more updates

சில வலைப்பதிவு நண்பர்களுடன் இன்று நடப்பதாக இருந்த சந்திப்பு, மழை வெள்ளம் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

மதுரவாயல் ஏரியில் வந்த உபரிநீரை, கூவம் ஆற்றுக்குள் திருப்பிவிடாமல், விருகம்பாக்கம் கால்வாய்க்குத் திருப்பி விட்டதால் தான் எங்கள் பகுதி இத்தனை மோசம் என்று அக்கம் பக்கம் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், அந்த நேரத்தில், அதைச் செய்ததுதான் சரி.. என்று தோன்றுகிறது. கூவம் ஆற்றை ஒட்டிய குப்பங்கள் சென்னையில் ஏராளம். அவர்கள் மொத்தமாக wash out ஆகியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சின்மையாநகர், சாய்நகர், அய்யப்பா நகர் போன்ற பகுதிகள் தற்போது தீவு போல காட்சி அளிக்கிறது. தீவுக்குள்ளே கடைகள் இருப்பதால், பால் போன்ற அத்தியாவசிய விஷயங்கள் தடைபடவில்லை. ஆனால் வெளியே போக வழியில்லை. மொத்த நீரும் வடிய இரண்டு நாட்களாவது ஆகும் என்று சொல்கிறார்கள். நேற்றும் இன்றும் தி ஹிந்து கிடைக்கவில்லை.

எங்கள் ஏரியா பக்கத்தில் ( சக்தி நகர்) ஒரு மூன்று வயது குழந்தை நீரில் மூழ்கி இறந்து விட்டது. வடபழநி நூறடி சாலையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது என்று பார்த்துவிட்டு வந்த சிலர் சொன்னார்கள்.

அதிர்ஷ்டவசமாக நேற்று இரவு மழை இல்லை. ஆனால் வாநிலை அறிக்கையின் படி, இன்னும் இருபத்து நான்கு மணிநேரங்களுக்கு மழை இருக்கிறது. பெய்தால் நிலைமை இன்னும் மோசமாகும்.

Comments

Kannan said…
பிரகாஷ்,

கவலையாக இருக்கிறது.

வெள்ளத்தில் உடைமைகளையும் நிம்மதியையும் பறிகொடுத்தவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.

இப்போதைக்கு இன்னும் மழை வராமல் இருக்கவேண்டும், நீங்களும் மற்ற சென்னை நண்பர்களும் பாதுகாப்பாய் இருக்கவேண்டும் என்கிற வேண்டுதல்கள் தான்...

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I