Posts

உசிலி உப்புமா

தேவையான பொருட்கள் பச்சரிசி நொய் - ஒரு ஆழாக்கு பயற்றம் பருப்பு - அரை ஆழாக்கு தண்ணீர் - மூன்று ஆழாக்கு காய்ந்த மிளகாய் - ஆறு பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு உப்பு - தேவையான அளவு கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி உடைத்த உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி கடுகு - அரை தேக்கரண்டி கடலை எண்ணெய் - நூறு கிராம் செய்முறை * அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மிளகாய், கடலை எண்ணை ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைக்கவும். * கடுகு வெடித்து வந்த உடன், குக்கரில், தண்ணீரை ஊற்றி, பச்சரிசி நொய், பயற்றம் பருப்பு, தாளிதம் ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைக்கவும். மிதமான தீயில் வைக்கவும். * நான்கு விசில் வரும் வரை பொறுத்திருக்கவும். நான்காவது விசில் வந்த உடன் அடுப்பில் இறந்து குக்கர் பாத்திரத்தை இறக்கி, ஆவி வெளியேறும் வரை பொறுத்திருந்து குக்கரின் மூடியைத் திறக்கவும் ( இல்லை என்றால், உசிலி உப்புமா உத்திரத்தில் தான் இருக்கும் ). நன்றாகக் கிளறி, ஒரு பாத்திரத்தில் வைத்து சூடாகப் பறிமாறவும் அல்லது நீங்களே சாப்பிடவும். * இதற்கு என்று சைட்-டிஷ் என்று எதுவும் தேவையில்லை. ஆர்லிக்ஸ் பையன் ப...

ஷங்கர் என்கிற சமூக விஞ்ஞானி.

that that man, that that work என்று சொல்லுவார்கள். அவரவர்களும் அவரவர் வேலையை ஒழுங்காகச் செய்தாலே, பெரும்பான்மையான சிக்கல்கள் தீரும். திரைப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஒருத்தர், சமூக விஞ்ஞானி வேஷத்தை போட்டுக் கொண்டால் என்ன ஆகும்? அன்னியன் மாதிரியான ஒரு திரைப்படம் தான் நமக்குக் கிடைக்கும். ஷங்கர் , அடிப்படையில், எஸ்.ஏ.சந்திரசேகர் என்கிற, சட்டத்தைக் கரைத்துக் குடித்த மாதிரி பாவ்லா காட்டுகிற ஒரு mediocre இயக்குனரின் சிஷ்யபுள்ளை. அந்த காலத்தில் எஸ்.ஏ.சி , 'நான் சிகப்பு மனிதன்', 'சட்டம் ஒரு இருட்டறை', 'சாட்சி' என்று வரீசையாக, சட்டத்தை கொத்துக் கறி புரோட்டா போட்ட படங்களைத்தான், அவருடைய சீடர் கொஞ்சம் sophisticated ஆக எடுக்கிறார் என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் சிரமமான காரியமில்லை. ஒரு படைப்பாளி தன்னுடைய கதைக் கருவாக இன்னதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்ல நமக்கு உரிமையில்லை. ஆனால், படம் பார்க்கிற சமூகத்தை ஒரு நோயாளிக் கூட்டமாக உருவகம் செய்து கொண்டு, அதற்கான மருந்தைத் வலுக்கட்டாயமாகப் புகட்டினால், அதைக் கேள்வி கேட்க நமக்கு உரிமை இருக்கிறது, அதிலும் diagnosis ...

காணாமல் போன பதிவும், அதன் பின்னூட்டங்களும்

சென்றவாரம் என் வலைக்குறிப்பில் எழுதிய " என் முதல் ஹைக்கூ கவிதை" என்ற பதிவும், அதன் பின்னூட்டங்களும் திடீரென்று மாயமாய் மறைந்து விட்டது. ஆகையால் கணிணியில் சேமித்து வைத்திருந்த அந்தப் பதிவையும், அதன் பின்னூட்டங்களையும் ஒரே பதிவாக இங்கே இடுகிறேன். அசௌகர்யத்துக்கு நண்பர்கள் மன்னிக்கவும். அன்புடன் பிரகாஷ் Wednesday, June 22, 2005 என் முதல் ஹைக்கூ கவிதை... கசட தபற யரல வழள ஞஙண நமன இது எப்படி இருக்கு? posted by icarus @ 6/22/2005 03:40:00 PM 41 Comments: At 4:45 PM, Thangamani said... நல்ல பதிவு பிரகாஷ் :-) .நன்றி At 4:47 PM, ?????????(Mathy) said... Hi, prakash, could you please drop me a line at mathygrps@yahoo.com? urgent.... At 4:50 PM, -/???????. said... நல்ல பகிடி:-). தலைப்பும் நன்று. At 5:17 PM ??? (Pari) said... :-) :-) :-) At 6:07 PM, Mookku Sundar said... பிரகாசரே, நாயமா இது? இதையெல்லாம் ஒரு பதிவுன்னு போட்டு டென்ஷன் படுத்தற உம்மை என்ன செஞ்சால் தகும்? At 6.18 PM, Arun Vaidyanathan said... excellent post. Kudos prakash At 7:45 PM, அல்வாசிட்டி சம்மி said... பிரகாஷ், கலக்கல் பத...

