்பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்,
ஐஐடி மும்பை செய்திருக்கும் சேவை அளப்பரியது. ஆர்வமும், திறமையும் கொண்டவர்களை ஊக்குவிப்பதற்காக, அந்த கல்வி நிறுவனம் காட்டியிருக்கும் முனைப்பு பாராட்டத் தக்கது.
இந்தியாவில், குறிப்பாக சென்னையில் தொழில் தொடங்குவதென்பது அத்தனை சுலபமானது இல்லை. அதில் ஏற்படும் சிக்கல்களின் அளவு, குறிப்பிட்ட தொழில்கள், அவற்றின் இயல்பு ஆகியவற்றைச் சார்ந்ததாக இருக்கும்.
Oxford History of Indian Business என்ற ஒரு நூலின் சில பகுதிகளை, ஒரு வணிக நாளிதழிலே வாசிக்க நேர்ந்தது. இந்திய வர்த்தக நிறுவனங்கள் தோன்றி வளர்ந்த கதையினை விவரிக்கும் அந்த நூல், சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப் பட்டு தற்போதுதான் வெளியாகி இருக்கின்றது. ( விலை, இந்திய ரூபாய் 1,350/-). 1800 களின் மத்தியில் துவங்கி, டாடா, பிர்லா போன்ற தொழிலதிபர்கள், தங்...