Posts

மேய்ச்சல் தொடர்கிறது

16. மெய்யப்பன் : மெய்யப்பனின் பார்வையை சமீபகாலமாத்தான் படித்து வருகிறேன். இவருடைய பதிவுகளைத் தொடர்ந்து படித்து வந்தால், இவரது சார்புநிலைகளை எளிதில் கண்டுகொள்ளலாம். என் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அடிக்கடி எழுதுவார். என்றைக்காவது உபயோகப்படும் என்று வாசித்து வைத்துக் கொள்வேன். சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பத்தியை விமர்சித்து ஆரம்பத்தில் வந்த பதிவு மிகவும் பிடித்தது. " i provide an easy target" என்பார் சுஜாதா அடிக்கடி. அது மெய்யப்பனின் வலைப்பதிவு வரையிலும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. கோவர்த்தனன் , ரமணீதரனுக்குப் பிறகு, நான் படித்த, சுஜாதா மீதான பொட்டில் அடித்தமாதிரியான விமர்சனக்குறிப்பு அது. ஆவணத்தில் தேடி எடுத்துப் போட பொறுமை இல்லை. அடிக்கடி எழுதினால் தேவலாம் என்று தோன்றும். புதிதாகப் பிறந்த குழந்தை அவரது மொத்த கவனத்தையும் இன்னேரம் ஈர்த்துக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். வருவார். பின்னால் பார்த்துக் கொள்ளலாம். 17. முத்துராமன் : இவரை நான் முன்னமேயே அறிவேன், உளவியல் மாணவர். கல்லூரி பாடப்புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறாரோ என்று அடிக்கடி ...

மேய்ச்சல் மைதானம் ( நன்றி : பாலகுமாரன்)

எழுதுவதற்கு விஷயம் இல்லாவிட்டால் எழுதாமல் இருப்பது நல்லது. ஆனால், எழுதாமலே இருந்தால், ப்ளாக்ஸ்பாட் காரர்கள் கோபித்துக் கொண்டு, பட்டாவை கேன்சல் செய்துவிடுவார்களோ என்ற பயமும் இருக்கிறது. இந்த சமயத்தில், கைகொடுப்பது, முன்பு எழுதி, அஞ்சல் செய்யாமல் விட்ட சங்கதிகள். இது போல, அந்தரத்தில் தொங்குகிற ஆக்கங்கள் என்னிடம் ஒரு நாற்பது ஐம்பது இருக்கும். அதில் எதையாச்சும் ரிப்பேர் செய்து போடலாமா என்று நோண்டிக் கொண்டிருந்த போது, ஒரு மடல் மாட்டியது. நான் வலைப்பதிவு ஆசிரியராக இருந்த போது, மற்ற வலைப்பதிவுகளைப் பற்றி எழுதவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து எழுதியது அந்தப் பதிவு. நான் அதை எழுதிய காலத்தில், சுமார் ஏழெட்டு வலைப்பதிவுகளை மட்டும் தான் தொடர்ந்து படித்து வந்தேன். மற்ற பதிவுகளில், பின்னூட்டங்களும் அவ்வளவாகக் கொடுத்ததில்லை. ஆனால், ப்ளாக்லைனர் உதவியால், ஆற்றுமை ( activity) அதிகம் இருக்கும் அனைத்து வலைப்பதிவுகளையும் படித்து வருகிறேன். ஆகையால் முன்பு எழுதி அஞ்சல் செய்யாமல் விட்ட அப்பதிவினை, கொஞ்சம் revamp செய்து இங்கே இடுகிறேன். எச்சரிக்கை 1. : இது நடுநிலைமையான பதிவு அல்ல. நான் வாசிக்கிற வ...

