அந்த நாள் - எஸ்.பாலசந்தர்

தமிழ்த் திரைப்பட உலகில் வலம் வந்த அறிவுஜீவிகளைக் கணக்கெடுத்தால், அதிலே எஸ்.பாலசந்தரும் அடங்குவார்.

பின்னாட்களில், எஸ்.பாலசந்தர் ஒரு வீணை வித்துவானாகப் புகழ் அடைந்திருந்தாலும், அவ்ர் தன்னுடைய கலைப் பயணத்தைத் துவக்கியது திரைப்பட நடிகராகவும், இயக்குனராகவும் தான். சீதா கல்யாணம் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி, அதற்குப் பின் சில திரைப்படங்களில், துணைப்பாத்திரங்களில் நடித்தார். " பெண்' என்ற திரைப்படத்தில், நாயகன் ஜெமினிகணேசனுக்கு தோழனாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடித்திருந்தார். "என் கணவர், இது நிஜமா?. அவனா இவன், அவன் அமரன், நடு இரவில், கைதி போன்ற திரைப்படங்கள் இயக்கினார்.

இது நிஜமா என்ற திரைப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், இரட்டை வேடங்களில் நடிக்கவும் செய்து, படத்திற்கு இசையும் அமைத்தார். [ கமலஹாசன் நடித்த கல்யாணராமன், இது நிஜமா வின் லேசான தழுவல்]

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பது/ அறுபதுகளில் , வெளியான படங்கள் பெரும்பாலும், குடும்பக் கதைகளாகவும், புராணக் கதைகளையும் ஒட்டித்தான் இருந்தன. அதிலும் குறிப்பாக, எம்.ஜி.ராமச்சந்திரனின் வரலாற்றுக் கதைகளும், ஜெமினிகணேசனின் காதல் கதைகளும், சிவாஜிகணேசனின் உணர்ச்சிக் காவியங்களும், வந்து கொண்டிருந்தன.
ஸ்ரீதர், பீம்சிங், பி,.ஆர்.பந்துலு போன்ற இயக்குனர்கள், குடும்பங்களில் நடக்கும் உறவுச் சிக்கல்களையும், மெலோடிராமா பாணியில், திரைக்கதை அமைத்து படங்களை உருவாக்கினார்கள்.

அந்தச் சமயத்தில், எஸ்.பாலசந்தரின் திரைப்படங்கள், ஒரு புதுவிதமான அலையைத் தோற்றுவித்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

திகில் மர்மம் என்ற வகையில் அடங்கும் அவரது திரைப்படங்கள், மேனாட்டுக் கதையமைப்பை, கதைக் கருக்களை ஒட்டி அமைந்திருந்தன. அவற்றை, நம்முடைய சூழலுக்கு ஏற்ப, அப்போதைய கலாசாரச் சூழலை ஒட்டி மாற்றி அமைத்துப் படங்கள் எடுத்தார். எஸ்.பாலசந்தரின் படங்கள், திகில், மர்மம் என்ற அடிப்படைகளை வைத்தே வந்தன என்றாலும், மலிவான பயமுறுத்தல் உத்திகள் இல்லாமல், நல்ல production value கொண்ட திரைப்படங்களாக எடுத்தார். ஸ்டுடியோக்களிலேயே மொத்தப் படங்களை எடுத்த அந்த காலத்தில், அவரது திரைப்படங்களில் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிகள் அதிகமாக இடம் பெறும். வசனங்களில் ஆங்கிலம் அதிகமாகக் கலந்திருக்கும்.

பல படங்களை அவர் உருவாக்கியிருந்தாலும், அவர் இயக்கிய திரைப்படங்களில், அந்த நாள் மிக முக்கியமானது.

அந்த நாள் திரைப்படத்தில், மொத்தப் படமும், இரண்டு சி.ஐ.டி இன்ஸ்பெக்டர்கள், நடந்த கொலையை விசாரிப்பதாகத்தான் அமைந்திருக்கும். அந்த விசாரணையின் போது, விசாரிக்கப் படும் ஒவ்வொருவர் மூலமாகவும், கதை மெல்ல மெல்ல அவிழும். கதை, முன்னும் பின்னுமாக நகர்ந்தாலும், குழப்பமே ஏற்படாது என்பது, திரைக்கதையின் நேர்த்திக்கு, கட்டியம் சொல்கின்றது. கதையின் பின்புலமும் சுவாரஸ்யமானது. இந்த நாட்டில் அங்கீகாரம் கிடைக்காத ரேடியோ இன்ஜினியர் ராஜன் ( சிவாஜி) ஆத்திரத்தில், எதிரி நாட்டுக்கு உதவி செய்து, தேசத்துரோகி ஆகின்றான். அவனை அவனது மனைவியே ( பண்டரிபாய்) சுட்டுக் கொல்கிறாள். இந்தப் படத்தில் பாடல்கள் கிடையாது. கல்கத்தா விஸ்வநாதன் தான் முதலில் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்து, பின் சிவாஜியைத் தேர்வு செய்தார்கள். ஒரு க்ளாசிக் படம் என்றாலும், இத்திரைப்படம் வெற்றிப் படம் என்று சொல்ல முடியாது.

