Posts

நேர்முகமும் எதிர்முகமும்

திண்ணையில் வெளியான கட்டுரை .படிப்பதற்கு போரடிக்கும் என்று தோன்றினால் , இந்தப் பாட்டைக் கேட்டு விட்டு, தமிழ்மணத்தை f5 செய்யலாம். என் உலகத்தை மேலும் இனிமையானதாக மாற்றும் சில பாடல்களில் இதுவும் ஒன்று. நேர்முகம் புத்தகக் கண்காட்சிக்கு வரும் கூட்டம் சென்னை வெய்யிலைப் போன்றது . போன வருடத்தை விட இந்த வருடம் ஜாஸ்தி என்று எல்லா வருடமும் சொல்கிறார்கள். நுழைந்ததும் வரவேற்கும் டெல்லி அப்பளம் பேல்பூரி சமோசா இத்தியாதிகளிடம் இருந்து தப்பித்து உள்ளே நுழைந்தால், உடனே வெளியே ஓடிப்போய்விடலாமா என்றுதான் முதலில் தோன்கிறது. அத்தனை நெரிசல். வேறு எங்காவது, நல்ல இடவசதி உள்ள இடமாக மாற்றக்கூடாதா என்று பதிப்பக நண்பர்களிடம் புலம்பினால், அந்த அதிகாரம், பதிப்பாளர் சங்கமான பிபாஷாபாசுவிடம் ( அல்லது அதைப் போலவே ஒலிக்கும் ஒன்றிடம்) இருக்கிறதாம். சங்கத்தின் தலைவர் பெயர் முத்துக்குமாரசாமி என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் துணை இதழ் சொன்னது. அவரது மின்னஞ்சல் யாருக்காவது தெரிந்தால் சொல்லவும். அடுத்த வருடமாவது, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை டிரேட் சென்டருக்கு மாற்றக்கோரி, கையெழுத்து வேட்டை நடத்தி, அவருக்கு அனு...

Chennai Book Fair -II -List of Books

புத்தகக் கண்காட்சி 2005 - II இங்கே புத்தகங்களின் பெயர், ஆசிரியர் பெயர், விலை ஆகியவற்றை மட்டும் பட்டியலாக அளித்திருக்கிறேன். இந்தப் பட்டியல் முழுமையானது அல்ல. முக்கியமானவை என்று நான் கருதுவதை மட்டும் இங்கே எழுதியிருக்கிறேன். உயிர்மை அரங்கு தேர்ந்தெடுத்த சிறுகதைகள் I - சுஜாதா - 275/- தேர்ந்தெடுத்த சிறுகதைகள் II - சுஜாதா - 300/- ஸ்ரீரங்கத்துக் கதைகள் - சுஜாதா - 200/- கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதா - 120/- தமிழ் அன்றும் இன்றும் - சுஜாதா - 90/- ஜெயமோகன் சிறுகதைகள் (முழுத் தொகுதி) ஜெயமோகன் - 280/- ஜெயமோகன் குறுநாவல்கள் (முழுத் தொகுதி) ஜெயமோகன் - 280/- மணலின் கதை , கவிதைகள் - மனுஷ்யபுத்திரன் - 30/- பாப்லோ நெருதா கவிதைகள் - தமிழில் சுகுமாரன் - 120/- எம் தமிழர் செய்த படம், சினிமா கட்டுரைகள் - தியோடர் பாஸ்கரன் - 100/- தளும்பல், ஆய்வுக்கட்டுரைகள் - அ.கி.ஜெயகரன் - 60/- அம்மாவி மரணம், கவிதைகள் -தஸ்லீமா நஸ்ரீன் ( தமிழில் யமுனா ராஜேந்திரன்) - 60/-அகி, கவிதைகள் - முகுந்த் நாகராஜன் - 75/- நாகதிசை, கவிதைகள் - ராணிதிலக் - 40/- தவளை வீடு, கவிதைகள் - பழனிவேள் - 40/- நதிமூலம், கட...

