Posts

படித்ததில் பிடித்தவை

கொஞ்ச நாளாகவே நான், எழுதுவதை நிறுத்தி விட்டு படித்துக் கொண்டிருக்கிறேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், வலைப்பதிவுகள் ரொம்பவே போரடிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், இரண்டு வருடங்களாக தொடர்ந்து வாசித்து வந்ததில் இருந்து, எந்தப் பிரச்சனையில் யார் என்ன எழுதுவார்கள் என்பதை முன்கூட்டியே ஊகித்து விட முடிவதுதான். நாளை, ரஜினிகாந்துக்கு சந்திரமுகி படத்துக்காக தேசிய விருது கிடைத்து விட்டது என்று அறிவிப்பு வந்தால், அடுத்த சில நாட்களுக்கு, வலைப்பதிவுகளில் யார் யார் என்ன எழுதுவார்கள் என்று ஊகிப்பது வெகு சுலபம். அடிப்படையில் வாசகனாகவும், எதேச்சையாக எழுத வந்தவனுமாக இருக்கிற எனக்கு, இந்த டெம்ப்ளேட் தன்மை மிகுந்த சலிப்பை உண்டு செய்கிறது. அதையும் மீறி தொடர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ......இஷ்ட்டாப்ப்ப்ப்.. ரொம்ப ஓவரா சீன் போடறேன் போலிருக்கு... ஆரம்பம் இங்க மேட்டர் என்னன்னா, கொஞ்ச நாள் முன்னாடி வரை, பத்மப்ரியான்னு ஒரு அம்மிணி வலைப்பதிவுல, கதை எழுதிட்டு இருந்தாங்க.. தொடர்கதை எல்லாம் படிச்சு ரொம்ப நாளாச்சு.. இருந்தாலும், நினைவுப்பெட்டகம் னு ஒரு தொடர்கதையை விடாமப் படிச்சு வந்தேன். இப்ப தி...

மறந்தே போச்சு..... ரொம்ப நாள் ஆச்சு

Image
தமிழ் தட்டச்சு டச் விட்டுப் போகக்கூடாதுங்கறதுக்காக அவசரமா அவசியமா இந்தப் பதிவு. எழுதணும்னு நினைச்சு, மனசின் ஓரத்திலே போட்டு வெச்ச விஷயங்களின் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது.. எழுதியிருக்க வேண்டிய பதிவுகள் அனைத்தையும் , சுருக்கமா ஒரே பதிவிலே இங்கே எழுதறேன். .... 1. மரவண்டு கணேஷ் நடத்தின போட்டியிலே புத்தகப் பரிசு பெற்ற கார்த்திக் ராமாஸ், தன்னுடைய சார்பா, என்னை அந்தப் புத்தகம் வாங்கிக்கச் சொன்னார் . நானும் ரொம்ப பிகு செய்யாம வாங்கிகிட்டேன். காரணம், அது பிரமிள் எழுதின கட்டுரைத் தொகுதி. இதுக்கு முன்னாடி பிரமிள் எழுதின புத்தகம் ஏதும் படிச்சதில்லை. இதை படிச்சு முடிச்சதும், சும்மா அப்படியே உருவி விட்ட மாதிரி ஆயிடுச்சு. புதிய சொல்லாடல்களால், மொழி நடையால் என்னை அதிகம் ஈர்த்தவர் காலம் சென்ற சு.ரா. பிரமிளும் அதே வரிசையில் , குறைந்த பட்சம் என்னளவில், வருகிறார். வெகுசன ஊடகங்ககளில் பிடியில் இன்னும் சிக்காமல் மிக நவீனமாக அதே சமயம் உயிர்ப்புடன் எழுதி வலையில், மேற்படி இடங்களிலும் உலாவரும் சில 'strictly-for-private-circulation' எழுத்தாளர்கள் எங்கிருந்து புறப்பட்டு அல்லது எந்த வழியாக பயணப்பட்டு...

காற்றில் கலந்தே விட்ட பேரோசை...

