Monday Magic - விருந்தினர் பக்கம்.
ஒரு கேள்வி - ஒரு பதில்
கேள்வி :
நடந்து முடிந்த அடிலேய்ட் டெஸ்ட் போட்டியில், திராவிட் மைதானத்தில் கடவுள் போல தோற்றமளித்தார் என்று கங்குலி சொன்னதில் இருந்து என்பது துவங்கி, பலரும்,இந்திய அணி பெற்ற வெற்றியை தலையில் தூக்கி வைத்து ஆடினர். சுனில் கவாஸ்கர் மட்டும்தான், " வெற்றி பெற்றது சந்தோஷம் தான், ஆனால், தொடரை கைப்பற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்று சொன்னதாக மீடியாவில் செய்தி வந்தது. இரண்டாவது டெஸ்ட் நடந்து கொண்டிருக்கும் போக்கையும், கவாஸ்கர் சொன்னதையும் வைத்துப் பார்க்கும் போது உங்களுக்கு இப்போது என்ன தோன்றுகிறது?
பத்ரி சேஷாத்ரி:
ஆஸ்திரேலியா உலகிலேயே நம்பர்-1 அணி. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்தத் தொடரின்போது அவர்களது முன்னணிப் பந்து வீச்சாளர்கள் இருவர் அணியில் இடம் பெற முடியவில்லை. ஒருவர் தடைசெய்யப்பட்ட ஒரு மருந்துப் பொருளைப் பயன்படுத்தியதற்காக என்று அணியிலிருந்து நீக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். மற்றொருவர், காயம் பட்ட வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ரா. மழையால் பாதிக்கப்பட்ட முதல் டெஸ்டிலேயே இந்திய அணி எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு மானத்த...