Reliance - உடைந்த சாம்ராஜ்ஜியம்

அம்பானி பற்றி ஒரே வலைப்பதிவில் சொல்லி விட முடியாது. ( சொக்கன் எழுதிய ) புதிதாக, திருத்தப் பட்ட , இரண்டாம் பதிப்பும் வந்து விட்டதாம். வாங்கிப் படித்துக் கொள்ளலாம். அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், இந்திய வர்த்தக உலகின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாளம். அவர்கள் செயல்முறைகளில், அணுகுமுறைகளில், கொள்கைகளில், பலவிதமான கருத்துக்கள் இருந்தாலும், துணிச்சலும், தைரியமும், விடாமுயற்சியும், கடும் உழைப்பும் கொண்டவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ரிஸ்க் எடுப்பதிலும், புதுப்புது திட்டங்களை அமுல்படுத்துவதிலும், அவர்கள் பலருக்கு முன்னோடி. அப்படிப்பட்ட பல பில்லியன் ரூபாய்கள் மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில், சில மாதங்களாக நடந்து வந்த குழப்பம், பிரசித்தமானது. கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருந்த இந்த பங்காளி சண்டை, நேற்று ஓரளவுக்குச் சுபமாக முடிந்தது. இரு வருடங்களுக்கு முன்பு, ரிலையன்ஸ் அதிபர் அம்பானி நோய்வாய்ப்பட்டு இறந்த சில மாதங்களுக்கு உள்ளாகவே, அம்பானியின் மகன்கள் இருவருக்குள்ளும் வேறுபாடு எழுந்தது. நாளாவட்டத்தில் விரிசல் பெரிதாகி, சில மாதங்களுக்கு முன்பு, பொது ஊடகங்களில் வெடித்...

ஒரு கதை, ஒரு நாடகம், ஒரு பாட்டு

அம்மணியின் குட்டிக் கதைகள் படிக்கிற வழக்கம் உண்டோ? நாளொன்றுக்கு, நல்ல ஆங்கிலத்தில், நச்சென்று நாலுவரியில் அவர் போடுகிற quick tales என்ற குட்டிக் கதை வரிசைக்கு, நிறைய ரசிகர்கள் உண்டு. ( சில வாரங்களுக்கு முன்னால், இந்தக் குட்டிக் கதை தமிழில் பெயர்க்கப்பட்டு, சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பத்தியில் இடம் பெற்றது). அவருடைய முக்கால் வாசிக் கதைகள், பெண்களிள் உலகத்துக்குள் எட்டிப் பார்க்கிறவர்களைக் கேள்வி கேட்பதாகவும், கேலி செய்வதாகவும், சில சமயம் பச்சாதாபம் தொனிக்கிறதாகவும் இருந்தாலும், கடைசி வரிப் பஞ்ச்-கள் சட்டென்று மனசுக்குள் ஒட்டிக் கொள்கின்றன. ஓரிரு வார்த்தைகளில் வெளிப்படும் நகைச்சுவையும், குறிப்பாக கதைகள் முழுக்க அடிக்கும் மெட்ராஸ் வாடையும்... ம்ம்ம்ம்ம். புஸ்தகமா வந்தால் நன்றாக இருக்கும். அந்த தொடரில் எனக்கு ரொம்ப பிடிச்ச கதை இதுதான் திடுதிப்பென்று ஆனந்த் ராகவ் கிட்டேயிருந்து ஒரு மெயில் வந்தது. இசை குடும்பம் ஒன்றைப் பின்புலமாக வைத்து ஆனந்த் ராகவ் எழுதிய நாடகத்தை தீபா ராமானுஜம் வெளிநாடுகளில் அரங்கேற்றி, இப்போது சென்னையிலும் அரங்கேற்ற இருக்கிறார். இந்த நாடகம், வருகிற ஜூலை மாசம் முதல் வ...

