Shame!!!!


இந்தப் பெண்ணின் பெயர் இவாஞ்சலின் பிரின்ஸஸ். பெயருக்கு ஏற்றாற் போல இருக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இந்த குட்டி இளவரசி, ஆசிரியர் திட்டினார் என்பதற்காக, மேலே மண்ணெணை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். தற்போது அப்போலோ மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்தியம் அளிக்கப் பட்டு வருகிறது.

ஹிந்து செய்தி

* இந்தப் பத்து வயதுப் பெண்ணுக்கு, அவமானம் என்ற சொல் எப்படி பரிச்சயமாகி இருக்க முடியும்? ஆசிரியர் திட்டுவது என்பது மிகவும் அவமானகரமான செயல் என்பதை இவளுக்கு யார் சொல்லித் தந்திருப்பார்கள்?

* ஆசிரியரிடம் தண்டனை கிடைத்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற ஐடியாவை இவளுக்குள் விதைத்தவர்கள் யாராக இருப்பார்கள்?

* மேலே மண்ணெண்ணை ஊற்றி, நெருப்பு வைத்துக் கொண்டால், அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து போய்விடும் என்று இவளுக்குத் தோன்றியது எங்கனம்?

குழந்தைகளை குட்டிச்சுவராக்கும் சமூகத்தில் நானும் ஒரு அங்கம் என்பதை நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது....

Comments

ரா.சு said…
நியாயமான கேள்விகள்!. எனக்கென்னவோ தொலைக்காட்சித் தொடர்களினால்தான் இந்த தளிர்களுக்கு நச்சு ஊட்டப்படுகிறதோ என ஐயம்.

ஆசிரிய-மாணவ உறவு நிலையைப் பற்றிய நேற்றைய என் பதிவு : http://rsl.blogspot.com/2004/10/blog-post_109832152961750352.html
எனக்கும் , தொலைக்காட்சியும் , திரைப்படங்களும் தான் காரணம் என்று தோன்றுகிறது.
ரா.சு : அப்படிச் சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது. இது பன்முகத்தன்மை கொண்ட பிரச்சினை. அப்படியே டிவி சீரியல்கள்தான் காரணம் என்றாலும், அந்த டீவி சீரியலை தொடர்ந்து பார்த்து, குழந்தைகளுக்கும் அந்த பழக்கத்தை ஏற்படுத்து கின்ற பெற்றோரையும், அந்த டீவி சீரியல்களைத் தயாரிப்பவர்களையும், அதற்கு இடம் கொடுக்கின்ற தொலைக்காட்சிகளையும், ஆதரவு தரும் விளம்பரதாரர்களையும் 'not-guilty' என்று சொல்லி விட முடியுமா?
அன்பு said…
அதிர்ச்சிகரமான விஷயம். மிக சிந்திக்கவேண்டிய விஷயம்.

அசிங்கமென்றாலும் வெட்கமில்லாமல் சொல்கிறேன்...
அந்த புகைப்படத்தை பார்த்ததும் எனக்குத்தோன்றியது: படத்தில் உள்ள அந்தப்பெண் கோலங்களில் வரும் அபியின் கடைசி தங்கையின் சின்னவயது புகைப்படமோ என்பதுதான். அப்படியென்றால் சீரியல்களின் பாதிப்பு எவ்வளவு இருக்கிறது என்று பாருங்களேன்.

இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஊடகங்களுடன், என்னையும் உள்ளடக்கிய இந்த சமூகமும்தான் பொறுப்பு.
Kasi Arumugam said…
பிரகாஷ்,

//இந்தப் பத்து வயதுப் பெண்ணுக்கு, அவமானம் என்ற சொல் எப்படி பரிச்சயமாகி இருக்க முடியும்? ஆசிரியர் திட்டுவது என்பது மிகவும் அவமானகரமான செயல் என்பதை இவளுக்கு யார் சொல்லித் தந்திருப்பார்கள்?//

இதைப் படிக்கும்போது என் மகளுடன் நேர்ந்த சில அனுபவங்கள் நினைவுக்கு வருகின்றன. (பேச்சு வந்ததுமே அமெரிக்க வந்துவிட்டதால், அவளின் ஆங்கிலத்தைப் பொறுத்துதான் ஆகவேண்டும்.)

'You are hurting my feelings' - 4 வயதில் எங்கோ போகவேண்டும் என்று அடம் பிடித்து, மாட்டேன் என்றதும், சொன்னது.
'It is not fair to talk about people'- 5 வயதில் 'இவள் இப்படி செய்தாள்' என்று இவளை வைத்துக்கொண்டு ஒருவரிடம் பேசியது காதில் விழுந்ததால் சொன்னது.

இதை 'காக்கைக்கும் தன் குஞ்சு...', 'இந்தக் காலத்துக் குழந்தைகள் படு சுட்டி' போன்ற ஃபார்முலாக்கள் படி நார்மலைஸ் செய்தே பார்த்தாலும், அந்தப் பத்து வயதுப்பெண் 'அவமானம்' பற்றி அறிந்திருப்பது எனக்கென்னவோ வியப்பான விஷயமாகப் படவில்லை.

பாவம், அந்தக் குழந்தை.

அன்புடன்,
-காசி

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Chennai Tamil Bloggers Meet - 2005

ரா.கி.ரங்கராஜன் - நாலு மூலை