மூன்று விஷயங்கள்

1. இந்த வாரம் திண்ணையில் எனது புதிய கட்டுரை

ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்துத் தேவதைகளும்

இந்த சிக்கல் எனக்குப் பல முறை நேர்ந்திருக்கிறது. ஒரு ஆக்கத்தைப் படிக்கிறேன். அந்த ஆக்கம் என்னை என்ன செய்கிறது என்பது என் மனதுக்குப் புரிகிறது. ஆனால், அவற்றை விசைப்பலைகை வழியாக உள்ளிடும் பொழுது, அந்த உணர்ச்சி, என்னை அறியாமலேயே சட்டென்று நீர்த்து அல்லது மறைந்து போய்விடுகின்றது. நினைக்கிற வேகத்துக்கும் எழுதுகிற வேகத்துக்கும் இருக்கும் இடைவெளிதான் காரணம் என்று நண்பர் ஒரு முறை சொன்னார். அந்த சமயங்களில், அந்த உணர்வுகளை எழுதுவதைக் காட்டிலும், வாசித்ததை மனதுக்குள்ளாகவே அசை போட்டு, அந்தரங்கமாக இன்பம் அடைவது மேலானதாக அல்லது என்னால் இயலக்கூடிய காரியமாகப் படும். சில சமயம் காத்திருப்பேன். யாராவது ஏதாவது சொல்கிறார்களா என்று. சொன்னால் அவர்களைப் பின் தொடர்ந்து செல்வது. ஸ்ரீரங்கத்து தேவதைகளைப் பொறுத்த மட்டில், சென்ற வாரம் திண்ணையில் எழுதிய திரு. ஜெயமோகன் அவர்களின்....... மேலே படிக்க

2. சும்மா பொழுது போகாமல் வலையில் மேய்ந்து கொண்டிருக்கும் போது கண்டதும் மாட்டும். சில வெறுப்பேற்றும். சில கிச்சு கிச்சு மூட்டும், அப்படி கிச்சு கிச்சு மூட்டியது, நம்ம ரஜினி ராம்கியின் பயோடேட்டா. சும்மா சொல்லக் கூடாது, மனிதருக்கு நகைச்சுவை உணர்வு ஜாஸ்திதான்.

3. பார்த்து ரசிக்க ஒரு புகைப்பட வலைப்பதிவு

Comments

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Chennai Tamil Bloggers Meet - 2005

ரா.கி.ரங்கராஜன் - நாலு மூலை