Posts

முகுந்த் நாகராஜனின் நான்கு கவிதைகள்

நூ ல் வடிவத்தில் படித்த மிகச் சில கவிதைத் தொகுப்புகளில் ஒன்று சமீபத்தில் வாசித்த 'அகி'. அதில் இருந்து நான்கு கவிதைகள் ஆட்டம் போடும் வீடு பூட்டிக் கொண்டு கிளம்பினேன் எதையோ மறந்து போனதால் உடனே திரும்பினேன்; திறந்தேன் டிவியும் ·ப்ரிட்ஜும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தன அலமாரியில் உள்ள புத்தகங்களெல்லாம் அணி அணியாகப் பிரிந்து கபடி ஆடிக் கொண்டிருந்தன. சோ·பா-வுக்கும் சேரு-க்கும் ஓட்டப் பந்தயம். பழைய சாக்ஸ்கூட தன்னிச்சையா சுற்றிக் கொண்டிந்தது ஒரு நிமிஷத்துக்குள் எல்லாம் இயல்பு நிலையை அடைந்து விட்டன 'என்ன இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டான்' என்று தண்ணீர் பாட்டில் முணுமுணுத்தது. அப்புறம் அமைதியாகிவிட்டது பிறகு ஒன்றும் நிகழவில்லை. பூட்டிக்கொண்டு கிளம்பினேன். திறப்பதற்கு முன் தட்டி இருக்க வேண்டும் என்ன நாகரிகம் இல்லாத பிறவி நான்! மரணத்தைக் கையாளுதல் செத்துப் போனவர்களுக்குச் செய்ய வேண்டியவைகளின் பட்டியல் என்னிடம் இல்லை கையாண்டதில்லை மரணத்தை தனியாய் இதுவரையில் எரிக்கவோ புதைக்கவோ வேண்டும். அதற்கு முன் மரணச் சான்றிதழ் வாங்கி வரவேண்டும். ...

ஒரு புது அனுபவம்

இ ந்த மாத திசைகளுக்காக பேட்டி ஒன்று எடுக்க வேண்டும் என்று பா.ராகவன் சொன்ன போது, 'அதுக்கென்ன செய்தால் போச்சு' என்று சொல்லி விவரங்கள் கேட்டுக் கொண்டு, தொலைபேசியை கீழே வைத்த பின்புதான், சொரேர் ( இதை உபயோகிப்பதற்கு மன்னிக்கவும் ) என்றது. இதுக்கு முன்பு நான் பேட்டி எல்லாம் எடுத்ததில்லையே? எப்படிப் போகவேண்டும். எப்படி நேரம் வாங்க வேண்டும் , என்ன என்ன கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டும். சொல்வதை ஒலிப்பதிவு செய்து கொள்ளவேண்டுமா அல்லது எழுதிக் கொள்ள வேண்டுமா, சுருக்கெழுத்து தெரியவேண்டுமா? போகிற வீட்டில் நாய் இருக்குமா , கட்டிப் போட்டு இருப்பார்களா என்று ஏகப் பட்ட சந்தேகம் வந்து, மீண்டும் தொலைபேசி செய்து, விளக்கம் கேட்டுக் கொண்டேன். குறித்த நேரத்துக்குப் போனேன். நான் பேட்டி எடுத்த எழுத்தாளர் ஆர்விக்கு வயது எண்பதுக்கும் மேலே. பொறுமையாக, நிதானமாக சென்ற பேட்டியில் நிகழ்ந்த சமாசாரங்கள் எல்லாம் சுவாரசியமற்றவை. பேட்டி முழுதும் கேள்விகள், பதில்கள், கேள்விகள், பதில்கள் என்ற ரீதியில் சென்றது. என்னால் மட்டும் தான், உடைக்க (de-cipher) முடியும் என்கிற மாதிரியான குறிப்புக்களை வைத்துக் கொண்டு, ம...

