writ petition against Tata Indicom Broadband

கடந்த மூன்றுவாரங்களுக்கு முன்பு, அரசாங்கம் சில இணையத்தளங்களுக்குத் தடை விதிக்கச் சொல்ல, இணையச் சேவை வழங்கிகள், அப்படிச் செய்யத் 'தெரவுசு' பற்றாமல், மொத்த வலைப்பதிவுகளையும் போட்டுத்தள்ளியது. ( இந்தப் பதிவின் கடந்த மூன்று இடுகைகளைப் படித்தால் விளங்கும்) பிரச்சனை பெரிதானதும், அரசே, " சில இணையத்தளங்களை மட்டும் தான் நாங்கள் தடை செய்யச் சொன்னோம், மொத்தமாக அல்ல" என்று சொல்லி, தடையை நீக்கவேண்டும் என்று இணையச் சேவை வழங்கிகளுக்குச் சொன்னாலும், அவர்கள் இன்னமும் தடையை நீக்கவில்லை. தற்போது, சில நகரங்களில், சில இணைய வழங்கிச் சேவைகள் தடையை நீக்கி இருக்கிறார்கள். எந்த எந்தச் சேவைகள், எந்த எந்த நகரங்களில், தடையை நீக்கியிருக்கிறார்கள் என்பது பற்றி குழப்பமான நிலைமை நீடிக்கிறது.

சென்னையிலும் கூட, ஏர்டெல் அகலப்பாட்டை, தடையை நீக்கியிருப்பதாகத் தெரிகிறது. நான் உபயோகிக்கும், டாடா இண்டிகாம் இணையச் சேவை, இன்னும் ப்லாக்ஸ்பாட் மீதான தடையை நீக்கவில்லை. எப்போது நீக்கும் என்ப்று தெரியவில்லை. கேட்டாலும் முறையாக பதில் கிடைப்பதில்லை. ஆகவே, தடையை நீக்கக் கோரி, ரிட் மனு ஒன்றை, வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்ய இருக்கிறேன்.

இந்தக் கோரிக்கை, ப்லாக்ஸ்பாட் மீதான தடையை நீக்கக் கோருவதோடு மட்டுமல்லாமல், இப்படிப் பட்ட நிறுவனங்கள், இணையச் சேவை செய்யத் லாயக்கு அற்றவை என்பதால், அவர்களுடைய லைசன்ஸை ரத்து செய்யச் சொல்லியும், கேட்க இருக்கிறேன்.

டாடா இண்டிகாம் சேவையை உபயொகம் செய்து, அதனால், வலைப்பதிவுகளைப் படிக்க முடியாமல் அவதிப்ப்படும் யாரும் என்னுடன், சக விண்ணப்பதாரராக இணைந்து கொள்ளலாம். அதிகமான பேர் இதிலே, இணைந்தால், கோரிக்கைக்கு வலு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், இதற்கு ஆகும் செலவின் கனமும் குறையும்.

ஆர்வமுடையவர்கள் தொடர்பு கொள்ளவும். வேறு ஏதாவது ஆலோசனை இருந்தாலும் சொல்லவும்.


( பிகு : கடந்த இருவாரங்களாக, சில புதிய மாற்றங்களினால், நான் இணையத்தில் உலவும் நேர குறைந்திருக்கிறது. ஆகவே, இந்த இடுகைக்கான பின்னூட்டங்களை, நாளைக் காலை வந்துதான், படிக்க முடியும்)

Comments

நல்ல நடவடிக்கை. டாடா இண்டிகாமின் அடாவடி, வாடிக்கையாளர்களைத் துச்சமாக மதிக்கும் போக்கு தட்டிக் கேட்கப் பட வேண்டியது. நான் பயன்படுத்தும் பிஎஸ் என் எல் இணைப்பு கூட ஒரு வாரம் முன்பே சரியாகி விட்டது. எனக்குத் தெரிந்து டோண்டு சாரும் டாடா இண்டிகாம் இணைப்பு பயன்படுத்துவதாக எழுதியிருந்தார்.