Book Meme

இணையத்தில் ஒரு ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. செந்தில் என்னையும் இதிலே இழுத்து விட்டுட்டார். ஆகவே என்னோட லிஸ்ட் என்னிடம் இருக்கும் புத்ககங்களின் எண்ணிக்கை சுமார் 150-200 கடைசியாக வாங்கிய புத்தகம் அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுதி ( இரண்டு பாகங்கள் ) கடைசியாக வாசித்த புத்தகம் . Red Tape Guerilla by N.Vittal எனக்கு மிகவும் பிடித்த ஐந்து புத்தகங்கள் ஆங்கிலம் Pappilon - Henri Charriere Fourth Protocol - Frederick Forsyth Kane & Abel - Jeffry Archer Mr.Sampath - R.K.Narayan Indira Gandhi, An Intimate Biography- Pupul Jayakar தமிழ் காகித மலர்கள் - ஆதவன் வாஷிங்டனில் திருமணம் - சாவி நைலான் கயிறு - சுஜாதா ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தர.ராமசாமி தேர் - இரா.முருகன் இந்த ஆட்டத்தை இவர்களும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் ஐந்து பேர் மதி ராஜ்குமார் நிர்மலா கே.வி.ராஜா மூக்கு சுந்தர்

புகை பிடித்தல் - சில குறிப்புக்கள்

" to quit smoking all you need is a cigarette and a few wet matches " என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் முன்மொழிந்திருப்பது, பல் வேறு மட்டங்களில், விதம் விதமான விமர்சனங்களைக் கிளப்பி இருக்கிறது. புகைபிடிக்கிற பழக்கம், சமூகத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என்பதில் நிச்சயமாக ஐயமில்லை. புகை பிடிக்கிற பழக்கம் இருக்கிறவர்களில், பெரும்பான்மையானோர், அப்பழக்கத்தை விட்டு ஒழித்து விடவேண்டும் என்று நினைத்து, முடியாமல் சிரமப்படுகிறவ்ர்கள் தான் என்பது என் கணிப்பு. இந்தப் புகைபிடிக்கிற பழக்கத்தை ஒட்டு மொத்தமாக சமூகத்தில் இருந்து களைந்து விட, இருக்கிற எளிமையான ஒரே வழி, ஒட்டுமொத்தமாக சிகரட்டு உற்பத்தி, விநியோகத்தைத் தடை செய்வது என்று நினைக்கலாம். ஆனால், அது அத்தனை எளிய காரியமில்லை. புகையிலை விவசாயிகள், புகையிலை வர்த்தகர்கள், சிகரட்டு ஆலையில் வேலை செய்பவர்கள், அந்தத் தொழிலில் புழங்கும் பணம், நம் உள்நாட்டு உற்பத்தியில் சிகரட்டுத் தொழிலின் பங்களிப்பு, அந்தத் தொழிலில் முதலீடு செய்திருக்கும் உள்நா...

கன்னட ராஜா பராக் பராக்...

தமிழிலே சில நல்ல படங்களைக் கொடுத்த வீனஸ் ஸ்டுடியோ ரத்தினம் அய்யருக்கு மகனாகப் பிறந்த ஜி.சுப்பிரமணியம் என்கிற மணிரத்னம், முதன் முதலாக எடுத்தது ஒரு கன்னடத் திரைப்படம். பாலுமகேந்திரா தான் ஒளிப்பதிவு. அந்தத் திரைப்படம் எடுத்த போது நேர்ந்த விஷயங்கள் ( " flow chart , cashflow statement எல்லாம் பக்காவா தயாரித்துத்தான் அந்த பிராஜக்ட்டிலே இறங்கினேன். ஆனால் அடுத்த வாரமே அதை கிழித்துப் போட்டு விட்டேன்" என்று சமீபத்தில், லாண்ட் மார்க்கில் நடந்த விழாவில் பேசிய போது வாக்குமூலம் கொடுத்தார்) தனிக் கட்டுரைக்கான விஷயம். இளையராஜாவின் இசையில் வந்த இந்தப் படம், ஒரு சிக்கலான கதை அமைப்பைக் கொண்டது. எஸ்டேட் மேலாளரான கணவனை வேறொரு பெண்ணுடன் 'பார்க்கும்' லக்ஷ்மி கோபம் கொண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டு மகனுடன் தனியாக வசிக்கிறாள். காதலியுடன் கொஞ்சலும் ஊடலுமாகப் பொழுதைக் கழிக்கும் இளைஞன் ( அனில்கபூர் ) லக்ஷ்மியின் வீட்டுக்குப் பக்கத்தில் குடிவருகிறான். அவனுக்கு, லக்ஷ்மி மீது ஒரு விதமான ஈர்ப்பு. இதை தவறாகப் புரிந்துகொள்கிறாள் அவனது காதலி ( கிரண்). இறுதியில், லக்ஷ்மி அவர்கள் வாழ்க்கையில் இருந்து வில...