Junior Subbudu

Image
a mail from a friend சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு வரையிலும், ராகாகியிலும், மரத்தடியிலும் இசை விமர்சனம் எழுதிக் கொண்டிருந்த லலிதராயர் என்கிற ராமை, புதிதாக தமிழ் இணையத்துக்கு வந்த நண்பர்களுக்கு எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. சமீபத்தில் தான் படிப்பை முடித்து விட்டு, பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ரொம்ப வெவரமானவர். வேலை நேரத்தில், வேலையை செய்வதை விடுத்து தமிழில் எழுதுவது, படிப்பது போன்ற 'அடாஸ்' வேலைகளை செய்யமாட்டேன் என்று சொல்கிற அளவுக்கு தொழில் பக்தி கொண்டவர். முதல் மாச சம்பளம் வந்தோடனே, கம்ப்யூட்டர் வாங்கி, மீண்டும் ஜோதியில் கலந்து கொள்கிறேன் என்று அஞ்சு மாசமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். நம்ம ஊர் இசையைப் பற்றி யாராவது (விஷயம் தெரியாமல்) கோக்கு மாக்காகப் பேசினால் போட்டு கிழித்து விடுவார். . அன்னாருடன், அவ்வபோது இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எல்.சுப்ரமணியம், எஸ்.பி.பி , ஓ.எஸ்.தியாகராஜனின் கான்சர்ட் என்று நானும் இன்னும் சில நண்பர்களும், நேரிலும் மடல்களிலும் கதைப்பது வழக்கம். அப்படியாகப் பட்ட ஒரு சுவாரசியமான விமர்சன மடலை ( அவருடைய அனுமதியோடு) இங்கே பகி...

Digital Divide

On Dayanthi Maran' Plans & Badri's comments பத்ரி, தன் ஆங்கில வலைப்பதிவில், தயாநிதி மாறனின் சில கருத்துக்கள் பற்றிய தன் அபிப்ராயங்களை எழுதி இருந்தார். தொழில்நுட்பக் கருத்துக்களுடன் , எண்ணியப் பிளவு ( digital divide) பற்றியும் சொல்லி இருந்தார். அது பற்றிய என் சில கருத்துக்கள் இங்கே: கிராமங்களுக்கு கணிணிகளைக் கொண்டு போவது, தன்னுடைய முக்கியான வேலைகளில் ஒன்று என்று தயாநிதி மாறன் அவர்கள் சொல்லி இருக்கிறார். . கணிணியைப் பயன்படுத்துபவர்களுக்கும் பயன்படுத்தாதவர்களுக்கும் இருக்கும் இடைவெளிதான் எண்ணியப் பிளவு. இந்தியா போன்ற ஒரு வளரும் பொருளாதார நாட்டிலே, மற்ற அனைத்து வளர்ச்சிப் பணிகளுடன், இந்த எண்ணிய இடைவெளியைக் குறுக்கிக் கொண்டே போவதும் மிகவும் முக்கியம். ஆனால், இதை எப்படிச் செய்யப் போகிறார் என்பது பற்றி ஏதும் தகவல் இல்லை. இது கொஞ்சம் சிரமமான காரியம் என்று பத்ரி அபிப்ராயப் பட்டிருக்கிறார். என்னுடைய அபிப்ராயத்தில், இது சிரமம் போலத் தோன்றினாலும், கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் திட்டம் தயாரித்தால், கிராமங்களுக்கு கணிணியைக் கொண்டு செல்லலாம். அந்த காலத்தில் சென்னையில் இர...