arbor mentis - The cucumber seller of Chennai

சமீபமாக, இந்தியாவைப் பற்றியும் , குறிப்பாக தமிழ் நாடு பற்றியும் ஆஹா ஓஹோ என்று புகழும் கட்டுரைகள் சிலவற்றை பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது. அந்த வரிசையில் இங்கே ஒரு கட்டுரை. இந்த வார பிசினஸ் வேர்ல்ட் பத்திரிக்கையில் வந்த column. அது. அந்தக் கட்டுரை படிங்க, படிச்சுப் பாத்துட்டு ஏதாச்சும் சொல்லணும்னு தோணினா சொல்லுங்க

கலைஞர் கருணாநிதி

1996 இல் வந்த கல்கியின் வந்த சிறுகதைகளின் unofficial பதிப்பு [ அதாவது, கல்கி பக்கங்களை கிழித்து, தைத்து, உருவாக்கப் பட்ட நூல்வடிவம்). தமயந்தி, பெ.நாயகி, ஜி.சுரேந்திரநாத், பா.ராகவன், வெங்கடேஷ், ரிஷபன், கிருஷ்ணா, பத்மா ரவிசங்கர், யோகி, ஆகியோர் எழுதின கதைகள்.[ இதைப் பற்றி தனியாக பதிவு செய்ய வேண்டும் ] இப்போது வருகின்ற கதைகளுக்கு கிட்டேயே வரமுடியாது என்பதைப் போன்ற நல்ல கதைகள். திடுமென்று கலைஞரின் பேட்டி குறுக்கே வந்தது. கலைஞரின் எழுபத்துஐந்தாவது பிறந்த நாளின் போது எடுத்த பேட்டி அது. இதிலே ஒரு விசேஷம் என்ன என்றால், அரசியல் தொடர்பான கேள்விகள் கிடையாது. பொதுவான விஷயங்கள், சினிமா அனுபவங்கள், நட்பு வட்டம் , குடும்பம் ஆகியவற்றைப் பற்றிய கேள்விகள். கேள்விகளை எழுதி, அனுப்பி வைத்து, பதிலையும் எழுதி வாங்கிக் கொள்கிற வழக்கமான பாணி அல்ல கலைஞருடையது என்று பத்திரிக்கை நண்பர்களிடம் இருந்து கேள்விப் பட்டிருக்கிறேன். அதனாலேயே, சில சமயம் வெகு சுவாரசியமாக இருக்கும். அரசியல் தொடர்பான விஷயங்களில், கலைஞர் மீது பெரிதாக ஈடுபாடு ஏதும் இல்லை என்றாலும், சில சமயம் புத்திசாலித்தனமான நகைச்சுவையுடன், பளிச் என்று ...

Hutch : The Boy and the Pug

ந ம் poor man's Shunu Sen பக்கம் கொஞ்சம் தலை காட்டலாம் என்று எண்ணம். பிரபலங்களை மையமாக வைத்து விளம்பரங்கள் செய்வது ( celebrity endorsement) பற்றிய பல்வேறு கருத்துக்களை, சமீபமாக நாளிதழ்களில் படித்து வருகிறேன். பிரபலங்களின் , பிராபல்யத் தன்மை குறைவதும், அதிகமாவதும், அவர்கள் விளம்பரம் செய்யும் பிராண்ட் களை பாதிக்கும் என்பது ஒரு சாரார் சொல்வது. அது அப்படி அல்ல, என்று சில விளம்பர உலகின் தாதாக்கள், புள்ளிவிவரக் கணக்கை வைத்துக் கொண்டு, படம் காட்டி நிருபிக்கிறார்கள். அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த மாதிரி பிரபலங்கள் இல்லாமலேயே சக்கை போடு போட்ட ஹட்ச் நிறுவனத்தின் விளம்பரம் பற்றி சில வார்த்தைகள். இந்த விளம்பரத்தை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். படு அழகான ஒரு குட்டிப் பையனும், அதை விட அழகான ஒரு நாயும் தோன்றும் ஒரு விளம்பரத் தொடர். இந்த விளம்பரத்தின் பயனாக, ஹட்ச் செல்பேசி சேவைகளின் விற்பனை கூடியிருக்கிறது, brand awareness உம் கூடியிருக்கிறது என்று செய்திகள் சொல்கின்றன. இந்த விளம்பரத்தின் மாஸ்டர் மைண்ட், O & M நிறுவனத்தின் "national creative director [ இதைத் தமிழ் படுத்த...

