கன்னட ராஜா பராக் பராக்...
தமிழிலே சில நல்ல படங்களைக் கொடுத்த வீனஸ் ஸ்டுடியோ ரத்தினம் அய்யருக்கு மகனாகப் பிறந்த ஜி.சுப்பிரமணியம் என்கிற மணிரத்னம், முதன் முதலாக எடுத்தது ஒரு கன்னடத் திரைப்படம். பாலுமகேந்திரா தான் ஒளிப்பதிவு. அந்தத் திரைப்படம் எடுத்த போது நேர்ந்த விஷயங்கள் ( " flow chart , cashflow statement எல்லாம் பக்காவா தயாரித்துத்தான் அந்த பிராஜக்ட்டிலே இறங்கினேன். ஆனால் அடுத்த வாரமே அதை கிழித்துப் போட்டு விட்டேன்" என்று சமீபத்தில், லாண்ட் மார்க்கில் நடந்த விழாவில் பேசிய போது வாக்குமூலம் கொடுத்தார்) தனிக் கட்டுரைக்கான விஷயம். இளையராஜாவின் இசையில் வந்த இந்தப் படம், ஒரு சிக்கலான கதை அமைப்பைக் கொண்டது. எஸ்டேட் மேலாளரான கணவனை வேறொரு பெண்ணுடன் 'பார்க்கும்' லக்ஷ்மி கோபம் கொண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டு மகனுடன் தனியாக வசிக்கிறாள். காதலியுடன் கொஞ்சலும் ஊடலுமாகப் பொழுதைக் கழிக்கும் இளைஞன் ( அனில்கபூர் ) லக்ஷ்மியின் வீட்டுக்குப் பக்கத்தில் குடிவருகிறான். அவனுக்கு, லக்ஷ்மி மீது ஒரு விதமான ஈர்ப்பு. இதை தவறாகப் புரிந்துகொள்கிறாள் அவனது காதலி ( கிரண்). இறுதியில், லக்ஷ்மி அவர்கள் வாழ்க்கையில் இருந்து வில...