மூன்று விஷயங்கள்

1. இந்த வாரம் திண்ணையில் எனது புதிய கட்டுரை ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்துத் தேவதைகளும் இந்த சிக்கல் எனக்குப் பல முறை நேர்ந்திருக்கிறது. ஒரு ஆக்கத்தைப் படிக்கிறேன். அந்த ஆக்கம் என்னை என்ன செய்கிறது என்பது என் மனதுக்குப் புரிகிறது. ஆனால், அவற்றை விசைப்பலைகை வழியாக உள்ளிடும் பொழுது, அந்த உணர்ச்சி, என்னை அறியாமலேயே சட்டென்று நீர்த்து அல்லது மறைந்து போய்விடுகின்றது. நினைக்கிற வேகத்துக்கும் எழுதுகிற வேகத்துக்கும் இருக்கும் இடைவெளிதான் காரணம் என்று நண்பர் ஒரு முறை சொன்னார். அந்த சமயங்களில், அந்த உணர்வுகளை எழுதுவதைக் காட்டிலும், வாசித்ததை மனதுக்குள்ளாகவே அசை போட்டு, அந்தரங்கமாக இன்பம் அடைவது மேலானதாக அல்லது என்னால் இயலக்கூடிய காரியமாகப் படும். சில சமயம் காத்திருப்பேன். யாராவது ஏதாவது சொல்கிறார்களா என்று. சொன்னால் அவர்களைப் பின் தொடர்ந்து செல்வது. ஸ்ரீரங்கத்து தேவதைகளைப் பொறுத்த மட்டில், சென்ற வாரம் திண்ணையில் எழுதிய திரு. ஜெயமோகன் அவர்களின்....... மேலே படிக்க 2. சும்மா பொழுது போகாமல் வலையில் மேய்ந்து கொண்டிருக்கும் போது கண்டதும் மாட்டும். சில வெறுப்பேற்றும். சில கிச்சு கிச்சு மூட்டும், அ...

ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே.....

இந்த வார 'நேசமுடன்' இதழிலே, செல்லம்மா பாரதி எழுதிய நூல் பற்றி ஆர்.வெங்கடேஷ் எழுதியிருந்ததைப் படித்ததும், ரா.காகியில் நடந்த பழைய கருத்துப் பரிமாற்றம் நினைவுக்கு வந்து விட்டது. நடந்தது, 2003 மார்ச்சில். கேள்வி: அது சரிங்க ஹரி சார், பாரதி , செல்லம்மா மீது மாறாக் காதல் கொண்டிருந்தான் என்பது சரி? இதிலே செல்லமாவோட பார்வை என்ன? படிச்சதிலேயும் , கேள்விப்பட்டதிலேயும் , பாரதி வாழ்ந்த கால கட்டத்துலே, எல்லாரும் அவரை, 'என்ன ஓய் ன்னு எகத்தாளமா கூப்பிட்டவங்கதான் அதிகம்ன்னு தெரிய வரது . அப்படிப்பட்ட சூழ்நிலையிலே, செல்லம்மா என்ன நெனைச்சாங்க? என் புருஷன் ஒரு மகாகவிங்கறஒரு பெருமிதம்? இன்னா ஒரு எக்செண்ட்ரிக் மாதிரி இருக்கானேங்கற ஒரு மிரட்சி? கட்டிக்கிட்டோம், இனி இவன் தான் எனக்கு எல்லாம் என்கிற ஒரு மரபு வழிவந்த ஒரு கட்டுப்பாடு? என் மேல இவ்ளோ அன்பான்னு ஒரு வியப்பு ? அப்படியே அவங்களுக்கும் இது மாதிரியே அன்பு காதல் இருந்ததுன்னா அதை அவங்க reciprocate செஞ்சாங்களா? what is chellamma's perspective? ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறுகளின் துவக்கத்தில் இரு...

Reunion

30 வருடங்கள் கழித்து எழுதப் போகும் சுயசரிதையில் இருந்து முன்னதாகவே ஒரு சில பக்கங்கள். ஒரு சில மாதங்களுக்கு முன்பு, மணிகண்டன் என்ற நண்பன் ஒருவனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆனால் மணிகண்டன் என்ற பெயரிலே எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. " எக்ஸ்க்யூஸ் மீ.... உங்களுக்கு எந்த நம்பர் வேணும்...? " " அடப்பாவி ஜேபி, ஞாபகம் இல்லியா? நாந்தாண்டா மணி. டாம்கேட். ஞாபகம் வரலே? " டாம்கேட் என்றதும் சட்டென்று நினைவுக்கு வந்துவிட்டது. கல்லூரியில் கூட படித்தவன். பூனைக்கண்ணன். நெய்வேலிக்காரன். இவன் எப்படி இங்கே? என் நம்பர் எப்படிக் கிடைத்தது? என்ன செய்து கொண்டிருக்கிறான்? எங்கெங்கோ அலைந்து திரிந்து நம்பரைப் ப்டித்திருக்கிறான். பிறகு நீடித்த அந்த முக்கால் மணிநேர தொலைபேசி உரையாடலிலே, என் கூடப் படித்த நண்பர்கள், நண்பர்கள் அல்லாதவர்கள், நண்பர்களாக இருந்து முறைத்துக் கொண்டு போனவர்கள், லட்டர், வாலன்டைன் கார்டு வாங்க மறுத்தவர்கள் , வாங்கி விட்டு பிரின்ஸியிடம் போட்டுக் கொடுத்தவர்கள் என்று அத்தனை பேரும் இப்போது எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற விவரங்களைப்...