Serial Killers

த மிழ் சமுதாயத்தில், என்ன என்ன உறவு முறைகள் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளத் தொலைக்காட்சித் தொடர்களின் பெயர்களைத் தெரிந்து கொண்டாலே போதும். அம்மா, அப்பா, அக்கா, தம்பி, சித்தப்பா, சித்தி என்று அத்தனை உறவுமுறைகளின் பெயர்களையும் வைத்து தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன. தொடர்கள் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. ஆனால், அவை, பெரும்பாலானவர்களின் உபயோகமான நேரத்தை ( quality time ) விழுங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. மாலை ஆறரை மணியில் இருந்து இரவு பதினொன்றரை மணி வரையிலான நேரத்தை தொலைக்காட்சிகளின் அனைத்து அலைவரிசைகளும் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொலைக்காட்சித் தொடர்கள் வருவதற்கு முன்பாக நாம் அந்த குறிப்பிட்ட நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று சிந்தித்துப் பார்க்கின்றேன். உறவினர்/நண்பர்கள் வீட்டுக்குச் செல்வது, அல்லது உறவினர்கள்/ நண்பர்கள் நம் இல்லத்துக்கு வந்தால் அவர்களுடன் நேரம் செலவழிப்பது, குழந்தைகளின் வீட்டுப் பாடங்களுடன் மல்லுக்கட்டுவது, புத்தகங்கள் படிப்பது, காலையில் விட்டுப் போன ஆங்கில நாளிதழின் குறுக்கெழுத்த...

Shame!!!!

Image
இந்தப் பெண்ணின் பெயர் இவாஞ்சலின் பிரின்ஸஸ். பெயருக்கு ஏற்றாற் போல இருக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இந்த குட்டி இளவரசி, ஆசிரியர் திட்டினார் என்பதற்காக, மேலே மண்ணெணை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். தற்போது அப்போலோ மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்தியம் அளிக்கப் பட்டு வருகிறது. ஹிந்து செய்தி * இந்தப் பத்து வயதுப் பெண்ணுக்கு, அவமானம் என்ற சொல் எப்படி பரிச்சயமாகி இருக்க முடியும்? ஆசிரியர் திட்டுவது என்பது மிகவும் அவமானகரமான செயல் என்பதை இவளுக்கு யார் சொல்லித் தந்திருப்பார்கள்? * ஆசிரியரிடம் தண்டனை கிடைத்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற ஐடியாவை இவளுக்குள் விதைத்தவர்கள் யாராக இருப்பார்கள்? * மேலே மண்ணெண்ணை ஊற்றி, நெருப்பு வைத்துக் கொண்டால், அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து போய்விடும் என்று இவளுக்குத் தோன்றியது எங்கனம்? குழந்தைகளை குட்டிச்சுவராக்கும் சமூகத்தில் நானும் ஒரு அங்கம் என்பதை நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது....