Book Fair 2005 - first round

சென்னை புத்தகக் கண்காட்சி - 2005 ஞாயிறு அன்று, கண்காட்சியில் கூடின கூட்டம் கேள்விப்பட்டு, மக்கள் குறைச்சலாக வரும் திங்கள் பின் மதியப் பொழுதினைத் தேர்ந்தெடுத்தேன். ஏமாந்தேன். எதிர்ப் புறம் இருக்கிற எத்திராஜ் கல்லூரி, வாசலில் விற்கும் அப்பளம், மக்காச் சோளக் கொண்டை, இலவசமாகக் கிடைக்கும் அரட்டை எதிலும் கவனம் செலுத்தாமல், போகவேண்டியது புத்தகம் வாங்க வேண்டியது , திரும்பி வந்து விடவேண்டியது என்ற தீர்மானமான முடிவுடன் சென்று இருந்தேன். நல்ல வேட்டை. கண்காட்சிக்கு வெளியே இருக்கும் நடைபாதை கண்காட்சியிலும் நல்ல நல்ல புத்தகங்கள் சிக்கின. வழக்கமான நடைபாதைக் கடைகளுக்கும் இவற்றும் நிறைய வித்தியாசங்கள். புத்தகங்கள் எண்ணிக்கையிலும், விலையிலும். நகரில் இருக்கும் நடைபாதைக் கடைகளில் , ஆளைப் பார்த்து விலை சொல்லுவார்கள். சில புத்தகங்களைப் பார்த்ததும் கண்களில் ஒரு பல்பு எரியும். அதைப் பார்த்து விட்டால் விலை கூடும். பேரம் பேசுவதும் கடினம். இங்கே வசதியாக, புத்தகங்களை, ஐம்பது, நூறு, இருபது, முப்பது , பத்து என்று பல ரகங்களில் கூறு போட்டு வைத்திருக்கிறார்கள். flat rate. நாலைந்தை பொறுக்கினேன். புத்தகங்கள...

லேட்டஸ்ட் நிலவரம் - ரஜினி ராம்கியிடமிருந்து....

நாகை மாவட்டம் தான் மிக அதிகமான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றது. உயிர்சேதங்களும் மிக அதிகம். கரையோரமாக ஒதுங்கி இருக்கும் உடல்கள் மணலில் புதைந்து கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் வேலையில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. நம் வலைப்பதிவு நண்பர்கள் நன்கொடை அளித்த பொருட்கள் பத்திரமாக வந்து சேர்ந்தன. அவற்றில் பெருமளவு நாகையைச் சென்றடைந்து விட்டது. நாளை ராம்கி நாகைக்குச் செல்கின்றார். தற்போது முகாம்களில் தங்கி இருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான முக்கியத் தேவைகள், உணவு, உடை, மருந்துகள். நம் வலைப்பதிவு நண்பர்கள் மூலமாகவும், இன்னும் பல இடங்களில் இருந்தும் இவை வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. தற்போதைக்கு, பொருட்கள் சேகரிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ( பணம் தவிர்த்த இவ்வுதவிகளை, தங்கள் பகுதியில் இருந்து செயல்படும் தன்னார்வலர்களிடம் கொடுத்தால், அவை, பாதிக்கப்பட்ட வேறு மாவட்டங்களுக்கு அளிக்க ஏதுவாக இருக்கும் ). பொருட்கள் குவிந்தும், அவற்றை விநியோகம் செய்யத் தேவையாக ஆள் பலம் அங்கு இல்லை. மேலும் களப்பணிகளைச் செய்யவும் ஆட்கள் குறைவாக இருக்கின்றார்கள். உடல் உழைப்பை நல்க விரும்பும் தன்னார...

Obituary - P.V.Narasimha Rao

Image
பி.வி.நரசிம்மராவ் (1921 - 2004) இந்திய அரசியலிலும், காங்கிரஸின் கோஷ்டி அரசியலிலும் ராவ் அவர்களின் இடம் என்ன என்பது விவாதத்துக்கு உரியது என்றாலும், இந்தியப் பொருளாதார முன்னேற்றத்தில் அவருக்கு ஒரு தனியான இடம் இருக்கிறது என்பதை, மாற்று சித்தாந்தங்கள் கொண்டவர்களும் ஒப்புக் கொள்ளுவார்கள். 1991 க்குப் பிறகு தொழில் துவங்கியவர்கள் எல்லாம் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலிகள் என நான் நினைப்பதுண்டு. தற்காலத் தொழில் அதிபர்கள், நிர்வாகம், விற்பனை, உற்பத்தி, பங்குதாரர்கள் மீதான கரிசனை என்று தங்கள் தொழிலை நேரடியாகப் பாதிக்கக் கூடிய விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். தாராளமயமாக்கலுக்கு, முந்தைய கட்டுப் படுத்தப் பட்ட பொருளாதார சூழ்நிலையில் இது சாத்தியமில்லை. தொழிலுக்கு முட்டுக்கட்டையான லைசன்ஸ் ராஜை ஒழித்துக் கட்டியதில் ராவுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. வெளிநாட்டு முதலீடுகளுக்கான தடைகளை நீக்கியதில், அதை விட முக்கியமான பங்கு உண்டு. யார் எங்கு, எப்போது புதிய தொழில் துவங்கலாம், புதிய ஆலைகள் நிறுவலாம் என்று அரசாங்கம் தான் தீர்மானித்தது. ரேயான் தயாரிப்பதில் முன்னணியில் இருந்த பிர்லா நிறுவனம் ( த...