aayitha ezuththu - much ado about nothing

படத்தைப் பற்றி மணிரத்னம், வழக்கத்துக்கு மாறாக, டிவி, ரேடியோ பேட்டி, வலைத்தளம், பத்திரிக்கை நேர்காணல் என்று ஏகப்பட்டது சொன்னார். ஆனால், அலைபாயுதே படத்தில் லேசாக தொட்ட அந்த திரைக்கதை உத்தியைத்தான், ஆயுத எழுத்து திரைப்படத்திலே விரிவாகச் செய்திருக்கிறார் என்று எங்கும் சொல்லவில்லை. அலைபாயுதே படத்தின் ஆரம்பக் காட்சி, இரு வேறு கோணங்களில் இரண்டு முறை வரும் . ஆய்த எழுத்திலே மூன்று முறை. ஆனால் கதைதான் ரொம்ப இடிக்கிறது. அயோக்கிய அரசியல் வாதிகளுக்கு எதிராக கொடி பிடிக்கும் மாணவர் பட்டாளத்தைப் பற்றிய கதை. இன்பசேகர்( மாதவன்) பாத்திரம் highly unrealistic. நடிப்பும் எதிர்பார்த்த மாதிரியேதான் இருக்கிறது. இன்னொரு பிரகாஷ்ராஜ் உருவாகிக் கொண்டிருக்கிறார்? மைக்கேல் வசந்த் ( சூர்யா ) பாத்திரமும் ரொம்ப மிகை. அழகாக இருப்பார். ரௌடிகளை துவம்சம் செய்வார். ·ப்ரெஞ்ச் மொழி பேசுவார். ஜீனியஸ். லாக்கப் சுவற்றில் பூச்சி பூச்சியாய் தியரம் போட்டு நண்பர்களுக்கு பாடம் எடுப்பார். பொதுப்பணித்துறை அமைச்சரிடம் சவால் விடுவார். அமெரிக்காவில் பிஎச்டி படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தாலும் போகாமல் தமிழ்நாட்டிலேயே இருப்பேன் என...

இந்த வாரம் படித்து ரசித்த ஐந்து விஷயங்கள்

1. Moving to Madras 85 Migration following 83 - குமாரபாரதி வலைப்பதிவாளர்கள் பட்டியலுக்குச் சென்று, நான் இது வரை பார்க்காத வலைப்பதிவுகளுக்கு ஒரு முறை சென்று பார்க்கலாம் என்று நினைத்து மேய்ந்த போது, வாசன் (அய்யா என்றால் அடிப்பார் :-) அவர்களின் கொள்ளிடக்கரையில் தடுக்கி விழுந்தேன். அங்கே, குமாரபாரதி என்பவரின் படைப்புகள் இருக்கும் வலைப்பக்கத்துக்கு ஒரு இணைப்புக் கொடுத்திருந்தார். இலங்கையின் இனப்பிரச்சினையில் , சென்னைக்கு குடிபெயர்ந்த போது, அவருடைய பார்வையில் படும் நகர் காட்சிகளின் அழகான பதிவு தான் இந்த கட்டுரை . வாசன், குமாரபாரதி பற்றி கொடுத்திருந்த குறிப்புகள் அனைத்திற்குமான விளக்கமும், நான் படித்த அந்த முதல் கட்டுரையிலேயே கிடைத்தது. இனிமையான இலங்கைத் தமிழும், மெலிதான நகைச்சுவையும் கட்டுரைக்கு கூடுதல் சுவை. இந்த குமாரபாரதி இப்போது இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறாரா? 2. மரத்தடி மாத்ருபூதம் - எல்லே சுவாமிநாதன் வயிறு வலிக்க சிரிக்க வைத்த கட்டுரை. இதைப் பற்றி ஒன்றுமே சொல்வதற்கில்லை. படித்து பார்த்து விட்டு சிரிக்கலாம். வயிறு வலித்தால் பரால்கான் போட்டுக் கொண்டு படுத்துக்...

