புதுப்பேட்டை - Disappointing
ஒரு வழியாக வந்தே விட்ட புதுப்பேட்டையை, பார்த்தே விட்டேன்.
மகாநதிக்கு, கல்கி இதழில் விமர்சனம் வந்த போது, கமல்ஹாசன், கல்கிக்கு விமர்சனத்துக்கு நன்றி சொல்லி ஒரு கடிதம் எழுதினார். " I normally donot show emotional reactions towards film reviews, but i take an exception in this case. Mahanathi was made by honest intentions and not by clever thoughts" என்று துவங்கும் அந்தக் கடிதத்தை, கல்கி பிரசுரித்திருந்தது.
நல்ல படங்களை எல்லாம், மேலே சொன்ன விதமாகப் பிரிக்கலாம் என்றால், சொல்வராகவனின் காதல் கொண்டேன், புத்திசாலித்தனமாகவும், 7 G ரெயின்போ காலனி , நேர்மையாகவும் எடுக்கப்பட்ட படங்கள்.
அப்ப, புதுப்பேட்டை?
ஒரு ரெண்டும் கெட்டான்.
கதை?
சந்தர்ப்ப சூழ்நிலைகளால், வட சென்னை இளைஞன் ஒருவன், தாதாவாக ஆகும் கதை. ·ப்ளாஷ்பாக் உத்தியிலே துவங்கும் இக்கதை, சென்னையின் சேரிப்பகுதியில் வசிக்கும் இளைஞன் கொக்கி குமாரின் ( தனுஷ்) பள்ளி வாழ்க்கை, சொந்த அப்பாவிடம் இருந்து உயிருக்குப் பயந்து ஓடி, பிச்சை எடுத்து, கஞ்சா கடத்தும் அரசியல் ரௌடியிடம் எதேச்சையாக சிக்கி, படிப்படியாகத் தொழிலைக் கற்றுக் கொண்டு, கொலை செய்து, அரசியலுக்குள் புகுவது வரையிலுமான வாழ்க்கையை படம் பிடிக்கிறது. அப்பாவியான ஒருவன் இப்படி தாதா ஆக ஆகும் கதைகள் ஏராளம் வந்திருக்கின்றன என்றாலும், இந்தப் படம் முக்கியத்துவம் பெறுவது, அதை எடுத்த விதத்தினால் தான்.
மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் குமார், அப்பா செய்யும் கொலையைப் பார்ப்பதில் இருந்து, எப்படி, நிழல் உலகத்துக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுகிறார் என்பதை சொல்லும் ஆரம்ப கட்ட காட்சிகள், மிகவும் உக்கிரமானவை. நிஜத்துக்கு மிக அருகில் இருப்பது போன்ற தோற்றத்தைத் தருபவை. சேரி அரங்க அமைப்பும், பாலியல் தொழிலாளியாக வரும் கிருஷ்ணவேணீயும் ( சினேகா), வசனங்களும், தனுஷின் நடிப்பும், பாத்திரங்களின் பேச்சு வழக்கும், இந்த நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றன. காட்சிகளின் யதார்த்தம், பல சமயம் நம்மை உறைய வைக்கின்றன. காட்சிகள் கட் செய்யப்படும் விதமும், ஒளிப்பதிவு நேர்த்தியும், தனுஷ், ஒரு தேர்ந்த அடியாளாக படிப்படியாக மாறுகின்றதைக் காண்பிக்கும் திரைக்கதை உத்தியும் அற்புதமாக இருக்கின்றன. இப்படி போய்க்கொண்டிருந்த கதை, இடைவேளைக்குப் பிறகு, 'தொபுக்கடீர்' என்று கவிழ்கிறது. சோனியா அகர்வாலுடன் அதிரடித் திருமணம், சினேகாவுடன் இன்னொரு திருமணம், குழந்தை, அரசியல் என்று அங்கே இங்கே சுற்றி அலைகிறது திரைக்கதை.
அரசியல் தலைவராக வரும் அழகம்பெருமாளின் , ( டும்டும்டும் படத்தை இயக்கினாரே, அவரேதான் ) நடிப்பும் பாத்திரப்படைப்பும் சொல்லும் படியாக இருக்கிறது. அதே போல சினேகாவின் நடிப்பும். காட்சி அமைப்பும், அந்தப் பின்புலத்தின் நுட்பமான விஷயங்களும் அசர அடிக்கின்றன.
செல்வராகவனிடம் சரக்கு இருக்கிறது என்று ஏற்கனவே ஒத்துக் கொண்டாயிற்று என்ற நிலையில், இது போல, half baked attempt இலே, கவனம் செலுத்தாமல், திரைக்கதையிலே இன்னும் கவனம் செலுத்த வேண்டும். ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். எல்லாரும் நீளமான முடியுடன் பரட்டைத் தலையுடன் வருவதால், யார் எவர் என்றே புரிவதில்லை. தனுஷின் characterization உம் அத்தனை எளிதில் விளங்கிக் கொள்ள முடியாது. சினேகா, சோனியா அகர்வால் தவிர பெண்பாத்திரங்களே கிடையாது. ஒரு காட்சியில் நீளமான முடியும், அதே காட்சியின் அடுத்த ஷாட்டில் குறைவான முடியுடனும் தனுஷ் தோன்றி, continuity என்ற விஷயத்தைப் பார்த்தார்களா என்றே சந்தேகப்பட வைக்கிறார்கள். ஆரம்பக் காட்சிகளிலெ தனுஷின் நடிப்பு நன்றாக இருக்கிறது என்றாலும், போகப்போக, முந்தைய படங்களில் செய்தது போலவே செய்து போரடிக்கிறார். அதே antics, dialogue delivery, mannerisms, புதுசாக ஏதும் இல்லை.
அரவிந்த் கிருஷ்ணாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் மட்டும் இல்லை என்றால் இந்தப் படம் என்ன ஆகியிருக்கும் என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது.

Comments
இங்கே படம் பார்க்க வழியில்லாமல் யார் விமர்சனம் போடுவார்கள் என காத்திருந்தேன்! தமிழ் வலைப்பதிவுகளிலேயே முதன்முதலாக நீங்கள்! :)
ம்ம்ம்... படம் சொல்லிக்கறமாதிரி இல்லைங்கறது கேட்க கஷ்டமா இருக்கு! அந்த கமல் பாட்டு, "படிச்ச நாய்" பாட்டு இதைப்பற்றியும் நீங்க ரெண்டு வரி சொல்லியிருக்கலாம்...
படம் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள வெகு ஆவலோடு இங்கு வந்தேன்.( உங்களின் ஆய்த எழுத்து விமர்சனம் ஒரு காரணம்). ஆனால் உங்கள் விமர்சனம் ஏமாற்றி விட்டது.
நீங்கள் இவ்வளவு சொன்ன பிறகும் இப்படத்தை ஒசூர் வரைக்கும் போய்.. ஹிஹி...
ஈஸ்வர், தகவலுக்கு நன்றி!
நேற்று இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு எப்படி வகைப்படுத்துவது என்று குழம்பிக்கொண்டிருந்தேன் உங்கள் விமர்சனம் அதனை தெளிவாகச் சொல்லியிருக்கிறது.செல்வராகவனினிடம் கொஞ்சம் சரக்கிருப்பது உண்மை ஆனால் பயன்படுத்தத் தெரியவில்லை.
கொஞ்சம் போல ராம்கோபால் வர்மாவின் 'D' சாயல் அடிக்கிறதே கவனிக்கவில்லையா?
http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=4547