G-19 ரோகிணி தியேட்டர்

Image
G-19 ரோகிணி தியேட்டர் பிபி வாயால் பிரம்மரிஷி பெற்ற படமாச்சுதேன்னு கொஞ்சம் கேஷ¤வலாத்தான் ரெயின்போ காலனி படத்தைப் பார்க்கப் போனேன். சும்மா சொல்லக் கூடாது, இயக்குனர் செல்வராகவன் அடி பின்னியிருக்கார். ரீடி·ப் தளத்துலே சமீபத்துலே செல்வராகவன் நேர்காணல் ஒன்றை படிச்சப்போ , ஒரு சுமாரான, அதி தீவிர புத்திசாலியல்லாத, சும்மா ஊர்சுற்றிவருவதைத் தவிர வேற எதுவுமே தெரியாத, ஒரு நகரத்து நடுத்தர குடும்பத்துப் பையனோட கதை தான் இந்த ரெயின்போ காலனின்னு சொல்லி இருந்தார். உண்மை. பன்னிரண்டு பேப்பர் அர்ரியர்ஸ் வெச்சிருக்கிற ஒரு பிகாம் இறுதியாண்டு மாணவனுக்கும், பிரசிடென்ஸி காலேஜில் பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சைன்ஸ் இறுதியாண்டு படிக்கிற ஒரு சேட்டு பொண்ணுக்கும் இடையில் நடக்கிற சம்பவங்களும், நிலவுகின்ற உறவு முறைகளும், அதன் முடிவும் தான் மொத்த கதை. முதலிலே வெறுப்பு.. பிறகு பச்சாதாபம், பின் நட்பு, அதுக்குப் பிறகு காதல், காமம்ன்னு.... இன்ச் இன்ச்சா படம் விரியுது. பல கட்டங்களிலே நுணுக்கமான காட்சிகள். சோனியா அகர்வாலின் அருமையான முகபாவங்கள்... ஏ-க்ளாஸ். இன்னிக்கு தேதிக்கு டைட் க்ளோசப் வைக்கிற தைரியத்துக்காகவே ப...

ET Awards - Entrepreneur of The Year

Image
இந்த வருட "Economic Times - Entrepreneur of The Year" விருது, கெவின்கேர் சி.கே.ரங்கநாதனுக்குக் கிடைத்திருக்கிறது . 1983 இல், வெறும் பதினைந்தாயிரம் ரூபாய் முதலீட்டில் துவங்கிய, ஒரு சின்ன நிறுவனம் , இன்றைக்கு 350 கோடி ரூபாய் நிறுவனமாக வளர்ந்து நிற்கின்றது. இன்றைக்கு மிகப் பெரிய ரீடெயில் முதலைகள், rural marketing பக்கம் திரும்பலாமா என்று யோசித்துக் கொண்டிருக்க, ரங்கநாதன், அதை 15 வருடங்களுக்கு முன்பே செய்து சந்தையைப் பிடித்தவர். இவரை price player என்று வர்ணிப்பார்கள் அல்லது குற்றம் சாட்டுவார்கள். மார்க்கெட்டில் ஷாம்பூக்கள் பாட்டிலில் அடைத்து 40 ரூபாய் அளவில் விற்ற போது, அதிரடியாக, ஒரு சாஷேயில் பாக் செய்து, 50 காசுக்கு விற்று, ஷாம்பூ போன்ற நகர மக்கள் உபயோகப் படுத்தும் பொருளை குட்டி நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் எடுத்துச் சென்றவர். [ தற்போதைய விலை ஒரு ரூபாய்.]வெல்வெட் ஷாம்பூ, சிக் ஷாம்பூ என்று சாஷேயில் ஒரு குட்டி புரட்சியை நிகழ்த்தியவர். நான்கு காலி கவர்களைக் கொடுத்து விட்டு, ஒரு ஷாம்பூ பாக்கெட்டை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்ற டெக்னிக்கையும் அறிமுகப் படுத்தியவர் இவர்தான்...