பிரபலங்கள் சந்திப்பு - my version

மூக்கரின் கட்டுரையை ஒட்டி பிரபலங்கள் சந்திப்பு எல்லாம் பின்னால் தான் நடந்தது. முதலில் பிரபலங்களைப் பார்த்தது. 1981. அந்த ஆண்டில் தான் முதலில் சென்னையில் காலடி எடுத்து வைத்தது. ஜாகை மந்தைவெளி, சடையப்ப முதலி தெரு. எங்கள் வீடு அந்தத் தெருவின் முதல் வீடு. அதனால், சைடில் இருக்கும் பலகணி, பிரபலமான ராமகிருஷ்ணா மடம் சாலையைப் பார்த்த வண்ணம் இருக்கும். நாலு கட்டிடம் தாண்டினால் கபாலி டால்க்கீஸ் ( முதலில் அதை அப்படித்தான் உச்சரித்தேன்). அந்த வீட்டுக்கு வந்து குடியேறிய சில தினங்களிலேயே நடிகர் சுருளிராஜனைப் பலகணி வழியாக பார்த்தேன். படுத்துக் கொண்டிருந்தார். அவரை தூக்கிக் கொண்டு இடுகாட்டுக்குப் போய்க் கொண்ட்டிருந்தார்கள். ( பல வருடங்கள் கழித்து அவருடைய மகன் சண்முகவேல், என்னுடன் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தார்). அவர்தான், மன்னிக்கவும் அதுதான் நான் பார்த்த முதல் பிரபலம். பள்ளிக்குச் சேர்ந்த கொஞ்ச நாளில், வேறொரு ஊரில் இருந்து வந்த நான், எதிலும் ஒட்டாமல் ஒரு பயங்கலந்த பார்வையுடனே இருப்பேன். ஆங்கிலம் வேறு புரியாது. (மூன்றாவது வகுப்பில் என்னத்தை புரியும்.) ஒரு நாள் வகுப்பில் திடீர் என்று...

அம்மா உந்தன் கைவளையாய்......

வாணிஜெயராம் தான் எனக்கு ரொம்ப பிடித்த பாடகி என்று ஒருமுறை நண்பர் ஒருவரிடம் சொன்ன போது அவர் முறைத்தார். இருக்காதா பின்னே? சாதனா சர்கம், சித்ரா, சுஜாதா வில் இருந்து சமீபத்திய ஸ்ரீலேகா பார்த்தசாரதி, மதுமிதா. சுசித்ரா என்று கலக்கிக் கொண்டிருக்க, இப்பப் போய் வாணிஜெயராம் என்கிறீரா என்பதாகத்தான் இருந்தது அந்த முறைப்பு. அதுக்கு என்ன செய்ய முடியும். நானே நானா யாரோதானா வில் இருந்து, மன்னன் மயங்கும் மல்லிகை வரை, அபூர்வராகங்களில் இருந்து சங்கராபரணம் வரை கட்டிப் போட்ட குரலாயிற்றே? இந்தப் பாட்டை யாராவது கேட்டிருக்கிறீர்களோ? அன்பு மேகமே .. கொஞ்சம் ஓடிவா! அப்புறம் இந்தப் பாட்டு... மல்லிகை முல்லை பூப்பந்தல்... சரி அதெல்லாம் விடுங்க.. அதல்லாம் உடுங்க... அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா பாட்டு? சின்னபிள்ளையாக இருந்த போது, சென்னைத் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு படத்தில் வந்த அந்தப் பாட்டு அப்போதே மனதில் நின்று போனது. தேசிய விருது பெற்ற இயக்குனர் கே.எஸ். சேதுமாதவனின் படம் அது என்றோ, அந்தப் பாட்டை எழுதியவர் பாரதிதாசன் என்றோ அப்போது தெரியாது. பின்னால்தான் தெரிந்து கொண்டேன். நேற்றோ அல்லது அ...