சி.ஐ.டியாக வரும், ஜாவர் சீதாராமன், அழுத்தமான உச்சரிப்பில், லாஜிக்காக வசனம் பேசி, துப்புத் துலக்குவது, பார்க்க சுவாரசியமாக இருக்கும்.

அந்த நாள் மட்டுமல்ல, எஸ்.பாலசந்தரின் பொம்மை என்ற படமும் வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்டது. வியாபாரத்தின் நான்கு பங்குதாரர்களில், மூன்று பேர், முதலாமவனைக் கொலை செய்வதற்காக, ஒரு பொம்மைக்குள் வெடி குண்டு வைத்து விடுகின்றனர். அந்த பொம்மை, பலரிடம் கை மாறிச் சென்று, இறுதியில் வில்லன் மாட்டிக் கொள்ளுவதுதான் கதை. இந்தத் திரைப்படத்தில் தான் ஜேசுதாஸ் பின்னணிப் பாடகராக அறிமுகம் ஆனார். அந்தக் காலத்து சூப்பர் ஸ்டார் ஜே.ஆர்.ரங்கராஜூ எழுதிய கதையைத் தழுவி வந்த ராஜாம்பாள் என்ற திரைப்படத்தில், ஆன்டி ஹீரோவாக நடித்திருந்தார். [ ஆர்.எ.மனோஹர் அறிமுகமானது இந்தப் படத்தில் தான்]

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் வந்த நடு இரவில் என்ற திரைப்படம் தான், எஸ்.பாலசந்தர் கடைசியாக இயக்கியது. அதற்குப் பின்னர், கர்நாடக இசைத்துறையில் ஈடுபட்டு, பிரபல வீணை இசைக்கலைஞரானார்.

அவருக்குப் பிறகு, திகில் படங்களை அதிகமாக யாரும் உருவாக்கவில்லை ( ஏசி திரிலோக்சந்தரின் அதே கண்களை திகில் கேடகரியில் சேர்க்காமல் இருந்தால் )

Comments

Boston Bala said…
என்னப்பா... பிலிம் நியுஸ் ஆனந்தனிடம் பேட்டி எடுத்தீங்களா :P)

>>கமலஹாசன் நடித்த கல்யாணராமன், இது நிஜமா வின் லேசான தழுவல்--

அந்தக் காலத்திலிருந்தே கமல் காப்பியடித்திருக்கிறார் போல!

>>சிவாஜிகணேசனின் உணர்ச்சிக் காவியங்களும்--

:>>>> ஏதோ டிவி சீரியல் ரேஞ்சுக்கு ஒப்பிடறீங்க

>>வசனங்களில் ஆங்கிலம் அதிகமாகக் கலந்திருக்கும்

புதுவிதமான அலை, அறிவுஜீவி, லாஜிக்கான வசனம் எல்லாம் இருக்க வேண்டுமானால், ஆங்கிலம் கலந்தால்தான் முடியுமா ;-)
Balaji-Paari said…
நல்ல பதிவு.
//
அவருக்குப் பிறகு, திகில் படங்களை அதிகமாக யாரும் உருவாக்கவில்லை ( ஏசி திரிலோக்சந்தரின் அதே கண்களை திகில் கேடகரியில் சேர்க்காமல் இருந்தால் )
//

ராஜ்பரத் என்பவர் இயக்கிய உச்சக்கட்டம், சொல்லாதே யாரும் கேட்டால், சின்ன முள் பெரிய முள் ஆகிய படங்களை கணக்கில் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன். உச்சக்கட்டம் மற்றும் சொல்லாதே யாரும் கேட்டால் ஆகிய இரண்டும் அசத்தல் ரகம் என்றே கருதுகிறேன்.
பிரகாஷ்,
இந்த அநாகரிகப் பின்னூட்டங்களை முதலில் நீக்குங்கள்... மூளைத்தரித்திரம் பிடித்த ஜென்மங்கள்!!
சுவாரசியமான பதிவு பிரகாஷ்

-மதி
/அவருக்குப் பிறகு, திகில் படங்களை அதிகமாக யாரும் உருவாக்கவில்லை/
நீங்கள் சிவாஜியும் ஸ்ரீதேவியும் ஜோடியாக நடித்த படங்களைப் பார்க்கவில்லையா?

