விளம்பரம் - cocomment
நீங்க வலைப்பதிபவரா? வலைப்பதிந்து விட்டு நொடிக்கொருதரம் தமிழ்மணம் முகப்புப் பக்கத்தை f5 செய்பவரா? எல்லா இடங்களுக்கும் சென்று பின்னூட்டங்கள் அளிப்பவரா? நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு மறுமொழி வந்திருக்கிறதா என்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவரா? நீங்கள் எங்கே பின்னூட்டம் அளிக்கிறீர்கள் என்று மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவரா?
இதிலே ஏதாச்சும் ஒரு கேள்விக்கு ஆம் என்றாலும், நீங்கள் இந்தச் சேவையை உபயோகித்துப் பார்க்கலாம்.
கில்லி - க்காக வலையை மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் பட்டது. உபயோகித்துப் பார்த்தேன். அழகாக வேலை செய்கிறது. மிக எளிதான வழிமுறைகள்.
Disclaimer : சேவையிலே ஏதாவது குற்றங்குறை இருந்தால், நான் பொறுப்பில்லை. என் வரையில் ஒழுங்காக வேலை செய்கிறது
இதிலே ஏதாச்சும் ஒரு கேள்விக்கு ஆம் என்றாலும், நீங்கள் இந்தச் சேவையை உபயோகித்துப் பார்க்கலாம்.
கில்லி - க்காக வலையை மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் பட்டது. உபயோகித்துப் பார்த்தேன். அழகாக வேலை செய்கிறது. மிக எளிதான வழிமுறைகள்.
Disclaimer : சேவையிலே ஏதாவது குற்றங்குறை இருந்தால், நான் பொறுப்பில்லை. என் வரையில் ஒழுங்காக வேலை செய்கிறது
Comments
அது சரி! இதுக்கு ஒரு கோடு நெம்பர் தேவைப்படுகிறதே! அதை நீங்க அனுப்புவீங்களா? இல்ல - நானே மெயில் அனுப்பிட்டேன்.
............ ...... ........
............ ...... ........
தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவரா?//
ஆமாஞ்சாமி.... ஆமா...
அப்டீன்னா
ஒடனே போய் டாக்டரப் பாருங்க, முத்திடுச்சுன்னு சொல்லப்போறீங்களோன்னு நெனச்சு பயந்துட்டேன்!!
எல்லாம் இந்த 'யோசிப்பவர்-குறு குறு செய்தி' ப்ளாக் படிச்சதனால வந்த வெனதான்!!
:-))
ஆனால் அந்த சேவையைப் பெறுவதற்கு உங்களிடம் Invitation Code இருக்கவேண்டும். உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்துவிட்டு காத்திருங்கள்.
இந்தியாவாக இருந்தால் யாரிடமாவது சிபாரிசு பிடித்து சீக்கிரம் வாங்கலாம்.
:)
எஸ்.கே
சித்தார்த் : முகப்புப் பக்க வலது மூலையிலே உங்க மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டிங்கன்னா, உங்களுக்கு அழைப்பு வரும். நானே, உங்க மின்னஞ்சல் முகவரியை சேர்த்து விட்டுட்டேன். சீக்கிரமாகவே அழைப்பு வரும்.
தகவலுக்கு நன்றி,
அழைப்பு எண் வந்துவிட்டது. அதை என்னால் வலைப்பூவில் நிறுவ முடியவில்லையே! என்ன செய்ய வேண்டும்?
ஆல்தோட்டபூபதி : it doesnt matter if it is a moderated/unmoderated comment box. just before posting a comment, click that bookmarklet and the comment will be stored in a page. I tried. It works.
தங்களின் வழிகாட்டுதலின்படி செய்ததில் பட்டை தெரிகிறது. ஆனால் அதில் comments வருவதில்லை. வழிகாட்டுங்கள்.
அன்புட்ன
கீதா