கர்நாடக காவல்துறையின் வலைப்பதிவு

எதையோ நோண்டிக்கொண்டிருந்த பொழுது, ஹிந்து நாளிதழ் வழியாக இந்தச் செய்தி கிடைத்தது.

தென் கர்நாடக காவல்துறை கண்காணிப்பாளர் பி.தயானந்தா, IPS, இந்த வலைப்பதிவை துவக்கி எழுதி வருகிறார். அவருடைய சரகத்துக்குள் நடைபெறுகிற சட்டம் ஒழுங்கு தொடர்பான விஷயங்களைத் மக்களுக்கு, இந்த வலைப்பதிவில் அளித்து வருகிறார்.


இந்த வலைப்பதிவில், அவர் அவர் சொல்வதாவது...

This weblog has been created by the Dakshina Kannada Police with the purpose of disseminating police news of the district to those interested. Authentic and official information of DK Police will be posted here regularly. This is just an attempt to create an interface with the press and the public at large. Your views and suggestions are welcome. B.Dayananda IPS Superintendent of Police Dakshina Kannada District MANGALORE Karnataka..

காவல்துறை, இப்படி ஒரு வலைப்பதிவை துவங்குவது இது தான் முதன் முறை என்று நினைக்கிறேன்.

Comments

Kasi Arumugam said…
Hats off to Mr. Dayananda IPS. தகவல் சொன்ன உங்களுக்கும் நன்றி.
அன்பு said…
தகவலுக்கு நன்றி பிரகாஸ்.

இந்த விடயத்தை சென்றவாரம் நண்பர் ஒருவர் இங்கு எழுதியிருந்ததாக ஞாபகம், சுட்டி கிடைக்கவில்லை. அப்புறம் புது டெம்ப்ளேட் நல்லாருக்கு!
அரசின் துறையான கர்நாடக காவல்துறை blogspot இடத்தினை பயன்படுத்துவது நல்லாதாக தெரியவில்லை. தங்களுக்கான சொந்த இடத்தில் செய்தால் சிறப்பாக இருக்குமென்று கருதுகிறேன்.
Dubukku said…
தேசி பண்டிட்டில் உங்கள் பதிவிற்கு சுட்டியுடன் இந்த தகவலை பகிர்ந்துகொண்டு உள்ளேன்.ஆட்சேபனை இருக்காது என்று நம்புகிறேன். :)

http://www.desipundit.com/2005/12/13/dhakshina-kannada-police-joins-blogger-community/
காசி, அன்பு நன்றி
சங்கரய்யா : நான் கூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால், சொந்த இடத்தில் வைத்துக் கொள்வதற்கும், ப்ளாகர் போன்ற இலவச இடத்தில் வைத்துக் கொள்வதற்கும் இடையிலான நுட்பரீதியான வேறுபாடுகள் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இன்னும் சில நாட்களில் மாற்றிக் கொள்வார்கள் என்று நம்புவோம். ( இந்திய பொதுத்துறை அலுவலகங்கள் சில, விளம்பரம் தரும் போது, offcial மின்னஞ்சல் முகவரியை யாஹ¥விலும், ரிடி·ப் மெயிலிலும் தான் வைத்திருக்கிறார்கள் :-). அதை வைத்துப் பார்க்கும் போது, இது தேவலாம் :-)
டுபுக்ஸ் : இதிலே என்ன ஆட்சேபம்? தாராளமா..

ஆமா உங்க பதிவுலேயே வந்து கேக்கணும்னு நினைச்சேன். Hemel Hempstead லேந்து உங்க ஊரு எவ்ளோ தூரம்? :-)
Venkat said…
பிரகாஷ் - ஒங்க பதிவைப் படித்தபின் சும்னாச்சிக்கும் ஒரு ரவுசு இங்கே;

http://www.domesticatedonion.net/blog/?item=672

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I