வீணை பாலச்சந்தரின் சகோதரர் எஸ். ராஜம் அவருடைய ஓவியங்கள் முன்னர் தீபாவளி மலர்களிலே வருமே!! (முன்னர், பத்தாம் பதினோராம் வகுப்புகளிலே படிக்கும்போது, ஓவியர்களின் கையெழுத்துகளைப் போட்டு விளையாடும் வழக்கம் என்னிடமிருந்தது. எஸ். ராஜத்தின் கையொப்பம் ஆங்கிலத்திலே எல்லா எழுத்துகளும் நேர்கோடுகளாலே ஆனதாக கவர்ச்சிகரமாக இருக்கும்... எண்ணியமணிக்கூடுகளிலே நேரம் பார்க்கும் காலம் வரும்முன்னாலே, இந்தக்கையொப்பங்கள் கிட்டத்தட்ட அதே மாதிரியான நேர்கோடுகள் போலத்தோற்றும்)
jeevagv said…
அந்த நாள் படம் வித்யாசமான படம்தான் பிரகாஷ். எத்தனையோ வருடங்களுக்கு முன் பார்த்தது, இன்னமும் தாங்கள் நினைவு படுத்த உடனே நினைவுக்கு வருகிறது, நன்றி.
"கல்யாணம்.அஹஹ்ஹா. கல்யாணம்..." அருமையான பாடல், சமீபத்தில் கூட ஏதோ அலைவரிசையில் பார்த்தேன். பொம்மை படத்தில் ஜேசுதாஸ் பாடிய பாடலை சொல்லாமல் போன குற்றத்திற்காக, உங்களை கழுவேற்றுகிறேன். மொலோடிராமா சாயலில், பின்னிரவில் அந்தப் பாடலை தனியாக கேட்டால், வாழ்க்கை வெகு இருளாக தெரியும்... "நீயும் பொம்மை, நானும் பொம்மை, நினைச்சு பாத்தா எல்லாம் பொம்மை". எஸ்.பா வின் படங்களில் கொஞ்சம் திணிக்கப்பட்டதுப் போல மேல்நாட்டு சாயலடிக்கும் பார்த்திருக்கிறீர்களா? வீட்டுக்குள்ளேயே, கோட்டு சூட்டோடு வலம் வருவார்கள் கதாபாத்திரங்கள். மற்றபடி, நீங்கள் எழுதியதை வரிக்குவரி ஆமோதிக்கிறேன்.
முந்தைய பதிவிலும், இதிலும் பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு விரிவாக நன்றி சொல்லத்தான் ஆசை.. திடுதிப்ப்புன்னு ஒரு சொந்தச் சிக்கல். ஆகவே அனைவருக்கும் சுருக்கமான நன்றி..
Vijayakumar said…
தலைப்பை பார்க்காமல் கே.பாலசந்தர் என நினைத்துவிட்டேன். ஆனால் இந்த எஸ்.பாலசந்தர் பற்றிய பதிவு அருமை.
Pavals said…
"பதமபூஷன் Dr.எஸ்.பாலசந்தர்" 'ன்னு சொல்லியிருக்கலாம்..
இந்த மாதிரி ஒரு suffix இல்லாம சொன்னா, பெரிய ஆளுங்கிற எபக்ட்டே இல்லீங்க ப்ரகாஷ்..
andha naal had no songs.perhaps the first tamil film with no songs.
i think it was based on a hollywood film.javar seetharaman
became very famous with minnal,mazahai, mohini which was republished or reserialised in kumudam and was made into a tele
serial also.
balachandar if i remember right scored the music for films directed by him.
நீங்கள் சிவாஜியும் ஸ்ரீதேவியும் ஜோடியாக நடித்த படங்களைப் பார்க்கவில்லையா?

how about films starring sivaji and sripriya :)
பின்னூட்டம் அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
Dear Prakash,

Good article. As you rightly mentioned S.Balachander's first movie is 'seetha kalyanam'. He played the role of Kanjira artiste is Ravana's court. At the tender age of 6, he was proficient in that instrument and used to accompany his brother's vocal concerts.

As I recollect from an old Randor Guy article, Balachander, while playing on the kanjeera would be lost in his own world and would wander all over in the set and in and out of the film frame making faces, right up to the camera. The director had to draw a circle with a chalk and ordered him not to move out of it. The kid would get goodies like ice cream when obeying to the director.

Did you know S.Balachander was chess prodigy too? He was initially a Sitar player and then moved over to Veena.One can actually write a series of articles on this multi-faceted genius. Hmmmm....

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I