லேட்டஸ்ட் நிலவரம் - ரஜினி ராம்கியிடமிருந்து....
நாகை மாவட்டம் தான் மிக அதிகமான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றது. உயிர்சேதங்களும் மிக அதிகம். கரையோரமாக ஒதுங்கி இருக்கும் உடல்கள் மணலில் புதைந்து கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் வேலையில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.
நம் வலைப்பதிவு நண்பர்கள் நன்கொடை அளித்த பொருட்கள் பத்திரமாக வந்து சேர்ந்தன. அவற்றில் பெருமளவு நாகையைச் சென்றடைந்து விட்டது. நாளை ராம்கி நாகைக்குச் செல்கின்றார். தற்போது முகாம்களில் தங்கி இருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான முக்கியத் தேவைகள், உணவு, உடை, மருந்துகள். நம் வலைப்பதிவு நண்பர்கள் மூலமாகவும், இன்னும் பல இடங்களில் இருந்தும் இவை வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. தற்போதைக்கு, பொருட்கள் சேகரிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ( பணம் தவிர்த்த இவ்வுதவிகளை, தங்கள் பகுதியில் இருந்து செயல்படும் தன்னார்வலர்களிடம் கொடுத்தால், அவை, பாதிக்கப்பட்ட வேறு மாவட்டங்களுக்கு அளிக்க ஏதுவாக இருக்கும் ).
பொருட்கள் குவிந்தும், அவற்றை விநியோகம் செய்யத் தேவையாக ஆள் பலம் அங்கு இல்லை. மேலும் களப்பணிகளைச் செய்யவும் ஆட்கள் குறைவாக இருக்கின்றார்கள். உடல் உழைப்பை நல்க விரும்பும் தன்னார...