வெயிலோ வெயில்

Image
( புகைப்படத்துக்கும் கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ) நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது சூரியன் எ····ப்ப்ப்ப்ப் எம்ம்ம்ம்ம்ம் என்று ஒரு அம்மணி என் ரேடியோ பொட்டியில் குந்திக் கொண்டு , அரைமணிக்கொருதரம் விடாமல் அலறிக் கொண்டிருக்க, படையப்பா ரஜினிகாந்த் போல சொக்காயை கழட்டிப் போட்டு விட்டு உட்கார்ந்திருந்தேன். இதற்காக போலீஸ்காரர்கள் நியூசென்ஸ் கேசில் எல்லாம் பிடிக்க முடியாது. நான் உட்காந்திருந்தது நாலுசக்கர சீருந்துக்குள். ஸ்பென்சர் வளாகத்தில் இருந்து மௌண்ட் ரோடு தர்கா இஞ்சு இஞ்சாக நகர்ந்து வர கிட்டதட்ட அரை மணிநேரம். நடுவில் ஒரு வெள்ளை யானை, i mean, ஒயிட் அம்பாசடர், நகரமாட்டேன் என்று சண்டி செய்ய, டிரா·பிக் போலீஸ்கார் கூட நாலு ஆளைக் கூட்டிக் கொண்டு, வந்து தள்ள, அதற்குள் எதிர்பக்கத்தில் இருந்து நாலைந்து வண்டிகள் குறுக்கே புகுந்து விட, க்ஷண நேரத்தில் பர்·பக்ட் டிரா·பிக் ஜாம். வெள்ளிக்கிழமையாக இருந்தால், இடப்பக்கம் இருக்கும் தர்காவுக்கு நாசர் வருவார். வேடிக்கை பார்க்கலாம். சனி ஞாயிறாக இருந்தால் வண்டியை ஓரங்கட்டிவிட்டு, எதுத்த பக்கம் இருக்கும் புகாரியில் வான்கோழி பிரியாணி சாப்ப...

E-zine & Databases

மடல் இதழ்களும் தரவு தளங்களும் ஈ-சைன் ( Ezine ) என்று சொல்லப்படும் பல இதழ்களை நான் இணையத்தில் பார்க்கிறேன். அவை உண்மையில் இணையத்தளங்கள் மட்டும்தான். ஈசைன்கள் அல்ல. ஒரு இதழை வடிவமைத்து, பொருத்தமான இணைப்புகள் கொடுத்து அவற்றை வாசகர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பதுதான் மடல் இதழ். இதனை சரியாகப் புரிந்து கொண்டு இருக்கிறார் என்ற மகிழ்ச்சிதான், வெங்கடேஷ் உருவாக்க முயன்று இருக்கும் மடல் இதழைப் பார்த்த உடனே வந்தது. இந்த மடல் இதழுக்கான வரவேற்பு, அந்த இதழின் உள்ளடக்கத்தைப் பொறுத்த விஷயம். தொடர்ந்து நடத்தும் ஆர்வமும், இதழின் வடிவமைப்பும், மற்ற இதழ்களைப் போலவே பல பகுதிகளையும் உள்ளடக்கி இருப்பதும், வெகுஜனப்பத்திரிகைகளில் சோதனை செய்து பார்க்க அனுமதி கிடைக்காத சில விஷயங்களை, சோதித்துப் பார்ப்பதும், வாசகர்களுடனான ஊடாட்டமும், இந்த முயற்சி வெற்றி பெறுவதை உறுதி செய்யும். வெங்கடேஷ் பத்திரிக்கை உலகுடன் பரிச்சயம் உள்ளவரென்பதாலும், நல்ல எழுத்தாளர் என்பதாலும், இந்த மடல் இதழை நடத்துவதில் அவருக்கு சிரமம் ஒன்றும் இருக்காது. அவருக்கு என் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் சொன்ன கையோடு, அவர் த...

