Flash news : Icarus Prakash opens a new blog

செய்தி : இகாரஸ் பிரகாஷ் தன் வலைப்பூவைத்
துவக்கினார்.


சென்னை நிருபர், 23-12-2003

இகாரஸ் பிரகாஷ் தன் வலைப்பூவை துவங்கினார். ரிப்பன் வெட்ட ஆள் கிடைக்காத காரணத்தால், அவரே அந்தக் காரியத்தை செய்ததாகச் சொன்னார்.

எதற்காக இந்த திடீர் முடிவு என எமது சென்னை நிருபர் கேட்ட போது, நெடுநாட்களாகவே தனக்கு இந்த வலைப்பூவை துவக்க வேண்டும் என ஆவல் கொண்டிருந்ததாகவும், நேரம் கிடைக்காமையால், அதை தற்போது செய்வதாகவும் கூறினார். இங்கேயாவது ஏதேனும் உருப்படியாக எழுதுவீர்களா என கேட்ட போது, அதற்கு அவர், அது போல கெட்ட காரியம் ஏதும் செய்ய உத்தேசமில்லை என தெரிவித்தார். எழுத வேண்டும் என்றிருந்தால், ஏற்கனவே எழுதிக் கொண்டிருக்கும் ராகாகி , மரத்தடி போன்றவற்றில் எழுதலாமே என்று எம் நிருபர் விடாமல் துளைத்தெடுக்க, அவர் அதற்கு பதில் தரும் விதமாக ஹிஹி ஹிஹி என்றார்.

Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I