ஆதவன் - காகிதமலர்கள் - சந்தோஷ்

ஆதவனின் காகிதமலர்கள் குறித்து 'ஐவேஜு' அதிகம் இருக்கிற எழுத்தாள/ விமர்சகர்களில் இருந்து ஜூனியர் மோஸ்ட் எழுத்தாள/விமர்சகர்கள் வரை என்ன எழுதியிருக்கிறார்கள் என்று வாசித்திருக்கிறேன். ஆனால், காகிதமலர்கள் குறித்து ஆதவனுக்கு ஏதேனும் சொல்ல இருந்திருக்க வேண்டுமே என்று நீண்ட நாளாக நினைத்திருந்தேன். காகிதமலர்கள் எழுத நேர்ந்ததன் பின்னணி குறித்தும், ஆதவன் சொன்னதை இப்போதுதான் படிக்க நேர்ந்தது, சந்தோஷ் வலைப்பதிவின் மூலம்...

ஆதவன் சொல்கிறார்..

".....என் படைப்புப் பற்றிக் கூறப்படும் ஒவ்வொரு அபிப்பிராயமும் என்னைப் பதட்டம் கொள்ளச் செய்கிறது, அவசரமாகக் 'கோடிட்ட இடங்களைப்' பூர்த்தி செய்யத் தூண்டுகிறது - எல்லாருமே எல்லாவற்றையும் கண்டு சொல்லியே ஆகவேண்டும் என்பதுபோல. ஆனால் இது அவசியமில்லாதது மட்டுமல்ல, 'காகித மலர்கள்' போன்ற ஒரு நாவலின் விஷயத்தில் இது சாத்தியமுமல்ல என்பதை நிதானமாக யோசித்துப் பார்க்கும்போது நான் உணருகிறேன். பல இழைகளைக் கொண்டு வேயப்பட்ட - கொஞ்சம் சிக்கலான அமைப்புக் கொண்ட - ஒரு நாவல் இது. எல்லா இழைகளுமே எல்லாருக்கும் பிடிபடுவதில்லை; பிடிபட்டாலும் இவை எல்லாமே ஒவ்வொருவருக்குள்ளேயும் ஆழ்ந்த சலனங்களை எழுப்புவதாக இல்லை... இன்றைய அமைப்பின் தன்மைகள், திசைகள் பற்றிய ஓர் அதிருப்தியை முக்கியச் சரடாகக் கொண்டிருக்கும் இந்நாவலில் ஆங்காங்கே இடதுநிலைச் சார்பு மிகவும் பளிச்சென்று, தவிர்க்க முடியாமல், தலைதூக்குகிறது. மார்க்ஸியச் சிந்தனையில் ஈடுபாடுள்ளவர்கள் இச்சார்பை இனம் கண்டுகொண்டது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. அதே சமயத்தில் அவர்களுடைய பாராட்டை என் தலையில் ஏதோ ஒரு பட்டயத்தை அவசரமாகக் கட்டி, ஏதோ ஒரு கொள்கைச் சிறையில் தள்ளும் முயற்சியாகவும் நினைத்து, நான் பீதியும் பதட்டமும் கொள்ளத் தொடங்குகிறேன் - என்னுடைய நாவலின் இடதுநிலைச் சார்பேயில்லை என்று சில சமயங்களில் ஆவேசமாக மறுக்குமளவுக்கு தம் சுயேச்சைத் தன்மை பங்கப்படாமலிருக்கவேண்டும் என்ற கவலையுள்ள எல்லாக் கலைஞர்களுக்குமே இத்தகைய பதட்டங்கள் இயல்புதான் என்று நினைக்கிறேன். பிறர் மீதும், அவர்கள் சார்பாகத் தன்மீதும், பெரிதுபடுத்தப்பட்ட பிம்பங்களை ஏற்றி, இந்தப் பிம்பங்களே சிறைகளாக மாறுகிற அவஸ்தைக்கு, என் பாத்திரங்கள் போலவே நானும் விதி விலக்கல்ல என்று இதன் மூலம் உணர்ந்து நான் சிரித்துக் கொள்கிறேன். ஓர் எழுத்தாளன் என்ற முறையில் எனக்கு நானே இருப்பதாக நினைக்கிற - அல்லது பாவிக்கிற - பலவகைப் பரிமாணங்களை மார்க்ஸிஸ்டுகளுக்கு மட்டும் நான் ஏன் மறுக்கவேண்டும்?

அல்லது இதே கேள்வியை வேறுவிதமாகக் கேட்கப் போனால், இலக்கிய ரீதியாகச் சில நுட்பமான (ஆனால் செறிவான) பற்றுக்கோடுகள், ஆழ்ந்த தேட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள நான், இத்தகைய பற்றுக் கோடுகளும் தேட்டங்களும் இலக்கியப் படைப்பாளியல்லாதோரிடமும் வித்தியாசமான தோற்றங்களில் இடம் பெற்றிருப்பதையும்.......மேலே படிக்க...


thanks santhosh

Comments

Hi,

Did you receive my email?
Please give your contact
telephone number to
ganesa.murthy@lntinfotech.com

Very very sorry for my interruption here.

Ganesa Murthy ['Subhamooka']
sent a mail now.. pls check

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I