எனக்கும் புரிகிற மாதிரி எழுதுகிற நவீன இலக்கியவாதிகள் பட்டியலில் முதலாவதாக இடம் பெற்றிருந்தவர் சு.ரா. Pulmonary fibrosis நோயின் காரணமாக அவர் இல்லாமலே போய்விட்டாலும் கூட குறிப்பிட்ட அந்த முதலிடம் என்றுமே வெற்றிடமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. இணையத்துக்குள் நுழைந்த புதிதில், ( ஆகஸ்ட்/செப்டம்பர் 2002) நண்பர்களுடன் சந்திப்பு என்கிற சாக்கில் முதன் முதலாக இலக்கியச் சந்திப்பு ஒன்றில், சு.ராவைப் பார்த்ததும், கேள்வி நேரத்திலே, துண்டுக்காகிதத்திலே எழுதி வைத்து அபத்தமாகச் சில கேள்வி கேட்டு, அதற்கு அவர் பொறுமையாக பதில் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. இன்றைக்கும் கூட, நவீன இலக்கியத்தின் முகவரியாக இருக்கும் " ஜே.ஜே.சில குறிப்புக்கள்" நாவலைப் பற்றி நண்பர்களுடன் பேசிப் பேசி, எழுதி எழுதி மாய்ந்தது நினைவுக்கு வருகிறது. சு.ராவின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். சு.ரா குறித்து சென்ற வருடம் ஒரு இணைய இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி .. சுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள் முன்னுரை சுந்தர.ராமசாமி அவர்களின் எழுத்துக்களை, அதன் கருத்து மதிப்பை விட, அதில் இழையோடும் நகைச்சுவைக்காகவு...

IIPM vs Gaurav Chabnis & fellow bloggers

1. Arindam Chaudary என்கிற ஒரு டுபாகூர் ஆசாமி, ஒரு எம்பிஏ பட்டங்கள் விற்கும் கடை ( Indian Institute of Planning Management ) ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கல்வி நிறுவனம், பலரது விமர்சனங்களுக்கும் ஆளாகி இருக்கிறது. சமீபத்திலே, economic times ஆங்கில நாளிதழில் வந்த செய்தியின் படி, இவர் விளம்பரங்களுக்காக செலவு செய்தது 5.1 கோடி ரூபாய்கள். இத்தனைக்கும், இவரது கல்வி நிறுவனம் வழங்கும் பட்டங்கள் இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றவை அல்ல. 2.பொதுவாக, தேசிய நாளிதழ்களில் முழுப்பக்கத்திலே விளம்பரங்கள் வரும். அவருடைய claims நம்பமுடியாதவையாக இருக்கும். பட்டங்களில் விலை சில லட்சங்கள். அதை வைத்து நாக்கு வழிக்கக் கூட முடியாது என்று படித்து முடித்த பின்புதான் தெரியும். இதிலே சம்பாதித்த பணத்தை வைத்து, அரிந்தாம், சன்னிதியோல் நடித்த படம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டார். பல கோடி ரூபாய்கள் நஷ்டம் ஆனது 3. மும்பையில் இருந்து வெளிவரும் JAM என்கிற ஆங்கிலப் பத்திரிக்கையை நடத்துபவரும், business world ஆங்கிலப் பத்திரிக்கையில், பத்தியாளருமான ( columnist) ரஷ்மி பன்சால், தன்னுடைய பத்திரிக்கையிலே, IIPM பற்றிய தில்லு...

கோ.கு.ப.பட்டறை - இறுதிப்பகுதி

Image
இரண்டாம் நாள், இயக்குனர் அருண்மொழி அவர்கள் காமிரா குறித்த அடிப்படை விஷயங்கள் பற்றி பாடம் நடத்தினார்.அருண்மொழி சென்னைத் திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவாளராக பயிற்சி பெற்றவர். காணிநிலம், ஏர்முனை என்று இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அருண்மொழியின் விளக்கங்கள் மிகத் தெளிவாக இருந்தது. திரையிலே சில காட்சிகளை காண்பித்து நேரடியாக விளக்கம் அளித்தார். புரிந்து கொள்ளச் சிரமமாக இருந்த விஷயங்களை, அவரே படம் பிடித்து அப்போதே திரையில் போட்டுக் காட்டி விளக்கினார். மேடையிலே நின்று கொண்டு மட்டுமே உரை நிகழ்த்தாமல், அங்கங்கே மாணவர்களிடம் வந்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக விளக்கம் அளித்தார். காமிரா கோணங்கள் பற்றி நன்றாகப் புரிந்த மாதிரி இருந்தது. பிறகு கேள்வி நேரம். மதிய உணவுக்குப் பின், குழுவுக்கு ஒரு காமிராவைக் கொடுத்து அனுப்பி வைக்க, நாங்கள் எங்கள் குழுவினர் என்ன எடுக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் இறங்கினோம். முதலிலே குறும்படம் எடுக்கலாமா அல்லது ஏதாவது ஒரு ஆவணப்படம் எடுக்கலாமா என்று சிந்தித்து, குறும்படம் எடுப்பதுதான் எளிது என்று முடிவு செய்தோம். சிவகங்கையில் இருந்து வந்திருந்த பா...