முகுந்த் நாகராஜனின் நான்கு கவிதைகள்

நூ ல் வடிவத்தில் படித்த மிகச் சில கவிதைத் தொகுப்புகளில் ஒன்று சமீபத்தில் வாசித்த 'அகி'. அதில் இருந்து நான்கு கவிதைகள் ஆட்டம் போடும் வீடு பூட்டிக் கொண்டு கிளம்பினேன் எதையோ மறந்து போனதால் உடனே திரும்பினேன்; திறந்தேன் டிவியும் ·ப்ரிட்ஜும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தன அலமாரியில் உள்ள புத்தகங்களெல்லாம் அணி அணியாகப் பிரிந்து கபடி ஆடிக் கொண்டிருந்தன. சோ·பா-வுக்கும் சேரு-க்கும் ஓட்டப் பந்தயம். பழைய சாக்ஸ்கூட தன்னிச்சையா சுற்றிக் கொண்டிந்தது ஒரு நிமிஷத்துக்குள் எல்லாம் இயல்பு நிலையை அடைந்து விட்டன 'என்ன இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டான்' என்று தண்ணீர் பாட்டில் முணுமுணுத்தது. அப்புறம் அமைதியாகிவிட்டது பிறகு ஒன்றும் நிகழவில்லை. பூட்டிக்கொண்டு கிளம்பினேன். திறப்பதற்கு முன் தட்டி இருக்க வேண்டும் என்ன நாகரிகம் இல்லாத பிறவி நான்! மரணத்தைக் கையாளுதல் செத்துப் போனவர்களுக்குச் செய்ய வேண்டியவைகளின் பட்டியல் என்னிடம் இல்லை கையாண்டதில்லை மரணத்தை தனியாய் இதுவரையில் எரிக்கவோ புதைக்கவோ வேண்டும். அதற்கு முன் மரணச் சான்றிதழ் வாங்கி வரவேண்டும். ...

ஒரு புது அனுபவம்

இ ந்த மாத திசைகளுக்காக பேட்டி ஒன்று எடுக்க வேண்டும் என்று பா.ராகவன் சொன்ன போது, 'அதுக்கென்ன செய்தால் போச்சு' என்று சொல்லி விவரங்கள் கேட்டுக் கொண்டு, தொலைபேசியை கீழே வைத்த பின்புதான், சொரேர் ( இதை உபயோகிப்பதற்கு மன்னிக்கவும் ) என்றது. இதுக்கு முன்பு நான் பேட்டி எல்லாம் எடுத்ததில்லையே? எப்படிப் போகவேண்டும். எப்படி நேரம் வாங்க வேண்டும் , என்ன என்ன கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டும். சொல்வதை ஒலிப்பதிவு செய்து கொள்ளவேண்டுமா அல்லது எழுதிக் கொள்ள வேண்டுமா, சுருக்கெழுத்து தெரியவேண்டுமா? போகிற வீட்டில் நாய் இருக்குமா , கட்டிப் போட்டு இருப்பார்களா என்று ஏகப் பட்ட சந்தேகம் வந்து, மீண்டும் தொலைபேசி செய்து, விளக்கம் கேட்டுக் கொண்டேன். குறித்த நேரத்துக்குப் போனேன். நான் பேட்டி எடுத்த எழுத்தாளர் ஆர்விக்கு வயது எண்பதுக்கும் மேலே. பொறுமையாக, நிதானமாக சென்ற பேட்டியில் நிகழ்ந்த சமாசாரங்கள் எல்லாம் சுவாரசியமற்றவை. பேட்டி முழுதும் கேள்விகள், பதில்கள், கேள்விகள், பதில்கள் என்ற ரீதியில் சென்றது. என்னால் மட்டும் தான், உடைக்க (de-cipher) முடியும் என்கிற மாதிரியான குறிப்புக்களை வைத்துக் கொண்டு, ம...