மத்தளராயர் , வெங்கட் சாமிநாதன் & காசி

காசி இ ந்த வார திண்ணை இதழில் காசி அவர்கள் எழுதியிருந்த கடிதம் ஒன்றைப் படித்தேன். முந்தைய வாரம் வந்த யூனிகோட் விவகாரம் தொடர்பான ஒரு நேர்காணலுக்கான மறுமொழி அது. திண்ணையில் எழுதியவர், தன் கருத்துக்களின் கூடவே, காசியின் பிரபலமான "என் கோடு உன் கோடு தனி கோடு யூனிகோடு" என்ற கட்டுரையில் இருந்து அப்படியே 'சுட்டுப்' போட்டிருக்கிறார். நானும் பார்த்தேன். சொற்கள், எண்கள் கூட மாற்றமில்லாமல் அப்படியே அப்பட்டமான காப்பி. கூகிள் வந்த பின்னால், தகவல்கள் பெறுவது ரொம்ப எளிமையாகிவிட்டது. நமக்கு வேண்டும் என்ற தகவல்களை மேற்கோள் காட்ட, கூகிளில் தேடி எடுத்துப் பயன் படுத்திக் கொள்கிறோம். ஆனால், அப்படி எழுதும் போது, மூலத்தையும் குறிப்பிடுவது தான் முறை. திண்ணையை வாசித்தவர்கள் அனைவருக்கும் இந்த விவகாரம் தெரிந்திருக்கலாம். இந்த விவகாரத்தில் , மிகச் சிறப்பானதாக நான் கருதுவது, காசியின் அணுகுமுறையைத் தான். இணையத்தில் வலைப்பதிவுகள் வந்த பின்னால், யாருடைய தயவும் இல்லாமல், நம்முடைய கருத்துக்களை நாமே பதிவு செய்து, அதை பிறர் படித்து, கருத்துகள் சொல்லவும் வழி வகை இருக்கிறது. இது போன்ற விஷயத்தை, வலைப்...

பொழுது போகலைன்னா..... இப்படித்தான் ஏதாச்சும்....

சி ல வருஷங்களுக்கு முன்னே ( 17/18 வருஷம் இருக்கலாம் ) , ஒரு பயணம் போன போது, அந்த பி.ட்டி ஓட்டுனர் வச்சிருந்த ஒலிநாடாவிலே இந்தப் பாட்டைக் கேட்டிருக்கிறேன். அந்தப் பாட்டு, தென்னாற்காடு வள்ளலார் மாவட்டங்களிலே ரொம்ப பிரபலமான பாட்டுன்னு அந்த ஓட்டுநர் சொன்னது நினைவிருக்கு. முதல் தடவை கேட்கிறப்போ, ஒரு மாதிரியா இருந்தாலும், கேட்க கேட்க மனசு அந்தப் பாட்டிலே ரொம்பவும் லயிச்சு போச்சு. பயணம் முடிகிற வரை, திரும்பத் திரும்ப அந்தப் பாட்டைப் போட்டுக் கேட்டுக்கிட்டே இருந்தோம். ஒரு நல்ல வாட்ட சாட்டமா இருக்கிற ஆனால் தன் அழகு பத்தின அக்கறை இல்லாம இருக்கிற , வெள்ளந்தியான கிராமத்துப் பெண், தன்னை யார் யாரெல்லாம் சுத்தி வராங்கன்னும்,. தன் கிட்ட என்ன இருக்குதுன்னு எல்லாரும் இப்படி மேல வந்து விழறாங்கன்னும் புரியலயேன்னு அப்பாவித்தனமா பாடற ஒரு அட்டகாசமான கிராமத்து கானாப் பாட்டு. பாடல் வரிகள் சிலது வெவகாரமா இருக்கும் கொஞ்சம் விரசமாவெல்லாம் கூட இருக்கும்... இல்லே இல்லே... நம்ம நவீன பெண்கவிஞர்கள் டைப்ல இல்லே... இது கி.ரா டைப். நான் முதல்ல கேட்ட சமயத்திலே நான் பள்ளி மாணவன்கிறதால, காசட்டு வாங்கற அளவுக்கு எல்லா...

