யாராச்சும் கொஞ்சம்....
நான் என் சொந்த உபயோகத்துக்கு என்று, wordpress அடிப்படையிலான ஆங்கில வலைப்பதிவு ஒன்றை, weblogs.us என்ற தளத்திலே நடத்தி வருகின்றேன். இந்த வலைப்பதிவு, என்னுடைய தமிழ்மணம் profile க்கு தொடர்பில்லாதது. weblogs.us தளத்தில் வலைப்பதிவு எழுதுவது வசதியாக இருக்கின்றது. ஆனால், சில காரணங்களுக்காக, இந்த வலைப்பதிவை, என்னுடைய இணையத்தளத்துக்கு நகர்த்தி விட எண்ணினேன். php என்ற நுட்பத்தை படித்து அறிந்து கொள்ளுவது அத்தனை எளிதாக இல்லை. எதைச் செய்தாலும், கடைசியில் ஏதோ வருகின்றது.
கூகுள் தேடுபொறியில் கிடைக்கும் தகவல்கள் ஜெயமோகன் நாவல் போல, படிக்க படிக்க, சுரந்து கொண்டே இருக்கிறதே அன்றி, இறுதியில் எதுவும் விளங்கவில்லை.
சொந்த இணையத்தளத்தில், wordpress ஐ நிறுவுவது எப்படி என்பதற்கான அடிப்படை வழிமுறைகளை யாராவது எனக்கு அனுப்பித் தர இயலுமா? அல்லது இணையத்தில் எங்காவது ஏற்கனவே இருந்தால், அதன் சுட்டியைத் தர இயலுமா.
பொதுவாக வலைப்பதிவு குறித்து உதவி என்றால், மதியிடம் செல்வேன். ஏதோ, தமிழ்ச்சேவை செய்கிறார் போலிருக்கு என்று நினைத்து அவரும், உதவி செய்வார். ஆனால், சொந்த உபயோகத்துக்கு என்பதால், கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதனால் பொதுவிலே இந்த வேண்டுகோளை வைக்கிறேன்.
அன்புடன்
பிரகாஷ்
icarus1972us@yahoo.com

Comments
if you could wait for couple hours, the first post would be out.
if u'd rather do it now,
go to
codex.wordpress.org
how dare u say that? ;-) :-)
கா.ரா : இந்த வேலையை முடிச்சுட்டு வந்துடறேன். வெச்சுக்கலாம் கச்சேரியை :-)