arbor mentis - The cucumber seller of Chennai

சமீபமாக, இந்தியாவைப் பற்றியும் , குறிப்பாக தமிழ் நாடு பற்றியும் ஆஹா ஓஹோ என்று புகழும் கட்டுரைகள் சிலவற்றை பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது. அந்த வரிசையில் இங்கே ஒரு கட்டுரை. இந்த வார பிசினஸ் வேர்ல்ட் பத்திரிக்கையில் வந்த column. அது. அந்தக் கட்டுரை படிங்க, படிச்சுப் பாத்துட்டு ஏதாச்சும் சொல்லணும்னு தோணினா சொல்லுங்க

கலைஞர் கருணாநிதி

1996 இல் வந்த கல்கியின் வந்த சிறுகதைகளின் unofficial பதிப்பு [ அதாவது, கல்கி பக்கங்களை கிழித்து, தைத்து, உருவாக்கப் பட்ட நூல்வடிவம்). தமயந்தி, பெ.நாயகி, ஜி.சுரேந்திரநாத், பா.ராகவன், வெங்கடேஷ், ரிஷபன், கிருஷ்ணா, பத்மா ரவிசங்கர், யோகி, ஆகியோர் எழுதின கதைகள்.[ இதைப் பற்றி தனியாக பதிவு செய்ய வேண்டும் ] இப்போது வருகின்ற கதைகளுக்கு கிட்டேயே வரமுடியாது என்பதைப் போன்ற நல்ல கதைகள். திடுமென்று கலைஞரின் பேட்டி குறுக்கே வந்தது. கலைஞரின் எழுபத்துஐந்தாவது பிறந்த நாளின் போது எடுத்த பேட்டி அது. இதிலே ஒரு விசேஷம் என்ன என்றால், அரசியல் தொடர்பான கேள்விகள் கிடையாது. பொதுவான விஷயங்கள், சினிமா அனுபவங்கள், நட்பு வட்டம் , குடும்பம் ஆகியவற்றைப் பற்றிய கேள்விகள். கேள்விகளை எழுதி, அனுப்பி வைத்து, பதிலையும் எழுதி வாங்கிக் கொள்கிற வழக்கமான பாணி அல்ல கலைஞருடையது என்று பத்திரிக்கை நண்பர்களிடம் இருந்து கேள்விப் பட்டிருக்கிறேன். அதனாலேயே, சில சமயம் வெகு சுவாரசியமாக இருக்கும். அரசியல் தொடர்பான விஷயங்களில், கலைஞர் மீது பெரிதாக ஈடுபாடு ஏதும் இல்லை என்றாலும், சில சமயம் புத்திசாலித்தனமான நகைச்சுவையுடன், பளிச் என்று ...

Hutch : The Boy and the Pug

ந ம் poor man's Shunu Sen பக்கம் கொஞ்சம் தலை காட்டலாம் என்று எண்ணம். பிரபலங்களை மையமாக வைத்து விளம்பரங்கள் செய்வது ( celebrity endorsement) பற்றிய பல்வேறு கருத்துக்களை, சமீபமாக நாளிதழ்களில் படித்து வருகிறேன். பிரபலங்களின் , பிராபல்யத் தன்மை குறைவதும், அதிகமாவதும், அவர்கள் விளம்பரம் செய்யும் பிராண்ட் களை பாதிக்கும் என்பது ஒரு சாரார் சொல்வது. அது அப்படி அல்ல, என்று சில விளம்பர உலகின் தாதாக்கள், புள்ளிவிவரக் கணக்கை வைத்துக் கொண்டு, படம் காட்டி நிருபிக்கிறார்கள். அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த மாதிரி பிரபலங்கள் இல்லாமலேயே சக்கை போடு போட்ட ஹட்ச் நிறுவனத்தின் விளம்பரம் பற்றி சில வார்த்தைகள். இந்த விளம்பரத்தை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். படு அழகான ஒரு குட்டிப் பையனும், அதை விட அழகான ஒரு நாயும் தோன்றும் ஒரு விளம்பரத் தொடர். இந்த விளம்பரத்தின் பயனாக, ஹட்ச் செல்பேசி சேவைகளின் விற்பனை கூடியிருக்கிறது, brand awareness உம் கூடியிருக்கிறது என்று செய்திகள் சொல்கின்றன. இந்த விளம்பரத்தின் மாஸ்டர் மைண்ட், O & M நிறுவனத்தின் "national creative director [ இதைத் தமிழ் படுத்த...

