விரதம் முடிந்தது

ந்த மாதிரி பாராட்டுகளுக்கும் , அங்கீகாரத்துக்கும் ஏங்கிக்கிடக்கிற சென்மம் தான் நானும் என்பதை நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது. விஷயம் ஒன்றும் பிரமாதமில்லை. என் கட்டுரை ஒன்று, இந்த வார கல்கியிலே வெளிவந்திருந்திருக்கிறது. இகாரஸ் பிரகாஷ் என்ற பெயர் தெரியாத என் உறவினர்கள் கூட, கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் என் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, " அட... பிரகாஷ்... நீயா? எழுதவெல்லாம் கூட செய்வியா... " என்று ஆச்சர்யமாக கேட்டு போன் செய்தது இன்னொரு ஜில். கல்கி அல்லது ஆனந்த விகடனில் ஏதாவது ஒன்று பிரசுரமாகாமல் என் வலைப்பதிவு பக்கம் வருவதில்லை என்ற விரதம் இன்றோடு முடிவுக்கு வந்தது.

சற்றேறக்குறைய இரண்டாண்டுகளுக்கு முன்பு வரையிலும், இந்தத் திசையில் என் பயணம் அமையும் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. கிளப்பில் மட்டும் எழுதிக் கொண்டிருந்த போது, " இது போதாது.... பத்திரிக்கைகளிலும் எழுத வேண்டும் என்று ஊக்குவித்து, அதற்கான வழிமுறைகளையும், நடைமுறைகளயும் சொல்லித் தந்து... முயற்சி தோல்வியடைந்த போதெல்லாம் ( புலம்பிய போதெல்லாம் என்று வாசிக்கவும்) , காபி சமோசா வாங்கி கொடுத்து உபரியாக ஆறுதலும் சொன்ன பல நண்பர்களுக்கும் கொஞ்சம் கடன் பட்டிருக்கிறேன்.

இணையத்தில் எழுதத் துவங்கி, இணையத்தில் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் மற்ற நண்பர்களான பாஸ்டன் பாலாஜி, ஹரன்பிரசன்னா, பி.கே.சிவக்குமார், பத்ரி, மூக்கு சுந்தர், கே.வி.ராஜா, மஸ்கட் சுந்தர், மதி, மீனாக்ஸ், காசி, பவித்ரா, சுவடு ஷங்கர், போன்றவர்களும், இணையத்தில் எழுதுவதன் கூடவே, அச்சுப் பத்திரிக்கைகளில் எழுதி, தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய தலைமுறை தோன்ற காரணமாக இருக்க வேணும் என்பது என் ஆவல்.

கல்கியில் வந்த கட்டுரையின் un-edited version -ஐ த்தான் இங்கே போடலாம் என்று இருந்தேன். ஆனால், நான் எழுதிய வள-வளாவை விடவும், எடிட் செய்யப்பட்ட வடிவம் நன்றாக இருந்தது. இன்று இரவு அதை இங்கே உள்ளிடுவேன்.

ஹிந்துவில் இடம் பெற்றதற்கு தமிழ் வலைப்பதிவாளர்களுக்கும், tamilblogs.blogspot.com வலைப்பதிவை நடத்திவரும் மதி & குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்
பிரகாஷ்

Comments

Popular posts from this blog

THANGLISH blogs..

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Mani Ratnam's Guru - Review