1.எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த ஸ்னேஹா வை எனக்கு மட்டும் அடையாளம் தெரியாமல் போவது ஏன் ?
2. எனக்கு நேரம் கிடைக்கும் வார இறுதிகளில் எல்லாரும் கம்ம்னு இருக்க, நான் வேலையா சுற்றிக் கொண்டிருக்கும் நேரங்களில் , இணையம் பரபரப்பாக இருப்பது ஏன்?
3. எல்லாரும் சடுதியில் முடித்து விட்டுப் போக, எனக்கு முன்னால் நிற்கிறவன் மட்டும் தொடர்ந்து ஐந்து நிமிடம்
'உச்சா' போவது ஏன்?
4. நாளை மற்றுமொறு நாளே என்ற குட்டி புஸ்தகத்தை நாற்பது நாளாகப் படித்தும் இன்னும் முடிக்க
முடியாமல் இருப்பது ஏன்?
5. இணையத்தில் எங்கே முகமூடி தென்பட்டாலும், உடனடியாக ' நீங்க தானே அது? " என்று எனக்கு ஒரு மடல் வருவது ஏன்?
6.பிடித்த நடிகர் கவுண்டமணி செந்தில் என்று சொன்னால், எல்லாரும் என்னை ஒரு மாதிரியாக பார்ப்பது ஏன்?
7. என் கூட ஆரம்பித்தவர்கள் எல்லாம் 'புகைவண்டி' ஓட்டுவதை நிறுத்தி விட, நான் மட்டும் இன்னும் விடாமல் ஓட்டுவது ஏன்?
8. கமலஹாசன் இன்னும் டூயட்டு பாடுவதை நிறுத்தாதது ஏன்?
9 "நீங்கள் கேட்ட பாடலில்" எந்த குழந்தையைக் கேட்டாலும், பிடித்த நடிகர் விஜய் என்று சொல்வது ஏன்?
கடந்த இரண்டு நாட்களாக, இந்தியாவில், சில இணையச் சேவை நிறுவனங்கள், blogger.com, blogspot.com போன்ற வலைப்பதிவுச் சேவைகளைத் தடை செய்திருக்கின்றன . வலைப்பதிவுகளை பார்க்க முடியாமல், தன்னுடைய இணையச் சேவை வழங்கியை, தில்லியில் இருந்து வலைப்பதியும் மிருதுளா விசாரித்த போது , அரசு உத்தரவு என்று பதில் கிடைத்திருக்கிறது. இந்தத் தடையினால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் இது குறித்து விரிவாக வலைப்பதிந்திருக்கிறார்கள். தற்போது கிடைத்திருக்கும் நிலவரப்படி, இணையச் சேவையை வழங்கும் தனியார் நிறுவனங்களான Reliance Infocom, Star Hathway, Tata Internet Services ,Exatt, Spectranet போன்றவையும், பொதுத்துறை நிறுவனமான MTNL உம் தடையை அமுல் செய்திருக்கின்றன. பெங்களூரில் இருந்து அபிநந்தன், spectranet என்கிற் ISP ஐ, தொலைபேசியில் அழைத்து விசாரித்த போது, அரசிடம் இருந்து தடை செய்யக் கோரி அறிக்கை வந்தது என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். எதற்காக இந்தத் தடை என்று சற்றும் விளங்கவில்லை. அரசு, வலைப்பதிவுகளைத், இணையச் சேவை வழங்கிகள் மூலமாகத் தடை செய்ய வேண்டும் என்று நினைத்தால், அது முதலில் ஆர்டர் போடுவது, BSNL க்காகத்தான் இர
* பாரிஜாதம் படம் பார்த்தேன். பாக்யராஜ் பழைய ஃபார்முக்கு வந்துட்டார். தொடர்ந்து, ரவுடியிசம், தாதாக்கள், அரிவாள் வெட்டு குத்து என்று படங்களாகப் பார்த்து பார்த்து, உடம்பெல்லாம் ஒரே ரத்த வாடை. பாரிஜாதம் பார்த்ததும் வாடை போயே போச்சு. பாக்யராஜின் பழைய, 'விடியும் வரை காத்திரு', 'தூறல் நின்னு போச்சு', இன்று போய் நாளை வா' போன்ற படங்களின் திரைக்கதை அமைப்புக்கு கிட்டக்க கூட வரமுடியாது என்றாலும், இந்த காலகட்டத்திலே ஒரு மாறுதலான படம். கிளிஞ்சல்கள் படத்தில் வந்த பூர்ணிமா ஜெயராமுக்கு கொஞ்சம் காத்தடித்து, முகத்திலே கருப்பாக மேக்கப் போட்டால், அவர் தான், சரண்யா பாக்யராஜ். ஒருதரம் பார்க்கலாம். அதாவது, படத்தைச் சொன்னேன். * என்.எஸ்.கிருஷ்ணன் பற்றிய புத்தகம் ஒன்றை வாசித்தேன். கிழக்குப் பதிப்பகத்தின் முத்துராமன் எழுதியது. ( இந்த மாதிரி வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களுக்கு என்றே, ஒரு டெம்ப்ளேட் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது). நல்ல சுவாரசியமான புத்தகம். குழப்பாமல் கோர்வையாக,ஒரே வாசிப்பில் முடித்துவிடுகிற மாதிரி எழுதியிருக்கிறார் முத்துராமன். அதிலே இருந்த தகவல்கள் நான் முன்னர் அறியாதவை.
Comments