ஆண்கள் பெண்கள்

இந்த வாரம் குமுதத்தில் ஜெயமோகனின் பத்தி வாசிக்கச் சுவையாக இருந்தது. சில சிந்தனைகளைக் கிளப்பி விட்டது. வாசக நண்பர் ஒருவர், தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட திரைக்கதை ஒன்றைப் பற்றி எழுதியிருந்தார். அயல்நாட்ட்டில் வசிக்கும் இளம் தம்பதியருக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு முற்றுகிறது. விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்கின்றனர். அப்போது, நீதிமன்றம், விவாகரத்து கிடைக்கும் வரை, அதாவது மூன்று மாதங்கள் வரை அவர்கள் சேர்ந்து வாழவேண்டும் என்று உத்தரவிடுகின்றது. கணவனுக்கு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. புதுமையாக எதையாவது செய்யலாம் என்று நினைத்து , ஒரு பெண்ணின் புனைப்பெயரைக் கொண்டு, இணைய அரட்டை செய்கிறான். அங்கே ஆண் அடையாளத்தில் இருக்கும் ஒருத்தருடன், பெண் என்ற பாவனையில், சகஜமாக உரையாடுகின்றான். அவன் ஒரு கணிப்பொறி வல்லுனன். அந்தப் பொய்ப் பெயரில் வருவது அவன் மனைவிதான் என்று தெரிந்து விடுகிறது. இருந்தாலும், அந்த கண்ணாமூச்சி விளையாட்டை தொடர்ந்து ஆடுகின்றான். தன்னை ஒரு பெண்ணாக பாவிக்கும் போது, மனைவியைப் பற்றியும், அவளுக்கு ஏற்படும் சிக்கல்கள் பற்றியும், அதை தான் கண்டு கொள்ளாமல், தன்னைப் பற்றிய...

யாராச்சும் கொஞ்சம்....

நான் என் சொந்த உபயோகத்துக்கு என்று, wordpress அடிப்படையிலான ஆங்கில வலைப்பதிவு ஒன்றை, weblogs.us என்ற தளத்திலே நடத்தி வருகின்றேன். இந்த வலைப்பதிவு, என்னுடைய தமிழ்மணம் profile க்கு தொடர்பில்லாதது. weblogs.us தளத்தில் வலைப்பதிவு எழுதுவது வசதியாக இருக்கின்றது. ஆனால், சில காரணங்களுக்காக, இந்த வலைப்பதிவை, என்னுடைய இணையத்தளத்துக்கு நகர்த்தி விட எண்ணினேன். php என்ற நுட்பத்தை படித்து அறிந்து கொள்ளுவது அத்தனை எளிதாக இல்லை. எதைச் செய்தாலும், கடைசியில் ஏதோ வருகின்றது. கூகுள் தேடுபொறியில் கிடைக்கும் தகவல்கள் ஜெயமோகன் நாவல் போல, படிக்க படிக்க, சுரந்து கொண்டே இருக்கிறதே அன்றி, இறுதியில் எதுவும் விளங்கவில்லை. சொந்த இணையத்தளத்தில், wordpress ஐ நிறுவுவது எப்படி என்பதற்கான அடிப்படை வழிமுறைகளை யாராவது எனக்கு அனுப்பித் தர இயலுமா? அல்லது இணையத்தில் எங்காவது ஏற்கனவே இருந்தால், அதன் சுட்டியைத் தர இயலுமா. பொதுவாக வலைப்பதிவு குறித்து உதவி என்றால், மதியிடம் செல்வேன். ஏதோ, தமிழ்ச்சேவை செய்கிறார் போலிருக்கு என்று நினைத்து அவரும், உதவி செய்வார். ஆனால், சொந்த உபயோகத்துக்கு என்பதால், கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதனால...

I want my money back....