வாழ்க பாரதம்.!!!!

நேற்று விட்டதைத் தொடருவதற்கு முன்னால், சும்மா வலையில் மேய்ந்து கொண்டிருந்த போது இந்தச் செய்தி ( செந்தில் வழியாக ) படிக்கக் கிடைத்தது. சும்மா சொல்லக் கூடாது பெங்களூர் நன்றாகவே 'முன்னேறிக்' கொண்டிருக்கிறது.. வாழ்க பாரதம்...

கோவை குறும்படப் பயிற்சிப் பட்டறை - முதல் நாள்

Image
சேரன் எக்ஸ்பிரஸில் அடுத்த இருக்கையில் இருந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு, குறும்படம் என்றால் என்ன என்று விளக்க முயற்சித்து தோற்றமையும், கோவையில் இறங்கியதுமே, எதிர்ப்படுகிறவர்களின் முகத்திலேயே தெரியும் hospitality உம், பட்டறை நடக்கும் கணுவாய் என்கிற கிராமத்துக்குச் சரியாக வழியைக் காட்டி, பேருந்தில் ஏற்றிவிட்டு, சிக்கல் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்று செல்பேசி எண்ணைக் கொடுத்த Gangotri Textiles என்ற நிறுவனத்திலே பணிபுரியும் அன்பர் ஒருவரின் இன்ஸ்டண்ட் நட்பும், இன்னபிற விஷயங்களும் இந்தக் வியாசத்துக்கு அநாவசியம். ஆகவே நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். தமிழ்நாடு குறும்பட மற்றும் ஆவணப்பட படைப்பாளிகள் சங்கமும், குறும்பட ஆர்வலரும் இயக்குனருமான திருநாவுக்கரசு அவர்களின் நிழல் பத்திரிக்கையும் இணைந்து, ஒரு குறும்படப் பயிற்சிப் பட்டறையை, செப்டம்பர் 30, அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில், கோவைக்கு அருகே கணுவாய் என்கிற இடத்திலே நடத்தியது. குறும்படங்களில், ஆர்வமிருந்து, ஆனால், அனுபவமில்லாதவர்களை மையமாக வைத்து இந்த நிகழ்ச்சியை, குறைந்த கட்டணத்திலே ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம், குறும்படம் ...

மூன்று நாட்கள்.

Image
மூன்று நாட்களாக பயிற்சிக்குப் போயிருந்த கதை WLL இல் இருந்த பயணச்சீட்டு, RAC க்காவது நகரும் என்று நம்பிக்கையில் செய்த முன்பதிவு ஏமாற்றி விட, 'எப்படியாவது' நீலகிரி எக்ஸ்பிரஸின் TTE இடம், berth வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையும் பொய்த்துவிட, ஞாயிறு இரவு முழுதும், கோவையில் இருந்து சென்னை வரை கழிவறைக்குப் பக்கத்தில் , suitcase மீது அமர்ந்து செய்த பிரயாணத்தின் களைப்பு இன்னும் தீரவில்லை. ஆகவேண்டிய வேலைகளும் இருக்கின்றன. எழுத இன்னும் ஒன்றிரண்டு நாட்களாகலாம். முதலில் படங்கள். விவரங்கள் பிறகு.