Serial Killers

த மிழ் சமுதாயத்தில், என்ன என்ன உறவு முறைகள் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளத் தொலைக்காட்சித் தொடர்களின் பெயர்களைத் தெரிந்து கொண்டாலே போதும். அம்மா, அப்பா, அக்கா, தம்பி, சித்தப்பா, சித்தி என்று அத்தனை உறவுமுறைகளின் பெயர்களையும் வைத்து தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன. தொடர்கள் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. ஆனால், அவை, பெரும்பாலானவர்களின் உபயோகமான நேரத்தை ( quality time ) விழுங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. மாலை ஆறரை மணியில் இருந்து இரவு பதினொன்றரை மணி வரையிலான நேரத்தை தொலைக்காட்சிகளின் அனைத்து அலைவரிசைகளும் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொலைக்காட்சித் தொடர்கள் வருவதற்கு முன்பாக நாம் அந்த குறிப்பிட்ட நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று சிந்தித்துப் பார்க்கின்றேன். உறவினர்/நண்பர்கள் வீட்டுக்குச் செல்வது, அல்லது உறவினர்கள்/ நண்பர்கள் நம் இல்லத்துக்கு வந்தால் அவர்களுடன் நேரம் செலவழிப்பது, குழந்தைகளின் வீட்டுப் பாடங்களுடன் மல்லுக்கட்டுவது, புத்தகங்கள் படிப்பது, காலையில் விட்டுப் போன ஆங்கில நாளிதழின் குறுக்கெழுத்த...

Shame!!!!

Image
இந்தப் பெண்ணின் பெயர் இவாஞ்சலின் பிரின்ஸஸ். பெயருக்கு ஏற்றாற் போல இருக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இந்த குட்டி இளவரசி, ஆசிரியர் திட்டினார் என்பதற்காக, மேலே மண்ணெணை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். தற்போது அப்போலோ மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்தியம் அளிக்கப் பட்டு வருகிறது. ஹிந்து செய்தி * இந்தப் பத்து வயதுப் பெண்ணுக்கு, அவமானம் என்ற சொல் எப்படி பரிச்சயமாகி இருக்க முடியும்? ஆசிரியர் திட்டுவது என்பது மிகவும் அவமானகரமான செயல் என்பதை இவளுக்கு யார் சொல்லித் தந்திருப்பார்கள்? * ஆசிரியரிடம் தண்டனை கிடைத்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற ஐடியாவை இவளுக்குள் விதைத்தவர்கள் யாராக இருப்பார்கள்? * மேலே மண்ணெண்ணை ஊற்றி, நெருப்பு வைத்துக் கொண்டால், அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து போய்விடும் என்று இவளுக்குத் தோன்றியது எங்கனம்? குழந்தைகளை குட்டிச்சுவராக்கும் சமூகத்தில் நானும் ஒரு அங்கம் என்பதை நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது....

G-19 ரோகிணி தியேட்டர்

Image
G-19 ரோகிணி தியேட்டர் பிபி வாயால் பிரம்மரிஷி பெற்ற படமாச்சுதேன்னு கொஞ்சம் கேஷ¤வலாத்தான் ரெயின்போ காலனி படத்தைப் பார்க்கப் போனேன். சும்மா சொல்லக் கூடாது, இயக்குனர் செல்வராகவன் அடி பின்னியிருக்கார். ரீடி·ப் தளத்துலே சமீபத்துலே செல்வராகவன் நேர்காணல் ஒன்றை படிச்சப்போ , ஒரு சுமாரான, அதி தீவிர புத்திசாலியல்லாத, சும்மா ஊர்சுற்றிவருவதைத் தவிர வேற எதுவுமே தெரியாத, ஒரு நகரத்து நடுத்தர குடும்பத்துப் பையனோட கதை தான் இந்த ரெயின்போ காலனின்னு சொல்லி இருந்தார். உண்மை. பன்னிரண்டு பேப்பர் அர்ரியர்ஸ் வெச்சிருக்கிற ஒரு பிகாம் இறுதியாண்டு மாணவனுக்கும், பிரசிடென்ஸி காலேஜில் பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சைன்ஸ் இறுதியாண்டு படிக்கிற ஒரு சேட்டு பொண்ணுக்கும் இடையில் நடக்கிற சம்பவங்களும், நிலவுகின்ற உறவு முறைகளும், அதன் முடிவும் தான் மொத்த கதை. முதலிலே வெறுப்பு.. பிறகு பச்சாதாபம், பின் நட்பு, அதுக்குப் பிறகு காதல், காமம்ன்னு.... இன்ச் இன்ச்சா படம் விரியுது. பல கட்டங்களிலே நுணுக்கமான காட்சிகள். சோனியா அகர்வாலின் அருமையான முகபாவங்கள்... ஏ-க்ளாஸ். இன்னிக்கு தேதிக்கு டைட் க்ளோசப் வைக்கிற தைரியத்துக்காகவே ப...