காணாமல் போனவர்களில் எட்டு பேர் கொண்ட ஒரு பட்டியல்

மணிரத்னம் : ஒரு காலத்திலே ஜீவனுள்ள படங்கள் எடுத்தவர். கலைப்படங்களில் தென்படுகின்ற யதார்த்தத்தையும், வணிகரீதியான படங்களில் இருக்கும் சுவாரசியத் தன்மையையும் இணைத்து அற்புதமான பல படங்கள் தந்தவர். புத்திசாலிகளுக்கான படம் எடுக்க முனைந்து உணர்வு ரீதியான விஷயங்களில் கோட்டை விட்டவர். ஐம்பது வயதுக்கு மேலாகியும், இன்றைய இளைஞர்களின் சொல்லாடல்களையும் சங்கேதங்களையும், மானரிசங்களையும் அச்சாக அப்படியே திரைக்குக் கொண்டு வந்த அர்ஜுன் - மீரா கதாபாத்திரங்கள் ( ஆய்த எழுத்து ), இவரின் கவனிப்புத் திறனுக்கு ஒரு ஹால்மார்க். ஆயினும், முன்னொரு காலத்தில் செல்வா - சாருமதி ( நாயகன் ஜனகராஜ், கார்த்திகா) என்ற கதாபாத்திரங்களுக்கு இடையில் இருக்கிற அன்னியோன்னியத்தைக் கூட வெகு இயல்பாக சொல்ல முடிந்த இவருக்கு, இவரது சமீபத்திய ஸ்கீரின் கணவன் - மனைவி ( மாதவன் - மீரா ஜாஸ்மின்) பாத்திரங்களை ஒழுங்காக சித்திரிக்க முடியாமல் போய்விட்டது. எங்காவது கான்ஸ் படவிழா , ஐரோப்பிய ·பிலிம் பெஸ்டிவல் பக்கம் தென்படலாம். கட்டம் போட்ட காட்டன் சட்டை, ஜீன்ஸ் பக்கம் அணிந்திருப்பார். யூகி சேது : அங்குஷ் என்ற படத்தை தமிழில் பெயர்த்த போது, ( கவ...

Lasting Legacies

[ இந்த போஸ்ட்ல சொல்ல வர மேட்டர் கடைசிப் பத்தியில் இருக்கிறது. அவசரமாக இருந்தா ஸ்கரால் செய்து கொள்ளுங்கள்] ஹௌரா மெயிலிலில் இருந்து ஒரு டாக்ஸி பிடித்து, அந்த மெகா cantilever ஐக் கடந்தால், முதலில் சென்று முட்டுவது எஸ்பளேனேட். எதுத்தாப்பல பெங்காலீ பிரபல நடிகர் உத்தம் குமார் வேலை செஞ்ச தியேட்டர் இருக்கும். (பேரு மறந்து போச்சு) அது அங்க இன்னும் இருக்குதான்னு பாத்து வெச்சிகிடுங்க. அதுதான் சௌரங்கி ரோட் என்றும் அப்பவும், ஜவஹர்லால் சாலைன்னு இப்பவும் அழைக்கப் படுகிற பிரபலமான சாலை. தியேட்டருக்குள் நுழையாமல், ரோட்டில் கடைபரப்பி சல்லிசாக விற்கப்படும் டெபொனேர், ·பாண்டஸி பழைய இதழ்களையெல்லாம் கண்டுக்காமல், அப்படியே போய்கினே இருந்தா இடது கைப் பக்கம் ம்யூசியம் வரும் அதை உடுங்க. [ குழப்பமாக இருந்தால், எதிர்ப்படுகின்ற யாராவது பெண்ணிடம் சென்று ' ஹமி துமாக்கே பாலோ பாஷே? " என்று விசாரித்தால் நீங்க போகவேண்டிய இடத்துக்கு 'கரக்டாக' கூட்டிக் கொண்டு போய் விடுவார் :-) ] அப்புறம் அமெரிக்க தூதரகம் வரும், அதையும் தாண்டுங்க. கொஞ்ச தூரம் போனப் பின்னாலே, ஐடிசி பில்டிங் வரும். அங்கிருந்து நாலைஞ...