கோவை

மன்னிக்கணும்...கிட்டதட்ட எங்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாக்குறுதி போல என்னுடைய வாக்குறுதியும் ஆயிப்போச்சு.. அதான், வாரம் முழுக்க தமிழ்ப்பதிவாப் போடுறேன்னு சொல்லிட்டு, கண்டுக்காம விட்டதைத் தான் சொல்றேன். அதுக்கு வழக்கம் போலவே ஒரு காரணம் வெச்சுருக்கேன்... நீங்க நம்ப மாட்டீங்கன்னாலும் சொல்றது என்னோட கடமை... அதாவதுங்க , இந்த வார இறுதியிலே நான் கோவைக்குக் பயணமாகிறேன். சென்னையை கெடுத்தது பத்தாதுன்னு இப்ப கோயமுத்தூரா ந்னு யாரோ ஒர்த்தர் கொரல் விடுறார் பாருங்க... பேசும் போது இப்படி ஊடால ஊடால குரல் கொடுத்தா என்னால கோர்வையாச் சொல்ல முடியாது.. கொஞ்சம் சத்தம் போடாம அமைதியாக் கேக்கணும் இல்லாட்டி எந்திரிச்சுப் போயிருவேன்... ஆச்சா.. இப்ப கேளுங்க.. எதுல உட்டேன்?.... ஆங்... கோவைக்குப் போறேன்...மூணு நாள் பயணம். தமிழ் குறும்பட அமைப்புன்னு ஒரு அமைப்பு தமிழ்நாட்டிலே இருக்குங்க.. அவங்களும், நிழல் னு ஒரு பத்திரிக்கையும் சேர்ந்து, கோவைலே, ஒரு மூணு நாள், பயிற்சிப் பட்டறை ஒண்ணு ஏற்பாடு செய்யறாங்க.. நிறைய பிரபல குறும்பட இயக்குனர்கள், திரைக்கதை ஆசிரியருங்க. எல்லாம் வந்து பாடம் எடுக்கிறாங்க.. அங்கியே தங்கி, பிற ம...

இனி - பாரதிராஜா - I

பாரதிராஜாவின் திரைப்படங்கள் குறித்த ஒரு அலசல் கட்டுரை, சொ.சங்கரபாண்டி அவர்களால் எனக்குக் கிடைக்கப் பெற்றது. 1991-92 வாக்கில் வெளியான இக்கட்டுரையை எழுதியவர் சக்கரவர்த்தி. தற்போது சிற்றிதழ்களில் திரைப்படக் கட்டுரைகளை எழுதி வரும் வெங்கடேஷ் சக்கரவர்த்தியும் இவரும் ஒருவரே என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இக்கட்டுரை, இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமாக இருக்கின்றதா என்று ஆராய்ந்து பார்க்கும் போது புலப்படும் சங்கதிகள் சுவாரசியமானவை. பாரதிராஜா ஒரு முக்கிய திரைக்கலைஞராக அடையாளம் காட்டப்படுவதற்கு என இருக்கும் பல காரணங்களில், அவரது யதார்த்தமான கிராமத்துச் சித்திரிப்பும் ஒரு முக்கியமான காரணம். சக்கரவர்த்தியின் கட்டுரையும் இதைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளின் பிற்பகுதியிலே திரையுலகுக்குள் நுழைந்த பாரதிராஜா, அச்சு அசலான கிராமத்தை என்று இல்லாவிட்டாலும், நிஜத்துக்கு சற்றேனும் நெருக்கமாக இருக்கிற கிராமத்தை படம் பிடித்துக் காட்டி, ரசிகர்களை , விமர்சகர்களை ஆச்சர்யப்படுத்தினார். அவருடைய திரைப்படங்கள் வருவதற்கு முன்பு ...

ரோஜாப்பூ

Image
ரோஜாவின் பெயர் ஷிவானி புகைப்படம் பிடித்தவர், வண்டலூர் அருள்செல்வன் நரேந்திரன்

தமிழ் வாழ்க...

