இரு கவிதைகள்.

முகுந்த நாகராஜனின் இன்னும் இரு கவிதைகள்.

நன்றி : முகுந்த் நாகராஜன்

ரயிலின் காதில்

ஒவ்வொரு ஸ்டேஷனிலும்
ரயில் நிற்கும் முன்
அதன் காதில் ரகசியமாக
'ஸ்டாப்' என்று சொல்லி விட்டு
ரயில் நின்றதும்
'நான் ஸ்டாப் சொல்லி நிறுத்தினேன்' என்று
ரகளை செய்து கொண்டு வந்தாள் சிறுமி
அவள் 'பை' சொல்லி இறங்கிப் போனதும்
நிற்காமல் போனது ரயில் வண்டி.
அவளிடம் சொன்னேன்.
'கண்டித்து வைக்கிறேன்' என்றாள்.

தூங்குகிறாள்


சிரித்து விளையாடிக்
களைத்துப் போய்
தூங்குகிறாள் குழந்தை
கனவில் ஆடும் ஆட்டம்
மெல்ல எட்டிப் பார்க்கிறது
ஈரமான சின்ன உதடுகளின் வழியாக

Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I