எழுத்தும் இலக்கியமும்

பிரபு தன் வலைப்பதிவில் போகிற போக்கில் சொன்ன ஒரு விஷயம் என் சிந்தனையைத் தூண்டிவிட்டது. வர்த்தகம் பற்றி எழுதும் ஆட்கள் மிகக் குறைவு என்று அவர் சொன்னது, எனக்குள் மிக நீண்ட காலமாக இருக்கும் ஒரு எண்ணத்தை அசை போட வைத்துவிட்டது. ஆங்கிலத்தில் கட்டுரை இலக்கியம் என்று என்று எடுத்துக் கொண்டால், யார் யார் எந்த எந்த துறைகளில் இருக்கிறார்களோ அவர்கள் அந்த அந்த துறைகள் பற்றி கட்டுரைகள் எழுதுகிறார்கள். நிபுணர்களும் வல்லுனர்களும் எழுதும் ஏதாவது ஒரு இயல் சார்ந்த கட்டுரைகளை நாம் நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், இணையத்திலும் வாசித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், இங்கே பார்த்தால் , பொறியாளர்களும், வங்கி அலுவலர்களும், ஆசிரியர்களும், பத்திரிக்கைத் துறையாளர்களும், விஞ்ஞானிகளும், ஆடிட்டர்களும் கவிதைகளும் கதைகளும் நாவல்கள் மட்டும் தான் எழுதுகிறார்கள். கொஞ்சம் விலகி எழுதினால் கூட அது அரசியலாவோ ( கருணாநிதியா சோனியாவா?) சினிமாவாகவோதான் ( அகிரா குரோசோவா, வைரமுத்து, பாய்ஸ் இன்ன பிற) இருக்கிறது. வார இதழ்களில் வரும் கட்டுரைகளை ( அவை என்ன மேட்டராக இருந்தாலும் ) எழுதுவது பத்திரிக்கையாளர்கள் தான்.எல்லாவற்றி...

புதிய தலைமுறை.....

Image
பத்ரி தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருக்கும் சமாசாரம் பற்றி எனக்கு சில அபிப்ராயங்கள் உண்டு. தொழில் தொடங்குதல், திட்டம் அறிக்கை தயாரிப்பு, முதலீடு ஏற்பாடு , கடன் வசதிகளைப் பெறுதல் போன்றவற்றில் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது என்பதால், அதனை இங்கே வலைப்பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன், ஐஐடி மும்பை செய்திருக்கும் சேவை அளப்பரியது. ஆர்வமும், திறமையும் கொண்டவர்களை ஊக்குவிப்பதற்காக, அந்த கல்வி நிறுவனம் காட்டியிருக்கும் முனைப்பு பாராட்டத் தக்கது. இந்தியாவில், குறிப்பாக சென்னையில் தொழில் தொடங்குவதென்பது அத்தனை சுலபமானது இல்லை. அதில் ஏற்படும் சிக்கல்களின் அளவு, குறிப்பிட்ட தொழில்கள், அவற்றின் இயல்பு ஆகியவற்றைச் சார்ந்ததாக இருக்கும். Oxford History of Indian Business என்ற ஒரு நூலின் சில பகுதிகளை, ஒரு வணிக நாளிதழிலே வாசிக்க நேர்ந்தது. இந்திய வர்த்தக நிறுவனங்கள் தோன்றி வளர்ந்த கதையினை விவரிக்கும் அந்த நூல், சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப் பட்டு தற்போதுதான் வெளியாகி இருக்கின்றது. ( விலை, இந்திய ரூபாய் 1,350/-). 1800 களின் மத்தியில் துவங்கி, டாடா, பிர்லா போன்ற தொழிலதிபர்கள், தங்...