இந்த குற்ற உணர்ச்சியாகப்பட்டது பல ரகம். பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டுவிட்டு, மோட்சம், பரங்கிமலை ஜோதி இன்ன பிற திரையரங்குகளில், படம் பார்த்து விட்டு வீட்டுக்கு தாமதமாகச் சென்று , ஏதாவது ஒரு சாக்கு சொல்லி ஏமாற்றும் போது ஏற்பட்ட குற்ற உணர்ச்சியில் இருந்து தொடங்கி, வேலை அதிகம் என்று வரும் மடல்களுக்கு பதில் போடாமல் விட்டுவிட்டு பின் வருத்தப்படும் சமீபகால குற்ற உணர்ச்சி வரை, ரகம் ரகமாக இருக்கும் இவை, ஏற்படுத்தும் தாக்கமும் வகை வகையானவை. என்னுடைய சமீபத்திய குற்ற உணர்ச்சி, தமிழில் ஆங்கில வார்த்தைகளைக் கலந்து எழுதுதல் தொடர்பானது. இது திடீரென்று அதிகரித்ததற்கு மரத்தடி இணையக்குழுவில் நடந்த சில மடல் பரிமாற்றங்களும் காரணம். 2003 ஆண்டு மத்தியிலே இணையத்தில் முதன் முதலாக எழுத வந்த போது, சிந்தனை ஓட்டத்துக்கும், எழுதுகிற வேகத்துக்கும் இடைவெளி அதிகமாக இருந்த நேரத்திலே, பொருத்தமான தமிழ் வார்த்தைகள் கிடைக்காமல் போகும் போது, சட்டென்று வந்து விழும் ஆங்கில வார்த்தையை அப்படியே எழுதி வலையில் ஏற்றும் பழக்கம் வந்தது. இன்றைக்கும் இந்தப் பழக்கம் இருக்கிறது. நம் சிந்தனையை, ஒப்பனையில்லாமல், அது முகிழ்த்த நேரத்தில...

ஆதவன் - காகிதமலர்கள் - சந்தோஷ்

ஆதவனின் காகிதமலர்கள் குறித்து 'ஐவேஜு' அதிகம் இருக்கிற எழுத்தாள/ விமர்சகர்களில் இருந்து ஜூனியர் மோஸ்ட் எழுத்தாள/விமர்சகர்கள் வரை என்ன எழுதியிருக்கிறார்கள் என்று வாசித்திருக்கிறேன். ஆனால், காகிதமலர்கள் குறித்து ஆதவனுக்கு ஏதேனும் சொல்ல இருந்திருக்க வேண்டுமே என்று நீண்ட நாளாக நினைத்திருந்தேன். காகிதமலர்கள் எழுத நேர்ந்ததன் பின்னணி குறித்தும், ஆதவன் சொன்னதை இப்போதுதான் படிக்க நேர்ந்தது, சந்தோஷ் வலைப்பதிவின் மூலம்... ஆதவன் சொல்கிறார்.. ".....என் படைப்புப் பற்றிக் கூறப்படும் ஒவ்வொரு அபிப்பிராயமும் என்னைப் பதட்டம் கொள்ளச் செய்கிறது, அவசரமாகக் 'கோடிட்ட இடங்களைப்' பூர்த்தி செய்யத் தூண்டுகிறது - எல்லாருமே எல்லாவற்றையும் கண்டு சொல்லியே ஆகவேண்டும் என்பதுபோல. ஆனால் இது அவசியமில்லாதது மட்டுமல்ல, 'காகித மலர்கள்' போன்ற ஒரு நாவலின் விஷயத்தில் இது சாத்தியமுமல்ல என்பதை நிதானமாக யோசித்துப் பார்க்கும்போது நான் உணருகிறேன். பல இழைகளைக் கொண்டு வேயப்பட்ட - கொஞ்சம் சிக்கலான அமைப்புக் கொண்ட - ஒரு நாவல் இது. எல்லா இழைகளுமே எல்லாருக்கும் பிடிபடுவதில்லை; பிடிபட்டாலும் இவை எல்லாமே ஒவ்வொர...

படங்காட்டுவது எப்படி - 2

Image
காட்டுப்பன்றியை பின்தொடர்ந்து படம் பிடித்தவர் V.A.Narendran கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து தானும் அதன் பொல்லாச் சிறகை விரித் தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி தொடரும்

படங்காட்டுவது எப்படி?

Image
ஒதகமந்துவின் ஆளரவமற்ற சாலை...நிழல்படம் எடுத்தவர். V.A.Narendran இதோ இப்படித்தான் படங்காட்டுபவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. எதிர்த்துக் குரல் தருவது ஒரு வகை. கூட சேந்து கொம்மாளம் அடிப்பது மற்றொரு வகை. நான் இரண்டாவது வகை,