"மிஸ்டர் டைரக்டர், தொடர்ந்து, கத்தி அருவா பிச்சுவா படமா வந்துகிட்டிருக்கு.. ·பேன்ஸ் ரொம்ப ·பீல் பண்றாங்க... குஷி மாதிரி கதை இருந்தா சொல்லுங்க. " என்று விஜய் சொல்லி இருக்க வேண்டும். " அதுக்கென்ன விஜய் சார்? குஷி படம் மாதிரி எதுக்கு? குஷி படத்தையே திரும்ப எடுத்துடுவோம். ரசிகனுங்களுக்குப் கண்டுபிடிக்கத் தெரியாது...என்ன தாணு சார், நீங்க என்ன சொல்றீங்க..? என்று டைரக்டர் ஜான் ஒத்து ஊதி இருக்க வேண்டும் " என்னமோ எடுங்கப்பா.... பூஜை போடற அன்னிக்கே மொத்த ஏரியாவும் வித்துப் போயிடும். எல்லாம் திருப்பாச்சி பண்ற வேலை...படத்தை சீக்கிரமா எடுத்து சுருட்டிக் குடுங்க...அடுத்த படத்துக்கு பூஜை போடணும் " என்று தயாரிப்பாளர் தாணு கரன்சிக் கனவுகளில் மிதந்திருக்க வேண்டும். விளைவு... வடபழனி கமலாவிலே மூணு மணிநேரத்துக்கு தொடர் தலைவலி... இந்தப் கழுத்தறுப்புக்குப் பேர் சச்சின். கதை? என்னாத்த பெரிசா கதை? இவர் அவரை லவ் பண்றார். அவரும் பதிலுக்கு லவ் பண்றார். ஆனால், அதை ஒத்துக்க மாட்டேங்கறார். காரணம். ஈகோ. அவர், உன்னை லவ் பண்ண வைக்கிறேன் என்று சபதம் போடுகிறார். இறுதியில், இவர் தனக்கு நிசமாவே லவ...

கடந்த முப்பது நாட்களில்.....

ஆண்டு விழா கொண்டாடும் நவனுக்கு வாழ்த்துக்கள். இன்றைக்கு எழுதியிருந்த தன் பதிவிலே அவர் , "......இந்த வார நட்சத்திரம் செயல்படும் விதம் பற்றி - நட்சத்திரங்களின் மீது ஏற்கெனவே ஒளி வட்டம் விழுந்திருப்பதால் அவர்கள் அந்த வட்டத்திற்குள் இருக்கும் நாட்களில் நாளுக்கு ஒரு வலைப்பதிவினையாவது பற்றி எழுதுதல் நலம். உதாரணமாக ‘மூக்கு’ சுந்தர் செய்தது போல் தங்கள் மீது விழுந்திருக்கும் ஒளியினை கொஞ்சம் அன்றைய தினம்/வாரம் தாங்கள் வாசித்த சுவாரசியமான/நல்ல வலைப்பதிவுகளின் பக்கமும் திருப்பி விட்டார்களானால் புதிய வலைப்பதிவர்களுக்கு தேவையான உத்வேகம் கிடைக்கும்......" என்று எழுதியிருந்தார். உண்மைதான். வலைப்பூ சஞ்சிகை இருந்த போது, வலைப்பூ ஆசிரியர்கள், மற்றவர்களுடைய புதிய வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வார்கள். நட்சத்திரம் நடைமுறைக்கு வந்ததும், அந்தப் பழக்கம் கைவிட்டுப் போய்விட்டது. எது பிடிக்கின்றதோ, அதனை வெளிப்படையாகச் சொல்லுவதிலே எனக்குச் சிக்கல் இருந்ததில்லை. கடந்த முப்பது நாட்களில் எனக்குப் பிடித்த பதிவுகளின் பட்டியல் கீழே. பதிவுகளைத் தேதிவாரியாக அடுக்கி வைத்திருக்கும் தமிழ்மணம் திரட்டிக்கு நன்றி. இந்தப...

