செ.பு.க.காட்சியில் வாங்கிய புத்தகங்கள்

indibloggies தேர்தலில் வெற்றி பெற்ற முகமூடிக்கு வாழ்த்துக்கள். தமிழ்மணத்துக்கு ஓட்டு போட்ட 127 பேருக்கு நன்றிகள்.

சென்னை புத்தகக் கண்காட்சி சென்ற முறை போல அத்தனை ருசிக்கவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. இருமுறை சென்று சுற்றியதில், புதிய வரவுகள் அதிகம் இல்லை என்பது போலத் தோன்றியது. வாங்கிய புத்தகங்கள்.

ஹாலிவுட் அழைக்கிறது - லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் - கிழக்கு
கோலிவுட் பற்றிய கனவு காண்பவர்களை வெறுப்பேற்றும் அழகான முயற்சி. ஹாலிவுட் பற்றிய, நிறைய உருப்படியான, கேள்விப்பட்ட, கேள்விப்படாத தகவல்கள். நடையில் வழக்கமான துள்ளல் இல்லை ( ஓரிரு இடங்கள் தவிர்த்து). காதோரம் மடித்து விட்டு பிறகு படித்துக் கொள்ளலாம் என்று நினைக்கா வண்ணம், ஒரே மூச்சில் படிக்கலாம். value for money

கண்ணீரும் புன்னகையும் - முகில் - கிழக்கு
ஜே.பி.சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய நல்லதொரு ஆவணம். முகிலின் உழைப்பு பல இடங்களில் தெரிகிறது. தேர்ந்த எழுத்தாளர் போன்ற நடை. சந்திரபாபுவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய இடங்கள் தனியாகத் தொங்குகிறது. சந்திரபாபு - சாவித்திரி affair குறித்து குறைந்த பட்சம் ஒரு அத்தியாயமாவது எழுதியிருக்க வேண்டும், ஆனால் பிற்சேர்கையில், ஒரு பத்தியுடன் முடித்து விடுகிறார். இந்த வரிசையில் இன்னும் வரவேண்டிய பிரபலங்கள் நிறையபேர் இருக்கிறார்கள். எம்.ஆர்.ராதா, எஸ்.பாலசந்தர், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே.டி...

மார்க்கெடிங் மாயாஜாலம் - சதீஷ் கிருஷ்ணமூர்த்தி - கிழக்கு
இது குறித்து சென்ற பதிவு

அசடு - காசியபன் - விருட்சம்( இன்னும் படிக்கவில்லை)

விரும்பிச் சொன்ன பொய்கள் - சுஜாதா - விசா
இரு அத்தியாயங்கள் கொண்ட குறுநாவல். ஏற்கனவே வாசித்தது. கையில் இல்லை என்பதால் வாங்கினேன்.

கிருஷ்ணப்பருந்து - ஆ.மாதவன் - அன்னம் ( இன்னும் படிக்கவில்லை)

அந்தக்கணங்கள் - காசியபன் - அன்னம் ( இன்னும் படிக்கவில்லை)

காவ்யாவில், பழைய சிற்றிதழ்களை குவித்து வைத்திருந்தார்கள். அதிலிருந்து பொறுக்கியது:

சமவெளி (காஞ்சி இலக்கியவட்டம்) - மே - 98. இந்த இதழின் பை-லைன் : 'நினைத்த போது வெளிவரும் இதழ்'. மே 98 க்குப் பிறகு நினைத்தார்களா இல்லையா என்று நிச்சயமாய்த் தெரியவில்லை.

கவிதாச்சரண் - அக்டோபர்- திசம்பர் 1998.

கனவு இதழ் 51- சுப்ரபாரதிமணியன்

வித்தியாசம் 2, 3 & 4 ( 1994) - நாகார்ஜுனன். இந்த இதழின் தலைப்பும் வித்தியாசமான எழுத்துருவில் இருந்தது. பில் போடுபவர் கண்டுபிடிக்க இயலாமல் சிரமப்பட, நானும் சிரமப்பட, கடையில் இருந்த கௌதம.சித்தார்த்தன் உதவிக்கு வந்து, பிரச்சனையை தீர்த்து வைத்தார்.

படப்பெட்டி - ஜனவரி 2006. - திரைப்பட அரசியல் பற்றிப் பேச என்று உபதலைப்பு கொடுத்திருக்கிறார்கள். திரைப்படமுமில்லை. அரசியலும் இல்லை.

மக்கள் தளம் - மே - ஜூன் 1995. தெரிந்த பெயர் ஒன்றுமில்லை. ' இல்மஸ் குணே' என்ற யமுனா ராஜேந்திரன் கட்டு¨ரக்காக வாங்கினேன். இன்னும் படிக்கவில்லை.

நடைபாதைக் கடைகளிலும் பெரிதாக ஒன்றும் இல்லை. திரும்பிய இடங்களில் எல்லாம், ஹாரி பாட்டர், ஸ்டீ·பன் கோவெ, டான் பிரவுன், சேதன் பகத் மட்டும் தான். இரண்டு மணிநேரம் செலவழித்து வாங்கியது 5 புத்தகங்கள்.

    1. சந்திரசேகர கம்பாரின் ' ஜோகுமாரசாமி' தமிழ் மொழிபெயர்ப்பு
    2. alchemist - paul coelho
    3. animal farm - george orwell ( ஒர்த்தரின் பலமான பரிந்துரைக்குப் பிறகு வாங்கியது..படிக்கலாமா?)
    4. the class - erich segal
    5. fourth estate - jeffrey archer

Comments

3. animal farm - george orwell ( ஒர்த்தரின் பலமான பரிந்துரைக்குப் பிறகு வாங்கியது..படிக்கலாமா?) Thaaaaaaaaaaraaaalamaaa padikkalaam.. naanum guarantee!
Chandrababu has written a semi-autobiography.has it been cited in the book.
Ravi, he wrote a serial in filmalaya ( old one, edited by MG vallapan) on the 'mAdi vIttu Ezhai' incident.[some parts of the verbal exchange between JPC and MGC, which appeared in the serial has been included in the book in verbatim]. I'm not sure if you are referring to this.

Suresh, thanks thalai.. padikkiREn..:-)
No, I am referring to the one he wrote in 1970s in Seidee a daily edited by Nedumaran in.My memory is usually reliable in such cases, still you can check up with Nedumaran :).
doondu said…
இப்படி ஒரு தேர்தல் இருக்கிறது என்று முன்னரே சொல்லி இருந்தால் நானும் கலந்து கொண்டுவென்று இருப்பேன்.

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I