கலைஞர் கருணாநிதி

1996 இல் வந்த கல்கியின் வந்த சிறுகதைகளின் unofficial பதிப்பு [ அதாவது, கல்கி பக்கங்களை கிழித்து, தைத்து, உருவாக்கப் பட்ட நூல்வடிவம்). தமயந்தி, பெ.நாயகி, ஜி.சுரேந்திரநாத், பா.ராகவன், வெங்கடேஷ், ரிஷபன், கிருஷ்ணா, பத்மா ரவிசங்கர், யோகி, ஆகியோர் எழுதின கதைகள்.[ இதைப் பற்றி தனியாக பதிவு செய்ய வேண்டும் ] இப்போது வருகின்ற கதைகளுக்கு கிட்டேயே வரமுடியாது என்பதைப் போன்ற நல்ல கதைகள்.

திடுமென்று கலைஞரின் பேட்டி குறுக்கே வந்தது.

கலைஞரின் எழுபத்துஐந்தாவது பிறந்த நாளின் போது எடுத்த பேட்டி அது. இதிலே ஒரு விசேஷம் என்ன என்றால், அரசியல் தொடர்பான கேள்விகள் கிடையாது. பொதுவான விஷயங்கள், சினிமா அனுபவங்கள், நட்பு வட்டம் , குடும்பம் ஆகியவற்றைப் பற்றிய கேள்விகள். கேள்விகளை எழுதி, அனுப்பி வைத்து, பதிலையும் எழுதி வாங்கிக் கொள்கிற வழக்கமான பாணி அல்ல கலைஞருடையது என்று பத்திரிக்கை நண்பர்களிடம் இருந்து கேள்விப் பட்டிருக்கிறேன். அதனாலேயே, சில சமயம் வெகு சுவாரசியமாக இருக்கும். அரசியல் தொடர்பான விஷயங்களில், கலைஞர் மீது பெரிதாக ஈடுபாடு ஏதும் இல்லை என்றாலும், சில சமயம் புத்திசாலித்தனமான நகைச்சுவையுடன், பளிச் என்று வந்து விழுகின்ற அவரது பதில்கள் பிடிக்கும். உதாரணத்துக்கு, அப்பேட்டியிலே கேட்கப் பட்ட இரு கேள்விகளும் அதற்கான பதில்களும்

கல்கி : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று சொல்வார்கள். அந்த அடிப்படையில், ஜெயலிதா அவர்களிடம் உங்களுக்கு பிடித்தது என்ன ?

கலைஞர் : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று தெரியும், ஆனால் போயஸ் தோட்டத்து மல்லிகைக்கு மணம் இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது.

கல்கி : உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமா?

கலைஞர் : இல்லை. அந்த முயற்சியில் நான் ஈடுபடாமல் இருப்பது, மக்கள் மீது எனக்கு உள்ள அன்பைக் காட்டுகின்றது.

இப்பேட்டி எடுக்கப் பட்ட காலகட்டத்திலே , பா.ராகவன் கல்கி ஆசிரியப் பொறுப்பில் இருந்தார். அவரிடம் விசாரித்தால், ஏதாவது விஷயம் கிட்டும். நாளை பேச வேண்டும்.

Comments

uthaya sooriyan said…
பிரகாஷ்,

பாராவின் Blog site எங்கே இருக்கு? :)

அவரைப் பற்றி - இந்த வார "நக்கீரனில்" எழுத்தாளர் "ம.வெ. சிவக்குமார்" ஒரு பயங்கரக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்!


அதாவது, "ம.வெ. சிவக்குமார்" - முன்பு ஜெயேந்திரர் நடவடிக்கைகளை வைத்து - ஒரு விமர்சனக் கதை - எழுதியதாகவும் - அது குறித்து அறிந்த ஜெயேந்திரர் - தன்னுடைய மடத்து "தொண்டரடிப்பொடிகளில்" ஒருவராக
அப்பொது கூட இருந்த எழுத்தாளர் "பா.ரா"-வை - அவர் - இந்த சிவக்குமாரை மிரட்டி வைக்க அனுப்பியதாகவும் - கூறுகிறார்!பாரா-வும் - ஜெயேந்திரர் சொன்னதை சிரமேற்கொண்டு - இந்த சிவக்குமாரிடம் வந்து - "பெரியவா சொல்றாப்ல கேக்கலேன்னா ஆட்டோ அனுப்பிடுவா - உம்ம கொல்ல" என்று நேரடியாகவே மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டுகிறார்
சிவக்குமார்!"அம்பி" பா. ராகவன் - என்று பாராவின் - பார்ப்பனியத்தனைத்தை - வெளிப்படையாகவே சொல்கிறார் இந்த ம.வெ. சிவக்குமார்.

இந்தச் சங்கதி நடந்தது - 1991 வாக்கிலாம்! :)

அப்படி அவர் ஜெயேந்திரரை - மனதிற் கொண்டு எழுதிய சிறுகதை - அவரின் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவிக்கிறார்.

இதற்கு "சிந்தனையாளர்", "இணைய BLOG எழுத்தாளர்களின் ஆஸ்தான குரு" பா. ராகவன் நேர்மையான பதில் தருவாரா??? :)

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Chennai Tamil Bloggers Meet - 2005

ரா.கி.ரங்கராஜன் - நாலு மூலை