உதிரிப்பூக்கள்

Image
மீண்டும் மீண்டும் பார்க்க சலிக்காத படங்களின் பட்டியலில் உதிரிப்பூக்களுக்கு இடம் உண்டு. சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், போன்ற நடிகர்கள் ஒளிவட்டத்தில் இருந்து விலகத் துவங்கிய எழுபதுகளின் இறுதியிலிருந்து, எண்பதுகளின் துவக்கம் வரையிலான காலகட்டத்தை, தமிழ்ச் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லலாம். கதாநாயகனை மையப்படுத்தி, அதீதமான உணர்ச்சிக் குவியலாக இருந்த திரைப்படங்களை, மீட்டுக் கொண்டு வந்த படைப்பாளிகள் அனைவரும், அந்த காலகட்டத்தில் அறிமுகமானவர்கள் தான். பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், மகேந்திரனின் உதிரிப்பூக்கள், பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே ஆகிய மூன்று முக்கியமான படைப்புக்கள் அப்போதுதான் வெளிவந்து, தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றி அமைக்க முற்பட்டன. ஆனால், அந்த முயற்சி முழுதாக வெற்றி பெறவில்லை. இயல்பான கிராமம் அது. ஊர்ப் பெரிய மனிதர் சுந்தரவடிவேலு ( விஜயன் ) அத்தனை நல்லவரில்லை. அவரது தம்பியே ( பூபதி ) அண்ணனுக்கு எதிரானவன். சுந்தரவடிவேலுவின் மனைவி, அஸ்வினி, அமைதியே உருவானவர், கணவன் செய்யும் அக்கிரமங்களை எதிர்க்கத் திராணியில்லாதவர். அவருடைய உலகம், தன் குழந்தைகள் ( அஞ்சு, ஹாஜா ஷெரீ·ப் ) தங்கை செம்...

சு.ரா உரை பாகம் II

ஒரு அமெரிக்க - விமர்சகர் என்று கூடச் சொல்ல முடியாது - ஒரு பத்தி எழுத்தாளர். வாராவாரம், பத்திரிக்கைகளுக்குப் புதிய புத்தகங்களைச் சிபாரிசு செய்யக் கூடியவர். ************** என்று பெயர். அவருடைய வாக்கியம் ஒன்று நினைவுக்கு வருகிறது. " literature brings into your conciousness, what you don't know, u knew". இந்த வாக்கியத்தை, அனேகமாக அவருடைய ( அசோகமித்திரன் ) கதைகள் ஒவ்வொன்றையும் படிக்கும் போதும், எனக்கு நினைவுக்கு வருகின்றன. அதில் மிகப் பெரிய ஒரு சந்தோஷத்தை நான் அடைகிறேன். அந்த சந்தோஷத்தை வாசகர்கள் அடையவேண்டிய அவசியம் இருக்கிறது என்று நான் மனப்பூர்வமாக, அவரைப் போலவோ, அவருடைய காலத்திலோ, அல்லது அதற்கு முன்னாலோ, எழுத ஆரம்பித்த எழுத்தாளன் நான் - அவரை உங்களுக்கு மனப்பூர்வமாக நான் சிபாரிசு செய்கிறேன். அவரைப் படிக்கவில்லை என்றால் பெரிய நஷ்டம் என்று கூட நான் சொல்லுவேன். கட்டாயமில்லை என்று சொன்னேன். ஆனால் மிகப் பெரிய இழப்பு என்று நான் சொல்லுவேன். அவசியம் அவரைப் படித்துப் பார்க்க வேண்டும். அதற்கான எந்த விதமான முன்தயாரிப்புகளும் அவருக்குத் தேவையே இல்லை. அவ்வளவு எளிமையில் - அதாவது அவரது எ...

லக்கலக்கலக்கலக்கலக்க......

அசோகமித்திரன்-50 நிகழ்ச்சியில், சுந்தர.ராமசாமி ஆற்றிய உரையின், எழுத்து வடிவம் - பாகம் I [ கிழக்குப் பதிப்பகம் விநியோகித்தளித்த விசிடியில் இருந்து சுட்டு எழுதியது. ஆகவே,வேறு வழியில்லாமல், அவர்களுக்கு நன்றி ] சுந்தர.ராமசாமியின் உரை --------------------------------- எழுத்தாள நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், என் சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கூட்டத்தை உருவாக்கித் தந்திருக்கும் கடவு-கிழக்கு ஆகிய நிறுவனங்கள், மிகப் பெரிய ஒரு காரியத்தைச் செய்ய முன்வந்திருக்கிறார்கள். உங்கள் சார்பில், அவர்களுக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கூட்டம் நடைபெற வேண்டும் என்று சென்னையில் சில நண்பர்கள் முடிவு செய்ததும், நண்பர் பிரபஞ்சன் அவர்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதி, இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவருடைய அன்பான அழைப்புக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ,அற்றும் என் நண்பர்கள் பலரும் நான் வரவேண்டும் என்று விரும்பினார்கள். அவர்களுக்கும் என் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இப்போது, அசோகமித்திரன் பட...