ET Awards - Entrepreneur of The Year

Image
இந்த வருட "Economic Times - Entrepreneur of The Year" விருது, கெவின்கேர் சி.கே.ரங்கநாதனுக்குக் கிடைத்திருக்கிறது . 1983 இல், வெறும் பதினைந்தாயிரம் ரூபாய் முதலீட்டில் துவங்கிய, ஒரு சின்ன நிறுவனம் , இன்றைக்கு 350 கோடி ரூபாய் நிறுவனமாக வளர்ந்து நிற்கின்றது. இன்றைக்கு மிகப் பெரிய ரீடெயில் முதலைகள், rural marketing பக்கம் திரும்பலாமா என்று யோசித்துக் கொண்டிருக்க, ரங்கநாதன், அதை 15 வருடங்களுக்கு முன்பே செய்து சந்தையைப் பிடித்தவர். இவரை price player என்று வர்ணிப்பார்கள் அல்லது குற்றம் சாட்டுவார்கள். மார்க்கெட்டில் ஷாம்பூக்கள் பாட்டிலில் அடைத்து 40 ரூபாய் அளவில் விற்ற போது, அதிரடியாக, ஒரு சாஷேயில் பாக் செய்து, 50 காசுக்கு விற்று, ஷாம்பூ போன்ற நகர மக்கள் உபயோகப் படுத்தும் பொருளை குட்டி நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் எடுத்துச் சென்றவர். [ தற்போதைய விலை ஒரு ரூபாய்.]வெல்வெட் ஷாம்பூ, சிக் ஷாம்பூ என்று சாஷேயில் ஒரு குட்டி புரட்சியை நிகழ்த்தியவர். நான்கு காலி கவர்களைக் கொடுத்து விட்டு, ஒரு ஷாம்பூ பாக்கெட்டை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்ற டெக்னிக்கையும் அறிமுகப் படுத்தியவர் இவர்தான்...

மத்தளராயர் , வெங்கட் சாமிநாதன் & காசி

காசி இ ந்த வார திண்ணை இதழில் காசி அவர்கள் எழுதியிருந்த கடிதம் ஒன்றைப் படித்தேன். முந்தைய வாரம் வந்த யூனிகோட் விவகாரம் தொடர்பான ஒரு நேர்காணலுக்கான மறுமொழி அது. திண்ணையில் எழுதியவர், தன் கருத்துக்களின் கூடவே, காசியின் பிரபலமான "என் கோடு உன் கோடு தனி கோடு யூனிகோடு" என்ற கட்டுரையில் இருந்து அப்படியே 'சுட்டுப்' போட்டிருக்கிறார். நானும் பார்த்தேன். சொற்கள், எண்கள் கூட மாற்றமில்லாமல் அப்படியே அப்பட்டமான காப்பி. கூகிள் வந்த பின்னால், தகவல்கள் பெறுவது ரொம்ப எளிமையாகிவிட்டது. நமக்கு வேண்டும் என்ற தகவல்களை மேற்கோள் காட்ட, கூகிளில் தேடி எடுத்துப் பயன் படுத்திக் கொள்கிறோம். ஆனால், அப்படி எழுதும் போது, மூலத்தையும் குறிப்பிடுவது தான் முறை. திண்ணையை வாசித்தவர்கள் அனைவருக்கும் இந்த விவகாரம் தெரிந்திருக்கலாம். இந்த விவகாரத்தில் , மிகச் சிறப்பானதாக நான் கருதுவது, காசியின் அணுகுமுறையைத் தான். இணையத்தில் வலைப்பதிவுகள் வந்த பின்னால், யாருடைய தயவும் இல்லாமல், நம்முடைய கருத்துக்களை நாமே பதிவு செய்து, அதை பிறர் படித்து, கருத்துகள் சொல்லவும் வழி வகை இருக்கிறது. இது போன்ற விஷயத்தை, வலைப்...