புரியாத பத்து விஷயங்கள்

1.எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த ஸ்னேஹா வை எனக்கு மட்டும் அடையாளம் தெரியாமல் போவது ஏன் ? 2. எனக்கு நேரம் கிடைக்கும் வார இறுதிகளில் எல்லாரும் கம்ம்னு இருக்க, நான் வேலையா சுற்றிக் கொண்டிருக்கும் நேரங்களில் , இணையம் பரபரப்பாக இருப்பது ஏன்? 3. எல்லாரும் சடுதியில் முடித்து விட்டுப் போக, எனக்கு முன்னால் நிற்கிறவன் மட்டும் தொடர்ந்து ஐந்து நிமிடம் 'உச்சா' போவது ஏன்? 4. நாளை மற்றுமொறு நாளே என்ற குட்டி புஸ்தகத்தை நாற்பது நாளாகப் படித்தும் இன்னும் முடிக்க முடியாமல் இருப்பது ஏன்? 5. இணையத்தில் எங்கே முகமூடி தென்பட்டாலும், உடனடியாக ' நீங்க தானே அது? " என்று எனக்கு ஒரு மடல் வருவது ஏன்? 6.பிடித்த நடிகர் கவுண்டமணி செந்தில் என்று சொன்னால், எல்லாரும் என்னை ஒரு மாதிரியாக பார்ப்பது ஏன்? 7. என் கூட ஆரம்பித்தவர்கள் எல்லாம் 'புகைவண்டி' ஓட்டுவதை நிறுத்தி விட, நான் மட்டும் இன்னும் விடாமல் ஓட்டுவது ஏன்? 8. கமலஹாசன் இன்னும் டூயட்டு பாடுவதை நிறுத்தாதது ஏன்? 9 "நீங்கள் கேட்ட பாடலில்" எந்த குழந்தையைக் கேட்டாலும், பிடித்த நடிகர் விஜய் என்று சொல்வது ஏன்? ...

புரியுதா இல்லையா

[ கல்கியில் வந்த என் கட்டுரை ] புரியுதா இல்லையா - இகாரஸ் பிரகாஷ் சி ல தினங்களுக்கு முன்பு, நவீன இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளி ஒருத்தர் எழுதிய படைப்பைவாங்கிய போது, கூடவே ஒரு இலவச இணைப்பும் கிடைத்தது. அந்த இலவச இணைப்பு, நீங்கள் நினைக்கிறார் போல ஊதுவத்தியோ, ஊறுகாய் பாக்கெட்டோ, ஜோதிகா ப்ளோ அப்போ அல்ல.ஒரு நாலு பக்க பாம்ப்லட். ஒரிஜினல் பிரதியைப் படித்துப் புரிந்து கொள்ளுவதற்கான விளக்க உரை போல இருந்தது. தேவுடா . இதல்லாம் வேலைக்காகாது என்று ,. வாங்கிய அந்த நூலை ஈசானிய மூலையில் சார்த்திவிட்டு, போகோ சானல் பக்கம் திரும்பிவிட்டேன் தான் என்றாலும், தமிழில் எழுதப் பட்ட ஒரு நவீன இலக்கிய ஆக்கத்தைப் படித்துப் புரிந்து கொள்ள, விளக்க உரை தேவைப்படும் நிலைமை சற்று விசித்திரமாகத்தான் இருந்தது. வெகுஜன பத்திரிக்கைகளின் விசுவாசமான வாசகர் ஒருவர், தன் இரசனையை இன்னும் விஸ்தரிக்கும் கொள்ளும் பொருட்டு, இது போன்ற நவீன இலக்கியத்தின் புரியாத பக்கத்தைப் புரட்டினால், அவருடைய ரீயாக்ஷன் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கவே வேடிக்கையாக இருந்தது. புரியாத இந்த வகை இலக்கியங்கள் யாருக்காகப் படைக்கப்படு...