போடுங்கய்யா ஓட்டு...

இது வரப்போகும் சட்டசபை தேர்தல் - 2006 பற்றிய இடுகை அல்ல. வலைப்பதிவுகள் தேர்தல். விளக்கமாகத் தெரிந்து கொள்ள இந்தச் சுட்டியை சொடுக்கவும்..

இந்த வருடம். பல்வேறு தலைப்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதிலே, சிறந்த வலைத்திரட்டிக்கான விருதில், 'தமிழ்மணம்' nominate செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் இன்னும் துவங்கவில்லை. தமிழ்மணத்துக்கு ஓட்டு போட்டு, வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பகிரங்கமாக கேட்டுக் கொள்கிறேன். அதற்கு எனக்கு சில personal காரணங்கள் உண்டு.
ஆனால், அந்தக் காரணங்களை ஒதுக்கிவிட்டு, இந்தத் தேர்தலில் கலந்து கொள்ளும் மற்ற வலைப்பதிவுத் திரட்டிகளை, நன்கு ஆராய்ந்து பார்த்தால், தொழில்நுட்ப ரீதி, திரட்டியின் வேகம், ஒரிஜினல் ஐடியா, பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி, என்று பல்வேறு விதமான தன்மைகளால், வசதிகளால், தமிழ்மணமும், தமிழ்மணத்தின் அடுத்த கட்டமான நந்தவனமும் சிறப்பானது என்று புரியவரும். ஆகையால், தமிழ்மணத்துக்கு ஓட்டு போடுங்க...

மேலே சொன்ன சுட்டியை தொடர்ந்து வாசித்து வந்தால், தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாவது தெரியவரும். இங்கேயும் நான் தெரிவிக்கிறேன்.

' என்ன பெரிய பொல்லாத ஆஸ்கார்... அவார்டா...' என்று கிண்டலடிக்க விரும்புபவர்களும், ' இது என்ன குழந்தைத்தனமா இருக்கு..." இடக்கையால் ஒதுக்கும் பெரீவர்களும், காசியின் personal prefrences குறித்த மாற்று அபிப்ராயம் கொண்டவர்களும், இது வரை, தமிழ்மணம்/காசி அளித்த, அளித்து வரும் சேவையை, ஒரு தரம் நினைத்துப் பார்த்து, மறக்காமல் ஓட்டு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதுல வெற்றி பெறுவதும், பெறாமல் போவதும் பைசாவுக்குப் பிரயோசனமில்லைன்னு எனக்குத் தெரியும். ஆனால், இதன் மூலம் கிடைக்கும் morale boost, வரும் நாட்களில், இருபத்தி நான்கு ஊட்டச் சத்துக்கள் கொண்ட காம்ப்ளானை விட, பெட்டரான நன்மை பயக்கும் என்று தெரியும்.

இது போன்ற open campaign காசிக்கு ஏதாவது தர்மசங்கடம் ஏற்படுத்துமானால், அதுக்காக அவரிடம் ஒரு சின்ன சாரி.

Comments

ஜோ/Joe said…
கண்டிப்பா போட்டுடுவோம்.நன்றி பிரகாஷ்!
தன் பொழுதை வீணாக்கிவிட்டு(வீட்டில் சொல்வது), வலைப்பூக்களை வரிசைப்படுத்தி நம் போன்றோருக்கு காலத்தை மிச்சப்படுத்தும் தமிழ்மணத்துக்கும், குறிப்பாக நண்பர் காசிக்கும் கட்டாயம் ஓட்டுப் போடுவோம்.
ஞானவெட்டியான், ஜோ, நன்றி.. அப்ப மூணு ஓட்டு நிச்சயமா இருக்கு :)
SnackDragon said…
// தமிழ்மணத்துக்கு ஓட்டு போட்டு, வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பகிரங்கமாக கேட்டுக் கொள்கிறேன். //

The same here
SnackDragon said…
Prakash, is there any link to actually cast the vote? Could not find one.
karthik : thanks. Polls hasn't yet started... will let you know...

selvanayaki : thanks
//போடுங்கய்யா ஓட்டு...//
போடுங்கம்மா ஓட்டு :)
please let me know when the polls start. Thanks for this information.
தருமி said…
மேலே மலேசியா ராஜசேகரன் சொன்ன எல்லாத்துக்கும்
- ditto -
நாள் மட்டும் சொல்லிடுங்க..தவறாம போட்ருவோம்ல..

உங்கள் முயற்சிக்கும் ஒரு 'ஷொட்டு'!
கசி said…
நானும் ஓட்டுப் போடுவேன். ஆனால் உங்கள் விருப்பம்போல அல்ல! யா
ரையும் யாரும் வற்வுறுத்துவதை நான் விரும்பவில்லை. குறைந்தது ஒரு ஐம்பது மைனஸ் ஓட்டுகளாவது நான் கண்டிப்பாகப் போடுவேன் தமிழ்மணத்துக்கு!
முட்டி மோதிப் பாத்தும் ஒண்ணும் கதைக்காகலே. எப்பிடி ஐயா மத்தவங்க எல்லாம் ஓட்டுப் போட்டீங்க.

இங்க ஒருத்தன் புலபிக்கிட்டிருக்கேனே! யார் காதுலயாச்சும் விழுகுதா?

உதவுறது எப்ப?
Anonymous said…
பிரகாஸ் நன்றி., இப்பத்தான் பார்த்தேன். போட்ருவமில்ல?
தமிழ்மணத்துக்கு ஆதரவாக என் ஓட்டு நிச்சயம் உண்டு.

It made me known, though I quit later.

Ennamopo.Blogsome.com

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I