அன்புடன்,

மா சிவகுமார்
Anand said…
Prakash: My ISP is VSNL, and by default Tata Indicom. I realised that they had removed the block to the IP address almost immediatley after the second govt 'directive', but the DNS server was still rejecting the domain names. So took some quick brushup of networking from Saravanan, a blogger and spent quite some time in getting their call centre to even acknowledge that they had a problem to solve. Since then, they have fixed it for my dialup service. Incompetence, coupled with utter asisnine behaviour. Only one of the many 'customer service' techs even understood what my problem was. One of them even went to extent of questioning the existence of a domain called blogspot.com. Idiots! I don't know what they're trying save for their employers by being so defensive.
ENNAR said…
நானும் டாட்டா இண்டிகாம் பிராட்பேண்டடைத் தான் பயன் படுத்துகிறேன் இரண்டு நாட்களுக்கு முன்தான் எனக்கு சரியானது. தொலைபேசியில் தொடற்பு கொண்டு பேசினேன் சரி செய்வதாகச் சொன்னார்கள் திருச்சியில். பிறகு எனகுக் சரியாகி விட்டது செயல் படுகிறது. தங்கள் பதிவை அவர்களுக்கு நான் மின் அஞ்சல் செய்கிறேன்
Kasi Arumugam said…
Parkash,

I wish you good luck, even though I am skeptical of anything big to happen.

I was a Tata Indicom fixed wireless customer a few months ago. I had to snap thier service after about 20 talks to their customer service gods over the internet facility through this phone, and happily settled with the proven 'local' BSNL service that is far superior to even my AIRTEL cell phone service. Who said privatisation is good? It is not valid here. We live in such a place.

-Kasi
(an Ex-Tata employee)
Two weeks ago, I intended to file a PIL,with me as the Petitioner before the Madurai Bench challenging the GO but fortunately the occasion did not arise. If you are in need of any tips feel free to contact 9344130698
Unknown said…
அட, ரொம்ப சீரியஸா இறங்கிட்டீங்க போலிருக்கு. சரி, செய்யவேண்டியதுதான். அந்த சேவையை பயன்படுத்தும் ஆங்கில பதிவர்களையும் சேத்துக்கங்க. தேசிபண்டிட்ல எப்படியாவது விஷயத்தை போடவெச்சிட்டீங்கன்னா ஆதரவு கிடைக்கும்னு நினைக்கிறேன்.
பிரகாஷ்...
என் நண்பன் ஒருவன் டாடா இன்டிகாம் அகலப்பட்டை சேவையால் பதிக்கப்பட்டான்..ஆனால் பிரச்சினை வேறு...
அவன் மனைவி US போனதால் videochat செய்ய டாடா இன்டிகாம் அகலப்பட்டை apply செய்தான் முன்பணம் கட்டி.. 10 நாளில் இணைப்பு தரப்படும் என கூரியவர்கள் ஒரு மாதத்திறு மேலாகியும் தராததாலும் சரியான பதில் இல்லாததாலும் அதனை cancel செய்து விட்டான்..அத்ற்கு பின்னும் ஒரு 20 - 30 தோலைபேசி அழைப்புக்கு பிறகும் பணம் திரும்பி வரவில்லை...இப்பொது லீகல் நோட்டிஸ் அனுப்பியுள்ளான்...:-(
I salute your initiative and determination to set things right.

I wish you all the vest best in your fight against TataIndicom.

If possible, Please let me know how we can be help to you.

Thanks

Jayaraman V
Prakash,

Slightly offtopic.

If you want to byepass Tata Indicom's stupidity, just change the DNS server address in your machine to another provider's. It is not strictly ethical or advised, but for the short term you can manage, if you want to byepass.


Ma Sivakumar
ENNAR said…
இன்று 02-08-06 எனது பிளாக் செயல் பட வில்லை ஏன் இந்த நிலை என்று தெரியவில்லை. இன்னமும் டேண்டு சாருக்கும் சரியாக வில்லை .
டாடா இன்டிகாம் dialup-பில் நெற்று முதல் எனக்கு பதிவுகள் தெரிகின்றது...
just FYI.
Unknown said…
Prakash, You can report the status here.
http://www.desipundit.com/2006/08/02/blogs-ban-back-again/
பிரகாஷ் உண்மைதான் டாடா இன்டிகாம் பிளாக்°பாட்டை தடைசெய்துள்ளது. என்னுடைய பிளாக்கைக்கூட டாடா இன்டிகாம் பயன்படுத்தும் பல நண்பர்களால் பார்க்க முடியவில்லை. எனவே இதற்கு எதிரான சட்ட ரீதியான போரில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I